search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோமாதா"

    • இவை வேண்டுமென்றே பாலை சுரக்காமல் தன்னுள் அடக்கிக் கொள்ளும் பால் சுரப்பதை இறக்கி கொடுக்காது.
    • பசுதானம் செய்தால் பலவகை நோய்களிலிருந்தும் விடுபடலாம்.

    கள்ளனைப் போல சில கள்ளப் பசுக்களும் உண்டு.

    இவை வேண்டுமென்றே பாலை சுரக்காமல் தன்னுள் அடக்கிக் கொள்ளும் பால் சுரப்பதை இறக்கி கொடுக்காது.

    பால் கறந்தாலும் மிக குறைவாகவே இருக்கும்.

    அப்படிப்பட்ட மாடுகளின் பால் காம்பில் ''பிரண்டை''யை அரைத்து, பால் கறப்பதற்கு முன்னால் லேசாக தடவி விட வேண்டும்.

    உடனே மடிக் காம்புகளில் ''தினவு'' எடுக்கும். தினவு எடுத்த மாடுகள் சொரிந்து கொள்ள முற்படும்.

    அப்பொழுது நாம் காம்பை அழுத்தி கரப்பது மாடுகளுக்கு மிகவும் இதமாக இருக்கும்.

    சண்டித்தனம் அடங்கி பொறுமையாக பால் சுரந்து கொண்டே இருக்கும்.

    கன்று ஈன்ற பசுக்களுக்கு தொடர்ந்து புல் புண்ணாக்கு தானியம் போன்றவற்றை அளித்து காலையில் வணங்கி வந்தால் கொடுத்த கடன் பிரச்சனையின்றி கிடைக்கும்.

    வராது என நினைத்த கடனும் வாசலைத் தொட்டு கொடுக்கும்.

    ஒருவருக்கு தீய கனவுகள் அடிக்கடி வந்து அவஸ்தைபட்டால் அதற்கு பரிகாரம் காலையில் பசுவின் தொழுவத்திற்கு சென்று வாழைப்பழம் கொடுத்து வழிபட்டால் சுகம் கிடைக்கும்.

    ''கோ பூசை'' செய்தால் கோடி நன்மை பெறலாம் என்பது நமது முன்னோர் வாக்கு.

    பசுக்கள் மேய்ச்சலுக்கு சென்று வீடு திரும்பும் போது அதாவது அந்திப் பொழுதில் அவற்றோடு சீதேவியும் வீட்டுக்கு வருவாளாம்.

    வரலட்சுமி விரதத்தை ஆவணி மாதம் பவுர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் அந்தி வேளையில் பூசை செய்து வழிபட்டால் அளவற்ற செல்வம் பெற்று வாழலாம்.

    இன்றும் பெரிய லட்சாதிபதி, கோடீஸ்வரர்களின் வீட்டில் இந்த வரலட்சுமி நோன்பு இருந்து செல்வத்திற்கு மேல் செல்வம் சேர்ப்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    பலவித கிரக கோளாறுகளால் பீடிக்கப்பட்டவர்களும் தீராத வியாதிகளால் அவதிப்படுபவர்களும் தங்கள் பீடைகளிலிருந்து விடுபடுவதற்கு கோதானம் என்னும் பசுதானம் செய்து வழிபட்டால் நலம் பெறலாம்.

    • பசுவின் பின் பகுதியில் செல்வத்தை அள்ளித் தரும் மகாலட்சுமி வசிப்பதாக சாஸ்திரம் சொல்கிறது.
    • பசுவில் தான் மும்மூர்த்திகளும் முப்பத்தி முக்கோடி தேவர்களும் வசிக்கின்றனர்.

    ''நம்முடைய தார்மீக உணர்விற்கும், கலாச்சார வாழ்விற்கும் பண்பாட்டிற்கும் அடிப்படையாக அமைந்தது பசுவாகும்.

    பதி, பசு, பாசம் என்னும் பொழுது ஆன்மையை பசு என்ற சொல்லாலேயே குறிப்பிடுகின்றோம், மாடுகளை கட்டி வைக்கும் இடமே தொழுவம் என்னும் கொட்டில் ஆகும்.

    அறிவு தரும் ஆலயத்தை அறிவாலயம் என்று சொல்வது போல தொழுவுவதற்கு ஏற்ற இடமே தொழுவம் எனப்படும்.

    பசுக்கள் இருக்குமிடம் ''கோ இல்'' ஆகும். உண்மைதான்.

    ஆன்மா ஒடுங்குமிடம் கோவில். இறைவன் வாழுமிடம் கோவில்.

    பசுவில் தான் மும்மூர்த்திகளும் முப்பத்தி முக்கோடி தேவர்களும் வசிக்கின்றனர்.

    பசுவின் கர்ப்பகாலம் 9 மாதம் 9 நாள். எருமையின் கர்பகாலம் 10 மாதம் 10 நாளாகும்.

