என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thaipongal"

    • அக்காலத்தில் மார்கழியில் பெரும்பாலும் அறுவடை முடிந்துவிடும்.
    • அதனால், உழவர்கள் கையில் தை மாதம் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

    அக்காலத்தில் மார்கழியில் பெரும்பாலும் அறுவடை முடிந்துவிடும்.

    அதனால், உழவர்கள் கையில் தை மாதம் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

    இதைப் பயன்படுத்தி கல்யாணச் செலவு செய்யலாம் என்பதால் தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழி உண்டானது.

    இப்பழமொழிக்கு வேறொரு பொருளும் சொல்வதுண்டு.

    வயலில் அறுவடை முடிந்து விட்டதால், பயிர்பச்சை இல்லாமல் வரப்பு நடப்பதற்கு ஏதுவாக காலியாக இருக்கும்.

    அதனையும் தைபிறந்தால் வழி பிறக்கும் என்பர்.

    • தைப்பொங்கல் விழா தமிழர்களின் திருநாள்.
    • சூரிய பகவான் ஆன்மாவை பிரதிபலிப்பவன்.

    காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்

    பூசுர உலகோர் போற்றப் பொசிப்புடன் சுகத்தை நல்கும்

    வாசியேழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த

    தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி

    தைப்பொங்கல் விழா தமிழர்களின் திருநாள்.

    உழவர்களின் இன்பம் பொங்கும் பெருநாள்.

    பூமியில் இயற்கை வளங்களை நிலைக்கச் செய்து உயிரினங்களை வாழவைக்கும் சூரியபகவானுக்கு தமிழர்கள் நன்றி செலுத்தும் இனிய நன்நாள்.

    சூரிய பகவான் ஆன்மாவை பிரதிபலிப்பவன்.

    ஓருவருக்கு ஆத்மபலம் அமையவேண்டுமானால் சூரியபலம் ஜாதகத்தில் அமையவேண்டும்.

    தமிழர்கள் வாழும் நாடுகளில் பொங்கல் பண்டிகை, மிகவும் பிரபலமானது.

    பண்டைக் காலத்திலிருந்தே சூரிய வழிபாட்டை தமிழர்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர்.

    சூரியன் தரும் சாரத்தைக் கொண்டு நாம் விளைவித்த பயிர்களை அறுவடை செய்யும் நேரம் அது.

    அந்த அறுவடையை சூரியன் நமக்களிக்கும் காரணத்தால், அதற்கு நன்றி செலுத்தும் விதமாக சூரியனை நாம் வழிபடுகிறோம்.

    இதனால்தான் பொங்கல் பண்டிகை "உழவர் திருநாள்" என கொண்டாடப்படுகிறது.

    பொங்கல் திருநாளன்று பசும்பாலில் உலை வைத்து, அதில் புத்தரிசியும் புதுவெல்லமும் சேர்த்துப் பொங்கல் செய்து சூரியனுக்குப் படைக்கிறோம்.

    அச்சமயத்தில் புதிய அறுவடையாகக் கிடைக்கும் புதுமஞ்சள், புது இஞ்சி ஆகியவற்றைக் கொத்தோடு படைக்கிறோம்.

    வாழைப் பழம், வெற்றிலை, பாக்கு போன்றவற்றையும் ஆதவனுக்கு நிவேதனம் செய்து, அகம் மகிழ்கின்றோம்.

    பொங்கல் தினத்துக்கு முன் தினம், பழையன கழித்துப் புதியன புகுத்திப் போகிப் பண்டிகையும், மறுநாள் உழவுக்குத் துணை நின்ற மாடுகளுக்கான மாட்டுப் பொங்கல் மற்றும் கனு எனும் கன்னிப் பொங்கலும் இந்தியாவில் கொண்டாடப்படுகின்றன.

    • சூரியன் உதிக்காவிட்டால் சந்திரனுக்கு ஒளி இல்லை. பயிர்கள் வாடிவிடும்.
    • உலகத்தில் மழை, பனி, வெப்பம் ஆகியவை சூரியனின் சஞ்சாரத்தால்தான் உண்டாகிறது.

    சூரியன் வடக்கு நோக்கிப் பயணம் செய்யும் உத்தராயண காலமான தை முதல் நாள் பொங்கல் திருநாள்.

    சூரியன் உதிக்காவிட்டால் சந்திரனுக்கு ஒளி இல்லை. பயிர்கள் வாடிவிடும்.

