search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாம்.சி.எஸ்"

    ஜெயம் ரவி நடிப்பில் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் `அடங்க மறு' படத்தின் வெற்றி சந்திப்பில் பேசிய ஜெயம்ரவி, இந்த படத்தில் நடிக்கும் போது, எனது மனைவி எனக்கு அடங்கி இருந்ததாக கூறினார். #AdangaMaru #JayamRavi
    ஜெயம் ரவி நடித்து சமீபத்தில் வெளியான படம் அடங்க மறு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தின் வெற்றி சந்திப்பில் ஜெயம் ரவி பேசும்போது,

    ‘இந்த படத்தை என் மாமியார் சுஜாதா தயாரித்து இருந்தார். என் மனைவி ஆர்த்தி எனக்கு அடங்கி இருந்தது என்பது இந்த படத்தில் நான் நடித்த சமயத்தில் மட்டும்தான்.

    ஆர்த்தி ஏதாவது சண்டை போட்டால் படப்பிடிப்புக்கு செல்லமாட்டேன் என்று பிளாக்மெயில் செய்ய தொடங்கினேன். என்னுடன் சண்டை போடுவதற்காகவே படப்பிடிப்பை சில நாட்கள் நிறுத்த முடியுமா? என்று அம்மாவிடம் ஆர்த்தி கேட்பார்.



    அந்த அளவுக்கு அவரை அதட்டி வைத்து இருந்தேன். இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும்வரை என்னிடம் அவர் அடங்கியே இருந்தார்’ என்று கூறினார். இதை கேட்டு மேடையில் இருந்த ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியும், மாமியார் சுஜாதாவும் சிரித்தனர். #AdangaMaru #JayamRavi #AdangaMaruSuccessMeet

    ஜெயம் ரவி பேசிய வீடியோவை பார்க்க:

    கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி - ராஷி கண்ணா நடிப்பில் வெளியாகி இருக்கும் `அடங்க மறு' படத்தின் விமர்சனம். #AdangaMaruReview #AdangaMaru #JayamRavi #RaashiKhanna
    சென்னையில் மைம் கோபி போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்ரடராக பணிக்கு சேர்கிறார் ஜெயம் ரவி. அதே காவல்நிலையத்தில் மற்றொரு சப்-இன்ஸ்பெக்ரடராக இருக்கிறார் அழகம் பெருமாள். 

    ஜெயம் ரவி தனது அப்பா பொண்வண்ணன், அம்மா ஸ்ரீரஞ்சினி, அண்ணன் சுப்பு பஞ்சு, அண்ணனின் மனைவி, குழந்தைகள் என சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இவரது சொந்தக்கார பெண்ணான ராஷி கண்ணாவும், இவரும் காதலிக்கிறார்கள்.



    நேர்மையான போலீஸான ஜெயம் ரவி தனது வேலையை சரியாக செய்ய வேண்டும், யாருக்கும் பயப்படக் கூடாது என்ற எண்ணம் கொண்டவர். இந்த நிலையில், ஜெயம் ரவி விசாரிக்கும் வழக்குகளில் செல்வாக்கு மிக்கவர்களுக்கு சம்பந்தம் இருப்பதை ஜெயம் ரவி கண்டுபிடிக்க, அந்த வழக்குகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியாத அளவிற்கு ஜெயம் ரவிக்கு முட்டுக்கட்டை போடப்படுகிறார்கள்.

    இந்த நிலையில், மாடியில் இருந்து இளம்பெண் ஒருவர் கீழே விழுந்து உயிரிழக்கிறார். இந்த வழக்கை விசாரிக்கும் ஜெயம் ரவி அந்த பெண் தற்கொலை செய்யவில்லை, இளைஞர்கள் சிலர் இணைந்து அந்த பெண்ணை தள்ளிவிட்டதை ஜெயம் ரவி கண்டுபிடிக்கிறார். மேலும் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கிறார். ஆனால் அவர்கள் அனைவரும் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.



    ஜெயிலில் தனது மகனை அடித்ததற்காக ஜெயம் ரவியை பழிவாங்க, அவரது குடும்பத்தினரை கொன்று விடுகிறார்கள். மேலும் இந்த வழக்கை விபத்து என்றும் மாற்றிவிடுகின்றனர்.

