search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    கோடி புண்ணியம் தரும் கோ பூஜை
    X

    கோடி புண்ணியம் தரும் கோ பூஜை

    • இவை வேண்டுமென்றே பாலை சுரக்காமல் தன்னுள் அடக்கிக் கொள்ளும் பால் சுரப்பதை இறக்கி கொடுக்காது.
    • பசுதானம் செய்தால் பலவகை நோய்களிலிருந்தும் விடுபடலாம்.

    கள்ளனைப் போல சில கள்ளப் பசுக்களும் உண்டு.

    இவை வேண்டுமென்றே பாலை சுரக்காமல் தன்னுள் அடக்கிக் கொள்ளும் பால் சுரப்பதை இறக்கி கொடுக்காது.

    பால் கறந்தாலும் மிக குறைவாகவே இருக்கும்.

    அப்படிப்பட்ட மாடுகளின் பால் காம்பில் ''பிரண்டை''யை அரைத்து, பால் கறப்பதற்கு முன்னால் லேசாக தடவி விட வேண்டும்.

    உடனே மடிக் காம்புகளில் ''தினவு'' எடுக்கும். தினவு எடுத்த மாடுகள் சொரிந்து கொள்ள முற்படும்.

    அப்பொழுது நாம் காம்பை அழுத்தி கரப்பது மாடுகளுக்கு மிகவும் இதமாக இருக்கும்.

    சண்டித்தனம் அடங்கி பொறுமையாக பால் சுரந்து கொண்டே இருக்கும்.

    கன்று ஈன்ற பசுக்களுக்கு தொடர்ந்து புல் புண்ணாக்கு தானியம் போன்றவற்றை அளித்து காலையில் வணங்கி வந்தால் கொடுத்த கடன் பிரச்சனையின்றி கிடைக்கும்.

    வராது என நினைத்த கடனும் வாசலைத் தொட்டு கொடுக்கும்.

    ஒருவருக்கு தீய கனவுகள் அடிக்கடி வந்து அவஸ்தைபட்டால் அதற்கு பரிகாரம் காலையில் பசுவின் தொழுவத்திற்கு சென்று வாழைப்பழம் கொடுத்து வழிபட்டால் சுகம் கிடைக்கும்.

    ''கோ பூசை'' செய்தால் கோடி நன்மை பெறலாம் என்பது நமது முன்னோர் வாக்கு.

    பசுக்கள் மேய்ச்சலுக்கு சென்று வீடு திரும்பும் போது அதாவது அந்திப் பொழுதில் அவற்றோடு சீதேவியும் வீட்டுக்கு வருவாளாம்.

    வரலட்சுமி விரதத்தை ஆவணி மாதம் பவுர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் அந்தி வேளையில் பூசை செய்து வழிபட்டால் அளவற்ற செல்வம் பெற்று வாழலாம்.

    இன்றும் பெரிய லட்சாதிபதி, கோடீஸ்வரர்களின் வீட்டில் இந்த வரலட்சுமி நோன்பு இருந்து செல்வத்திற்கு மேல் செல்வம் சேர்ப்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    பலவித கிரக கோளாறுகளால் பீடிக்கப்பட்டவர்களும் தீராத வியாதிகளால் அவதிப்படுபவர்களும் தங்கள் பீடைகளிலிருந்து விடுபடுவதற்கு கோதானம் என்னும் பசுதானம் செய்து வழிபட்டால் நலம் பெறலாம்.

    Next Story
    ×