search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாரல் மழை"

    • சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி, தலமலை, ஆசனூர் தொட்டகாஜனூர் உள்பட வனப்பகுதிகளில் மேக மூட்டம் ஏற்பட்டு சாரல் மழை பெய்து வருகிறது.
    • மலைப்பகுதியில் தொடர்ந்து சாலை மழை பெய்வதால் குளிர்ச்சியாக காணப்படு கிறது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக காலை நேரத்தில் வெயிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் கடந்த 2 நாட்களாக ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலை முதலே மேக மூட்டத்துடன் காணப் பட்டு வருகிறது.

    இதே போல் இன்று காலை ஈரோடு, கோபி செட்டி பாளையம், பெருந் துறை அந்தியூர். சென்னி மலை உள்பட அனைத்து பகுதிகளிலும் மேக மூட்ட த்துடன் காணப்பட்டு வருகிறது. மேலும் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் சத்திய மங்கலம் மற்றும் தாளவாடி, தலமலை, ஆசனூர் தொட்ட காஜனூர் உள்பட வனப் பகுதிகளில் மேக மூட்டம் ஏற்பட்டு சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் தொடர்ந்து வனப்பகுதி களில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் சிலு, சிலுவென குளிர் காற்று வீசி வருகிறது. இதனால் வனப்பகுதி குளிர்ச்சி யாக காணப்படு கிறது.

    மேலும் அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதியிலும் இன்று காலை முதலே மேக மூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. மேலும் மலைப பகுதியில் ெதாடர்ந்து சாலை மழை பெய்வதால் குளிர்ச்சியாக காணப்படு கிறது.

    இதே போல் இன்று காலை மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி, பவானி, சித்தோடு, ஆப்பக்கூடல், அத்தாணி உள்பட மாவட்ட த்தின் அனைத்து பகுதி களிலும் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. இதனால மாவட்டத்தில் குளிர் அதிகமாக இருந்தது.

    • ரதவீதிகளில் தற்போது பணிகள் நடைபெறுவதால் சாலைகள் சேதம் அடைந்துள்ளது.
    • மழை பெய்து வருவதால் ரதவீதிகளில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள், பாதாள சாக்கடை, குடிநீர் திட்டப்பணிகள் முடிவடைந்து சாலைகள் போடும் பணி நடைபெற்று வருகிறது.

    வடக்கு ரதவீதி

    டவுனில் 4 ரதவீதிகளில் தற்போது பணிகள் நடைபெறுவதால் சாலைகள் சேதம் அடைந்துள்ளது. இதில் வியாபார கடைகள் அதிக அளவிலும், பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகவும் உள்ள வடக்கு ரதவீதியில் லேசான மழை பெய்துவிட்டாலே குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி வடக்கு ரதவீதியில் மக்கள் கூட்டம் மேலும் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நேரத்தில் தொடர்ந்து மழையும் பெய்து வருவதால் ரதவீதியில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.

    புகார்

    இதன் காரணமாக பொது மக்கள் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. இவ்வாறு தேங்கி கிடக்கும் மழைநீரால் கொசு உற்பத்தியாகும் சூழல் நிலவி வருகிறது என சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    அதுமட்டுமல்லாமல் நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நடைபெற்று வருவதால் தினமும் சப்பரங்கள் வீதி உலா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு உலா செல்லும்போது வடக்கு ரதவீதியில் தேங்கி கிடக்கும் தண்ணீர் வழியாக தான் செல்லவேண்டி உள்ளது. பல ஆண்டுகளாக இதே நிலை தான் நிலவுகிறது.

    இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இந்த சாலையை மழைநீர் தேங்கி நிற்காத அளவிற்கு நிரந்தரமாக சரி செய்து தர வேண்டும் என நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநல சங்க தலைவர் முகம்மது அய்யூப் கோரிக்கை வைத்துள்ளார்.

    • தேவதானப்பட்டியில மிதமான மழை பெய்த நிலையில் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
    • மழையால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தேவனப்பட்டி:

    தேவதானப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வடுகபட்டி, மேல்மங்கலம், லட்சுமிபுரம், கைலாசபட்டி, சில்வார்பட்டி முதல்லக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் கன மழை பெய்தது.

    இதனைத் தொடர்ந்து நேற்று 2வது நாளாக மிதமான மழை பெய்த நிலையில் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    கடந்த 25 நாட்களாக மழை பெய்யாத நிலையில் தற்போது 2வது நாளாக பெய்த மிதமான மழையால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • அணை பகுதிகளிலும் மழை நீடித்து வருவதால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது
    • அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சானல்களில் ஷிப்ட் முறையில் திறந்து விடப்பட்டு உள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. நாகர்கோவிலில் இன்று காலையில் சாரல் மழை பெய்தது.

