search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலை முயற்சி"

    • கோவிலில் இருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மகும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வண்டலூர்:

    கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர் பர்கத்பாஷா(25). நேற்று மதியம் அவர் கூடுவாஞ்சேரியில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் முன்பு இருந்தார். அப்போது கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது.

    அந்த நேரத்தில் 4 பேர் கும்பல் திடீரென பர்கத்பாஷாவிடம் தகராறில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் பர்கத்பாஷாவின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு தப்பி சென்று விட்டனர். இதனை கண்டு கோவிலில் இருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பலத்த காயம் அடைந்த பர்கத்பாஷா ரத்தம் சொட்ட, சொட்ட அங்கிருந்து நடந்து சென்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மகும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து போலீசார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
    • நந்தினி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மனைவியை கார் ஏற்றி கொல்ல முயன்ற கணவர் பிரதீப்குமாரை கைது செய்தனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சாலைப்புதூரைச் சேர்ந்தவர் பிரதீப் குமார் (வயது 28). இவரும் வீரலப்பட்டியைச் சேர்ந்த நந்தினி (26) என்பவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    நந்தினி ஒட்டன்சத்திரம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இதனிடையே திருமணமான 2 மாதத்திலேயே கணவன்-மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதனால் நந்தினி கணவரை விட்டு பிரிந்து வீரலப்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். மேலும் பிரதீப்குமார் தனது மனைவியை வீட்டுக்கு வருமாறு பல முறை அழைத்தும் வரவில்லை. இது குறித்து ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து போலீசார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் நந்தினி தனது அலுவலகத்தில் பணியாற்றும் தற்காலிக பணியாளரான அசோக்குமார் (29) என்பவரை காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. இருவரும் ஒன்றாகவே பைக்கில் ஊர் சுற்றி வந்துள்ளனர்.

    இதன் காரணமாகத்தான் தனது மனைவி பிரிந்து சென்று விட்டார் என பிரதீப் குமார் சந்தேகமடைந்தார். இந்நிலையில் கள்ளிமந்தயத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு நந்தினி தனது காதலன் அசோக்குமாருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    இதை பார்த்ததும் பிரதீப்குமார் கோபமடைந்தார். தான் ஓட்டி வந்த காரை அவர்கள் மீது மோத விட்டு கீழே தள்ளினார். இதில் நந்தினி மற்றும் அசோக்குமார் படுகாயமடைந்தனர். அருகில் இருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு ஒட்டன்சத்திரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து நந்தினி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மனைவியை கார் ஏற்றி கொல்ல முயன்ற கணவர் பிரதீப்குமாரை கைது செய்தனர். 

    • காயம்பட்ட ரவுடி அலெக்ஸ் சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
    • 2 கொலை வழக்குகள் மற்றும் கடத்தல் வழிப்பறி, கொள்ளை உட்பட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள நீலியாம்பட்டி செல்லும் சாலையில் சாலப்பட்டி மலையடிவாரத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர்.

    போலீசார் நெருங்கி வருவதை கண்ட அந்த நபர் யாரும் பக்கத்தில் வராதீர்கள். வந்தால் சுட்டு விடுவேன் என்று மிரட்டினார். மேலும் கையில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் மிரட்டல் விடுத்தார். இருப்பினும் அவரை பிடிப்பதற்காக காவல்துறையினர் சுற்றி வளைத்தனர்.

    உடனே அந்த நபர் தனது கையில் வைத்திருந்த ஒரு பொருளை எடுத்து போலீஸ் மீது வீசினார். அது தொட்டியம் காவல் நிலைய போலீஸ்காரர் ராஜேஷ் குமார் மீது விழுந்து அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. பின்னர் பார்த்தபோது அது வெடிகுண்டு அல்ல பெரிய பாறாங்கல் என்பது தெரியவந்தது.

    அதைத் தொடர்ந்து அந்த நபர் துப்பாக்கியை காட்டி சுட முயற்சி செய்தார். உடனே சுதாகரித்துக் கொண்ட இன்ஸ்பெக்டர் முத்தையன் தற்காப்பிற்காக தன்னிடம் இருந்த கை துப்பாக்கியால் அந்த நபரின் கால் முட்டிக்கு கீழாக குறி பார்த்து சுட்டார்.

