search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cash robbery"

    • நாகராஜ் இனிப்பு கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • ரூ.76 ஆயிரத்து 760 பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    கோவை,

    கோவை ேஹாப் கல்லூரி அருகே உள்ள ஸ்ரீநகரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 47). இவர் விமான நிலையம் அருகே உள்ள அவினாசி ரோட்டில் இனிப்பு கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவரது கடையில் சூப்பர்வைசராக வேலை பார்க்கும் கண்ணப்பன் என்பவர் கடை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றார்.நள்ளிரவு மர்மநபர்கள் யாரோ இனிப்பு கடையில் ஷட்டரை உடைத்து உள்ளே சென்றனர்.பின்னர் கல்லாவை திறந்து அதில் இருந்த ரூ.76 ஆயிரத்து 760 பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். மறுநாள் காலையில் கடையை திறக்க வந்த கண்ணப்பன் ஷட்டர் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இனிப்பு கடையின் ஷட்டரை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் பின்புறம் உள்ள லெட்சுமி மில் மேலக்காலனியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 61). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
    • பீரோவில் இருந்த ரூ. 10 ஆயிரம் பணம் மற்றும் விலை உயர்ந்த 3 வாட்ச் திருடு போனது தெரிய வந்தது.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் பின்புறம் உள்ள லெட்சுமி மில் மேலக்காலனியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 61). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

    இவருடைய மகள் கோவையில் படித்து வருகிறார். தனது குடும்பத்துடன் கோவையில் படிக்கும் மகளை பார்க்க சென்று விட்டு நேற்று நள்ளிரவு சந்திரசேகர் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பின் பக்க கதவு, உள்ளே பீரோ மற்றும் அலமாரி உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பீரோவில் இருந்த ரூ. 10 ஆயிரம் பணம் மற்றும் விலை உயர்ந்த 3 வாட்ச் திருடு போனது தெரிய வந்தது. 2 வெள்ளி குத்துவிளக்கு, வெள்ளி குங்கும சிமிழ் மற்றும் சில வெள்ளி பொருள்களை ஒரு பிளாஸ்டிக் பையில் எடுத்து வைத்து வாழை மரத்திற்கு அடியில் மறைத்து வைத்துள்ளனர்.

    ஆனால் அதை எடுத்து செல்லவில்லை. அதை போன்று மற்றொரு வீட்டிலும் பூட்டு உடைக்கப்பட்டு இருக்கிறது. அந்த வீட்டில் இருந்தவர்கள் வெளியூர் சென்றுள்ளதால் அங்கு என்ன திருடு போய் இருக்கிறது என்று தெரியவில்லை. அவர்கள் வந்த பிறகு தான் என்ன திருடு போய் இருக்கும் என்று தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதே போல் இனாம் மணியாச்சி மேம்பால சர்வீஸ் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தின் பின்பகுதியில் வசிக்கும் விஜயக்குமார் (46). இவரும் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு வீட்டிற்கு வந்துள்ளார்.

    இவருடைய வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.54ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளனர். இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் நிலையம் பின்புறம் உள்ள வீடுகளில் நடைபெற்ற திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.24 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் வாங்கி மோசடி செய்யப்பட்டுள்ளது.
    வேலூர்:

    மேல்பாடி அருகேயுள்ள கொக்கேரி கிராமத்தை சேர்ந்தவர் குருநாதன் (வயது 67), ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் இருந்து கிரெடிட் கார்டு பெற்றுள்ளார். அதனை பயன்படுத்தி பல்வேறு பொருட்கள் வாங்கி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக குருநாதனின் செல்போனுக்கு குறுந்தகவல் ஒன்று வந்தது.

    அதில், அவரது கிரெடிட் கார்டை பயன்படுத்தி ரூ.24 ஆயிரத்துக்கு பொருட்கள் வாங்கியிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து குருநாதன் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று விசாரித்தார். அப்போது மர்மநபர்கள் குருநாதனின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ரூ.24 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் வாங்கி மோசடி செய்தது தெரிய வந்தது.

    இது குறித்து குருநாதன் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    சூலூரில் பனியன் கம்பெனி அதிபர் வீட்டில் மர்ம ஆசாமிகள் புகுந்து 33 பவுன் தங்க நகை, ரூ.15 லட்சத்தை திருடி சென்றனர்.
    சூலூர்:

    கோவையை அடுத்த சூலூர் அருகே உள்ள சிந்தாமணிபுதூர் பகுதியில் உள்ள சத்ய நாராயணபுரம், வி.ஐ.பி. கார்டனை சேர்ந்தவர் பிரதீப் குமார் (வயது 44). திருப்பூரில் சொந்தமாக பனியன் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சவிதா, கோவை பீளமேட்டில் தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    நேற்று முன்தினம் வழக்கம் போல் கணவன்-மனைவி இருவரும் பணிக்கு சென்றுவிட்டனர். இரவு 8 மணிக்கு வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்புற கேட் மற்றும் வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் வைத்து இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்து இருந்த 33 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.15 லட்சம் ஆகியவை திருட்டு போய் இருந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்த னர். துப்பறியும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

    இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீசார் கூறியதாவது:- காலை முதல் இரவு வரை அந்த வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள் என்று முன்கூட்டியே தெரிந்து கொண்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகையை கொள்ளையடித்து சென்று உள்ளனர். திருட்டு நடந்த வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை. இருப்பினும் அந்த வீட்டின் அருகே பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம். தப்பி ஓடிய குற்றவாளிகளை விரைவில் கைது செய்து விடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் மாலை நேரங்களில் வீட்டை விட்டு செல்லவே அச்சமாக உள்ளது. எனவே சூலூர் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து செல்ல வேண்டும் என்று கூறினார்கள்.

    கோவை சரவணம்பட்டி அம்மன் நகரை சேர்ந்தவர் பானுமதி (45). இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியில் சென்று இருந்தார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்து இருந்த 15 பவுன் நகை, ரூ.3 லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள். 
    கயத்தாறு அருகே டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ.98 ஆயிரத்தை கொள்ளையடித்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே அய்யனாரூத்து ஊருக்கு மேற்கு பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு மேற்பார்வையாளராக கயத்தாறு அருகே ஆத்திகுளத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து (வயது 40), விற்பனையாளராக குமாரகிரியைச் சேர்ந்த சுப்புராஜ் (35) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

    இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவில் வேலை முடிந்ததும், வழக்கம்போல் டாஸ்மாக் கடையை பூட்டி விட்டு, தங்களது வீடுகளுக்கு புறப்பட்டனர். அப்போது டாஸ்மாக் கடையில் வசூலான ரூ.98 ஆயிரத்து 470-யை மறுநாள் காலையில் வங்கியில் செலுத்துவதற்காக, இசக்கிமுத்து எடுத்து சென்றார்.

    இசக்கிமுத்து மொபட்டிலும், சுப்புராஜ் மோட்டார் சைக்கிளிலும் அடுத்தடுத்து சென்று கொண்டிருந்தனர். அவர்கள் 2 பேரும் அய்யனாரூத்து காற்றாலை பண்ணை அருகில் சென்றபோது, அங்கு காட்டு பகுதியில் மறைத்து இருந்த 3 மர்மநபர்கள் திடீரென்று அரிவாளைக் காண்பித்து 2 பேரையும் வழிமறித்தனர். பின்னர் மர்மநபர்கள் 3 பேரும் அரிவாளை திருப்பி வைத்து இசக்கிமுத்து, சுப்புராஜ் ஆகிய 2 பேரையும் சரமாரியாக தாக்கினர்.

    இசக்கிமுத்துவிடம் இருந்த ரூ.98 ஆயிரத்து 470-யை மர்மநபர்கள் கொள்ளை அடித்து விட்டு, மொபட், மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவற்றையும் மர்மநபர்கள் பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

    இதனால் இசக்கிமுத்து, சுப்புராஜ் ஆகிய 2 பேரும் இரவில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று, கயத்தாறு போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்கள் 3 பேரை வலைவீசி தேடி வருகிறார். காயம் அடைந்த இசக்கிமுத்து, சுப்புராஜ் ஆகிய 2 பேரும் கயத்தாறு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    ஆவடியில், ஏ.டி.எம். மையத்தில் உள்ள ஒரு ஏ.டி.எம். எந்திரம் திறந்து கிடந்தது. எனவே மர்மநபர்கள், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்தனரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். #ATMRobbery
    ஆவடி:

    ஆவடி எச்.வி.எப். சாலையில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது. இந்த வங்கி, பாதுகாப்பு துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் வசதிக்காக தொடங்கப்பட்டது. இந்த வங்கியின் அருகேயே அதன் ஏ.டி.எம். மையம் அமைந்துள்ளது. இங்கு 4 ஏ.டி.எம் எந்திரங்கள் உள்ளன.

    இந்த ஏ.டி.எம். மையத்துக்கு காவலாளி கிடையாது. நேற்று காலை அந்த ஏ.டி.எம். மையத்தில் வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்கச் சென்றார். அப்போது ஒரு ஏ.டி.எம். எந்திரம் திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து அவர், போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் அங்கு சென்று பார்த்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அதிகாரிகள் யாரும் வங்கியில் இல்லை. போன் மூலம் வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    நேற்று முன்தினம் இரவு கொள்ளையர்கள் யாராவது ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனரா?. அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதா?. அல்லது அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பியபோது சரியாக பூட்டாமல் சென்றதால் தானாகவே திறந்து கொண்டதா? என அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

    மேலும் இன்று(திங்கட் கிழமை) வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வந்து பார்த்தபிறகுதான், நடந்தது என்ன? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.   #ATMRobbery #Tamilnews
    கோவிலில் உண்டியலை உடைத்து ரூ.6 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களை கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்.
    அனுப்பர்பாளையம்:

    திருப்பூர் பி.என்.ரோடு காட்டன்மில் ரோட்டை அடுத்த ஜீவா நகரில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. கடந்த 25-ந்தேதி இரவு கோவில் பூசாரி வழக்கம் போல கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது கோவில் உண்டியலில் பூட்டப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அங்கு சில்லரை காசுகள் சிதறி கிடந்தன. இந்த நிலையில் ராதாநகர் பகுதியில் உள்ள மறைவிடத்தில் 2 சிறுவர்கள் பணத்தை எண்ணி கொண்டிருந்தனர். இதை பார்த்து சந்தேகமடைந்த அப் பகுதி மக்கள் அவர்களை பிடித்து விசாரித்தனர்.

    இதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதை தொடர்ந்து 2 பேரையும் பிடித்து அனுப்பர்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் திருப்பூர் தொட்டி மண்ணரையை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், மற்றொருவன் ஊத்துக்குளியை அடுத்த மொரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்தது. மேலும் இருவரும் சேர்ந்து கோவிலில் உண்டியலை உடைத்து ரூ.6 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றதும் தெரிந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    கோவையில் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து ரூ.22 லட்சம் திருடிய ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள். #ATMRobbery
    கோவை:

    கோவை ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகரில் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கோவை நகரில் 250 ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பும் பணியை இந்த நிறுவனம் செய்து வருகிறது.

    இந்த நிறுவனத்தில் ஒண்டிப்புதூரை சேர்ந்த தாஜுதீன் (வயது 30), ராமநாதபுரத்தை சேர்ந்த ஆரோக்கியதாஸ் (26) ஆகிய 2 பேர் வேலைபார்த்து வந்தனர். இவர்கள் ஏ.டி.எம். எந்திரங்களில் பணத்தை நிரப்பும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் அந்த நிறுவனத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தணிக்கை செய்யப்பட்டது. அப்போது தனியார் வங்கிக்கு சொந்தமான காந்திபுரம், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் உள்ள ஏ.டி.எம். எந்திரங்களில் வைக்கப்பட்ட ரூ.21 லட்சத்து 99 ஆயிரம் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த தனியார் நிறுவனத்தினர் அந்த 2 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது 4 முறை தாஜுதீனும், ஆரோக்கிய தாசும் பணத்தை நிரப்பிய பிறகு மீண்டும் ஏ.டி.எம். மையத்துக்கு வந்து சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

    அவர்கள் 2 பேரும் ரகசிய எண்ணை பயன்படுத்தி ஏ.டி.எம். எந்திரத்தை திறந்து ரூ.21 லட்சத்து 99 ஆயிரத்தை திருடி சென்றுள்ளனர்.

