என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

மத வேறுபாடு இல்லாத தலம்
- சூரியன் வழிபட்ட தலம் என்பதால் ஞாயிறு தலம் எனவும் அழைக்கப்படுகிறது.
- முஸ்லிம், கிறிஸ்துவ அன்பர்களும் இப்பெருமானை தரிசித்து தொண்டு புரிகின்றார்கள்.
சனி தோஷம் நீங்க திருநள்ளாறு செல்வது போல், களத்திர தோஷம், விவாஹப் பிரபந்திர தோஷம், புத்திர தோஷம்,
உத்தியோகப் பிரபந்திர தோஷம் உள்ளவர்களும், கண் பார்வை குறை உள்ளவர்களும், உடல் ரோகம் உள்ளவர்களும்,
சூரிய தசை, சூரிய புத்தி நடக்கிறவர்களும் அருள்மிகு புஷ்பரதேஸ்வரர் திருக்கோவிலுக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் வந்து
சிவபெருமானையும், சூரிய பகவானையும் வழிபாடு செய்தால் தோஷங்கள் நீங்கி நவக்கிரக நாயகர்களின் அனுக்கிரகம் உண்டாகும்.
சூரியன் வழிபட்ட தலம் என்பதால் ஞாயிறு தலம் எனவும் அழைக்கப்படுகிறது.
முஸ்லிம், கிறிஸ்துவ அன்பர்களும் இப்பெருமானை தரிசித்து தொண்டு புரிகின்றார்கள்.
இவ்வாலயம் சகல மதத்தினரும் போற்றிப் புகழ்பாடும் ஒரு புராதனமான வரலாற்று புண்ணிய தலம் ஆகும்.
மத ஒற்றுமைக்கு இது ஒரு சிறந்த தலமாக விளங்குகிறது.
இதற்கு சான்றாக 1933ல் ஞாயிறு கிராமம் நாட்டாமைக்காரரும், செம்பியம் மாஜிஸ்திரேட்டுமாகிய எம்.எஸ்.காதர் முஹைதீன் சாஹிப்பால் இயற்றப்பட்டு,
அவரது சகோதரர் எம்.எஸ்.ஷேக் முஹைதீன் சாஹிப்பால் பதிப்பிக்கப்பட்ட "ஞாயிறு நாட்டு ஸ்ரீ சங்கிலி நாச்சியார் சரித்திரம்" என்னும் நூலே ஆதாரமாக உள்ளது.
கிறிஸ்துவ அன்பர்களில் ஒருவர் திருவிளக்கு ஏற்ற எண்ணெயையும், மற்றொருவர் ஓர் பசுவினையும் தானமாக வழங்கியுள்ளார்கள்.