    இதில் அவரது கால் மூட்டில் 2 குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தார். அதைத் தொடர்ந்து போலீசார் அவரை பிடித்து விசாரித்த போது திருச்சி அரியமங்கலம் காவல் நிலைய குற்ற சரித்திர பதிவேட்டில் இடம் பெற்றுள்ள அலெக்ஸ் என்கிற அலெக்சாண்டர் என்பது தெரியவந்தது. பின்னர் காயம்பட்ட ரவுடி அலெக்ஸ் சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு போலீஸ் பாதுகாப்பு டன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே பிடிபட்ட ரவுடி அலெக்ஸ் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அவர் மீது 2 கொலை வழக்குகள் மற்றும் கடத்தல் வழிப்பறி, கொள்ளை உட்பட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். கடைசியாக மணிகண்டத்தில் ஒருவரை கொலை செய்ய முயற்சி செய்தார்.

    இந்த வழக்கில் அலெக்ஸை மணிகண்டம் போலீசார் தேடி வந்தனர். ஆனால் போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார்.

    இந்நிலையில் தொட்டியத்தில் காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்த அலெக்சை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர்.அவர் மீதான வழக்குகள் தற்போது தூசு தட்டப்பட்டு வருகிறது. ரவுடி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. சமீப காலமாக காவல்துறையினர் ரவுடிகளை அவர்களின் முட்டிக்கு கீழ் சுட்டு பிடிப்பது ரவுடிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சிறுமி கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
    • தந்தை மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகே உள்ள ஆலங்காடு பகுதியை சேர்ந்த 14 வயது மதிக்கத்தக்க சிறுமி, வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது.

    சிறுமியும், அந்த வாலிபரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமியின் காதல் விவகாரம் அவரது தந்தைக்கு தெரியவந்தது. தனது மகள் வேற்று மதத்தை சேர்ந்த வாலிபரை காதலிப்பதையறிந்த அவர் ஆத்திரமடைந்தார். அவர் தனது மகளை கண்டித்துள்ளார்.

    மேலும் காதலை கைவிட்டுவிடுமாறு கூறியிருக்கிறார். ஆனால் சிறுமியோ தனது காதலை கைவிடவில்லை. தொடர்ந்து அந்த வாலிபருடன் பேசிய படி இருந்திருக்கிறார். இதனால் சிறுமி வைத்திருந்த செல்போனை பறித்து வைத்துக்கொண்டார். ஆனால் சிறுமி வேறொரு போன் மூலமாக காதலனுடன் பேசியபடி இருந்திருக்கிறார்.

    இதில் ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை, சம்பவத்தன்று சிறுமியிடம் தகராறு செய்திருக்கிறார். அப்போது அவர், பெற்ற மகள் என்றும் பாராமல் இரும்பு கம்பியால் மகளை கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சிறுமி நிலைகுலைந்து தரையில் விழுந்தார்.

    அப்போது அவர், வீட்டில் இருந்த பூச்சிமருந்தை எடுத்து தனது மகளின் வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றினார். பெற்ற மகளை கொடூரமாக தாக்கியது மட்டுமின்றி, அவளை கொலை செய்யும் நோக்கில் விஷத்தை வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றுவதை சிறுமியின் தாய் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    அவர் தனது கணவரிடமிருந்து மகளை மீட்டார். சிறுமி கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமி தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

    சிறுமியை பெற்ற தந்தையே கொடூரமாக தாக்கி விஷம் கொடுத்து கொல்ல முயன்ற சம்பவம் குறித்து, சிறுமி சிகிச்சை பெற்ற ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    பின்பு சிறுமியின் தந்தையை கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு உள்ளது. காதலை கைவிட மறுத்த மகளை தந்தையே கொல்ல முயன்ற சம்பவம் எர்ணாகுளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காரில் வந்த ஒரு கும்பலும் மணல் கடத்தலை தடுக்கமுயன்ற அதிகாரிகள் மீது கொலை முயற்சி நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
    • லாரியை ஓட்டிச்சென்றது காளிமுத்து என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடி பொன்னிமலை சித்தன்கோவில் அருகே சட்டவிரோதமாக மணல் திருடப்பட்டு வருகிறது என போலீசாருக்கும், வருவாய்த்துறையினருக்கும் புகார்கள் வந்தவண்ணம் இருந்தது. கடந்த 13-ந்தேதி வி.ஏ.ஓ கருப்புசாமி, வருவாய் ஆய்வாளர் இலாகிபானு, உதவியாளார் மகுடீஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

    அங்கு மணல் திருடப்பட்டு கொண்டிருந்தது கண்டறியப்படவே லாரியை பறிமுதல் செய்தனர். ஆயக்குடி போலீஸ் நிலையத்திற்கு வி.ஏ.ஓ.க்கள் கருப்புசாமி, பிரேம்குமார், உதவியாளர் மகுடீஸ்வரன் ஆகியோர் கொண்டுவந்தனர். வரும் வழியில் லாரியில் இருநத மணலை கொட்டி அதிகாரிகளை கொல்ல முயன்றனர்.

    மேலும் காரில் வந்த ஒரு கும்பலும் மணல் கடத்தலை தடுக்கமுயன்ற அதிகாரிகள் மீது கொலை முயற்சி நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுகுறித்து வி.ஏ.ஓ கருப்புசாமி ஆயக்குடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் பாஸ்கரன் மற்றும் சக்திவேல் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்தனர். இதனிடையே கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் கொலை முயற்சியில் ஈடுபட்ட பாலசமுத்திரத்தை சேர்ந்த சக்திவேல்(60), அவரது மகன்கள் ரமேஷ்(33), கார்த்தி என்ற காளிமுத்து(30), தி.மு.க மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாஸ்கரன்(48) ஆகிய 4 பேரையும் கேரள மாநிலம் அதிரப்பள்ளியில் போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 4 பேரும் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவத்தன்று லாரியை ஓட்டிச்சென்றது காளிமுத்து என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆயக்குடி போலீசார் கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரோடு தலைமை அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • அஜித்குமார் கடந்த வருடம் ஏற்பட்ட தகராறில் சொந்த அண்ணனை வெட்டிக்கொலை செய்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (32). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஒரே வீட்டில் மனைவி, மாமியார் கல்யாணி (65) உடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு மது போதையில் வந்த அஜித்குமார் மாமியார் கல்யாணியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றி ஆத்திரம் அடைந்த அஜித்குமார் வீட்டில் இருந்த அருவாமனையை எடுத்து வந்து மாமியார் கல்யாணியை சரமாரியாக வெட்டியுள்ளார்.

    இதில் தலை மற்றும் கையில் வெட்டு காயம் ஏற்பட்டு கல்யாணி வலியால் அலறினார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கல்யாணியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து ஈரோடு தலைமை அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அஜித்குமார் கடந்த வருடம் ஏற்பட்ட தகராறில் சொந்த அண்ணனை வெட்டிக்கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பீகாரை சேர்ந்த சோட்டாவை பிடிக்க தனிப்படை விரைந்தது
    • தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரை சேர்ந்தவர் தியாகராஜன், முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. இவரது மகனான இளையராஜா. தி.மு.க பிரமுகர். கடந்த 8-ந்தேதி இவர் மணவாளநல்லூர் அருகே விவசாய நிலத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போது 6 பேர் கொண்ட கும்பல் இவரை துப்பாக்கி யால் சுட்டது. துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த இளையராஜா தொடர்ந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து விருத்தா சலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ராஜாராம் உத்தர வின் பேரில் விருத்தாசலம் டி.எஸ்.பி ஆரோக்கி யராஜ் தலைமையிலான தனிப்ப டை போலீசார் மண வாளநல்லூர் ஆடலரசு, புகழேந்தி, சரவணன், வெங்கடேசன், ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த விஜயகுமார், மதுரை திருமங்கலத்தை சேர்ந்த சூர்யா, குறிஞ்சிப்பாடியை சேர்ந்த அருண்குமார் மற்றும் வெங்கடா ம்பேட்டையை சேர்ந்த சதீஸ்வரன் ஆகிய 8 பேரை கைது செய்தனர். கைது செய்யப்படட்டவர்களிடம் இருந்து 2 நாட்டு துப்பாக்கி கள், 2 இரும்பு ராடுகள், 1 கத்தி, 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதனையடுத்து போலீ சார் பிடிபட்டவர்களை கோர்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீசாரின் விசாரணை யில் இளையராஜாவின் அண்ணன் நீதிராஜன் மண வாள நல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது ஆடலரசு வின் தாய் மங்கையர்கரசி தேர்தலில் போட்டியிட்டார் அப்போது இளையராஜா தரப்பினருக்கும் ஆடலரசு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோத தகராறில் பழிதீர்க்கும் விதமாக ஆடலரசு சென்னையில் தனியார் உணவு டெலிவரி வேலை செய்யும் பாளை யங்கோட்டை நண்பரான விஜயகுமாரிடம் உதவி கேட்டுள்ளார். அதன்படி விஜயகுமார் சென்னையில் முகமது யூனிஸ் என்பவர் மூலம் பீகாரில் இருந்து ரூ. 3 லட்சத்துக்கு 2 துப்பாக்கி கள் மற்றும் 3 புல்லட்டுகளை கடந்த 2 மாதத்திற்கு முன்பு வாங்கி கொடுத்தது தெரிய வந்தது. இதன்மூலம் திட்ட மிட்டபடி ஆடலரசு தரப்பி னர் இளையராஜாவை கொலை செய்ய முயற்சி மேற்கொண்டனர்.

    இவர்களுக்கு துப்பாக்கி, புல்லட் வாங்கி கொடுத்த சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த அபுபக்கர் மகன் முகமது யூனிசை தனிப்படை போலீசார் சென்னையில் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட முகமது யூனிசை போலீசார் விருத்தாசலம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி னர். இதில் முகமது யூனிஸ் பீகார் மாநிலம் சோட்டா என்பவரிடமிருந்து இந்த துப்பாக்கி, புல்லட் வாங்கி கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் சோட்டா என்பவரை பிடிக்க பீகார் மாநிலத்திற்கு விரைந் துள்ளனர். பிடிபட்ட முகமது யூனிசிடம் போலீ சார் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • விசாரணையில் பணத்தகராறில் கோவிந்தராஜிக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்திருப்பது தெரியவந்தது.
    • 2 பேரையும் கோயம்பேடு பஸ்நிலைய போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போரூர்:

    சென்னை, டி.பி. சத்திரம் அடுத்த ஷெனாய் நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 50). ஆட்டோ டிரைவர்.

    இவர் நண்பர்களான குரங்கு மோகன், ஈத்தகுமார் ஆகியோருடன் மது குடித்தபோது மயங்கி விழுந்தார். விசாரணையில் பணத்தகராறில் கோவிந்தராஜிக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்திருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து குரங்குமோகன், ஈத்தகுமார் ஆகிய 2 பேரையும் கோயம்பேடு பஸ்நிலைய போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திடீரென பிரதீப்குமாரிடம் தகராறில் ஈடுபட்டு சரமாரியாக கத்தியால் வெட்டினர்.
    • கடம்பத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் வெண்மனம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதீப்குமார். சென்னையில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக உள்ளார். இவர் நண்பர்களுடன் ஸ்ரீதேவிகுப்பம் பெட்ரோல் பங்க் அருகில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் திடீரென பிரதீப்குமாரிடம் தகராறில் ஈடுபட்டு சரமாரியாக கத்தியால் வெட்டினர்.

    பின்னர் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த பிரதீப்குமாருக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கடம்பத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தோஷம் நீக்க பரிகாரங்கள் செய்வது வழக்கம்.
    • தனக்கு திருமணம் ஆவதற்கு பரிகார பூஜை செய்ய கேட்டுக் கொண்டார்.

    விழுப்புரம்:

    திருவண்ணாமலை மாவட்டம் அடராப்பட்டில் குறி சொல்லும் மையம் நடத்தி வந்தவர் சரவணன் (வயது 42 )சாமியார். தாடியும் நீண்ட தலைமுடியும் வைத்திருப்பவர். இவர் தோஷம் நீக்க பரிகாரங்கள் செய்வது வழக்கம். இந்நிலையில் செஞ்சியை அடுத்த ஒதியத்தூரை சேர்ந்த பச்சையப்பன் மகன் திருமலை (வயது 35) சாமியார் சரவணனை அணுகி தனக்கு திருமணம் ஆவதற்கு பரிகார பூஜை செய்ய கேட்டுக் கொண்டார்.அதற்கு ஒரு லட்சம் பணம் பெற்றுக் கொண்டு செஞ்சியை அடுத்த பெருங்கப்பூர் ஏரி பகுதியில் உள்ள காளி கோவிலில் சாமியார் பரிகார பூஜைகள் செய்துள்ளார். ஆனால் பரிகார பூஜைகள் செய்து நீண்ட நாட்களாகியும் திருமண த்தடை நீங்காததால் விரக்தி அடைந்த திருமலை கடந்த 27-ந்தேதி மீண்டும் சாமி யாரை பூஜை செய்வதற்கு வரச் சொல்லி உள்ளார்.

