search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "light"

    • கார்த்திகை தீபத்தையொட்டி துறையூர் தெப்ப குளத்தில் 3 ஆயிரத்து 340 விளக்குகள் ஏற்றப்பட்டது
    • நகர மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன் தொடங்கி வைத்தார்

    துறையூர், 

    திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி நிர்வாகம் மற்றும் அய்யப்ப சேவா சங்கத்தின் சார்பில் கார்த்தி கை தீபத்தையொட்டி பெரிய தெப்ப குளத்தில் கார்த்திகை தெப்பத் திருவி ழா கொண்டா டப்பட்டது.இவ்விழாவிற்கு துறையூர் நகர மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன் தலைமை தாங்கி விழாவினை தொட ங்கி வைத்தார். நகர்மன்ற துணைத் தலைவர் மெடி க்கல் முரளி முன்னிலை வகித்தார். மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட சிவன் பார்வதி சிலைகளுக்கு தீப ஆராதனை செய்ய ப்பட்டு, தெப்பக்குளம் முகப்பு பகுதியில் விளக்கே ற்றப்பட்டது.இதனைத் தொடர்ந்து துறையூர் பகுதி பொது மக்கள், வண்ண விளக்கு களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பக்குளத்தில் உள்ள 3 ஆயிரத்து 340 மாடக்குழிகளிலும் விளக்கே ற்றி கார்த்திகை தீபத்தை கொண்டாடினர்.தெப்பக்குளத்தில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியினை காண சிறுவர், சிறுமியர் உட்பட ஏராளமான பொது மக்கள் கண்டு களித்தனர். இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் வீர மணிகண்டன், கார்த்தி கேயன், சுதாகர், இளை யராஜா, ஜானகிராமன், அம்மன் பாபு, முத்து மாங்கனி, நித்தியா,நகர துணை செயலாளர்கள் இளங்கோ, ,பிரபு, கிட்ட ப்பா,நகர இளைஞரணி செல்வா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து செய்தி
    • நமது அன்பும் கருணையும் மற்றவர்களுக்கு ஒளியை வழங்குவதாக அமைய வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்து செய்தியில் கூறி யிருப்பதாவது:-

    தமிழ் மக்களால் பெரிதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் கார்த்திகை தீபத்திருநாளும் ஒன்றாகும். இந்நாளில், இருள் மற்றும் தீமைகளை நீக்கும் முடிவில்லாத ஒளியின் ஆதாரமான சிவபெரு மானின் அருளாசியைப் பெற வீடுகளிலும் கோவில்களிலும் பிரகாச மான தீபங்களை ஏற்றி வைத்து வழிபடுகின்றனர்.

    தீபத்தின் ஒளி எப்படி அனைத்து உயிரினங்களின் மீதும் விழுகிறதோ, அதுபோல் நமது அன்பும் கருணையும் மற்றவர்களுக்கு ஒளியை வழங்குவதாக அமைய வேண்டும்.

    கார்த்திகை தீபத்தின் ஒளி உங்கள் வாழ்க்கையை ஒளிரச் செய்து, பிரகாசமான எதிர்காலத்திற்கு வழிகாட்டட்டும் என்று கூறி அனைவருக்கும் கார்த்திகை தீப நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • தேசிய நெடுஞசாலை எண் 81 ல் தினமும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.
    • கடந்த சில நாட்களாக உயர் மின் கோபுர விளக்குகள் எரிவதில்லை.

    பல்லடம்:

    பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன் திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த கோவை - திருச்சி தேசிய நெடுஞசாலை எண் 81 ல் தினமும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது. திருமணம் போன்ற விசேஷ நாட்களில் இந்த எண்ணிக்கை 80 ஆயிரத்தைத் தாண்டும்.