    பசுவின் பின் பகுதியில் செல்வத்தை அள்ளித் தரும் மகாலட்சுமி வசிப்பதாக சாஸ்திரம் சொல்கிறது.

    அப்பகுதியில் மகாலட்சுமி வசிப்பதாலேயே பசுவுக்கு பூஜை செய்யும் போது பின் பகுதிக்குத்தான் முக்கிய பூஜை நடைபெறுகிறது.

    முற்காலத்தில் ராஜாக்கள் அரண்மனைகள் கட்டும் போது உபய தோமுகி என்னும் பூஜை செய்து தான் பின் கட்டடம் கட்டுவார்கள்.

    ''உபய தோமுகி'' என்பது ஒரு பசு ஆகும். அந்த பசு ஈனும் போது கன்றின் முன்னங்கால்களும் தலையும் தான் முதலில் வரும்.

    கன்று போடும் காலத்தில் இவ்வாறு இரு பக்கமும் தலையுடைய பசுவை ''உபய தோமுகி'' என்று சொல்வார்கள்.

    அப்பொழுது அந்த பசுவை வலம் வந்து வழிபட வேண்டும்.

    மாட்டின் வயிற்றில் இருந்து கன்று வெளிப்படும் பொழுது முப்பத்து முக்கோடி தேவர்களும் மகாலட்சுமியாக நினைத்து வணங்கியும், ஆசீர்வாதமும் செய்வார்கள்.

    அப்பொழுது 3 முறை வலம் வந்து வணங்கி தங்களுக்கு என்ன பிரச்சினைகள் தீரவில்லையோ அது விரைவில் தீர்ந்து நல்ல வழி கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டால் பயன் உறுதியாக விரைவில் கிடைக்கும்.

    ஈன்ற பசுவிற்கு நஞ்சுக்கொடி விரைவில் விழுவதற்காக மூங்கில் இலை தழைகளை கொடுப்பர்.

    நஞ்சுக்கொடி விழுந்து விடும்.

    நஞ்சுக் கொடியை தாழை ஓலை, அல்லது பனை ஓலைப் பெட்டியில் வைத்து கட்டி பால் மரங்களில் கட்டித் தொங்கவிடுவார்கள்.

    அதன் மூலமாக மாடுகளுக்கு பால் பாக்கியம் பெருகும்.

    இதன் நடைமுறை தற்காலம் மாறி வருகிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

    • கால் நடைகளே ஒருவரது பொருளாதார மதிப்பீட்டிற்கு அளவு கோலாக இருந்தது.
    • ஆதலால் செல்வத்தை ‘மாடு’ என்ற சொல்லாலே குறிப்பிட்டு வந்தனர்.

    பொன்னுக்கும் பொருளுக்கும் முக்கியத்துவம் இல்லாத காலத்தில் கால்நடைகளே ஒருவரது உண்மைச் செல்வமாக மதிக்கப்பட்டு வந்தன.

    கால் நடைகளே ஒருவரது பொருளாதார மதிப்பீட்டிற்கு அளவு கோலாக இருந்தது.

    ஆதலால் மாடுகள் இல்லாத வீடே இல்லை என்னும் நிலை இருந்தது.

    நாட்டின் பொருளாதார துறையில் தனிச் செல்வாக்கு மாட்டுக்கு இருந்தது.

    ஆதலால் செல்வத்தை 'மாடு' என்ற சொல்லாலே குறிப்பிட்டு வந்தனர்.

    ''கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு ''மாடு'' அல்ல மற்றயவை என்று செல்வத்தை மாடு என்னும் பொருள்பட வள்ளுவரும் உரைக்கின்றார்.

    பசுக்கள் ஒரு நாட்டின் செல்வமாக மட்டுமல்ல. பிற விலங்குகளைப் போல் பசுவையும் ஒரு விலங்காக கருதக்கூடாது.

    எள்ளைத் தானிய மென்றும், பசுவை விலங்கு என்றும் எண்ணக் கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    பண்டைய காலத்தில் பகைவர் நாடு மீது படை எடுப்பதற்கு முன்னால் 'வெட்சி' மாலை சூடி பகை நாட்டு பசுக்களை கவர்ந்து வருவார்கள்.

    பின் பசுவை பறிகொடுத்த நாட்டு வீரர்கள் ''கரந்தை மாலை சூடி வெட்சி'' மாலை சூடி கவர்ந்து சென்ற நாட்டினர் மீது படையெடுத்து பசுக்களை மீட்டு வருவார்கள்.

    இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்ன?

    ஒரு நாட்டின் பொருளாதாரம் பசுக்களால் தான் நடைபெற்றது.

    அதனை அழித்து விடக்கூடாது என்பதுதான்.

    • 42-வது நாள் அவரது இரு கண்களும் இறையருளால் பார்வை வரப்பெற்றன.
    • தினசரி நீராடி பால் சொரிந்ததால்தான் இத்தலத்திற்கு பசுவந்தனை என்ற பெயர் ஏற்பட்டது.