    இதுகுறித்து தனியார் நிறுவனத்தின் மேலாளர் ஜெகதீசன் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு உதவிய அக்பர் அலி என்பவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். கைதானவர்கள் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

    நாங்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பும் பணியை தனியார் நிறுவனம் மூலம் செய்து வந்தோம். கோவையில் உள்ள 250 ஏ.டி.எம். மையங்களில் பணத்தை நிரப்புவோம். தினமும் அதிகளவில் பணத்தை பார்க்கும்போது பணத்தின் மீது ஆசை வந்தது.

    எனவே ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள பணத்தை எடுத்து ஆடம்பரமாக வாழ முடிவு செய்தோம். நாங்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பிவிட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் அந்த ஏ.டி.எம். மையத்துக்கு செல்வோம். அடிக்கடி பணம் வைக்க செல்வதால் அங்கு பணியில் இருக்கும் காவலாளிக்கு எங்கள் மீது சந்தேகம் வராது. அங்கு ஏ.டி.எம். எந்திரத்தை பழுது பார்ப்பதுபோல் ஷட்டரை மூடிவிடுவோம். இதனால் வாடிக்கையாளர்கள் சந்தேகப்பட மாட்டார்கள்.

    எங்களுக்கு கொடுக்கப்பட்ட ஏ.டி.எம். எந்திரத்தின் ரகசிய குறியீட்டு எண் மூலம் திறந்து பணத்தை எடுத்துவிடுவோம். உயர் அதிகாரிகள் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு எந்திரத்தில் உள்ள டிரேயில் பண அளவை மாற்றி வைத்துவிடுவோம். ஒரு மாதத்தில் ரூ.21 லட்சத்து 99 ஆயிரத்தை கையாடல் செய்தோம். இந்த நிலையில்தான் கண்காணிப்பு கேமரா மூலம் போலீசில் சிக்கி கொண்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். கைதான 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 
    நெல்லையில் 4 பள்ளிக்கூடங்களில் பணம் கொள்ளை போனது. ஒரே நாளில் அடுத்தடுத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
    நெல்லை:

    நெல்லையில் 4 பள்ளிக்கூடங்களில் பணம் கொள்ளை போனது. ஒரே நாளில் அடுத்தடுத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

    இந்த துணிகர கொள்ளை பற்றிய விவரம் வருமாறு:-

    பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் ஒரு தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூட நிர்வாகி நேற்று முன்தினம் மாலையில் பள்ளிக்கூடத்தை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலையில் பள்ளிக்கூடத்துக்கு வந்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    பள்ளிக்கூட அலுவலக கதவு திறந்து கிடந்தது. பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளை போய் இருந்தது. தகவல் அறிந்த பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    பின்னர் அந்த பள்ளிக்கூடத்தின் கேமராவை கைப்பற்றினர். அதில் பதிவாகி உள்ள காட்சிகளை வைத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். பள்ளிக்கூடத்தில் நடந்த இந்த கொள்ளை பரபரப்பு அடங்குவதற்குள் அதே பகுதியில் இன்னொரு பள்ளிக்கூடத்திலும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட விவரம் போலீசாருக்கு தெரிய வந்தது. அது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் பாளையங்கோட்டை தியாகராஜநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்திலும், நெல்லை தச்சநல்லூரில் ஒரு தனியார் பள்ளிக்கூடத்திலும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த 4 பள்ளிக்கூடங்களிலும் கொள்ளை போன பணம் எவ்வளவு என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை.

    பாளையங்கோட்டை கே.டி.சி.நகர், தியாகராஜநகர் பள்ளிக்கூடங்களில் நடந்த கொள்ளை குறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசாரும், தச்சநல்லூரில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து நெல்லை டவுன் குற்றப்பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பள்ளிக்கூடங்களில் ஒரே நாளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவத்தை மர்மநபர்கள் அரங்கேற்றி உள்ளனர். எனவே ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    ஏற்கனவே பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. அதேபோல் சங்கர்நகரில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிக்கூடத்திலும் ரூ.20 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

    தனியார் பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை நடந்து வரும் நிலையில், அந்த பள்ளிக்கூடங்களை குறி வைத்து மர்மநபர்கள் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி வருவது நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    ×