search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    தைப்பொங்கல்
    X

    தைப்பொங்கல்

    • சூரியன் உதிக்காவிட்டால் சந்திரனுக்கு ஒளி இல்லை. பயிர்கள் வாடிவிடும்.
    • உலகத்தில் மழை, பனி, வெப்பம் ஆகியவை சூரியனின் சஞ்சாரத்தால்தான் உண்டாகிறது.

    சூரியன் வடக்கு நோக்கிப் பயணம் செய்யும் உத்தராயண காலமான தை முதல் நாள் பொங்கல் திருநாள்.

    சூரியன் உதிக்காவிட்டால் சந்திரனுக்கு ஒளி இல்லை. பயிர்கள் வாடிவிடும்.

    நீர் நிலைகளிலுள்ள நீரை மேகத்திற்கு எடுத்துச் செல்பவை சூரியனின் உஷ்ண கிரணங்கள் தான்.

    ஆகவே தான் நிலத்தில் விளைந்த கரும்பு, நெல், இஞ்சி, மஞ்சள் கொத்து, வாழை என்று அந்த வருடம் விளைந்த பொருட்களை வைத்து, தேர்போல் கோலமிட்டு, காவியிட்டு, புத்தரிசியிட்டு முதலில் பாலைப் பொங்கவிட்டு சர்க்கரைப் பொங்கல் செய்து, சூரியனை பூஜிக்க வேண்டும்.

    சூரிய தேவன் சிவனின் அஷ்டமூர்த்திகளில் ஒருவர், பரமேஸ்வரனுக்கும் மஹாவிஷ்ணுவுக்கும், பராசக்திக்கும் வலது கண்ணாக பிரகாசிப்பவர்.

    உலகத்தில் மழை, பனி, வெப்பம் ஆகியவை சூரியனின் சஞ்சாரத்தால்தான் உண்டாகிறது.

    சூரியனும் சந்திரனும் ப்ரத்யட்ச தேவதைகள், சூரியனின் ரதத்திற்கு ஒரு சக்கரம், பன்னிரண்டு ஆரக்கால்கள், வேதத்தின் ஏழு சந்தங்களும் தேரின் ஏழு குதிரைகளாக இருக்கின்றன.

    அந்தக் குதிரைகள் வாரத்தின் ஏழு நாட்களையும், பன்னிரண்டு ஆரக்கால்கள் பன்னிரண்டு மாதங்களையும் குறிக்கின்றன.

    அந்த ரதத்தில் வாலகில்யர் எனப்படும் விரலளவே உள்ள 60,000 ரிஷிகள் சூரியனை ஸ்தோத்ரம் செய்கின்றார்களாம். (இது அறுபது நாழிகளைக் குறிக்கும்)

    சூரியனின் தேர் சக்கரத்தின் மேல்பாகம் உத்தராயணத்தையும், கீழ் பாகம் தட்சிணாயணத்தையும் குறிக்கின்றது.

    இவ்வாறு காலஸ்வரூபமாகவும், வேத ஸ்வரூபமாகவும் இருக்கும் சூரியன், பிரம்மா, விஷ்ணு, ருத்ரர் (சிவன்) ஆகிய மும் மூர்த்திகளின் ஸ்வரூபம்.

    முறையாக இவரை பூஜிப்பதாலும், ஆதித்ய ஹ்ருதயம் போன்றவற்றால் சூரிய நமஸ்காரம் செய்வதாலும் நல்ல உடல் வலிமை, நீண்ட ஆயுள், மன சாந்தி முதலியன கிட்டும்.

    விவாகமான ஆண்களும், பெண்களும் தம்பதிகளாக ஸத்குரு மூலம் சூரிய நமஸ்கார மந்திர ஜபத்தை உபதேசம் செய்து கொள்ள இது மிகச்சிறந்த நாள் ஆகும்.

    Next Story
    ×