    எட்டையபுரத்திற்கு அருகிலுள்ள தெற்கு முத்தலாபுரம் என்ற கிராமத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு சுப்பாநாயக்கர் என்பவர் நன்றாக இருந்த அவரது இரு கண்களும் பார்வையை இழந்து விட்டன.

    அவர் இத்திருத்தலத்து இறைவன் மீது கொண்ட பக்தியினால் கோவிலுக்கு வந்து தினசரி வாவியில் நீராடி ஈசனை வழிபட்டு 41 நாட்கள் மணசோறு உண்டு விரதமிருந்தார்.

    42-வது நாள் அவரது இரு கண்களும் இறையருளால் பார்வை வரப்பெற்றன.

    இந்நிகழ்ச்சியினால் இத்தலத்து இறைவன் இப்பகுதி மக்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறார்.

    பசுவின் பாலை அருந்தி வளர்ந்த சுவாமிக்கு பசும்பால் அபிசேகம் செய்து வழிபட்டால் வேண்டுதல்கள் உடனடியாக

    நிறைவேறி வருகிறது என்பதால் இத்தலமூர்த்திக்கு அன்பர்களால் தினசரி பாலாபிஷேகம் செய்யப்படுகிறது.

    இத்திருக்கோவில் முன்பு சங்குச்சாமி சித்தர் "ஜீவ சமாதி" அமைந்துள்ளது.

    பழமையும் சிறப்பும் மிக்க கோசிருங்கவாளி தீர்த்தத்தில்தான் ஆதிகாலத்தில் இறையுணர்வு மிக்க பசு ஒன்று

    தினசரி நீராடி பால் சொரிந்ததால்தான் இத்தலத்திற்கு பசுவந்தனை என்ற பெயர் ஏற்பட்டது.

    இந்த தீர்த்தம் கங்கை நீரைப்போல புனிதமாகக் கருதப்படுகிறது.

    ஆண்டு தோறும் சித்திரை புதுவருட தினத்தன்று இவ்வூர் மற்றும் சுற்று வட்டார ஊர்களில் இருந்து மக்கள் வந்து கூடி

    இத்திருக்குளத்தில் புனித நீராடி இறைவனை வழிபட்டு இறைவன் முன்பு புதிய பஞ்சாங்கத்தை சமர்ப்பித்து

    புத்தாண்டு பொலிவுடன் விளங்கவும், விவசாயம் சிறக்கவும் வேண்டுகின்றனர்.

    • இத்தலத்திற்கு முதுகுடி நாட்டு பசுந்தலை, பவித்திர மாணிக்கப்புரம் என்ற பெயர்களும் உண்டு.
    • காசியில் சிறந்தது கயிற்றாறு என்னும் புண்ணிய நாடு.

    பசுபால் சுரந்த இடத்தில் பவளநிற சுயம்பு லிங்கம் பசுவந்தனை திருத்தலம், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள சிற்றூர்.

    இவ்வூர் மதுரை-நெல்லை ரெயில்வே வழியில் கடம்பூர் ரெயில் நிலையத்திலிருந்து கிழக்கே

    10 கிலோ மீட்டர் தூரத்திலும், மதுரை-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில், கயத்தாறில் இருந்து கிழக்கே

    21 கி.மீ. தூரத்திலும், தூத்துக்குடி-மதுரை நெடுஞ்சாலையில் எப்போதும் வென்றானிலிருந்து மேற்கே 11 கி.மீ. தூரத்திலும் அமைந்து உள்ளது.

    சிறப்புமிக்க இத்தலம் பசுவந்தனை அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவிலாகும்.

    முழுவதும் கல்லினால் கட்டப்பட்டுள்ள திருக்கோவிலாகும்.

    இத்திருக்கோவில் இரண்டாம் மாறவாமன் சுந்தரபாண்டியனின் ஏழாம் ஆட்சி காலத்தில் கி.பி.1245-ல் கட்டப்பட்டது

    எனவும் ஆலால சுந்தரப் பெருமாள் என்பவன் சிவனுக்கு கோவில் எழுப்பி நிலங்களை அளித்தான் எனவும்,

    இத்தலத்திற்கு முதுகுடி நாட்டு பசுந்தலை, பவித்திர மாணிக்கப்புரம் என்ற பெயர்களும் உண்டு.

    காசியில் சிறந்தது கயிற்றாறு என்னும் புண்ணிய நாடு.

    அதனை ஆண்டு வந்த மன்னன் ஆநிரைகளைப் போற்றி வந்தான்.

    பசுக்கூட்டங்கள் மன்னனின் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியில் தினமும் புல் மேய்வது வழக்கம்.