    நீர் நிலைகளிலுள்ள நீரை மேகத்திற்கு எடுத்துச் செல்பவை சூரியனின் உஷ்ண கிரணங்கள் தான்.

    ஆகவே தான் நிலத்தில் விளைந்த கரும்பு, நெல், இஞ்சி, மஞ்சள் கொத்து, வாழை என்று அந்த வருடம் விளைந்த பொருட்களை வைத்து, தேர்போல் கோலமிட்டு, காவியிட்டு, புத்தரிசியிட்டு முதலில் பாலைப் பொங்கவிட்டு சர்க்கரைப் பொங்கல் செய்து, சூரியனை பூஜிக்க வேண்டும்.

    சூரிய தேவன் சிவனின் அஷ்டமூர்த்திகளில் ஒருவர், பரமேஸ்வரனுக்கும் மஹாவிஷ்ணுவுக்கும், பராசக்திக்கும் வலது கண்ணாக பிரகாசிப்பவர்.

    உலகத்தில் மழை, பனி, வெப்பம் ஆகியவை சூரியனின் சஞ்சாரத்தால்தான் உண்டாகிறது.

    சூரியனும் சந்திரனும் ப்ரத்யட்ச தேவதைகள், சூரியனின் ரதத்திற்கு ஒரு சக்கரம், பன்னிரண்டு ஆரக்கால்கள், வேதத்தின் ஏழு சந்தங்களும் தேரின் ஏழு குதிரைகளாக இருக்கின்றன.

    அந்தக் குதிரைகள் வாரத்தின் ஏழு நாட்களையும், பன்னிரண்டு ஆரக்கால்கள் பன்னிரண்டு மாதங்களையும் குறிக்கின்றன.

    அந்த ரதத்தில் வாலகில்யர் எனப்படும் விரலளவே உள்ள 60,000 ரிஷிகள் சூரியனை ஸ்தோத்ரம் செய்கின்றார்களாம். (இது அறுபது நாழிகளைக் குறிக்கும்)

    சூரியனின் தேர் சக்கரத்தின் மேல்பாகம் உத்தராயணத்தையும், கீழ் பாகம் தட்சிணாயணத்தையும் குறிக்கின்றது.

    இவ்வாறு காலஸ்வரூபமாகவும், வேத ஸ்வரூபமாகவும் இருக்கும் சூரியன், பிரம்மா, விஷ்ணு, ருத்ரர் (சிவன்) ஆகிய மும் மூர்த்திகளின் ஸ்வரூபம்.

    முறையாக இவரை பூஜிப்பதாலும், ஆதித்ய ஹ்ருதயம் போன்றவற்றால் சூரிய நமஸ்காரம் செய்வதாலும் நல்ல உடல் வலிமை, நீண்ட ஆயுள், மன சாந்தி முதலியன கிட்டும்.

    விவாகமான ஆண்களும், பெண்களும் தம்பதிகளாக ஸத்குரு மூலம் சூரிய நமஸ்கார மந்திர ஜபத்தை உபதேசம் செய்து கொள்ள இது மிகச்சிறந்த நாள் ஆகும்.

    • நவக்கிரகங்களின் நாயகன் என்றழைக்கப்படுபவர் சூரியன்.
    • ஒளியை தந்து உயிர்களை வாழவைத்து இந்த உலகையே வாழவைத்துக் கொண்டிருக்கும் முதன்மை கிரகம்.

    உலகில் பரவலாக காணப்படும் வழிபாடு சூரிய வழிபாடு.

    பண்டைய நாகரிகங்கள் பலவற்றிலும் சூரிய வழிபாடு இருந்ததென்பதற்கு பல சான்றுகள் கிடைத்துள்ளன.

    எந்த கடவுளையும் நாம் கண்ணால் காண முடியாது. ஆனால் சூரிய வழிபாட்டில் மட்டும் வழிபடும் கடவுளான சூரியனை நேரில் காணமுடியும்.

    அதிர்ஷ்டம், ராஜயோகம், பட்டம், பதவி, பணம், பங்களா, நிலபுலன்கள் போன்ற அமைப்புகளை ஒருவருக்கு வழங்குவதில் நவக்கிரகங்களுக்கு பெரும் பங்கு உண்டு.

