திட்டக்குடி அருகே சினிமா வாய்ப்பு கிடைக்காததால் வாலிபர் தற்கொலை

புளிய மரத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்தார். கடந்த பல ஆண்டுகளாக சினிமா துறையில் டைரக்டர் ஆவதற்கு முயற்சி மேற்கொண்டார்.
திட்டக்குடி அருகே   சினிமா வாய்ப்பு கிடைக்காததால் வாலிபர் தற்கொலை
Published on

கடலூர்: 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கீழ்செருவாய் கிராமம் வெள்ளாற்றில் புதியதாக தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள புளிய மரத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்தார். தகவல்அறிந்த திட்டக்குடி போலீசார் அங்கு சென்றனர்.

உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் கிராமத்தில் வசிக்கும் ராமராஜ் மகன் பாலாஜி (வயது34) என தெரியவந்தது. இவர் கடந்த பல ஆண்டுகளாக சினிமா துறையில் டைரக்டர் ஆவதற்கு முயற்சி மேற்கொண்டதாகவும் இதுவரை அதற்கு தகுந்த வாய்ப்பு கிடைக்காததால் இதில் மன உளைச்சலுக்கு ஆளான பாலாஜி தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com