    அந்த பசுக்கூட்டத்தில் ஒரு பசு அங்குள்ள ஒரு குளத்தில் நீராடி வில்வ மரத்தடியில் இருந்த ஒரு சிவலிங்கத்தின் மீது பாலைச் சொரிந்து விட்டு பின்னர் பசுக்கூட்டத்தில் வந்து சேர்ந்து விடும்.

    தினமும் இந்த நிகழ்ச்சியால் பால் குறைவதை அறிந்த மன்னன் காவலர்களை அனுப்பி உண்மையைக் கண்டறிந்தான்.

    இறையுணர்வு மிக்க தனது பசுபால் சொரியும் இடத்தை சென்றடைந்த மன்னன் அங்கிருந்த சிவலிங்கத்தைக் கண்டு பணிந்து வணங்கினான்.

    இரவு படையுடன் அங்கு தங்கியிருந்த மன்னன் வானவர்கள் வந்து அந்த சிவலிங்கத்தை அர்ச்சித்து வழிபாடு செய்ததைக் கண்டு மெய் உருகி வழிபட்டான்.

    பசுபால், சொரிந்து வானவர்கள் வழிபட்ட சிவலிங்கத்திற்கு அந்த இடத்திலேயே ஆலயம் ஒன்று எழுப்ப முனைந்தான்.

    அதன்படி அந்த இடத்தில் அருள்மிகு ஆனந்தவல்லி சமேத கைலாசநாதருக்கு சிறியதாக ஓர் ஆலயம் அமைத்து அதனைச்சுற்றி முறைப்படி வீதிகள் அமைத்தான். நகரமாக ஆக்கினான்.

    பசு அருகில் வந்து பால் சொரிந்து வளர்த்ததும் வானவர்கள் வந்து தினமும் வழிபட்ட சிவலிங்கங்கள் உள்ள இத்திருத்தலம் பசுவந்து அணை எனப் பெயர் பெற்று பின்னர் பசுவந்தனை என அழைக்கப் பெறலாயிற்று.

    பசு வந்து நீராடிய குளம் சிவதீர்த்தம் என்றும் கோசிருங்காவாவி என்றும் அழைக்கப்படுகிறது.

    • கிரகலட்சனம் கோ சம்ரட்சணம் என்று சொல்வழக்கே உண்டு.
    • சர்க்கரை சாதம் அல்லது அரிசி வெல்லம் கலந்த கலவையும் அகத்திக்கீரையும் கொடுக்க வேண்டும்.

    கோமாதாவை வேத முறைப்படி வழிபட்டால் அரசனுக்கு ஒப்பான யோக பாக்யங்களோடு இந்த உலகில் வாழ முடியும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

    கிரகலட்சனம் கோ சம்ரட்சணம் என்று சொல்வழக்கே உண்டு.

    திருமகள் வடிவாகவும், தெய்வங்களை உடலில் வைத்துக்கொண்டும் உயிரினமாகிய பசுவை சுத்தமான இடத்தில்

    நிற்க வைத்து மஞ்சளும் பச்சகல்பூரமும் கலந்த நீரால் குளிப்பாட்டி பச்சை அல்லது மஞ்சள் வஸ்திரம் உடுத்தி

    கொம்புகளில் மஞ்சள் பூசி உடலெங்கும் பொட்டுகளை வைத்து கதம்ப மாலை சாற்றி முதலில் விநாயகர் வணக்கம் சாணத்தில் செய்ய வேண்டும்.

    பிறகு ஸ்ரீசுக்த மந்திரங்களைக்கூறி அல்லது கேசட்டில் ஒலிக்க விட்டு லட்சுமி அஷ்டோத்தித அர்ச்சணையும் சொல்லிவழிபடல் வேண்டும்.

    பிறகு சர்க்கரை சாதம் அல்லது அரிசி வெல்லம் கலந்த கலவையும் அகத்திக்கீரையும் கொடுக்க வேண்டும்.

    மகாலட்சுமி, கிரகலட்சுமிக்குரிய துதிகளைக்கூறி தூபதீப நிவேதனங்களைச் செய்து மூன்று முறை வலம் வந்து வணங்குதல் வேண்டும்.

    எங்கள் தாயே கோமாதா ஏற்றம் தந்து காப்பவனே

    திங்கள் தோறும் கும்பிட்டால் தேனாய் நலமே தந்திடுவாய்

    தொழுவந் தன்னில உலவிடுளாய் தோற்றம் எளிய பாவையே

    விழுப்பொருளாய் வந்த தாயே வினையும் களைந்து நலம் சேர்க்க!

    • பசுவை வணங்கி யாகம் செய்வதால் உலகம் சிறப்படைகிறது.
    • பல பிறவிகளில் நாம் சேர்த்து வைத்துள்ள பாவம் நீங்கும்.

    மிகப்பெரிய ராஜசூய யாகம்.