    கொட்டாரம், மயிலாடி பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்தது. பேச்சிபாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மழை நீடித்து வருவதால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.சுருளோடு பகுதியில் அதிக பட்சமாக 7.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

    சிற்றார்-1 அணைகளில் இருந்து பாசனத்திற்காக 1009 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சானல்களில் ஷிப்ட் முறையில் திறந்து விடப்பட்டு உள்ளது.

    அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    • சாரல் மழையால் மக்களை மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    • குறிப்பிடத்தக்க மழை பெய்யாமல் உள்ளது

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் இரவு வரை விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதால் அனைத்து தரப்பினர்களும் சந்தோஷம டைந்துள்ளனர்.

    கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கடந்த சில நாட் களுக்கு முன்பு மாவட்டம் முழுதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இரண்டு நாட்களாக மழையின் தாக்கம் குறைந்து, வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில், நேற்று மதியம் முதல் இரவு வரை மாவட்டம் முழுதும் சீதோஷ்ணநிலையில் மாற்றம் ஏற்பட்டு, லேசான அளவில் சாரல் மழை பரவலாக பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து, ஜில்லென்று காற்று மாவட்டம் முழுதும் வீசுவதால் அனைத்து தரப்பினர்களும் சந்தோஷமடைந்துள்ளனர்.

    மேலும், கருர் மாவட் டத்தில் தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரை யிலான காலக்கட்டத்தில் குறிப்பிடத்தக்க மழை பெய்யாமல் உள்ளது. எனவே, செப்டம்பர் மாதத்திலாவது அதிகளவு மழை கரூர் மாவட்டத்தில் பெய்ய வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • இன்று காலை முதல் சில பகுதிகளில் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது.
    • பெய்த மழையால் ஏரி, குளங்கள் மற்றும் அணை பகுதிகளில் மழைநீர் வரத்து அதிகரித்து வருகிறது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி சுற்று வட்டாரமான பேரிகை, காளிங்காவரம், அத்தி முகம், சிம்பல் திராடி, மாரண்டப்பள்ளி, மைதாண்டப்பள்ளி, அத்திமுகம், காமன்தொட்டி, உத்தனப்பள்ளி , உலகம், சென்னப்பள்ளி, மேலுமலை, வேம்பள்ளி ஆகிய இடங்களில் சில வாரங்களாக கன முதல் லேசான மழை பெய்து வருகிறது.

    இன்று காலை முதல் சில பகுதிகளில் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து பெய்தது. கடந்த சில தினங்களாக பெய்த மழையால் ஏரி, குளங்கள் மற்றும் அணை பகுதிகளில் மழைநீர் வரத்து அதிகரித்து வருகிறது. இப்பகுதியில் அடிக்கடி சாரல் மழை பெய்து வருவதால் குளிர்ச்சி நிலவி வருகிறது.

    • கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
    • ஏற்காட்டில் நேற்றிரவு தொடங்கிய மழை இன்று காலையிலும் சாரல் மழையாக பெய்து வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மாவட்டத்தின் ப ல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

    கன மழை

    குறிப்பாக கரியகோவில், கெங்கவல்லியில் கன மழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது . இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சேலம் மாநகரில் நேற்றிரவு தொடங்கிய மழை அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, ஜங்சன், கொண்டலாம்பட்டி உள்பட பல பகுதிகளிலும் பரவலாக பெய்தது . இன்று காலையும் மழை தூறிய படியே இருந்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    ஏற்காட்டில் குளிர்

    ஏற்காட்டில் நேற்றிரவு தொடங்கிய மழை இன்று காலையிலும் சாரல் மழையாக பெய்து வருகிறது. மேலும் பனிப்பொழிவும் உள்ளதால் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது. ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை மிக குறைவாகவே உள்ளது குறிப்பிட தக்கது.

    290.4 மி.மீ. மழை

    மாவட்டத்தில் அதிக பட்சமாக இன்று காலை 8 மணி வரை கரியகோவிலில் 41 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. கெங்கவல்லி 36, ஆனைமடுவு 31, வீரகனூர் 27, ஏற்காடு 26.4, காடையாம்பட்டி 26, பெத்தநாயக்கன் பாளையம் 25, ஆத்தூர் 24.2, தம்மம்பட்டி 23, ஓமலூர் 12, சேலம் 9, சங்ககிரி 5, எடப்பாடியில் 4.4. மி.மீ. மழை எ ன மாவட்டம் முழுவதும் 290.4 மி.மீ. மழை பெய்துள்ளது.

    சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலையும் மழை தூறிய படியே இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்வோர் கடும் அவதி அடைந்தனர்.

    • பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் திடீரென சாரல் மழை
    • நீண்ட இடைவெளிக்கு பின் மழை பெய்ததால் குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டுள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பாலப்பட்டி, பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், அண்ணாநகர், சேளூர், சாணார்பாளையம், பிலிக்கல்பாளையம், அய்யம்பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளை யம், கொத்தமங்கலம், ஜமீன் இளம் பள்ளி, சோழசிராமணி, சுள்ளிப்பாளையம், பெருங்குறிச்சி, மணியனூர், கந்தம்பாளையம், நல்லூர், ஒத்தக்கடை, பரமத்தி, கபிலர்மலை, மோகனூர், நன்செய் இடையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.

    அதனை தொடர்ந்து மழை வேகமாக பெய்ய ஆரம்பித்தது. இரவில் நீண்ட நேரம் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. அதேபோல் இன்று காலை முதல் லேசான சாரல் மழை பெய்தது.இதனால் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நனைந்து கொண்டே சென்றனர்.

    அதேபோல் சாலை ஓரத்தில் போடப்பட்டிருந்த கட்டில் கடைக்காரர்கள், பலகாரக் கடைக்காரர்கள், பழ கடைக்காரர்கள், டிபன் விற்பனை செய்யும் தள்ளுவண்டிக்காரர்கள், துணிக்கடைக்காரர்கள் விற்பனை செய்ய முடியாமல் பாதிப்படைந்தனர்.

    நீண்ட இடைவெளிக்கு பின் மழை பெய்ததால் குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டுள்ளது. மழை பெய்ததால் பயிர்கள் நல்ல வளர்ச்சி அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

    • சூறை காற்றுடன் பெய்து வரும் மழையின் காரணமாக மரக்கிளைகள் முறிந்து விழுந்து மின்சாரமும் ஆங்காங்கே தடைபட்டது
    • சாரல் மழையின் காரண மாக குண்டும் குழியுமாக காணப்பட்ட கோட்டார் சாலை மோசமாக உள்ளது

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையின் காரணமாக குளுகுளு சீசன் நிலவுகிறது. நாகர்கோவிலில் இன்று அதிகாலையில் இருந்தே சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

    இதனால் மாணவ-மாணவிகள் குடை பிடித்த வாறு பள்ளிக்கு சென்றனர். அதன்பிறகு சற்று மழை குறைந்திருந்த நிலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தார முமாகவே காணப்பட்டது.

    அவ்வப்போது மழை பெய்தது. காலை 10:45 மணிக்குத் தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடை விடாது சாரல் மழையாக பெய்து கொண்டு இருந்ததால் பொதுமக்கள் பெரும் பரிதவிப்பிற்கு ஆளானார்கள்.

    சாரல் மழையின் காரண மாக குண்டும் குழியுமாக காணப்பட்ட கோட்டார் சாலை மோசமாக உள்ளது. அந்தச் சாலையில் உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கி உள்ளது.

    தக்கலை, சுசீந்திரம், ஆரல்வாய்மொழி ,இரணியல், திருவட்டாறு, குலசேகரம், மார்த்தாண்டம் மற்றும் புறநகர் பகுதிகளிலும் மழை நீடித்தது. சாரல் மழையுடன் சூறைக்காற்றும் வீசி வருகிறது. மலையோ ரப் பகுதியான பாலமோர் மற்றும் அணைப்பகுதி களான பேச்சிப் பாறை, பெருஞ்சாணி , சிற்றாறு பகுதிகளிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

    திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அங்கு ரம்யமான சூழ்நிலை நிலவு வதால் சுற்றுலா பயணி கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.

    சூறை காற்றுடன் பெய்து வரும் மழையின் காரணமாக மரக்கிளைகள் முறிந்து விழுந்து மின்சாரமும் ஆங்காங்கே தடைபட்டது.

    குமரி கடல் பகுதியில் சூறைக்காற்று காரணமாக மீனவர்கள் இன்று 6-வது நாளாக கடலுக்கு செல்லாத தால் சின்ன முட்டம், குளச்சல் துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

    • ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில் இன்று அதிகாலை முதல் காலை 9 மணிவரை திடீரென சாரல் மழை பெய்தது.
    • காலை நேரத்தில் திடீரென மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில் இன்று அதிகாலை முதல் காலை 9 மணிவரை திடீரென சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் குடை பிடித்தபடி சென்றனர்.

    மேலும் வேலைக்கு செல்பவர்களும் சாரல் மழையில் நனைந்த படி வேலைக்கு சென்றனர். காலை நேரத்தில் திடீரென மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

    ×