search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுருண்டு விழுந்து சாவு"

    • பந்து தாக்கியதில் இறந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • வெள்ளியங்கிரி அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்ப ட்டார்.

    சூலூர்

    சூலூர் அருகே உள்ள வெள்ளலூரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 42). இவர் தென்னம்பாளை யத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    வெள்ளியங்கிரி நேற்று காலை தென்னம்பாளையம் மைதானத்தில் நண்பர்களு டன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடினார். அப்போது அவர் பந்து வீச வந்தார். இந்த நிலையில் வெள்ளி யங்கிரி திடீரென மைதா னத்தில் சுருண்டு விழுந்தார். அப்போது அவருக்கு கை, கால்கள் இழுத்துக்கொ ண்டன. இதைப் பார்த்த நண்பர்கள் ஓடோடி வந்து அவருக்கு தண்ணீர் கொடுத்து முதலு தவி செய்தனர்.

    அதன்பிறகு வெள்ளியங்கிரி அருகிலுள்ள மரு த்துவமனைக்கு உடனடி யாக கொண்டு செல்லப்ப ட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வெள்ளி யங்கிரி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுபற்றிய தகவல் அறி ந்ததும் சூலூர் போலீசார் வழக்கு ப்பதிவுசெய்து வெள்ளிங்கிரி உடலை மீட்டு உடல் கூறு ஆய்வு பரிசோதனைக்காக இ.எஸ்.ஐ. மருத்துவமனை க்கு அனுப்பி வைத்தனர்.

    சூலூர் தென்னம்பா ளையம் கிரிக்கெட் மைதா னத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்த வெள்ளிங்கிரிக்கு மனைவி, 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மேலும் உடல் நலக் கோளாறு காரணமாக இறந்தாரா, அல்லது கிரிக்கெட் விளையாடும் போது ஏதேனும் பந்து அல்லது கிரிக்கெட் மட்டை தவறுதலாக பட்டு அதனால் இறந்தாரா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சூலூர் பகுதியில் கிரிக்கெட் விளையாடி மைதானத்தில் உயிரிழக்கும் 2-வது நபர் வெள்ளியங்கிரி ஆவார். சித்தநாயக்கன் பாளையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிரிக்கெட் விளையாடிய 32 வயது பளு தூக்கும் வீரர் மைதானத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    • தண்ணீரை குடித்தவுடன் பழனிசாமி அதே இடத்தில் சுருண்டு விழுந்து விட்டார்.
    • கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோயில் காந்தி நகரைச் சேர்ந்தவர் பழனி சாமி (52). இவருக்கு திருமண மாகி 2 மகள்கள் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரண மாக கடந்த 15 ஆண்டுகளாக பழனிசாமி மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

    பழனிசாமி கடந்த சில ஆண்டுகளாக கருங்கல்பா ளையம், குயிலான் தோப்பு பகுதியில் உள்ள கோசாலை யில் தங்கி மாடுகளை பராமரிக்கும் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சுமார் 11 மணியளவில் தன்னுடன் வேலை பார்க்கும் நபரிடம் வயிறு வலிப்பதாக கூறி குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார்.

    தண்ணீரை வாங்கி குடித்தவுடன் பழனிசாமி அதே இடத்தில் சுருண்டு விழுந்துவிட்டார். உடனடியாக 108 ஆம்பு லன்சுக்கு தகவல் தெரி விக்கப்பட்டு மருத்துவக்குழுவினர் வந்து பரிசோ தித்து பார்த்துவிட்டு பழனிசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இதையடுத்து பழனிசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வடமாநிலத்தை சேர்ந்தவர்
    • போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் டவுன் திருவண்ணாமலை மெயின் ரோடு பகு தியில் 22 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென சுருண்டு விழுந்து தலையில் அடிபட்டு இறந்து கிடப்பதாக டவுன் போலீசா ருக்கு அப்பகுதியில் உள்ளவர்கள் புகார் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் சென்று இறந்து கிடந்த வாலிபரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் போலீசார் விசாரணை நடத்தியதில் சுருண்டு விழுந்த இறந்த வாலிபர் மேற்குவங்காள மாநிலம் திபெத்து பகுதியைச் சேர்ந்த சுக்கும்பார்டின் மகன் பால்டன்டின் என்பதும் திருப்பத்தூரில் அவரது நண்பர்கள் கட்டிட பணியில் கம்பி கட்டும் பணி செய்து வருவதும், அவர்களுடன் சேர்ந்து வேலை செய்வதற்காக ரெயிலில் வந்ததும் தெரியவந்தது. நேற்று முன் தினம் இரவு முழுவதும் மதுகுடித்து உள்ளார்.

    நேற்று காலை பணி செய்து கொண்டிருந்தபோது வெளியே சென்று விட்டு வருவதாக கூறி விட்டு சென்றவர் தலையில் அடிபட்டு சுருண்டு விழுந்து இறந்தது தெரியவந்தது.

    இது குறித்து கட்டிட என்ஜினீயர் பழனிசாமி கொடுத்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சிதம்பரத்தில் வீட்டில் சுருண்டு விழுந்து பிளஸ்-2 மாணவன் பரிதாபமாக இறந்தார்.
    • இவர் அண்ணா மலை நகரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    கடலூர்

    சிதம்பரம் அண்ணா மலைநகர் போலீஸ் சரகம் வடபாதி பகுதியை சேர்ந்த வர் இளங்கோவன். இவரது மகன் ஹரீஸ் ராகவேந்திரா (வயது 16). இவர் அண்ணா மலை நகரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று மாலை இவர் வீட்டில் படித்துக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி சுருண்டு விழுந்தார்.

    இதனை பார்த்த பெற்றோர் அதிர்ச்சிய டைந்தனர். உடனடியாக ஹரீஸ் ராகவேந்திராவை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோ தித்த டாக்டர்கள் ஹரீஸ் ராக வேந்திரா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோத னைக்காக ராஜாமுத்தையா மருத்து வகல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து அண்ணா மலைநகர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நாகர்கோவில் ரெயில்வே போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து சென்னையில் இருந்து சென்னையில் இருந்து கன்னியாகுமரி புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயிலில் அவர் பயணம் செய்தார்.

    நாகர்கோவில்:

    குழித்துறை அருகே உள்ள நடைக்காவு பகுதியை சேர்ந்தவர் லூக்காஸ் (வயது 52).

    இவர், சென்னையில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து சென்னையில் இருந்து லூக்காஸ் ஊருக்கு புறப் பட்டார். நேற்று மாலை சென்னையில் இருந்து கன்னியாகுமரி புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயிலில் அவர் பயணம் செய்தார்.

    இன்று காலை கன்னியா குமரி எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. இதையடுத்து லூக்காஸ் ரெயில் பெட்டியில் இருந்து இறங்கினார். பின்னர் அவர் குழித்துறை செல்வதற்காக மற்றொரு ரெயிலில் ஏற பிளாட்பாரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது லூக்காஸ் பிளாட்பாரத்தில் திடீ ரென சுருண்டு விழுந்தார். இதை பார்த்த பயணிகள் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடி யாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். பின்னர் லூக்காசை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் லூக்காஸ் இறந்து விட்டதாக தெரி வித்தனர்.

    இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோத னைக்காக கொண்டு செல்லப்பட்டது. லூக்காஸ் இறந்தது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.அவர்கள் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர்.

    நாகர்கோவில் ரெயில்வே போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×