பீளமேட்டில் இனிப்பு கடையில் பணம் கொள்ளை

நாகராஜ் இனிப்பு கடை வைத்து நடத்தி வருகிறார். ரூ.76 ஆயிரத்து 760 பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
பீளமேட்டில் இனிப்பு கடையில் பணம் கொள்ளை
Published on

கோவை,

கோவை ேஹாப் கல்லூரி அருகே உள்ள ஸ்ரீநகரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 47). இவர் விமான நிலையம் அருகே உள்ள அவினாசி ரோட்டில் இனிப்பு கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவரது கடையில் சூப்பர்வைசராக வேலை பார்க்கும் கண்ணப்பன் என்பவர் கடை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றார்.நள்ளிரவு மர்மநபர்கள் யாரோ இனிப்பு கடையில் ஷட்டரை உடைத்து உள்ளே சென்றனர்.பின்னர் கல்லாவை திறந்து அதில் இருந்த ரூ.76 ஆயிரத்து 760 பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். மறுநாள் காலையில் கடையை திறக்க வந்த கண்ணப்பன் ஷட்டர் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இனிப்பு கடையின் ஷட்டரை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com