search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சினிமா வாய்ப்பு"

    • "சினிமா உலகில் நான் நடிகராக எளிதில் நுழைந்து உள்ளேன். என் தந்தை நடிகர் என்பதால் எனக்கும் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது
    • என்னை நிரூபிக்க சினிமாவில் இன்று வரை நான் கடினமாக உழைத்து வருகிறேன்

    மலையாள பட உலகின் முன்னனி நடிகர் பிருத்வி ராஜ். 'தி கோட் லைப்' என்ற புதிய படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் அமலாபால் , வினீத் ஸ்ரீவின்வாசன் மற்றும் ஜிம்மி ஜீன் லூயிஸ் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

    தேசிய விருது வென்ற இயக்குநர் பிளெஸ்ஸி இந்தப் படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த 6 வருடமாக நடந்து வந்தது.

    இந்த படத்திற்காக பிருத்விராஜ் 31 கிலோ எடை குறைத்து இருந்தார். துரதிருஷ்டவசமாக 1.5 வருடங்களாக கோவிட் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அவரது உடல் எடையும் அதிகரித்து.

    அதன் பின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டதும் உடல் எடையை குறைக்க மீண்டும் அதே செயல்முறையை மேற்கொண்டார்.படப்பிடிப்புக்காக சவுதி அரேபியாவில் இருந்து 250 செம்மறி ஆடுகள் மற்றும் 20 ஒட்டகங்கள் வாங்கப்பட்டன. இந்த படத்துக்கு பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்து உள்ளார்.அவரது இசை படத்துக்கு கூடுதல் பலம் அளிப்பதாக அமைந்து உள்ளது.




    இந்நிலையில் இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து உள்ளன. வருகிற 28- ந் தேதி (மார்ச்) படம் தியேட்டர்களில் வெளியாகுகிறது. தமிழ், இந்தி, மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் வெளியிடப்படுகிறது.

    இந்நிலையில் இப்படத்தின் புரோமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. படம் பற்றி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.இதில்கலந்து கொண்டு நடிகர் பிருத்விராஜ் கூறியதாவது :-




    "சினிமா உலகில் நான் நடிகராக எளிதில் நுழைந்து உள்ளேன். என் தந்தை (நடிகர் சுகுமாரன்) பிரபல நடிகர் என்பதால் எனக்கும் சினிமாவில் பட வாய்ப்பு உடனடியாக கிடைத்தது. என்னை விட சிறந்த நடிகர்கள் பலர் இருந்தும் எனக்கு கதாநாயகனாகும் வாய்ப்பு தந்தையால் தான் கிடைத்தது.

    என்னை நிரூபிக்க சினிமாவில் இன்று வரை நான் கடினமாக உழைத்து வருகிறேன். சினிமா குடும்பத்தில் பிறந்ததால் தான எனக்கும் வாய்ப்பு வந்தது.நான் அதிர்ஷ்டசாலியா? ஆமாம், அதிர்ஷ்டசாலி தான். எனது தந்தையால் தான் வாய்ப்பு கிடைத்ததா? ஆமாம், அவரால் தான் அந்த வாய்ப்பு கிடைத்தது. இதை என்னால் மறுக்க முடியாது".என்றார்.

    பிருதிவிராஜின் வெளிப்படையான பேச்சு குறித்து இணைய தளத்தில் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் சினிமா ஆசை காட்டி பண மோசடியில் ஈடுபட்டவர்கள் பற்றி தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
    • மோசடி நபர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னை தி.நகர் பிரகாசம் தெருவில் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    அந்த நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி விளம்பரம் கொடுத்து சினிமாவில் நடிக்க விண்ணப்பிக்கும் இளம்பெண்கள் மற்றும் வாலிபர்களிடம் பணத்தை பறித்து மர்மநபர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

    அவர்கள் வெளியிட்ட விளம்பரத்தை நம்பி துணை நடிகர்கள், நடிகைகள் சிலரும் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு விண்ணப்பித்து உள்ளனர். அவர்களிடமும் பணத்தை வசூலித்து மோசடி கும்பல் பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

    இப்படி பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் தி.நகரில் உள்ள தயாரிப்பு நிறுவனத்துக்கு சென்று சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டுள்ளனர். அப்போதுதான் தங்களது நிறுவனத்தின் பெயரை சொல்லி ஏமாற்றி பண மோசடி நடைபெற்றிருப்பது அவர்களுக்கு தெரியவந்தது.

    இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தேனாம்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் 2 செல்போன் எண்களை கொடுத்துள்ள தயாரிப்பு நிறுவனம் அந்த எண்களில் இருந்து பேசி இருக்கும் நபர்கள்தான் பண வசூலில் ஈடுபட்டு மோசடி செய்து உள்ளனர் என தெரிவித்து உள்ளனர்.