    புத்திர காமதேனு யாகம் செய்யும் போது முதலில் பசுவை முன்னிறுத்தி கோமாதா பூஜையை செய்த பிறகு தான் யாக வேள்விக்கான வேலைகளை செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

    ஒரு யாகத்தீ எரிய விடும் போது, அக்னி தேவன் வந்து விசேஷ பாகங்களைப் பெற்றுக்கொள்கிறான்.

    மகாவிஷ்ணு அதற்கு பலம் சேர்க்கிறார். பிரம்மா ஆசார்யனாக அமர்ந்து அக்னி குண்டத்தை கவனிக்கிறார்.

    பிரம்மாதி தேவர்களும் இந்திரனும் தங்களது படைகளோடு எழுந்தருள்கிறார்கள்.

    கலைவாணியும், மகாலட்சுமியும் கலசம் மற்றும் தீப வடிவத்தில் அங்கே அமர்ந்து விடுகிறார்கள்.

    நான்கு வேதங்களும் அந்தணர் வடிவில் வந்து வேத மந்திரங்களை முழங்கிட தேவர்களில் ஒரு சிலர் (பந்துக்களாக) சொந்தங்களாக வந்து நிற்கிறார்கள்.

    இவர்கள் அனைவரையும் யாக காலங்களின் போது ஒரே சமயத்தில் அழைத்து வரும் வல்லமை படைத்ததாக

    பசு விளங்குவதால், அதன் பயன்பாடு யாக காலங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    பால், தயிர், நெய், வெண்ணெய், கோமயம், கோ ஜலம் ஆகிய பொருட்கள் யாகத்தீயில் இடும்போது அக்னி தேவன் மகிழ்ச்சி அடைகிறார்.

    பசுவை வணங்கி யாகம் செய்வதால் உலகம் சிறப்படைகிறது.

    பல பிறவிகளில் நாம் சேர்த்து வைத்துள்ள பாவம் நீங்கும்.

    அகால துர்மரணங்கள், விஷ ஜந்துக்களால் உண்டாகும் அபாயம் அணுகாது.

    கொடிய நோய்க்கிருமிகள் இல்லத்தை விட்டுப்போகும். காலத்தில் மழை பெய்து நாட்டில் நலம் விளையும்.

    • மாடு என்ற சொல்லுக்கு செல்வம் என்றும் பொருள் உண்டு.
    • புண்ணியம் பசுவாகப் பிறப்பதற்கும் செய்ய வேண்டும் என்று புராணங்கள் உரைக்கின்றன.

    வேதகாலம் தொடங்கி, இன்று வரை கோமாதா என்றழைக்கப்படும் பசுவின் பெருமையையும்,

    பசுவைப் பராமரிக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தாத நூல்களோ சமயங்களோ கிடையாது.

    பசுவைப் போற்றியவர்கள், பராமரித்தவர்கள், காப்பாற்றியவர்கள் அடைந்த நன்மைகளுக்கு நம் புராணங்களில் ஏராளமான சான்றுகள் உள்ளன.

    பசுவை வெறுமனே மாடு என்று அழைக்காமல் கோமாதா, பசுத்தாய் எனப் போற்றுவது நம் வழக்கம்.

    பெற்ற தாய்க்கு ஈடாக போற்றப்படுவது கோமாதா என்றழைக்கப்படும் பசுதான்.

    இன்னும் சொல்லப் போனால் குழந்தைக்கு அமுது அளிப்பதில் பசு தாயைவிட மேலானதே.

    தாயில்லாத குழந்தைகள் தாய்ப்பாலுக்குப் பதிலாக பசுவின் பாலை உண்டு வளர்வதை இன்றைய நாளில் நாம் பல இடங்களில் காண்கிறோம்.

    ஆன்மிக நோக்கில் மனிதனாகப் பிறப்பதற்கு ஓர் உயிர் எத்தனை புண்ணியம் செய்ய வேண்டுமோ, அதே அளவு

    புண்ணியம் பசுவாகப் பிறப்பதற்கும் செய்ய வேண்டும் என்று புராணங்கள் உரைக்கின்றன.

    பசுவின் பெருமையை உணர்ந்தே ஆன்றோர்கள் பிரார்த்தனை செய்யும் போது "கோ ப்ராஹ்மணேப்ய: ஸுபமஸ்து நித்யம்" என்று பிரார்த்தனை செய்வார்கள்.

    அதாவது, பசுவுக்கும் அந்தணர்களுக்கும் எப்போதும் நன்மை உண்டாகட்டும் என்பது இதன் பொருள்.

    "நீங்கள் புண்ணியமானவர்கள், நீங்கள் நல்ல வண்ணம் வாழுங்கள். காலையும் மாலையும் பால் தரும் நீங்கள் கன்றுகளுடனும் காளைகளுடனும் இன்னும் பொலிவீராக இங்கேயுள்ள நீர்நிலைகள் உமக்கு வற்றாத ஊற்றாகுக. நீவிர் இங்கு மகிழ்ச்சியாய் வாழ்வீராக வளம் பெருக்குவீராக" என்று சாம வேதம் பசுவினை போற்றுகின்றது.

    பசு தான் வளரும் வீட்டிற்கு மகிழ்ச்சி அளிப்பனவாகக் காணப்படுகிறது.

    பசு இருக்கும் இடத்தில் அன்னம், அழகு, ஐஸ்வர்யம், ஆரோக்கியம் அனைத்தும் வந்து சேர்ந்து விடும்.

    சாணம் மெழுகிய நிலம், சாணிநீர் தெளித்த முற்றம், சாணப்பரிமணமான விபூதிப் புழக்கம்,

    பால் கொதிக்கும் நறுமணம், தயிர் கடையும் மத்தோசை, தாக சாந்தி தரும் மோர் என்பன

    வீட்டிற்கு அனைத்து விதத்திலும் மகிழ்ச்சியைத் தரும்.

    கல்யாணம் என்ற சொல் மங்களத்தைக் குறிக்கும். அத்தகைய மங்களத்தைக் குறிக்கும் கல்யாணி என்பது பசுவிற்கு உரியதாகும்.

    "கோ" என்ற சொல்லுக்கு இறைவன் என்றும், அரசன் என்றும், தலைவன் என்றும் எண்ணற்ற பொருள் உண்டு.

    அவற்றுள் ஒன்று பசு. மாடு என்ற சொல்லுக்கு செல்வம் என்றும் பொருள் உண்டு.

    செல்வம் என்பது பொருட்செல்வத்தை மட்டுமின்றி அருட்செல்வத்தையும் சேர்த்துதான் சொல்கிறோம்.

    பசு நமக்குப் பொருட்செல்வத்தையும் அருட்செல்வத்தையும் ஒருசேர அளிக்க வல்லது என்பதில் எந்த ஐயமும் இல்லை.

    இதனை உணர்ந்தே நமது முன்னோர்கள் ஒவ்வொருவரும் பசுவினைத் தங்கள் வீடுகளில் வளர்த்து வந்தனர்.

    இது தவிர பசுக்கள் கூடுகின்ற இடங்களில் பசுக்களின் தாகம் தீர்ப்பதற்காக தண்ணீர் தொட்டியை அமைத்தனர்.

    அத்தொட்டிகளில் எந்நேரமும் நீர் நிரம்பியிருக்கும்படியும் செய்தார்கள்.

    கூடவே பசுக்களின் உடலில் ஈ, கொசுக்கள், உண்ணிகள் அமர்ந்து அவற்றிற்கு தீங்கு செய்யும் போது,

    பசுக்கள் தங்கள் உடலைச் சொறிந்து கொள்வதற்காக ஆவுரிஞ்சுக்கற்ககளையும் ஆங்காங்கே நட்டு வைத்தனர்.

    ஒரு பசு குடும்பம் காக்கும். ஒன்பது பசு குலத்தைக் காக்கும் என்பது நம் முன்னோர்கள் சொன்ன மொழியாகும்.

    • விஞ்ஞான ரீதியாக சாணம் சிறந்த கிருமி நாசினியாகும்.
    • சிறந்த கிருமி நாசினியான சாணத்திற்கு உலோகங்களிலுள்ள நச்சுத்தன்மையை ஒழிக்கும் ஆற்றலும் உண்டு.

    உலகின் மற்ற பகுதிகளில் நாகரீகம் வளர்வதற்கு முன்பே இந்தியாவில் பசுவின் சாணத்தின் மகிமைகளை இந்தியர்கள் அறிந்திருந்தனர்.

    பிரம்ம முகூர்த்தம் என்னும் விடியற்காலையில் பசுஞ்சாணத்தால் வீட்டையும், முற்றத்தையும் மெழுக வேண்டும்,.

    இவ்வாறு செய்வதால் அவ்வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள் என்பது ஐதீகம்.

    விஞ்ஞான ரீதியாக சாணம் சிறந்த கிருமி நாசினியாகும்.

    அதிகாலைப் பொழுதின் காற்றின் குளிர்ச்சியும், இளங்காற்றும் சாணத்தின் மணத்தை அப்பகுதியில் பரவச் செய்து கிருமிகளை அழிக்கிறது.

    கோவில் முற்றங்களை சாணத்தால் மெழுகுவதைச் சரியை மார்க்கத்தின் திருப்பணிகளில் ஒன்றாகக் குறித்துள்ளார் திருநாவுக்கரசு சுவாமிகள்.

    சிறந்த கிருமி நாசினியான சாணத்திற்கு உலோகங்களிலுள்ள நச்சுத்தன்மையை ஒழிக்கும் ஆற்றலும் உண்டு.

    எனவேதான் ஈயம் பூசப்பட்ட பாத்திரத்தை முதன் முதலில் சாண நீரால் கழுவி நச்சுத் தன்மைகளை அகற்றித் தூய்மைப் படுத்துகின்றனர்.