    இதனால் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதற்கு காரணமானவர்களை அவர்களது தந்தையின் மூலமே பழிவாங்குவதாக சபதம் செய்கிறார்.

    கடைசியில், ஜெயம் ரவி தனது சபதத்தை நிறைவேற்றினாரா? ராஷி கண்ணாவுடன் இணைந்தாரா? அடங்க மறுத்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    நேர்மையான, துடிப்பான போலீஸ் அதிகாரியாக ஜெயம் ரவி சிறப்பாக நடித்திருக்கிறார். தனி ஒருவன் படத்திற்கு பிறகு தனி ஒருவனாக படத்தை தனது தோள்மேல் தூக்கி செல்கிறார். காதல், பாசம், சண்டை என தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ராஷி கண்ணாவுக்கு இந்த படம் ஒரு நல்ல தொடக்கமாக அமைந்திருக்கிறார். திரையில், அழகாக வந்து ரசிகர்களை கவர்கிறார்.

    பொன்வண்ணன், ஸ்ரீரஞ்சினி, சுப்பு பஞ்சு, மீரா வாசுதேவன் என அனைவரும் குடும்ப கதாபாத்திரத்தை ஏற்று கதையை நகர்த்துகின்றனர். குறிப்பாக சுப்பு பஞ்சுவின் இரு குழந்தைகளும் கவரும்படியாக நடித்துள்ளார்கள். மைம் கோபி, சம்பத் ராஜ், முனிஸ்காந்த், அழகம்பெருமாள் போலீஸாக கலக்கியிருக்கிறார்கள்.



    என்னதான் போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் உயர் அதிகாரியின் உத்தரவுக்கு கட்டுப்பட்டுத் தான் ஆக வேண்டும். என்ன நடந்தாலும் அதனை மீற முடியாது என்பதை மையப்படுத்தி படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார் கார்த்திக் தங்கவேல். நேர்மையான போலீஸ் ஒருவரை என்ன தான் அடக்க நினைத்தாலும், ஒருநாள் அவரது உணர்ச்சி வெடித்து, அடங்க மறுப்பதையும், சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் குற்றத்தையும் படமாக உருவாக்கி இருக்கிறார். வசனங்கள் சிறப்பாக உள்ளது.

    சாம்.சி.எஸ். இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `அடங்க மறு' அத்து மீறு. #AdangaMaruReview #AdangaMaru #JayamRavi #RaashiKhanna

    கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி - ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் அடங்க மறு' படத்தின் முன்னோட்டம். #AdangaMaru #JayamRavi #RaashiKhanna
    ஹோம் மூவி மேக்கர்ஸ் மூலம் சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ள படம் `அடங்க மறு'.

    ஜெயம் ரவி நாயகனாகவும், ராஷி கண்ணா நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில், சம்பத்ராஜ், முனீஷ்காந்த், பொன்வண்ணன், சுப்பு பஞ்சு, பாபு ஆண்டனி, அழகம் பெருமாள், மீரா வாசுதேவன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - சத்யன் சூரியன், இசை - சாம்.சி.எஸ்., படத்தொகுப்பு - ரூபன், கலை - லால்குடி என் இளையராஜா, சண்டைப்பயிற்சி - ஸ்டன்ட் சிவா, வசனம் - விஜி, நடனம் - தினேஷ், ஆடை வடிவமைப்பு - ஜே.கவிதா, இணை தயாரிப்பாளர் - ஆனந்த் ஜாய், தயாரிப்பு நிறுவனம் - ஹோம் மூவி மேக்கர்ஸ், தயாரிப்பு - சுஜாதா விஜயகுமார், இயக்கம் - கார்த்திக் தங்கவேல்.



    படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குநர் பேசியதாவது,

    நான் 10 வருடத்திற்கு முன்பே இயக்குனராக வேண்டியது, ஆனால் தள்ளிபோட்டுக் கொண்டே இருந்தேன். ஒரு நாள் கதையை சுஜாதா விஜயகுமார் அவர்களிடம் சொன்னேன், அவருக்கு பிடித்து போனது. ஜெயம் ரவியிடம் கதையை சொல்லுங்க, பிடிச்சா பண்ணலாம் என்றார். கடந்த 3 வருடங்களில் நான் பார்த்த சம்பவங்களை வைத்து எழுதிய கதை. ரூபன், இளையராஜா என எல்லோருமே கடும் உழைப்பாளிகள், ஆரம்பத்தில் இருந்தே நண்பர்கள். 

    எதையும் யூகிக்க முடியாத அளவுக்கு, இந்த படத்தில் வித்தியாசமான நடிகர்கள் பலர் தேவைப்பட்டனர். நான் நினைத்த மாதிரி நடிகர்கள் கிடைத்தது பெரிய வரம். ஜெயம் ரவியை விட ராஷி கண்ணாவுடன் வேலை பார்க்கும்போது தான் எனக்கு மிகவும் பதட்டமாக இருந்தது. விஜி சார் வசனம் படத்துக்கு மிகப்பெரிய பலம் என்றார்.

    படம் வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #AdangaMaru #JayamRavi #RaashiKhanna

    அயோக்யா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில், விஷால் கையில் பீர் பாட்டில் இருந்ததற்கு ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதற்கு விஷால் விளக்கம் அளித்துள்ளார். #AyogyaFL #Vishal
    விஷால் அடுத்து நடிக்கும் படம் அயோக்யா. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த வாரம் வெளியானது. இந்த போஸ்டரில் விஷால் பீர் பாட்டிலை கையில் வைத்திருந்தது சர்ச்சையானது. ராமதாஸ் உள்ளிட்ட சிலர் இதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

    இந்த கண்டனங்களுக்கு விஷால் பதில் அளித்துள்ளார். ‘நான் பீர் பாட்டிலை கையில் வைத்திருந்தேனே தவிர குடிப்பதுபோல் இல்லை. கையில் வைத்திருப்பது குடிப்பதாக ஆகாது. இந்த படத்தில் நான் போலீசாக நடிக்கிறேன்.



    நான் துப்பறியும் ஒரு குற்றத்தில் அந்த பாட்டில் ஒரு தடயமாக கிடைக்கிறது. அதை வைத்து நான் சண்டையிடுவதாக காட்சி அமைந்துள்ளது. இதைத் தான் அந்த போஸ்டரில் சொல்லி இருக்கிறோம்’ என்று கூறியுள்ளார். 

    வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, வம்சி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். #AyogyaFL #Vishal #Ramadoss

    வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘அயோக்யா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நீக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். #Ayogya #Vishal
    ‘சண்டக்கோழி 2’  படத்தை தொடர்ந்து விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அயோக்யா’.

    வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, வம்சி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

    படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டது. போஸ்டரின் மூலம் படம் அடுத்த ஆண்டு ஜனவரி ரிலீசாகும் என்பது உறுதியாகியிருக்கிறது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஷால் போலீஸ் ஜீப்பில் உட்கார்ந்து கொண்டு, கையில் பீர் பாட்டிலை வைத்திருக்கிறார்.
    இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த போஸ்டரை நீக்கச் சொல்லியும் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து ராமதாஸ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

    பீர் பாட்டிலுடன் நடிகர் விஷால் தோன்றும் விளம்பரமும், முதல் சுவரொட்டியும் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும். இந்த விளம்பரம் மூலம் அவரது ரசிகர்களுக்கு நடிகர் விஷால் சொல்ல வரும் செய்தி என்ன? நடிகர் சங்க பொதுச்செயலாளரிடமிருந்து சமூக அக்கறையை எதிர்பார்க்கிறேன்!

    ‘அயோக்யா’ திரைப்பட விளம்பரத்தில் கதாநாயகர் விஷால் பீர் புட்டியுடன் தோன்றுகிறார். நடிகர் சங்க பொதுச்செயலர் என்ற முறையில் புகைக்கும் காட்சிகளில் நடிகர்கள் நடிப்பதை தடை செய்ய வேண்டும் என கடிதம் எழுதினேன். இப்போது புகையை தாண்டி பீர் பாட்டிலுடன் நடிக்கிறார். என்னவொரு சமூகப் பொறுப்பு!

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். #Ayogya #Vishal #RashiKhanna

    கார்த்திக் தங்வேல் இயக்கத்தில் ஜெயம் ரவி - ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அடங்க மறு’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. #AdangaMaru #JayamRavi #Raashikhanna
    `டிக் டிக் டிக்' படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘அடங்க மறு’. கார்த்திக் தங்வேல் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார்.

    படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், தணிக்கை குழுவில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாகவும், படம் வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி ரிலீஸாக இருப்பதாகவும் ஜெயம் ரவி அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
    சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.

    இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் வெளியாகிய பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 
    அடங்கமறு ரிலீசாகும் அதே வாரத்தில் தனுஷின் மாரி 2, விஜய் சேதுபதியின் சீதக்காதி, விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம், யாஷ் நடித்துள்ள கே.ஜி.எஃப் உள்ளிட்ட படங்கள் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #AdangaMaru #JayamRavi #Raashikhanna

    கார்த்திக் தங்வேல் இயக்கத்தில் ஜெயம் ரவி - ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி வரும் ‘அடங்க மறு’ படம் நவம்பரில் ரிலீசாக இருப்பததாக அறிவிக்கப்பட்டுள்ளது. #AdangaMaru #JayamRavi #Raashikhanna
    `டிக் டிக் டிக்' படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அடங்க மறு’. கார்த்திக் தங்வேல் இயக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.

    சாம்.சி.எஸ் இசையமைக்கும் இந்த படத்தின் படத்தொகுப்பு பணிகளை ரூபன் மேற்கொள்கிறார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார்.
    இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், படம் வருகிற நவம்பர் மாதம் ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. நவம்பர் கடைசி வாரத்தில் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #AdangaMaru #JayamRavi #Raashikhanna

    மனோஜ் பீதா இயக்கத்தில் குரு சோமசுந்தரம், சிபி, சாந்தினி, அனிஷா நடிப்பில் வெளியாகி இருக்கும் `வஞ்சகர் உலகம்' படத்தின் விமர்சனம். #VanjagarUlagamReview #GuruSomasundaram
    கணவன், மனைவியான சாந்தினி - ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இடையே சரியான புரிதல் இல்லை. இவர்களது வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார் நாயகன் சிபி சந்திரன். எப்போதும் குடி போதையிலேயே இருக்கும் சிபி பத்திரிகை நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார். 

    இந்த நிலையில் ஒருநாள், குடி போதையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் சிபியை போலீசார் எழுப்புகின்றனர். சாந்தினி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த கொலையில், சிபி மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறி அவரை கைது செய்கின்றனர். இதையடுத்த சிபி பணிபுரியும் பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளரின் உதவியுடன் சிபியை வெளியே வருகிறார்.



    இதையடுத்து இந்த கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்குகின்றனர். மறுபுறத்தில் சிபி வேலை செய்யும் பத்திரிகை நிறுவனம் அந்த கொலை குறித்து துப்பு துலக்க ஆரம்பிக்கிறது. போலீசாரின் விசாரணையில் ஒரு தரப்பின் மீதும், பத்திரிகையாளர் விசாரணையில் வேறொரு தரப்பின் மீது சந்தேகம் ஏற்படுகிறது.

    கடைசியில் அந்த கொலையை செய்தது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    சிபி சந்திரனின் கதாபாத்திரமே வித்தியாசமானது. போதையுடன், எந்த விஷயத்தையும் கூலாக அணுகும் கதாபாத்திரத்தில் சிபி ஸ்கோர் செய்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும். குரு சோமசுந்தரம் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் அனைவரையும் ஈர்க்கிறார். இந்த படத்திலும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் வருகிறார்.

    வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கும் சாந்தினிக்கு இந்த படத்திலும் தீனிபோடும் கதாபாத்திரமே. அவரது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். கொலை குற்றத்தை விசாரிக்கும் பத்திரிகையாராக அனிஷா ஆம்ப்ரூஸ் கவர்கிறார்.

    மற்றபடி ஜான் விஜய், அழகம்பெருமாள், ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன், வாசு விக்ரம், விசாகன் வணங்காமுடி என மற்ற கதாபாத்திரங்களும் அவர்களது கதாபாத்திரத்திற்கு தேவையானதை கொடுத்துள்ளனர்.