    இந்த புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் சினிமா ஆசை காட்டி பண மோசடியில் ஈடுபட்டவர்கள் பற்றி தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். மோசடி நபர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அழகான புகைப்ப டங்களை அனுப்புங்கள் இயக்குனரிடம் காட்டுகி றேன் என்று கூறியுள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பங்காரம் கிராமத்தை சேர்ந்த திருமணமான இளம் பெண்ணுக்கும் தாமோதரன் என்கின்ற ரவிக்குமார் (வயது 25) இன்ஜினியர் பட்டதாரி என்பவருடன் முகநூல் மூலமாக அறிமுகம் கிடைத்துள்ளது. இருவரும் நண்பர்கள் ஆன பின்னர் செல் நம்பரை பகிர்ந்து கொண்டு நட்பாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக இளம்பெண்ணிடம் தாமோ தரன் கூறியுள்ளார். உன்னு டைய அழகான புகைப்ப டங்களை அனுப்புங்கள் இயக்குனரிடம் காட்டுகி றேன் என்று கூறியுள்ளார்.

    அந்த இளம் பெண் தன்னிடம் போட்டோ எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தாமோதரன் எனக்கு போட்டோகிராபி தெரியும் என்றும் நான் நேரில் வந்து உன்னை அழகாக படம் பிடித்து இயக்குனருக்கு அனுப்பி வைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    இதற்கு சம்மதம் தெரி வித்த அந்தப் பெண்ணிடம் வீட்டின் முகவரியை கேட்ட றிந்தார். கடந்த நவம்பர் மாதம் 14-ந் தேதி அன்று மதியம் 12.30 மணியளவில் அந்தப் பெண்ணுக்கு போன் செய்து உன் வீட்டருகே அருகே தான் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    பின்னர் அந்தப் பெண் தாமோதரனை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்பெண்ணிடம் போட்டோ எடுக்க வேண்டும் உன்னிடம் இருக்கும் உடையிலே அழ கான உடையை உடுத்திக் கொண்டுவா என்று கூறியுள்ளார். அந்தப் பெண்ணும் சினிமா ஆசை உச்சத்திற்கு ஏற போட்டி ருந்த நகைகள் எல்லாம் கழட்டி வைத்து விட்டு அறையினுள் சென்றார். இதனை எதிர்பார்த்திருந்த தாமோதரன் நகைகள் மற்றும் செல்போனை எடுத்து க்கொண்டு அங்கி ருந்து மின்னல் வேகத்தில் சென்றுள்ளார்.

    துணி மாற்றிக் கொண்ட இளம்பெண் வெளியில் வந்து பார்த்த பொழுது நகை, செல்போனை காண வில்லை. அங்கிருந்த தாமோ தரனையும் காண வில்லை. அதிர்ச்சி அடைந்த இளம்பெண் சின்ன சேலம் போலீஸ் நிலைய த்தில் இது குறித்து புகாரளி த்தார். வழக்கு பதிவு செய்த போலீ சார் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு தலைமையில் தனிப்படை அமைத்து தாமோதரனை தேடி வந்தனர்.

    இந்நிலையில் செல் போன் நம்பரை வைத்து தாமோதரன் காரைக்கு டியில் இருப்பதை போலீ சார் கண்டுபிடித்தனர். காரைக்குடிக்கு விரைந்த சின்னசேலம் போலீசார் தாமோத ரனை மடக்கிப் பிடித்தனர். சின்னசேலம் போலீஸ் நிலை யத்திற்கு இன்று அழைத்து வந்தனர். கள்ளக்குறிச்சி நீதிமன்ற த்தில் ஆஜர்படுத்தி சின்ன சேலம் சிறையில் அடைத்த னர்.

    • புளிய மரத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்தார்.
    • கடந்த பல ஆண்டுகளாக சினிமா துறையில் டைரக்டர் ஆவதற்கு முயற்சி மேற்கொண்டார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கீழ்செருவாய் கிராமம் வெள்ளாற்றில் புதியதாக தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள புளிய மரத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்தார். தகவல்அறிந்த திட்டக்குடி போலீசார் அங்கு சென்றனர்.

    உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் கிராமத்தில் வசிக்கும் ராமராஜ் மகன் பாலாஜி (வயது34) என தெரியவந்தது. இவர் கடந்த பல ஆண்டுகளாக சினிமா துறையில் டைரக்டர் ஆவதற்கு முயற்சி மேற்கொண்டதாகவும் இதுவரை அதற்கு தகுந்த வாய்ப்பு கிடைக்காததால் இதில் மன உளைச்சலுக்கு ஆளான பாலாஜி தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ×