என் மலர்

  நீங்கள் தேடியது "Affiar"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரியா குடும்பத் தகராறில் கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
  • கடந்த சில ஆண்டுகளாக மனைவி தனக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்திருப்பதாக பாறசாலை போலீசில் சுதீர் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

  திருவனந்தபுரம்:

  கேரள மாணவருக்கு காதலி குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் இருந்து மீள்வதற்குள் கள்ளக்காதலுக்காக கணவருக்கு மனைவியே விஷம் கொடுத்தள்ளதாக புகார் எழுந்துள்ளது.

  கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலை அருகே உள்ள முறியங்கரை பகுதியைச் சேர்ந்தவர் சுதீர் (வயது 49). கேரள அரசு போக்குவரத்துக் கழக டிரைவர். இவரது மனைவி பிரியா. இவர் தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர்.

  கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரியா குடும்பத் தகராறில் கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மனைவி தனக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்திருப்பதாக பாறசாலை போலீசில் சுதீர் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

  இதற்கு ஆதாரமாக வீட்டின் பீரோவில் இருந்து கைப்பற்றப்பட்ட அம்மோனியம் பாஸ்பேட் மற்றும் சிரிஞ்சை அவர் காண்பித்துள்ளார். மனைவி பிரியாவுக்கும் திருநெல்வேலியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது என்றும் அவர் தான் விஷத்தை கொரியர் மூலம் அனுப்பி இருக்கிறார் என்றும் சுதீர் கூறினார். மேலும் கடந்த 10 ஆண்டுகளாக எனக்கு வீட்டில் சாப்பிட்டால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. இதற்கு காரணம் மனைவி உணவில் விஷம் கலந்து கொடுத்தது தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

  அதன்பேரில் விசாரணை நடத்திய பாறசாலை போலீசார், பிரியா, முருகன் ஆகியோர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கள்ளக்காதலனுடன் உல்லாச வாழ்க்கை வாழ, கணவருக்கு மனைவி விஷம் கொடுத்ததாக கூறப்படும் இந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவையில் இளம்பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தலைமறைவான நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
  கோவை:

  கோவை சாய்பாபா காலனி சபாபதி வீதியைச் சேர்ந்தவர் அஸ்வதி (20). பி.கம். பட்டதாரி. திருமணம் ஆகவில்லை. இவரது தந்தை இறந்து விட்டார். தற்போது தாயாருடன் வசித்து வந்தார்.

  அஸ்வதி தடாகம் ரோட்டில் உள்ள ஒரு பழக்கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு பணியாற்றிய திருமணம் ஆன பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டுக்கும் அவர் சென்று வந்தார்.

  அப்போது அந்த பெண்ணின் கணவருடன் அஸ்வதிக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அவர்கள் கள்ளக்காதலர்களாகினர். இந்த விவகாரம் அந்த பெண்ணுக்கு தெரிந்து கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அந்த பெண் கணவரை பிரிந்து சென்றார்.

  அதன்பிறகு அஸ்வதிக்கும், பெண்ணின் கணவருக்குமான நெருக்கம் அதிகரித்தது. அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர்.

  இந்தநிலையில் அஸ்வதி தனது வீட்டில் பிணமாக கிடந்தார். கழுத்தில் துணியால் இறுக்கப்பட்ட தடயங்கள் இருந்தன. இதனால் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

  இதுபற்றி அஸ்வதியின் உறவினர்கள் கொடுத்த தகவலின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அஸ்வதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  அஸ்வதியுடன் தொடர்பில் இருந்த நபர் யார்? என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். செல்போன் மூலம் அவரை போலீசார் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. செல்போன் டவரை சோதனை செய்தபோது அந்த நபர் ஊட்டியில் இருப்பது தெரியவந்தது.

  இதனால் அஸ்வதியுடன் ஏற்பட்ட மோதலில் அவரை கழுத்தை இறுக்கி கொன்று விட்டு அவர் தப்பிச் சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவரை பிடித்தால் தான் அஸ்வதி எப்படி இறந்தார்? எதற்காக கொல்லப்பட்டார்? என்ற விவரம் தெரியவரும்.

  எனவே அந்த நபரின் மனைவி மற்றும் உறவினர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
  ×