    ஒரு இடத்தில் நின்றும் இடம் பெயர்ந்தும் கிரகங்கள் தரும் பலன்களே ஒருவருக்கு நன்மை, தீமைகளை ஏற்படுத்துகிறது.

    ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு வலிமை உண்டு.

    நவக்கிரகங்களின் நாயகன் என்றழைக்கப்படுபவர் சூரியன்.

    தினமும் நமக்கு தரிசனம் கொடுக்கும் கிரகம்.

    ஒளியை தந்து உயிர்களை வாழவைத்து இந்த உலகையே வாழவைத்துக் கொண்டிருக்கும் முதன்மை கிரகம்.

    • சூரியன் தயவு இல்லாமல் தலைமைப் பொறுப்புக்கு யாரும் வரமுடியாது.
    • நல்ல யோகமான சூரிய திசை நடக்கும்போது பட்டம், பதவி தேடி வரும்.

    அதிகாரம், ஆட்சி, ஆளுமை போன்றவற்றுக்கு அதிகாரம் உள்ளவர் இவர்.

    சூரியன் தயவு இல்லாமல் தலைமைப் பொறுப்புக்கு யாரும் வரமுடியாது.

    ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள், தலைமை செயலாளர்கள், மிகப்பெரிய அதிகார பதவிகள் ஆகியவற்றில் ஒருவர் அமர்வதற்கு சூரியனின் அனுக்கிரகம் அவசியம்.

    இவை மட்டுமல்லாமல், ஒரு நிகழ்ச்சிக்கோ, 10 பேர் கொண்ட குழுவுக்கோ தலைமை வகிக்க வேண்டும் என்றாலும் சூரியனின் அருள் தேவை.

    தலைமை பீடம் என்பது சூரிய பலத்தினால்தான் கிடைக்கும்.

    ஒருவர் ஏதாவதொரு வகையில் நம்பர் ஒன்னாக தலைமை பொறுப்பில், கையெழுத்திடும் இடத்தில் இருக்க வேண்டும் என்றால் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்து இருந்தால்தான் அவரவர் ஜாதக பலத்துக்கு ஏற்ப பதவி கிடைக்கும்.

    நல்ல யோகமான சூரிய திசை நடக்கும்போது பட்டம், பதவி தேடி வரும்.

    1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறப்பது யோகம். சிம்ம லக்னம், சிம்மராசியில் பிறந்தால் கூடுதல் யோகம் கிடைக்கும்.

    லக்னத்தில் சூரியன் இருக்க பிறந்தவர்கள் நல்ல யோகம் உடையவர்கள்.

    சூரியன் உச்சத்தில் இருக்கும் சித்திரை மாதம், ஆட்சியில் இருக்கும் ஆவணி மாதம் பிறந்தவர்கள் யோகம் உடையவர்கள்.

    கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய சூரியனின் நட்சத்திரத்தில் பிறப்பது சிறப்பானது.

    • மகாவிஷ்ணு தம் உந்திக் கமலத்திலிருந்து பிரம்மாவைப் படைத்தார்.
    • பிரம்மா தன் படைப்புத் தொழிலுக்குத் துணைபுரிய சப்த ரிஷிகளை உண்டாக்கினார்.

    மகாவிஷ்ணு தம் உந்திக் கமலத்திலிருந்து பிரம்மாவைப் படைத்தார்.

    திருமாலின் ஆணைப்படி நான்முகன் அண்டத்தைத் தோற்றுவித்தார்.

    அண்டம் ஒரே இருள் சூழ்ந்திருக்க, ஓம் என்ற ஒலி பிறந்தது.

    அவ்வொளியிலிருந்து சூரியன் தோன்றினான் என்று மார்க்கண்டேய புராணம் கூறுகிறது.

    பிரம்மா தன் படைப்புத் தொழிலுக்குத் துணைபுரிய சப்த ரிஷிகளை உண்டாக்கினார்.

    அவர்களில் ஒருவர் மரீசி என்ற முனிவர்.

    அவருக்கு மகனாக உதித்தவர் காசியபர் என்ற முனிவர் காசியபர் 13 மனைவிகளை மணந்தார்.

    அவர்களில் மூத்த மனைவி பெயர் அதிதி. அவள் மகனே சூரியன் என்று கூறப்படுகிறது.

    உலகை பாதுகாக்கும் பொருட்டு நவக்கிரக குழு அமைக் கப்பட்டு, சூரியனுக்குத் தலைமைப் பதவி தரப்பட்டது.

    ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு சக்கரமுள்ள ரதத்தில் சூரியன் மேரு மலையைச் சுற்றி வலம் வருகின்றார்.

    அவருக்குச் சாரதி அருணன் ஆவான்.

    சூரியனுக்கு சமுங்கை, பிரபை, ரைவத இளவரசி, சாயாதேவி ஆகிய நான்கு மனைவிகள் உள்ளனர்.

    சூரியனுடைய மகன்கள் வைவஸ்தமனு, யமன், அசுவினி தேவர்கள், பிரதவன், ரைவ வஸ்தன்.

    யமுனை என்ற மகளும் உண்டு.

    • நட்சத்திரம்: கிருத்திகை, உத்திரம், உத்திராடம்.
    • தமிழ் மாதம்: சித்திரை, ஆவணி

    கிழமை: ஞாயிறு

    தேதிகள்: 1, 10, 19, 28

    நட்சத்திரம்: கிருத்திகை, உத்திரம், உத்திராடம்.

    தமிழ் மாதம்: சித்திரை, ஆவணி

    ராசி: மேஷத்தில் உச்சம், சிம்மத்தில் ஆட்சி

    நிறம்: சிவப்பு

    ரத்தினம்: மாணிக்கம் (சிவப்பு)

    தானியம்: கோதுமை

    ஆடை (வஸ்திரம்): சிவப்பு.

    • மேஷ லக்னம்/ராசி ‍‍ : பெரிய பதவி
    • தனுசு லக்னம்/ராசி : நல் பாக்ய யோகம்

    எந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் எந்த வகையான யோகங்களை கொடுப்பார்?

    மேஷ லக்னம்/ராசி : பெரிய பதவி

    ரிஷப லக்னம்/ராசி : மாபெரும் யோகம்

    கடக லக்னம்/ராசி : பேச்சாற்றலால் யோகம்

    சிம்ம லக்னம்/ராசி : அதிகார ஆளுமை

    விருச்சிக லக்னம்/ராசி : தலைமைப் பதவி

    தனுசு லக்னம்/ராசி : நல் பாக்ய யோகம்

    மற்ற லக்னம்/ராசிகள் : சூரியன் இருக்கும் பலத்தின் மூலம் பட்டம், பதவி, அதிகாரம்.

    • சிவாலய வழிபாடும், சூரிய நமஸ்காரமும் நல்ல பலன் தரும்.
    • ‘ஓம் அம் நமசிவாய சூரிய தேவாய நம’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லலாம்.

    சிவாலய வழிபாடும், சூரிய நமஸ்காரமும் நல்ல பலன் தரும்.

    தினசரி ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் படிக்கலாம்.

    கோதுமையில் செய்த சப்பாத்தி, ரொட்டி, சாதம் போன்ற பண்டங்களை பசுமாட்டுக்கு கொடுக்கலாம்.

    'ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே பாஸ ஹஸ்தாய தீமஹி தந்நோ சூர்ய பிரசோதயாத்' அல்லது 'ஓம் பாஸ்கராய வித்மஹே மஹாத்யுதிகராய தீமஹி தந்நோ ஆதித்ய பிரசோதயாத்' என்ற சூரிய காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம்.

    'ஓம் அம் நமசிவாய சூரிய தேவாய நம' என்ற மந்திரத்தை 108 முறை சொல்லலாம்.

    வளர்பிறை சப்தமி திதியில் விரதம் இருந்து (ஏழு சப்தமி) கோதுமை தானம் செய்யலாம்.

    கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை சூரியனார் கோவிலுக்கு சென்று வரலாம்.

    சென்னை அருகே கொளப்பாக்கம் அகஸ்தீஸ்வரர் ஆனந்தவள்ளி ஆலயம் சூரியனுக்குரிய ஸ்தலமாகும்.

    நவதிருப்பதிகளில் திருநெல்வேலி அருகே உள்ள ஸ்ரீவைகுண்டம் சூரிய ஸ்தலமாகும்.

    • முதலில் விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும்.
    • பாக்கு, பழம் படைத்து கற்பூர ஆரத்தி செய்ய வேண்டும்.

    முதலில் விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும்.