    மாறுபட்ட கோணத்திலும், முற்றிலும் புதுவிதமாக படத்தை இயக்கியிருக்கிறார் மனோஜ் பீதா. படத்தின் திரைக்கதைக்கு ஏற்ப ஒளிப்பதிவும், இசையில் சிறப்பாக வந்திருந்தாலும், படத்துடன் நம்மால் பயணிக்க முடியாத சூழல் உருவாகிறது. முதல் பாதியிலேயே படம் முடிந்துவிட்டது போன்ற ஒரு எண்ணமும், சோர்வும் உருவாகிறது. படத்தின் நீளமும், காட்சியின் நீளமுமே அதற்கு காரணம் என்று கூறலாம். அதேபோல் காட்சிகளில் தொய்வு ஏற்படுவது போன்ற உணர்வும் உண்டாகிறது. அனைத்து கதாபாத்திரங்களையும் இயக்குநர் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். 

    சாம்.சி.எஸ். பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். பாடல்களும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. ரோட்ரிகோ டெல் ரியோவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.

    மொத்தத்தில் `வஞ்சகர் உலகம்' ரொம்ப நீளமானது. #VanjagarUlagamReview #GuruSomasundaram

    மனோஜ் பீதா இயக்கத்தில் குரு சோமசந்தரம், சாந்தினி, அனிஷா ஆம்ரோஸ் நடிப்பில் காதல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் `வஞ்சகர் உலகம்' படத்தின் முன்னோட்டம். #VanjagarUlagam #GuruSomasundaram #ChandiniTamilarasan
    லைப்ரந்த் பிலிம்ஸ் சார்பில் மஞ்சுளா பீதா தயாரித்துள்ள படம் வஞ்சகர் உலகம்.

    புதுமுகம் சிபி நாயகனாகவும், அனிஷா ஆம்ப்ரோஸ் மற்றும் சாந்தினி தமிழரசன் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். குரு சோமசுந்தரம் கேங்ஸ்டராக நடித்திருக்கிறார். ஹரேஷ் பெரடி, விஷாகன் வணங்கமுடி, ஜான் விஜய் மற்றும் வாசு விக்ரம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - ராட்ரிகோ டெல் ரியோ, இசை - சாம்.சி.எஸ், பாடல்கள் - மதன் கார்க்கி, ஒலி வடிவமைப்பு - சச்சின் சுதாகரன், படத்தொகுப்பு - ஆண்டனி எல்.ரூபன், சண்டைப்பயிற்சி - ஸ்டன்னர் சாம், கலை இயக்குநர் - ஏ.ராஜேஷ், எழுத்து - மனோஜ் பீதா, விநாயக் வயாஸ், இயக்கம் - மனோஜ் பீதா. 



    இவர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. படம் பற்றி இயக்குநர் மனோஜ் பேசும் போது,

    முதல் படமே ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் தான் த்ரில்லர் கதையில் படத்தை உருவாக்கி இருக்கிறேன். இது ஒரு கேங்ஸ்டர் அம்சங்கள் கலந்த காதல் கலந்த திரில்லர் படம். எனவே ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு புதுவித அனுபவமாக இருக்கும். மேற்கத்திய படமொன்றை பார்த்த அனுபவம் இருக்கும். விக்ரம் வேதா படத்திற்கு பிறகு சாம்.சி.எஸ்க்கு பேசும்படியான படமாக இது இருக்கும் என்றார். 

    படம் வருகிற 7-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. #VanjagarUlagam #GuruSomasundaram #ChandiniTamilarasan

    ‘சண்டக்கோழி 2’ படத்தை தொடர்ந்து வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில், விஷால் இன்று படப்பிடிப்பில் இணைய இருக்கிறார். #Ayogya #Vishal
    லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சண்டக்கோழி 2’  சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வருகிற அக்டோபர் மாதம் 18-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லியாக வரலட்சுமி நடித்துள்ளனர்.