    பசுஞ்சானி கிருமி நாசினியாக மட்டுமிக்றி பில்லி, சூனியம், திருஷ்டி, கெட்ட எண்ணம் ஆகியவற்றிலிருந்தும் நம்மைக் காக்கும் குணம் உடையது.

    நம் வீட்டினையும் சுற்று புறத்தையும் சாணம் கொண்டடு தெழுகி, சாணநீர் தெளித்து வருவது நம் பரம்பரை பழக்கம்.

    நம்மை அறியாமல் ஏற்பட்டிருக்கக் கூடிய தீமவினைகள், மனைக்கு அடியில் உள்ள தீய வினைகளின் பாதிப்புகளுக்கு ஆளாகாமல் இருப்பதற்காகவே சாணம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்தது.

    வீடுகளில் மட்டுமல்லாமல் ஆலயத்தையும் மந்திரத்தால் தூய்மைபடுத்துவது போல சாணம் கொண்டும் தூய்மை செய்தனர்.

    சாண வறட்டிகளை நெருப்பில் எரிப்பதால் கிடைக்கும் சாம்பலே திருநீறு ஆகும்.

    இதன் மூலம் சாணத்தை விட அதன் சாம்பல் அதிக வீரியமுள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

    பசும் புற்களை மேயும் பசுவின் சாணத்தை நெருப்பில் எரித்துக் கிடைக்கும் திருநீறு பசிதம் என்னும் வகை திருநீறாகும்.

    இதுவே அனைத்திலும் சிறந்தது. சிவனடியார்களுக்கு ஏற்றது.

    இவை தவிர சாணமும், சாணத்தின் சாம்பலும் செடி, கொடி, மரங்களுக்கு நல்ல உயரமாகவும் பயன்படுகிறது.

    பூச்செடிகளுக்கு சாணத்தை உரமாக இடுவதால் அச்செடி சிறந்த பூக்களை பூக்கின்றன என்பது விஞ்ஞான ரீதியாக உண்மையாகும்.

    கோவில்கள் மட்டுமின்றி வீடுகளிலும் விசேஷ நாட்களில் சாணம் மெழுகி சுண்ணாம்பு பூசி, செம்மண் பட்டைகளை வரைந்து அலங்கரிப்பது வழக்கம்.

    அவ்வாறு செய்வதால் மும்மூர்த்திகளான பிரம்மனும், திருமாலும், ருத்திரனும் அங்கு எழுந்தருள்வார்கள் என்பது ஐதீகம்.

    வெண்மை பிரம்மனின் அம்சமாகவும், பசுமை விஷ்ணுவின் அம்சமாகவும், செம்மை சிவனின் அம்சமாகவும் விளங்குகின்றன.

    பூஜைகளின் போது சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து சந்தனம், குங்குமம் வைத்து விநாயகப் பெருமானாக ஆவாகனம் செய்து வழிபடுவது நம் வழக்கம் என்பதை நாம் அறிவோம்.

    மார்கழி மாதங்களில் முற்றத்தில் சாணம் தெளித்து, கோலமிட்டு அதன் நடுவில் சாணத்தைப் பிடித்து வைத்து, அதன் உச்சியில் பூசணிப் பூக்களைச் சூட்டி வைப்பார்.

    பூக்களுக்குப் பதிலாக அறுகம்புல்லையும் சாணத்தின் மீது செருகி வைப்பதுண்டு.

    விநாயப் பெருமானாக வீற்றிருக்கும் சாணம் விக்னங்களை நீக்கி, அனைத்து நற்காரியங்களையும் குறைவற நிறைவேற்றித்தரும்.

    பிள்ளையாராகப் பிடித்து வைக்கும் சாணம் நெடுநாள் கெடாது. பூச்சிகள் அரிப்பதில்லை.

    வண்டுகள் துளைப்பதில்லை.

    தங்கத்தைத் தூய்மைப்படுத்த, அதனை புடம்போடும் பக்குவத்திலும் சாணம் முக்கியப்பங்கு வகிக்கிறது.

    • பசுவின் வெண்ணெய் நேரடியாக இறைவனின் அபிஷேகத்திற்குப் பயன்படுவதில்லை.
    • அனுமன் கோவில்களிலும் அனுமன் சிலைக்கும் வெண்ணெய் தடவி வழிபாடு செய்கிறார்கள்.

    பசுவின் வெண்ணெய் நேரடியாக இறைவனின் அபிஷேகத்திற்குப் பயன்படுவதில்லை.

    ஆனால் ஸ்ரீ கிருஷ்ணர் பாலமூர்த்தியாக விளங்கும் கோவில்களில் சிலைகளுக்கு வெண்ணெய் சாத்தப்படுவது வழக்கம்.

    உதாரணம் கேரளாவிலுள்ள குருவாயூரப்பன் கோவிலாகும்.

