search icon
என் மலர்tooltip icon

    சினிமா (Cinema)

    கண்ணனின் லீலைக்கு கிடைத்த வரவேற்பு
    X

    கண்ணனின் லீலைக்கு கிடைத்த வரவேற்பு

    மனோஜ் பீதா இயக்கத்தில் காதல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் `வஞ்சகர் உலகம்' படத்தில் இருந்து வெளியாகியிருக்கும் `கண்ணனின் லீலை' பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. #VanjagarUlagam #Kannaninleelai
    எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மனோஜ் பீதா இயக்குநராக அறிமுகமாகும் படம் `வஞ்சகர் உலகம்'. காதல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் புதுமுகம் சிபி நாயகனாகவும், அனிஷா ஆம்ப்ரோஸ் மற்றும் சாந்தினி தமிழரசன் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். 

    நடிகர் குரு சோமசுந்தரம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கேங்ஸ்டராக நடித்திருக்கிறார். கேங்ஸ்டர் அம்சங்களுடன் காதல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விநாயக் கதையாசிரியராக பணியாற்றி இருக்கிறார். 

    மெக்ஸிகோ நாட்டை சேர்ந்த ராட்ரிகோ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ். இசையமைத்திருக்கிறார். படத்தில் இருந்து `கண்ணனின் லீலை' என்ற முதல் சிங்கிள் ஒன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 



    படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. 
     
    ஆண்டனியின் படத்தொகுப்பில், ஏ.ராஜேஷின் கலை இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தை இயக்குநர் மஞ்சுளா பீதாவே தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #VanjagarUlagam #Kannaninleelai

    கண்ணனின் லீலை பாடல்:

    Next Story
    ×