    விஷால் அடுத்ததாக வெங்கட் மோகன் இயக்கத்தில் ‘அயோக்யா’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் இணைந்த நிலையில், இன்று படப்பிடிப்பில் இணைவதாக விஷால் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் விஷால் ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். மேலும் பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, வம்சி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். 
    சாம் சிஎஸ் இசையமைக்கும் இந்த படத்தை லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் பி.மது தயாரிக்கிறார். #Ayogya #Vishal #RashiKhanna

    மனோஜ் பீதா இயக்கத்தில் காதல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் `வஞ்சகர் உலகம்' படம் வழக்கமான கேங்ஸ்டர் படமாக இருக்காது என்று படத்தில் நாயகியாக நடித்திருக்கும் அனிஷா ஆம்ப்ரோஸ் தெரிவித்திருக்கிறார். #VanjagarUlagam
    எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மனோஜ் பீதா இயக்குநராக அறிமுகமாகும் படம் `வஞ்சகர் உலகம்'. காதல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் புதுமுகம் சிபி நாயகனாகவும், அனிஷா ஆம்ப்ரோஸ் மற்றும் சாந்தினி தமிழரசன் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். 

    நடிகர் குரு சோமசுந்தரம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கேங்ஸ்டராக நடித்திருக்கிறார். சிபி புவன சந்திரன், ஹரேஷ் பெரடி, விஷாகன் வணங்கமுடி, ஜான் விஜய் மற்றும் வாசு விக்ரம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

    கேங்ஸ்டர் அம்சங்களுடன் காதல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ். இசையமைத்திருக்கிறார். படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்திருக்கும் அனிஷா ஆம்ப்ரோஸ் வஞ்சகர் உலகம் குறித்து பேசும் போது,

    "செய்தி சேகரிக்கும் போது ஒரு கொடூரமான சூழ்நிலையில் மாட்டிக் கொள்ளும் சம்யுக்தா என்ற பத்திரிகையாளரின் பாத்திரத்தில்  நடிக்கிறேன். அதிலிருந்து அவள் மீண்டு வந்தாளா என்பது தான் என் கதாபாத்திரம் என சொல்லும் அனிஷா, வஞ்சகர் உலகம் திரைக்கதை ஹைப்பர்லிங்க் பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இது ஒரே நேரத்தில் நடக்கும் பல்வேறு கதைகள், அதன் கதாபாத்திரங்களை கொண்ட படமாக உருவாகியிருக்கிறது.



    இந்திய பார்வையாளர்களுக்கு 'கேங்க்ஸ்டர்' கதைகளும் சலித்து போயிருக்கின்றனவா? என்று கேட்டதற்கு வஞ்சகர் உலகம் ஒரு வழக்கமான கேங்க்ஸ்டர் படம் இல்லை என நான் உறுதியளிக்கிறேன். பல காதல் கதைகள் ஒவ்வொன்றும் அதன் முன்னுரை மற்றும் அணுகுமுறையில் வேறுபடுவது போலவே இதுவும் ஒன்று".

    ரோட்ரிகோ டெல் ரியோ, ஹெர்ரெரா மற்றும் சரவணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஆண்டனி எடிட்டிங் செய்கிறார். லாபிரிந்த் பிலிம்ஸ் சார்பில் மஞ்சுளா பீதா தயாரிக்கிறார். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. #VanjagarUlagam #AnishaAmbrose

    மனோஜ் பீதா இயக்கத்தில் காதல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் `வஞ்சகர் உலகம்' படத்தில் இருந்து வெளியாகியிருக்கும் `கண்ணனின் லீலை' பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. #VanjagarUlagam #Kannaninleelai
    எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மனோஜ் பீதா இயக்குநராக அறிமுகமாகும் படம் `வஞ்சகர் உலகம்'. காதல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் புதுமுகம் சிபி நாயகனாகவும், அனிஷா ஆம்ப்ரோஸ் மற்றும் சாந்தினி தமிழரசன் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். 

    நடிகர் குரு சோமசுந்தரம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கேங்ஸ்டராக நடித்திருக்கிறார். கேங்ஸ்டர் அம்சங்களுடன் காதல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விநாயக் கதையாசிரியராக பணியாற்றி இருக்கிறார். 

    மெக்ஸிகோ நாட்டை சேர்ந்த ராட்ரிகோ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ். இசையமைத்திருக்கிறார். படத்தில் இருந்து `கண்ணனின் லீலை' என்ற முதல் சிங்கிள் ஒன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 



    படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. 
     
    ஆண்டனியின் படத்தொகுப்பில், ஏ.ராஜேஷின் கலை இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தை இயக்குநர் மஞ்சுளா பீதாவே தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #VanjagarUlagam #Kannaninleelai

    கண்ணனின் லீலை பாடல்:

    ×