தெப்ப குளத்தில் 3 ஆயிரத்து 340 விளக்குகள் ஏற்றம்

கார்த்திகை தீபத்தையொட்டி துறையூர் தெப்ப குளத்தில் 3 ஆயிரத்து 340 விளக்குகள் ஏற்றப்பட்டது நகர மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன் தொடங்கி வைத்தார்
தெப்ப குளத்தில் 3 ஆயிரத்து 340 விளக்குகள் ஏற்றம்
Published on

துறையூர், 

திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி நிர்வாகம் மற்றும் அய்யப்ப சேவா சங்கத்தின் சார்பில் கார்த்தி கை தீபத்தையொட்டி பெரிய தெப்ப குளத்தில் கார்த்திகை தெப்பத் திருவி ழா கொண்டா டப்பட்டது.இவ்விழாவிற்கு துறையூர் நகர மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன் தலைமை தாங்கி விழாவினை தொட ங்கி வைத்தார். நகர்மன்ற துணைத் தலைவர் மெடி க்கல் முரளி முன்னிலை வகித்தார். மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட சிவன் பார்வதி சிலைகளுக்கு தீப ஆராதனை செய்ய ப்பட்டு, தெப்பக்குளம் முகப்பு பகுதியில் விளக்கே ற்றப்பட்டது.இதனைத் தொடர்ந்து துறையூர் பகுதி பொது மக்கள், வண்ண விளக்கு களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பக்குளத்தில் உள்ள 3 ஆயிரத்து 340 மாடக்குழிகளிலும் விளக்கே ற்றி கார்த்திகை தீபத்தை கொண்டாடினர்.தெப்பக்குளத்தில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியினை காண சிறுவர், சிறுமியர் உட்பட ஏராளமான பொது மக்கள் கண்டு களித்தனர். இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் வீர மணிகண்டன், கார்த்தி கேயன், சுதாகர், இளை யராஜா, ஜானகிராமன், அம்மன் பாபு, முத்து மாங்கனி, நித்தியா,நகர துணை செயலாளர்கள் இளங்கோ, ,பிரபு, கிட்ட ப்பா,நகர இளைஞரணி செல்வா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com