    இதற்கிடையே பல்லடம் நால்ரோடு பகுதியில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. அந்த விளக்குகள் சில நாட்கள் எரிவதும், அதற்குப் பின் பழுதாவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. தற்போது கடந்த சில நாட்களாக உயர் மின் கோபுர விளக்குகள் எரிவதில்லை. இதனால் நால்ரோடு பகுதியில் வெளிச்சம் குறைவாக உள்ளதால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்துகளில் சிக்குகின்றனர். மேலும் அந்தப் பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

    பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் முக்கிய சாலையில் வெளிச்சம் குறைவாக இருப்பதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உயர் மின் கோபுர விளக்கை சரி செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில் இன்று அதிகாலை முதல் காலை 9 மணிவரை திடீரென சாரல் மழை பெய்தது.
    • காலை நேரத்தில் திடீரென மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில் இன்று அதிகாலை முதல் காலை 9 மணிவரை திடீரென சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் குடை பிடித்தபடி சென்றனர்.

    மேலும் வேலைக்கு செல்பவர்களும் சாரல் மழையில் நனைந்த படி வேலைக்கு சென்றனர். காலை நேரத்தில் திடீரென மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

    மத்திய குழு வருகையால் 9 நாட்களுக்கு பிறகு வடகாடு பகுதி மக்கள் மின் விளக்கு வெளிச்சத்தை கண்டனர். அப்போது அவர்கள் பகலில் வந்து ஆய்வு நடத்தும்படி கண்ணீர் மல்க வேண்டினர். #GajaCyclone #CentralCommittee
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வடகாடும் ஒன்று. மின் கம்பங்கள், மரங்கள் எல்லாம் வேரோடு சாய்ந்து விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இந்த பகுதி மக்கள் கடந்த 9 நாட்களாக இருளில் தவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று இரவு மத்திய குழுவினர் வடகாடு பரமன் நகரில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய வந்தனர். புயலால் சரிந்து இருளில் விழுந்து கிடந்த மரங்களை அவர்கள் பார்வையிடும் விதமாக ஜெனரேட்டர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு மின் விளக்குகள் எரிந்தன.

    இதனால் 9 நாட்களுக்கு பிறகு அப்பகுதி மக்கள் வெளிச்சத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

    மத்திய குழுவினர் அங்கு புயலால் சேதம் அடைந்த மரங்கள், வீடுகளை பார்வையிட்டனர்.

    அப்போது அங்கு திரண்டு நின்ற பொதுமக்கள் மத்திய குழுவினரிடம், “எங்கள் வீடு, தென்னை மரங்கள் என்று எல்லாவற்றையும் இழந்து விட்டோம். எங்கள் வாழ்வாதாரமே அழிந்து போய் விட்டது. நீங்கள் தான் வாழ்வாதாரத்துக்கு வழி ஏற்படுத்தி தரவேண்டும். இதுவரை எங்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. ஒரு வாரமாக ரோட்டில்தான் நிற்கிறோம். நீங்கள் வந்ததால்தான் எங்களுக்கு வெளிச்சமே வந்துள்ளது. எங்களுக்கு தண்ணீர் மட்டும்தான் தருகிறார்கள். ஆய்வு பணியை செய்ய பகலில் வாருங்கள்” என கண்ணீர் மல்க வேண்டினர்.

    பெண்களில் பலர் கைக்குழந்தையுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களது கோரிக்கைகளை மத்திய குழுவினர் கருணையுடன் கேட்டு விட்டு அடுத்த இடத்தை பார்வையிட கிளம்பினர். குழு செல்லும் வழி நெடுக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    வீடு வாசல், தோட்டம், துரவுகளை இழந்து தவிக்கும் வேதனையில் யாராவது ஆவேசப்பட்டு அசம்பாவிதத்தில் ஈடுபட்டால் அதை தடுப்பதற்காக சாலை ஓரங்களில் கயிறு கட்டி பொதுமக்களை அதனை தாண்ட விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தி வைத்து இருந்தனர். இதனால் பல இடங்களில் பொதுமக்கள் மத்திய குழுவினரிடம் நேரில் தங்களது ஆதங்கத்தை நேரடியாக வெளிப்படுத்த முடியாமல் போனது. #GajaCyclone #CentralCommittee
    ×