    இது தவிர அனுமன் கோவில்களிலும் அனுமன் சிலைக்கும் வெண்ணெய் தடவி வழிபாடு செய்கிறார்கள்.

    • கோசலத்தை வீட்டினுள்ளேயும் புறத்திலும் தெளித்தால் அவ்விடம் தூய்மை பெறுகிறது.
    • கோசலத்தால் கண்களை அடிக்கடி கழுவிக் கொள்வதால் கண்நோய் தோன்றாது.

    கோசலத்தில் ஆகாய கங்கை வாசம் செய்கிறாள்.

    சப்த மாதர்கள் வாசம் செய்யும் பசுவின் யோனி வழியாகப் பாய்ந்து வரும் கோசலம் சப்த மாதர்களின் அருளையும் பெற்றுத் தருகிறது.

    வீடுகளில் விசேஷங்கள் நடைபெறும் போது தீட்டு நீக்கவும், வீட்டை, தூய்மை செய்யவும் கோசலம் பயன்படுகிறது.

    கோசலத்தை வீட்டினுள்ளேயும் புறத்திலும் தெளித்தால் அவ்விடம் தூய்மை பெறுகிறது.

    கோசலம் கிருமி நாசினியாகவும், அரிய மருந்தாகவும் பயன்படுகிறது.

    கோசலத்தால் கண்களை அடிக்கடி கழுவிக் கொள்வதால் கண்நோய் தோன்றாது.

    கோசலம் புற்று நோயைத் தீர்ப்பதில் ஓர் அருமருந்தாக விளங்குகிறது.

    பிறரது தீய பார்வையால் (துர் திருஷ்டி) பாதிக்கப்பட்டவர்கள் கோசலத்தை உடல் முழுவதும் தேய்த்துக் கொண்டால் பிறரது தீய பார்வையின் தீய பலன்கள் மறைந்து விடும். வீடுகளில் கோசலத்தை, தெளிப்பதன் தாத்பரியமும் இதுவேயாகும்.

    கடல் நீரில் குளிப்பது போலவே கோசலத்தில் நீராடலாம். கோசலத்தில் நீராடியபின் பிறகு நன்னீரில் நீராடிக் கொள்ளலாம்.

    • பிற பாலிலிருந்து உருவாக்கப்படும் தயிர்களை விட பசுந்தயிர் நமக்கு மிக்க ஏற்புடையதாக உள்ளது.
    • வெண்ணெய் கலந்த தயிரனத்தை இறைவனுக்குப் படைத்து, தானம் செய்தால் புண்ணியம் கிடைக்கும்..

    பசும் பாலின் பெருமையை நாம் அனைவருமே அறிவோம்.

    எளிதில் சீரணமாகுமம் பசுவின் பால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் அரிய உணவாகப் பயன்படுத்திறது.

    அறிவை விருத்தி செய்கிறது.

    பசுவின் மடியில் ஏழு சமுத்திரங்கள் வாசம் செய்வதால், இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்தால், ஏழு சமுத்திரங்களாலும் அபிஷேகம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

    பசுவின் கன்று குடித்த பின், பசுவிடம் பாலைக் கறந்தால் அந்த பாலுக்குத் தீட்டு இல்லை என்பது சிவபுராணம் கூறும் செய்தியாகும்.

    இரவில் பூமியின் மீது பொழியும் சந்திரனின் கிரணம் என்னும் அமுதம் பூமியைக் குளிப்பது போல பசுவின் பாலமுதமும் பூமியைச் குளிர்விக்கிறது என்று கயிலாய முனிவர் அறிவுறுத்துகிறார்கள்.

    பிற பாலிலிருந்து உருவாக்கப்படும் தயிர்களை விட பசுந்தயிர் நமக்கு மிக்க ஏற்புடையதாக உள்ளது.

    பசுந்தயிர் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவது, ஆற்றலைத் தருவதோடு சுக்கிலத்திற்கும் வீரியம் அளிப்பது.

    வெண்ணெய் கலந்த தயிரனத்தை இறைவனுக்குப் படைத்து, தானம் செய்தால் புண்ணியம் கிடைக்கும்.

    இனி பசு நெய்யை நோக்கும் போது, மற்ற நெய்களைவிட கொழுப்புச் சத்து குறைவானது.

    பசு நெய்யினை எரிக்கும் போது ஏற்படும் புகை நம்மை பாதிக்காது.

    எனவே நெய் விளக்கேற்றும் போது பசு நெய்யே மிகவும் நல்லது,.

    பசு நெய் உணவின் சுவையை அதிகரிக்கும்.

    யாகங்கள், ஹோமங்கள் செய்யும் போது தீயினை வளர்க்க நெய்தான் வார்க்க வேண்டும்.

    நெய்யில் எரியும் அக்னியே, நம் ஆகுதிகளை தெய்வங்களிடம் கொண்டு சேர்க்கும் என்பது ஐதீகம்.

    ×