search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சம்பவம்"

    • மகன் அறிவழகன் என்பவருடைய வயலுக்கு இன்று காலையில் பூச்சி மருந்து அடிக்க சென்றுள்ளார்.
    • அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா வேப்பத்தூர் தெற்கு கோழிய தெரு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (58). விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.

    இவர் திருவிசநல்லூர் காருடையான் தெருவை சேர்ந்த சம்மந்தம் மகன் அறிவழகன் என்பவருடைய வயலுக்கு இன்று 10-ந்தேதி காலையில் பூச்சி மருந்து அடிக்க சென்றுள்ளார்.

    அப்பொழுதுவயலில் அறுந்து கிடந்த மின்கம்பி யை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்தி லேயே கணேசன் பரிதா பமாக உயிரிழந்தார்.

    இந்நிலையில் அறிவழ கனின் மனைவி மீனா வயலில் பூச்சி மருந்து அடிக்கப்படுகிறதா என்பதை சென்று பார்த்தபோது கணேசன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து திருவிடைமருதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கணேசன் உடலை கைப்பற்றி திருவிடைமருதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் திருவிடைமருதூர் டி.எஸ்பி ஜாபர் சாதிக் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார்.

    பலியான கணேசனுக்கு பவானி என்ற மனைவியும், 4மகள்களும் உள்ளனர். 3 மகள்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது.இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • அறிமுக இயக்குனர் பா.ரஞ்சித்குமார் இயக்கும் படம் சம்பவம்.
    • இப்படத்தில் ஸ்ரீகாந்த், நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    மைனா, சாட்டை, மொசக்குட்டி, சௌகார்பேட்டை, பொட்டு, கா ஆகிய படங்களை தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பாக தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ் தயாரிக்கும் அடுத்த படம் சம்பவம். இதில் ஸ்ரீகாந்த், நட்டி கதை நாயகர்களாக நடிக்க, கதை நாயகிகளாக பூர்ணா, ஸ்வேதா அவஸ்தி நடிக்கின்றனர். இதன் முக்கிய கதாபாத்திரத்தில் ரங்கராஜ் பாண்டே நடிக்கிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சுந்தரா டிராவல்ஸ் படத்தின் நாயகி ராதா நடிக்கிறார். மேலும் இயக்குனர் ஏ.வெங்கடேஷ், ஜெயபிரகாஷ், கே.ராஜன், மகேந்திரகுமார் நாகர், சிங்கம்புலி, நாஞ்சில் சம்பத், விஜய் டிவி முல்லை மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

    சம்பவம் திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் பா.ரஞ்சித்குமார். இவர் இயக்குனர் ஏ.வெங்கடேஷிடம் இணைஇயக்குனராக பணிபுரிந்தவர். ஒளிப்பதிவை இனியன் ஜே ஹாரிஸ் கவனிக்க இசை அம்ரீஷ் மற்றும் படத்தொகுப்பு சந்திரகுமார் கவனிக்கின்றனர்.


    உயிருக்கு போராடும் தனது மகளை காப்பாற்ற துடிக்கும் ஒரு தந்தையும், இந்த சமூகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு சாதாரண மனிதனும் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் போது நடைபெறும் சம்பவமே கதையின் மையக்கரு. இதன் துவக்க விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குனர் திருமலை, மகேந்திரகுமார் நாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சம்பவம் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வெவ்வேறு சம்பவங்களில் 3 பேருக்கு கத்திக்குத்து ஏற்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன், ஹரி, திலீப் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை நெல்பேட்டை, காயிதே மில்லத் நகரை சேர்ந்த சுல்தான் சையது இப்ராஹிம் மகன் அன்வர் முகமது (வயது 21). இவர் நேற்றிரவு வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் ஒரு சிறுவனை மிரட்டிக் கொண்டிருந்தது. இதனை அன்வர் முகமது தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியது.

    இதுகுறித்து விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியில் வசிக்கும் ரஹமத்துல்லா (46), அப்துல்லா, முஹம்மது இஸ்மாயில் மற்றும் மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை அவனியாபுரம், காமராஜர்நகரைச் சேர்ந்தவர் முத்துக்காளை (26). இவரது சகோதரர் வல்லரசு (22). இவரும், அதே பகுதியில் வசிக்கும் விக்னேஸ்வரன் என்பவரும் ஒன்றாக சேர்ந்து தண்ணீர் வியாபாரம் செய்து வந்தனர். இதில் அவர்களுக்கு முன் விரோதம் ஏற்பட்டது. சம்பவத்தன்று இவர்க ளுக்குள் பிரச்சினைஏற்பட வல்லரசுவை விக்னேஸ்வ ரன் மற்றும் அவரது ஆதர வாளர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பினர்.

    இது தொடர்பாக முத்துக்காளை அவனியா புரம் போலீசில் புகார் கொடுத்தார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரன், மாரி ச்செல்வம், பெருங்குடி, வாஞ்சிநாதன் தெரு தங்கராஜ் மகன் சதீஸ்வரன் (18) ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை கீரைத்துறை, காமராஜபுரம், ஜார்ஜ் ஜோசப் தெருவை சேர்ந்த கதிர்வேல் மகன் விஜயகுமார் (23). சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் இவரை அதே பகுதியைச் சேர்ந்த 3 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்திவிட்டு தப்பியது. இதுகுறித்து கீரைத்துறை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன், ஹரி, திலீப் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.

    • விபூதி விநாயகர் கோவிலில் உண்டியலை உடைத்து திருடப்பட்டுள்ளது.
    • இந்தநிலையில் தற்போது 3-வது முறையாக திருட்டு நடந்துள்ள சம்பவம் இந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றத்தை அடுத்த ஜி.எஸ்.டி. சாலை யில் விபூதி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று காலையில் வழக்கம்போல் கோவில் பூசாரி கோவிலை திறக்க வந்தபோது அங்கு இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக கோவில் நிர்வாகிகள் மற்றும் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உண்டியலில் உள்ள கைரேகை சேகரித்தனர். கோவில் உண்டியலில் சுமார் 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் இருக்கலாம் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ஏற்கனவே 2 முறை இந்த கோவிலில் உண்டியல் இதுபோன்ற திருட்டு நடந்துள்ளது. இந்தநிலையில் தற்போது 3-வது முறையாக திருட்டு நடந்துள்ள சம்பவம் இந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×