search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    லட்சுமி வாசம் செய்ய பசுஞ்சாணம்
    X

    லட்சுமி வாசம் செய்ய பசுஞ்சாணம்

    • விஞ்ஞான ரீதியாக சாணம் சிறந்த கிருமி நாசினியாகும்.
    • சிறந்த கிருமி நாசினியான சாணத்திற்கு உலோகங்களிலுள்ள நச்சுத்தன்மையை ஒழிக்கும் ஆற்றலும் உண்டு.

    உலகின் மற்ற பகுதிகளில் நாகரீகம் வளர்வதற்கு முன்பே இந்தியாவில் பசுவின் சாணத்தின் மகிமைகளை இந்தியர்கள் அறிந்திருந்தனர்.

    பிரம்ம முகூர்த்தம் என்னும் விடியற்காலையில் பசுஞ்சாணத்தால் வீட்டையும், முற்றத்தையும் மெழுக வேண்டும்,.

    இவ்வாறு செய்வதால் அவ்வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள் என்பது ஐதீகம்.

    விஞ்ஞான ரீதியாக சாணம் சிறந்த கிருமி நாசினியாகும்.

    அதிகாலைப் பொழுதின் காற்றின் குளிர்ச்சியும், இளங்காற்றும் சாணத்தின் மணத்தை அப்பகுதியில் பரவச் செய்து கிருமிகளை அழிக்கிறது.

    கோவில் முற்றங்களை சாணத்தால் மெழுகுவதைச் சரியை மார்க்கத்தின் திருப்பணிகளில் ஒன்றாகக் குறித்துள்ளார் திருநாவுக்கரசு சுவாமிகள்.

    சிறந்த கிருமி நாசினியான சாணத்திற்கு உலோகங்களிலுள்ள நச்சுத்தன்மையை ஒழிக்கும் ஆற்றலும் உண்டு.

    எனவேதான் ஈயம் பூசப்பட்ட பாத்திரத்தை முதன் முதலில் சாண நீரால் கழுவி நச்சுத் தன்மைகளை அகற்றித் தூய்மைப் படுத்துகின்றனர்.

    பசுஞ்சானி கிருமி நாசினியாக மட்டுமிக்றி பில்லி, சூனியம், திருஷ்டி, கெட்ட எண்ணம் ஆகியவற்றிலிருந்தும் நம்மைக் காக்கும் குணம் உடையது.

    நம் வீட்டினையும் சுற்று புறத்தையும் சாணம் கொண்டடு தெழுகி, சாணநீர் தெளித்து வருவது நம் பரம்பரை பழக்கம்.

    நம்மை அறியாமல் ஏற்பட்டிருக்கக் கூடிய தீமவினைகள், மனைக்கு அடியில் உள்ள தீய வினைகளின் பாதிப்புகளுக்கு ஆளாகாமல் இருப்பதற்காகவே சாணம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்தது.

    வீடுகளில் மட்டுமல்லாமல் ஆலயத்தையும் மந்திரத்தால் தூய்மைபடுத்துவது போல சாணம் கொண்டும் தூய்மை செய்தனர்.

    சாண வறட்டிகளை நெருப்பில் எரிப்பதால் கிடைக்கும் சாம்பலே திருநீறு ஆகும்.

    இதன் மூலம் சாணத்தை விட அதன் சாம்பல் அதிக வீரியமுள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

    பசும் புற்களை மேயும் பசுவின் சாணத்தை நெருப்பில் எரித்துக் கிடைக்கும் திருநீறு பசிதம் என்னும் வகை திருநீறாகும்.

    இதுவே அனைத்திலும் சிறந்தது. சிவனடியார்களுக்கு ஏற்றது.

    இவை தவிர சாணமும், சாணத்தின் சாம்பலும் செடி, கொடி, மரங்களுக்கு நல்ல உயரமாகவும் பயன்படுகிறது.

    பூச்செடிகளுக்கு சாணத்தை உரமாக இடுவதால் அச்செடி சிறந்த பூக்களை பூக்கின்றன என்பது விஞ்ஞான ரீதியாக உண்மையாகும்.

    கோவில்கள் மட்டுமின்றி வீடுகளிலும் விசேஷ நாட்களில் சாணம் மெழுகி சுண்ணாம்பு பூசி, செம்மண் பட்டைகளை வரைந்து அலங்கரிப்பது வழக்கம்.

    அவ்வாறு செய்வதால் மும்மூர்த்திகளான பிரம்மனும், திருமாலும், ருத்திரனும் அங்கு எழுந்தருள்வார்கள் என்பது ஐதீகம்.

    வெண்மை பிரம்மனின் அம்சமாகவும், பசுமை விஷ்ணுவின் அம்சமாகவும், செம்மை சிவனின் அம்சமாகவும் விளங்குகின்றன.

    பூஜைகளின் போது சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து சந்தனம், குங்குமம் வைத்து விநாயகப் பெருமானாக ஆவாகனம் செய்து வழிபடுவது நம் வழக்கம் என்பதை நாம் அறிவோம்.

    மார்கழி மாதங்களில் முற்றத்தில் சாணம் தெளித்து, கோலமிட்டு அதன் நடுவில் சாணத்தைப் பிடித்து வைத்து, அதன் உச்சியில் பூசணிப் பூக்களைச் சூட்டி வைப்பார்.

    பூக்களுக்குப் பதிலாக அறுகம்புல்லையும் சாணத்தின் மீது செருகி வைப்பதுண்டு.

    விநாயப் பெருமானாக வீற்றிருக்கும் சாணம் விக்னங்களை நீக்கி, அனைத்து நற்காரியங்களையும் குறைவற நிறைவேற்றித்தரும்.

    பிள்ளையாராகப் பிடித்து வைக்கும் சாணம் நெடுநாள் கெடாது. பூச்சிகள் அரிப்பதில்லை.

    வண்டுகள் துளைப்பதில்லை.

    தங்கத்தைத் தூய்மைப்படுத்த, அதனை புடம்போடும் பக்குவத்திலும் சாணம் முக்கியப்பங்கு வகிக்கிறது.

    Next Story
    ×