search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் கோவில் உண்டியலை உடைத்து ரூ.6 ஆயிரம் கொள்ளை -  2 சிறுவர்கள் கைது
    X

    திருப்பூரில் கோவில் உண்டியலை உடைத்து ரூ.6 ஆயிரம் கொள்ளை - 2 சிறுவர்கள் கைது

    கோவிலில் உண்டியலை உடைத்து ரூ.6 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களை கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்.
    அனுப்பர்பாளையம்:

    திருப்பூர் பி.என்.ரோடு காட்டன்மில் ரோட்டை அடுத்த ஜீவா நகரில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. கடந்த 25-ந்தேதி இரவு கோவில் பூசாரி வழக்கம் போல கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது கோவில் உண்டியலில் பூட்டப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அங்கு சில்லரை காசுகள் சிதறி கிடந்தன. இந்த நிலையில் ராதாநகர் பகுதியில் உள்ள மறைவிடத்தில் 2 சிறுவர்கள் பணத்தை எண்ணி கொண்டிருந்தனர். இதை பார்த்து சந்தேகமடைந்த அப் பகுதி மக்கள் அவர்களை பிடித்து விசாரித்தனர்.

    இதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதை தொடர்ந்து 2 பேரையும் பிடித்து அனுப்பர்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் திருப்பூர் தொட்டி மண்ணரையை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், மற்றொருவன் ஊத்துக்குளியை அடுத்த மொரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்தது. மேலும் இருவரும் சேர்ந்து கோவிலில் உண்டியலை உடைத்து ரூ.6 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றதும் தெரிந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×