search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுவர்கள்"

    • பல ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்து கிடக்கும் இக்குளத்தில், நொய்யல் ஆற்றிலிருந்து வரும் தண்ணீர் நிரம்பியுள்ளது.
    • பொழுது போக்கும் விதமாக பல இளைஞர்களும் இங்கு மீன் பிடிக்கின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் - மங்கலம் ரோட்டில் ஆண்டிபாளையம் குளம் உள்ளது. பல ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்து கிடக்கும் இக்குளத்தில், நொய்யல் ஆற்றிலிருந்து வரும் தண்ணீர் நிரம்பியுள்ளது.

    இக்குளத்தின் கரையில் பலரும் தூண்டில் போட்டு மீன் பிடிக்கின்றனர். பள்ளி விடுமுறை நாட்களிலும் சிறுவர்களும், பிற நாட்களில் பொழுது போக்கும் விதமாக பல இளைஞர்களும் இங்கு மீன் பிடிக்கின்றனர்.பெரும்பாலான சிறுவர்கள் சுற்றுப்பகுதியில் வசிக்கும் நிலையில், விடுமுறை நாட்களில் நண்பர்கள் குழுவாகச் சேர்ந்து நீண்ட நேரம் இங்கு வந்து மீன் பிடிக்கின்றனர். இந்த குளம் தற்போது முழுமையாக நீர் நிரம்பி நிற்கிறது.மீன் பிடிக்கும் ஆர்வத்தில் குளத்தில் உள்ளநிலை குறித்து புரிதல் இன்றியும், கரைகளில் விளையாட்டுத் தனமாக ஓடிப்பிடித்தும் விளையாடுகின்றனர்.இந்த குளத்தில் உள்ள நீரில் ஏற்கனவே சில உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இந்நிலையில் ஆபத்தை அறியாமல் சிறுவர்கள் இங்கு வந்து மீன் பிடித்து விளையாடுவது ஆபத்தை விலை கொடுத்து வரவழைப்பது போல் உள்ளது.

    இதைத் தவிர்க்கும் வகையில் குளத்துக்கு பாதுகாப்பு ஏற்படுத்துவதோடு சிறுவர்கள் குளத்தின் கரையில் ஒன்று சேர்ந்து இது போல் செயல்படுவது தவிர்க்க வேண்டும். அவ்வகையில் உரிய கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    • கோடைகால பயிற்சி முகாமில் பங்கேற்க சிறுவர்கள் விண்ணப்பிக்கலாம் என மதுரை கலெக்டர் தகவல் தெரிவித்தார்.
    • ஜூன் 1-ந் தேதி முதல் சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் ஞாற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும் கலைப்பயிற்சி அளிக்கப்படுகிறது.

    மதுரை, ஜூலை.9-

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் கலைபண்பாட்டு துறையின் கீழ் சவகர் சிறுவர் மன்றங்கள் செயல்பட்டு வருகிறது.

    5 வயது முதல் 16 வயதிற்குட்பட்ட சிறார்கள் இருபாலருக்கும் பள்ளி கல்வி தவிர ஏதேனும் ஒரு கலையை கற்றுக் கொள்ளும் வகையில் கலை ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் சவகர் சிறுவர் மன்றத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது

    மதுரை மாவட்டத்தில் மாவட்ட மையம் (கலைபண்பாட்டு மையம், பாரதி உலா சாலை, கோ.புதூர்) விரிவாக்க மையம் (பி.டி.ராஜன் சாலை உழவர் சந்தை எதிரில் உள்ள மதுரை மாநகராட்சி பாண்டியன் நெடுஞ்செழியன் மேல்நிலைப்பள்ளி) ஊரக மையம் (ஊராட்சி தொடக்கப்பள்ளி ஒத்தக்கடை) ஆகிய 3 மையங்கள் செயல்பட்டு வருகிறது.

    இந்த மையங்களில் குரலிசை, பரதம், ஓவியம், சிலம்பம், கீபோர்டு, நாட்டுப்புற நடனம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    பள்ளி செல்லும் குழந்தைகளுக்காக ஜூன் 1-ந் தேதி முதல் சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் ஞாற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும் கலைப்பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் சேர பதிவு கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும்.

    வேறு எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை இந்த கட்டணம் ஜூன் மாதம் முதல் மார்ச் வரைக்கும் உள்ளதாகும்.

    இதில் உறுப்பினராகி பயிற்சி பெறும் சிறுவர்களுக்கு மாவட்ட, மாநில, தேசிய அளவிலான கலைப்போட்டிகளில் பங்கேற்கவும், குளிர்கால- கோடைகால பயிற்சி முகாம்கள், செயல்முறை பயிலரங்கம், கருத்தரங்கம் ஆகியவற்றில் கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும்.

    இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு 0452-2566420 மற்றும் 98425 ௯௬௫௬௩ என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

    இ்வ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கோவிலில் உண்டியலை உடைத்து ரூ.6 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களை கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்.
    அனுப்பர்பாளையம்:

    திருப்பூர் பி.என்.ரோடு காட்டன்மில் ரோட்டை அடுத்த ஜீவா நகரில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. கடந்த 25-ந்தேதி இரவு கோவில் பூசாரி வழக்கம் போல கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது கோவில் உண்டியலில் பூட்டப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அங்கு சில்லரை காசுகள் சிதறி கிடந்தன. இந்த நிலையில் ராதாநகர் பகுதியில் உள்ள மறைவிடத்தில் 2 சிறுவர்கள் பணத்தை எண்ணி கொண்டிருந்தனர். இதை பார்த்து சந்தேகமடைந்த அப் பகுதி மக்கள் அவர்களை பிடித்து விசாரித்தனர்.

    இதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதை தொடர்ந்து 2 பேரையும் பிடித்து அனுப்பர்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் திருப்பூர் தொட்டி மண்ணரையை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், மற்றொருவன் ஊத்துக்குளியை அடுத்த மொரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்தது. மேலும் இருவரும் சேர்ந்து கோவிலில் உண்டியலை உடைத்து ரூ.6 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றதும் தெரிந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×