search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலை வழக்கு"

    • கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அவுர்மன் சிங்கை கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களால் சிலர் அடித்துக் கொலை செய்தனர்.
    • அர்ஷ்தீப் உள்ளிட்ட 4 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் மேற்கு பகுதியில் உள்ள ஷ்ரூஸ்பெரி நகரில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த அவுர்மன் சிங் (வயது 23). டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அவுர்மன் சிங்கை கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களால் சிலர் அடித்துக் கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக இந்திய வம்சாவளியை சேர்ந்த அர்ஷ்தீப் சிங் (24) ஜக்தீப் சிங் (23), ஷிவ்தீப் சிங் (27) மற்றும் மன்ஜோத் சிங் (24) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அவுர்மன் சிங் கொலை வழக்கு ஷ்ரூஸ்பெரி நகர கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது. இதில் அர்ஷ்தீப் உள்ளிட்ட 4 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

    இதையடுத்து அவர்கள் 4 பேருக்கும் 122 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் இந்த வழக்கில் அவுர்மன் சிங்கை ரகசியமாக கண்காணித்து கொலையாளிகளுக்கு தகவல் தெரிவித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த சுக்மந்தீப் சிங்குக்கு (24) 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    • இதைதொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
    • ஆராமுதன் கொலை வழக்கில் முக்கிய நபராக வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவி.

    சென்னை, வண்டலூர் அருகே கடந்த மாதம் 29ம் தேதி நாட்டு வெடிகுண்டு வீசி திமுக நிர்வாகி ஆராமுதன் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

    இதைதொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    இந்நிலையில், திமுக ஒன்றிய செயலாளர் ஆராமுதன் கொலை வழக்கில் வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஆராமுதன் கொலை வழக்கில் முக்கிய நபராக வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவி முத்தமிழ் செல்வி விஜயராஜ் இருந்தது அம்பலம்.

    ஊராட்சி மன்ற தலைவி செல்வியுடன், அவரது கார் ஓட்டுநர் துரைராஜ் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

    • பந்த் குறித்து மாநில பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்தார்.
    • போதைப் பொருட்கள் அதிகரிப்பை கண்டித்து பந்த் அறிவிப்பு.

    புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, புதுச்சேரி முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றனர்.

    இதைதொடர்ந்து, சிறுமி படுகொலை சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி மாநில அதிமுகவும், இந்தியா கூட்டணியும் நாளை பந்த் அறிவித்துள்ளது.

    அதன்படி, நாளை (8ம் தேதி) பந்த் போராட்டம் நடத்தப்படும் என்று மாநில பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்தார்.

    மேலும், சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிகரிப்பை கண்டித்தும் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் எதிரொலியால், காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

    • விசாரணை அதிகாரி முத்தயால்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்டோர் பணியிடமாற்றம்.
    • பணியிட மாற்றம் செய்து புதுச்சேரி காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.

    புதுச்சேரி சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் 11 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    விசாரணை அதிகாரி முத்தயால்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தனச்செல்வம், உதவி ஆய்வாளர் ஜெயகுருநாதன் ஆகியோர் ஏற்கனவே பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    தற்போது மேலும் 11 காவலர்களை பணி இடமாற்றம் செய்து புதுச்சேரி காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.

    பணி இடமாற்றம் செய்யப்பட்ட 11 காவலர்கள் முத்தயால்பேட்டை, முதலியார்பேட்டை, ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றியவர்கள்.

    மேட்டுப்பாளையம், லாஸ்பேட்டை, அரியாங்குப்பம், வில்லியனூர், சோலைநகர் காவல் நிலைய காவலர்களும் 11 பேரில் அடங்குவர்.

    • சிறுமி கொலை வழக்கு தொடர்பாக சிறப்புக் குழு விசாரணை.
    • இருவர் மீது போக்சோ உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.

    புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 9-வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

    இச்சம்பவம் தொடர்பாக கைதான இருவர் மீது போக்சோ உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சிறுமி கொலை வழக்கு தொடர்பாக சிறப்புக் குழு விசாரணையை தொடங்கியுள்ளது. 

    சிறுமி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்த நிலையில், பாதுகாப்பு கருதி இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் மருத்துவ பரிசோதனை முடித்து போலீசார் சிறைக்கு அழைத்து சென்றனர்.

    இந்நிலையில், கைது செய்யப்பட்ட இருவருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

    மத்திய சிறை வளாகத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட நீதிபதி இளவரசன், சிறையில் அடைக்கப்பட்ட விவேகானந்தன், கருணாஸ் ஆகியோருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

    • குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
    • சிறுமியின் பெற்றோர்களுக்கு என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரியில் 9 வயது சிறுமி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சியையும் – தாங்கொணாத் துயரையும் ஏற்படுத்தியுள்ளது.

    மழலை முகம் மாறாத அச்சிறுமியையும் - அவரது எதிர்கால ஆசைகள் - கனவுகளையும் ஒரே அடியாக சிதைத்துள்ள இக்கொடுமை மனித குலத்திற்கே விரோதமானது. இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ள சமூக விரோதிகளுக்கு உச்சபட்ச தண்டனையை உடனே வழங்க வேண்டும். மேலும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

    யாராலும் தேற்ற முடியாத சோகத்தில் தவிக்கும் அச்சிறுமியின் பெற்றோர்களுக்கு என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் பதிவு.
    • சிறுமியின் பெற்றோருக்குக் கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

    புதுச்சேரியில் கடத்தப்பட்ட 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு கால்வாயில் தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் புதுச்சேரி அரசுக்கு எதிராக கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.

    புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், புதுச்சேரி சிறுமி படுகொலை சம்பவம் தொடர்பாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற வைக்கிறது.

    பெற்ற மகளை இழந்து, பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்குக் கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

    சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்த கொலையாளிகளுக்குச் சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர, புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • புதுச்சேரி நகர் எங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
    • சட்டப்பேரவை முன்பு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரியில் கடந்த 2ம் தேதி கடத்தப்பட்ட 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு கால்வாயில் தூக்கி வீசிய சம்பவம் தொடர்பாக, எதிர்க்கட்சிகள் புதுச்சேரி அரசுக்கு எதிராக கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.

    தொடர்ந்து, புதுச்சேரி நகர் எங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    முதல்வர் ரங்கசாமி வரும்போது சட்டப்பேரவை முன்பு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    சிறுமியின் சடலம் உடற்கூராய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், நியாயம் கிடைக்காமல் உடலை வாங்க மாட்டோம் என சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், சிறுமியின் உடலை பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் உடலை பெற்றுக் கொள்ள ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால், சற்று நேரத்தில் மருத்துவமனையில் இருந்து சிறுமியின் உடல் எடுத்துச் செல்லப்படவுள்ளது.

    • லால்ஜூ ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஏலூர் கச்சேரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் லால்ஜூ. இவர் கடந்த 2021-ம் ஆண்டு கும்பலங்கி பகுதியில் நடந்த ஆணடனி லாசர் என்பவர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் ஆவார். நேற்று இரவு பள்ளுருத்தி பகுதியில் இரு தரப்பினருக்கிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

    இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் லால்ஜூ மற்றும் பள்ளுருத்தியை சேர்ந்த ஜோஜி ஆகிய இருவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த இருவரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் லால்ஜூ ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

    ஜோஜி ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து சம்பந்தப்பட்டவர்களை தேடி வருகின்றனர்.

    • வழக்கை அருகில் உள்ள சிவகங்கை மாவட்டத்திற்கும் மாற்ற முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் அங்கு உள்ளார்கள்.
    • வழக்கு விசாரணையை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த பாண்டித்துரை, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    கடந்த 2012 ஆம் ஆண்டு தேவர் குருபூஜைக்காக பசும்பொன் சென்றவர்கள், அங்கு தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு ஒரு வேனில் 20-க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர்.

    அப்போது பரமக்குடி அருகே பாம்பு விழுந்தான் என்ற கிராமத்தில் உள்ளே சென்ற வேனை, சிலர் வழி மறித்து தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் வேன் டிரைவர் சிவக்குமார், வீரமணி மற்றும் மலைகண்ணன் ஆகிய 3 பேர் அடித்து கொலை செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கில் பலர் அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டனர். தற்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்தவர்களாக இருப்பதால் சாட்சிகள் கோர்ட்டுக்கு சென்று சாட்சி சொல்வதில் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இந்த வழக்கில் பல அரசு தரப்பு சாட்சிகள் சாட்சிகளை ஒழுங்காக பதிவு செய்யவில்லை. பாதிக்கப்பட்ட ஒரு தரப்பினர் கூட குற்றவாளிகளுக்கு பயந்து பிறழ் சாட்சியாக மாறி விட்டனர்.