    பணம் வாங்கிக் கொண்டு திருமண தடை நீங்காததால் விரக்தி அடைந்த திருமலை சாமியாரிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது .அப்போது ஆத்திரமடைந்த திருமலை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சாமியார் சரவணன் வயிற்றில் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் குடல் சரிந்த நிலையில் தனியாக விழுந்து கிடந்த சாமியாரை மறுநாள் காலையில் அந்த வழியாக சென்றவர்கள் பார்த்துவிட்டு போலீசுக்கு தகவல் தெரிவிக்க போலீசார் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு மருத்துவமனைக்கும் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். இது குறித்து சாமியார் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் வழக்கு பதிவு செய்த சத்தியமங்கலம் போலீசார் மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டனர். திரும லையை தனிப்படையினர் வலை வீசி தேடி வந்தனர். இந்நிலையில் விழுப்புரத்தில் பதுங்கி இருந்த திருமலையை போலீசார் கைது செய்து சத்தியமங்கலம் அழைத்து வந்தனர். அங்கு அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • லண்டனுக்கு சென்ற சிறிது நாட்களில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக வசித்து வந்தனர்.
    • ஷிரிஷாவின் குடும்பத்தினர் திருமணத்திற்காக ஐதராபாத் வந்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், தராபாத், மியாபுர் கோகுல் அப்பார்ட்மெண்ட்டை சேர்ந்தவர் அனுமந்த ராவ். இவரது மனைவி உமா மகேஸ்வரி.

    இவர்களது மகள் ஷிரிஷா. டாக்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் சாப்ட்வேர் என்ஜினீயரான அசோக்குமாருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.

    திருமணத்திற்கு பிறகு கணவன்-மனைவி இருவரும் லண்டனுக்கு சென்று வேலை செய்து வந்தனர்.

    லண்டனுக்கு சென்ற சிறிது நாட்களில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக வசித்து வந்தனர்.

    மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரத்தில் இருந்த அசோக் குமார் மனைவி மற்றும் அவரது ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் கொல்ல வேண்டும் என முடிவு செய்தார். அதன்படி தன்னிடம் வேலை செய்த வினோத்குமாரை அணுகி ஆலோசனை கேட்டார்.

    இந்த நிலையில் ஷிரிஷாவின் குடும்பத்தினர் திருமணத்திற்காக ஐதராபாத் வந்தனர்.

    இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள அசோக் குமார் முடிவு செய்தார்.

    அதன்படி கடந்த ஜூன் மாதம் 25-ந் தேதி 3 நபர்களை விஷ ஊசி செலுத்தி கொலை செய்ய அனுப்பி வைத்தார். அந்த முயற்சி தோல்வி அடைந்தது.

    இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியின் மகன் ரமேஷ் மூலம் மசாலா பொடி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவைகளில் மெதுவாக கொள்ளும் விஷத்தை கலந்து மனைவியின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

    விஷம் கலந்த மசாலா பொருட்களில் சமையல் செய்து சாப்பிட்டதால் ஷிரிஷாவின் தந்தை, தாய், சகோதரர் மற்றும் உறவினர்கள் என 6 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு கை கால்கள் செயலிழந்தன.

    மேலும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஷிரிஷாவின் தாய் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் சந்தேகம் அடைந்த டாக்டர்கள் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சோதனை முடிவில் மசாலா பொருட்களில் மெதுவாக கொல்லும் விஷம் கலந்து இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து ஷிரிஷா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    இதில் காவலாளி மகன் ரமேஷ் மசாலா பொருட்கள் கொடுத்தது தெரியவந்தது. போலீசார் ரமேஷை பிடித்து விசாரணை செய்ததில் அசோக்குமார் கூறியபடி பூர்ணேந்திர ராவ் விஷம் கலந்த மசாலா பொருட்களை கொடுத்து அனுப்பியது தெரிய வந்தது.

    போலீசார் இது தொடர்பாக 6 பேரை கைது செய்தனர். மேலும் லண்டனில் உள்ள ஷிரிஷாவின் கணவர் அசோக் குமாரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
    • அங்கு வந்த முனிராஜ், மனைவியின் தலையில் கல்லை தூக்கி போட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.

    ஓசூர்,

    ஓசூர் தாலுகா ஆவலப்பள்ளி அருகே உள்ள காளஸ்திபுரத்தைச் சேர்ந்தவர் முனிராஜ் (வயது 38). கூலித் தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (35). இவர்களுக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகிறது. 4 குழந்தைகள் உள்ளனர். முனிராஜூக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் காலை லட்சுமி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அந்த நேரம் அங்கு வந்த முனிராஜ், மனைவியின் தலையில் கல்லை தூக்கி போட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.

    இதில் பலத்த காயமடைந்த லட்சுமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் லட்சுமி சேர்க்கப்பட்டார். இது குறித்து லட்சுமியின் தம்பி ராஜப்பா (26) பாகலூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து முனிராஜை தேடி வருகிறார்கள்.

    ×