    மஞ்சளில் விநாயகரைப் பிடித்து அதன் மேல் அருகம்புல்லை வைத்து, கைகளில் வாசனை மலர்களை எடுத்துக் கொண்டு,

    ''ஓம் ஹஸ்கராடாய வித்மஹே தனுர் ஹஸ்தாய தீமஹி

    தந்நோ கணேச: ப்ரசோதயாத்'' என்றும்

    ''நல்லார் பழிப்பினெழிற் செம்பவளத்தை நாணநின்ற

    பொல்லா முகத்தெங்கள் போதகமே புறமூன்றெரித்த

    வில்லா னளித்த விநாயகனே யென்று மெய்ம்மகிழ

    வல்லார் மனத்தன்றி மாட்டாளிருக்க மலர்த்திருவே

    ஓம் விநாயகா போற்றி''

    என்று சொல்லி மலர்களை சமர்ப்பித்து வெற்றிலை - பாக்கு, பழம் படைத்து கற்பூர ஆரத்தி செய்ய வேண்டும்.

    அடுத்து, சூரிய பூஜை செய்ய வேண்டும்.

    பூஜைக்குத் தேவையான தேங்காய், ஐந்து விதமான பழங்கள், வெண்பொங்கல், பதினாறு உளுந்து வடை, பாயசம், தூபம், நெய்தீபம், வெண்தாமரை, முல்லை, நந்தியாவட்டை, சிவப்பு தாமரை ஆகியவற்றை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    பிறகு, வெள்ளை நூல் சுற்றிய சிறுகுடம் ஒன்றை கலசமாக அலங்கரித்துக் கொள்ள வேண்டும்.

    சுத்தமான தரையில் சூரிய கோலத்தைப் போட்டு அதன்மேல் கோதுமை பரப்பி அதன் மேல் கலசத்தை வைக்க வேண்டும்.

    ஏலக்காய், பச்சை கற்பூரம், குங்குமப்பூ, ஜாதிக்காய், ஜாதிப்பத்திரி, வெட்டிவேர் ஆகியவற்றை இடித்து கலச நீரில் போட வேண்டும்.

    இப்போது, உடல்நலம் தேவைப்படுபவரை மணை ஒன்றில் கோலம் போட்டு, பூஜை செய்யுமிடத்தில் கிழக்குப் பக்கத்தைப் பார்த்தவாறு உட்கார வைக்க வேண்டும்.

    பிறகு பூஜையைத் தொடங்கலாம்.

    அன்றைய திதி, வாரம், நட்சத்திரம் சொல்லி,

    ''ஓம் நம: சூர்யமண்டலாதிபதியே.. மம சுக குடும்ப சர்வ வியாதி நிவாரணார்த்தம் மன வாக் சுத்த சித்யர்த்தம் சூர்ய பூஜாம் கரிஷ்யே''

    என்று சொல்லி, கலசத்துக்கு ஐந்து உபசாரங்களை செய்ய வேண்டும்.

    அப்போது கலசத்தின் மேல் சிறிது தீர்த்தம் விட வேண்டும். பிறகு,

    'மி'''ஓம் சூர்யாய நம: ஸ்நானம் சமர்ப்பயாமி.

    ஓம் அருணாய நம: ஸ்நானானந்தரம் ஆசமனம் சமர்ப்பயாமி.

    ஓம் தினகராய நம: கந்தம் புஷ்பம் சமர்ப்பயாமி.

    ஓம் பாஸ்கராய நம: வஸ்திரம் உபவீதம்

    ஓம் அர்க்காய நம: புஷ்ப மாலாம் சமர்ப்பயா

    என்று சொல்லி முடித்ததும் கீழே இருக்கிற முக்கியமான சூரிய தியானத்தைக் கை கூப்பியபடி சொல்ல வேண்டும்.

    ''சூர்யம் குங்கும ஸங்காசம் ஸர்வாபரண பூஷிதம்

    துவினேத்ரம் சாருவதனம் ரக்த மால்யா நுலேபனம்

    சதுர்புஜ சமோபேதம் பரிதச்சாம்புஜ த்வயம்

    அபீதி வரதோ பேதம் ப்ரபா மண்டல மண்டிதம்

    உபவீத ஸமாயுக்தம் உஷாப்ரத்யுஷ ஸேவிதம்''

    இதை சொல்லி முடித்ததும் சூரியனைக் குறித்த பதினாறு தமிழ்ப் போற்றிகளை சொல்லி கலசத்தில் வெள்ளை நிற மலர்களைப் போட வேண்டும்.

    பாடலை பாடி முடித்ததும் ஆரத்தியைக் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும்.

    ''ஓம் ஆதவனே போற்றி

    ஓம் உடல்நலம் தருவாய் போற்றி

    ஓம் உள்வினை நீக்குவாய் போற்றி

    ஓம் மும்மூர்த்தியே போற்றி

    ஓம் மூத்தவனே போற்றி

    ஓம் மூலப்பொருளே போற்றி

    ஓம் ஒளிபொருந்தியவா போற்றி

    ஓம் தெளிவுடையோய் போற்றி

    ஓம் தேவாதி தேவனே போற்றி

    ஓம் வட்ட ஒளியோனே போற்றி

    ஓம் வரந்தரும் வள்ளலே போற்றி

    ஓம் அழகு முகத்தோனே போற்றி

    ஓம் அதிசயப்பொருளே போற்றி

    ஓம் ஆதாரநிலையே போற்றி

    ஓம் இயற்கைச் சுடரே போற்றி

    ஓம் எல்லையற்றவா போற்றி

    ஓம் சுகம்தரும் சுந்தரனே போற்றி! போற்றி!''

    என்று சொல்லி தேங்காய் உடைத்து வைத்து ஊதுபத்தி, நெய்தீபம் காட்டி படைக்கும் பொருட்களை நிவேதனம் செய்ய வேண்டும்.

    பிறகு கலசத்துக்குக் கற்பூர ஆரத்தி காட்டி,

    ''ஓம் பாஸ்கராய வித்மஹே மகத்யுதிகராய தீமகி

    தந்நோ சூர்ய ப்ரசோதயாத் - சூர்ய நாராயண மூர்த்தியே நம:

    கற்பூர நிராஜனம் தர்சயாமி''

    என்ற மந்திரப் பாடலை சொல்ல வேண்டும்.

    பாடலை பாடி முடித்ததும் ஆரத்தியைக் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும்.

    பிறகு, அந்த நபரின் தலையில் கலசநீரை ஊற்றி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.


    • மூல்தானிலிருந்து சூரியவழிபாடு காஷ்மீருக்குப் பரவியது.
    • இந்த ஆலயத்தில் உள்ள சிற்பங்கள் உலகில் வேறு எங்கும் காணக் கிடைக்காத வேலைப்பாடு மிக்கவை.

    பஞ்சாபை ஆண்ட மன்னன் ஒருவனுக்கு தோல் நோய் ஏற்பட்டது. அவன் மாகாஸ்களை வரவழைத்தான்.

    நோய் குணமாகவே, இப்போது பாகிஸ்தானில் உள்ள "மூல்தான்" நகரில் அவன் சூரியனுக்காகவே ஒரு கோவில் கட்டுவித்தான்.

    2000 ஆண்டுகளுக்கு முன் கட்டிய இந்த ஆலயம்தான் பண்டைய இந்தியாவில் சூரியனுக்காக ஏற்பட்ட முதல் கோவில்.

    இந்த ஆலயம் அவுரங்கசீப் காலத்தில் அழிவுற்றது.

    மூல்தானிலிருந்து சூரியவழிபாடு காஷ்மீருக்குப் பரவியது.

    பிரபல மன்னனான லலிதாதித்ய முக்தா பீடன் என்பவன் இங்கே சூரியனுக்கு ஒரு கோவில் கட்டினான்.

    இந்தக் கோவில், கிரேக்க ஆலய அமைப்பில் கட்டப்பட்டது. பின்னர் வந்த இஸ்லாமிய மன்னன் சிக்கந்தர் பட்டீஸ்கான் (கி.பி.1391&1414) இந்தக் கோவிலை இடித்து நாசமாக்கி விட்டான்.

    சூரியனுக்காகக் கட்டிய புராதனக் கோவிலில் ஒன்று ஒரிஸ்ஸாவிலுள்ள கொனார்க் கோவில். கலிங்கத்தை ஆண்ட நரசிங்க தேவன் (கி.பி.1238&64) இதைக் கட்டினான்.

    இப்போது இந்தக் கோவிலின் ஒரு பகுதி மட்டுமே மிஞ்சியிருக்கிறது.

    இந்த ஆலயத்தில் உள்ள சிற்பங்கள் உலகில் வேறு எங்கும் காணக் கிடைக்காத வேலைப்பாடு மிக்கவை.

    ×