    எனவே இந்த வழக்குகளின் விசாரணையை ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டில் இருந்து வேறு மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளை பாதுகாப்பது அரசின் கடமை. மேலும் இந்த வழக்கை அருகில் உள்ள சிவகங்கை மாவட்டத்திற்கும் மாற்ற முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் அங்கு உள்ளார்கள்.

    எனவே இந்த கொலை வழக்குகளின் விசாரணையை மதுரை மாவட்ட முதன்மை கோர்ட்டுக்கு மாற்றப்படுகிறது. இந்த வழக்கு விசாரணையை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    • ரஞ்சித் சீனிவாஸ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • குற்றம் சாட்டப்பட்டவர்கள் கருணைக்கு தகுதியற்றவர்கள் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் சீனிவாஸ். வக்கீலான இவர் பாரதிய ஜனதா கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் மாநில செயலாளராக இருந்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 19-ந் தேதி வீட்டில் இருந்த ரஞ்சித் சீனிவாசை, அவரது மனைவி மற்றும் தாய்-மகள் முன்னிலையில் ஒரு கும்பல் வீடு புகுந்து கொடூரமாக வெட்டி கொலை செய்தது. ரஞ்சித் சீனிவாஸ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தியதில், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் சோசியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா அமைப்புகளை சேர்ந்த நிஜாம், அஜ்மல், அனூப், முகமது அஸ்லாம், அப்துல்கலாம் என்ற சலாம், அப்துல் கலாம், சபரூதின், மன்சாத், ஜசீப் ராஜா, நவாஸ், சமீர், நஸீர், ஜாஹீர்உசேன், ஷாஜி, ஷெர்னாஸ் அஷரப் ஆகிய 15 பேருக்கு கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை, கூட்டுசதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கில் சேர்க்கப்பட்ட முதல் 8 பேர் கொலையில் நேரடியாக ஈடுபட்டதும், மற்றவர்களுக்கு கொலை சதியில் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

    அதனடிப்படையில் 15 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை மாவேலிக்கரை கூடுதல் மாவட்ட அமர்வு நீதி மன்றத்தில் நடந்து வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.

    இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 15 பேரும் குற்றவாளிகள் என மாவேலிக்கரை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அவர்களுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார்.

    குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்ற எதிர்பார்பு அனைவரின் மத்தியிலும் எழுந்தது. இதனால் மாவேலிக்கரை கோர்ட்டில் இன்று பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தன.

    இந்நிலையில் குற்றவாளிகளுக்கான தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்பட்டது. குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அதன்படி குற்றவாளி 15 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிபதி ஸ்ரீதேவி தீர்ப்பளித்தார்.

    இந்த வழக்கு அரிதிலும் அரிதான வழக்கு என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கருணைக்கு தகுதியற்றவர்கள் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது. பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கொலை வழக்கில் தொடர்புடைய 15 பேருக்கு தூக்கு தண்டனை விதித்திருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சிறுவனை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டிச் சென்று வெட்டி படுகொலை செய்தது.
    • 5 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    வண்டலூர்:

    சென்னையை அடுத்த நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகராட்சி பகுதியில் தைலாவரத்தை சேர்ந்தவர் கோபால கண்ணன் (வயது23). இவரை கடந்த தீபாவளி பண்டிகை அன்று இரவு கூடுவாஞ்சேரியில் வைத்து ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்தது.

    அதில் தொடர்புடைய குற்றவாளிகளான கன்னியப்பன் என்ற குடுமி லோகேஷ் (28), ஸ்ரீ ரங்கராஜன் என்ற தங்கம், இளங்கோ என்ற புலி (25) ஆகிய 3 பேரையும் கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து, செங்கல்பட்டு கோர்ட்டு சிறையில் அடைத்தனர்.

    அதேபோன்று காரணை புதுச்சேரி அண்ணாநகர் பகுதியில் கடந்த மாதம் 14-ந்தேதி தனுஷ் என்ற 17 வயது சிறுவனை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டிச் சென்று வெட்டி படுகொலை செய்தது. இந்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த தனசேகர் (29), வினோத் என்ற கரி வினோத் (27) ஆகிய இருவரையும் கூடுவாஞ்சேரி போலீசார் கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டு சிறையில் அடைத்தனர்.

    இந்த 2 இடங்களில் நடைபெற்ற கொலை வழக்குகளில் தொடர்புடைய 5 பேரையும் வெளியில் விட்டால் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு, கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் முருகேசன் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக 5 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் 5 பேரும் நேற்று மாலை சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ×