search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குருபூஜை விழா"

    • இளையான்குடி வேதாந்த மடத்தில் குருபூஜை விழா நடந்தது.
    • இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சாதுக்கள் பங்கேற்றனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள வேதாந்த மடத்தில் சிவானந்த ஞான தேசிக சுவாமிகளின் 49-வது ஆண்டு நிறைவு குருபூஜை விழா நடந்தது. இளையான்குடி வேதாந்த மடத்தை தோற்றுவித்த சிவானந்த ஞான தேசிக சுவாமிகளின் ஜீவ சமாதி இங்கு உள்ளது.

    இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சாதுக்கள் பங்கேற்றனர். சிவானந்த ஞான தேசிக சுவாமிகளுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், சொர்ண அபிஷேகம் உட்பட பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

    பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சிவனடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இளையான்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கேற்றனர்.

    • 32-ம் ஆண்டு குருபூஜை விழா, மகான் ஸ்ரீமகாலட்சுமி சுவாமிகளின் 60-ம் ஆண்டு கல்கி ஜெயந்தி விழா நடைபெற்றது.
    • ஸ்ரீமகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, அன்னதானம் நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூர் ஸ்ரீலட்சுமி நாராயண பீடம் ஸ்ரீமகாலட்சுமி கோவிலில் மகான் ஸ்ரீமகாலட்சுமி சுவாமிகளின் அருளாசியுடன் 32-ம் ஆண்டு குருபூஜை விழா, மகான் ஸ்ரீமகாலட்சுமி சுவாமிகளின் 60-ம் ஆண்டு கல்கி ஜெயந்தி விழா நடைபெற்றது. இதைெயாட்டி விக்னேஸ்வர பூஜை, வருண பூஜை, சங்கல்பம், கணபதி ஹோமம், அஷ்டதி ஹோமம், பஞ்சப்ரமே ஹோமம், நவகிரக ஹோமம், ஸ்ரீ ஸூக்தம், புருஷஸூக்தம், மகாலட்சுமி, மிருத்யுஞ்ஜெய ஹோமம், ஸர்வ காயத்ரி ஹோமம் நடைபெற்றது. மேலும் மகா பூர்ணாஹூதி , சுவாமிஜி தம்பதியர்களுக்கு கலசாபிஷேகம், ஸ்ரீமகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, அன்னதானம் நடைபெற்றது.

    விழாவில் அகில தாந்திரி பிரச்சார சபா மாநில தலைவர் உடுப்பறை அம்மன் கோவில் சிவசக்தி சுவாமிகள், அகில தாந்திரி பிரசார சபா மாநில செயலாளர் பூசாரிப்பட்டி மகாமேரு பீடம் சண்முகசுந்தர சுவாமிகள், கோவை கிருஷ்ணமூர்த்தி சுவாமிகள், பொள்ளாச்சி தங்கம் தா. சுவாமிகள் , கோவை கருமாரியம்மன் பீடம் செந்தில் சுவாமி, ஸ்ரீ சுந்தர்சனம் மடம் மயிலம்பட்டி ஸ்ரீமத் பராங்குச பரகால ஸ்ரீரங்க லம்பி ராமானுஜர் ஜீயர் சுவாமிகள் , டாக்டர் எல் .கே. ஜெயசூர்யா நாராயணன் சுவாமிகள்,அகில தாந்திரி பிரச்சார சபா மாநில தலைவர் பஞ்ச சக்தி தேவாலயம் கிருஷ்ணமூர்த்தி ,

    சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் , முன்னாள் அமைச்சர் தாமோதரன்,திரைப்பட இயக்குனர் பாரதி மோகன் , புளியம்பட்டி பாலுசாமி சாஸ்திரிகள்,சேலம் சுரேஷ் பாபு, நிலக்கிழார் பிரபு, பொள்ளாச்சி ராமசாமி ,பெப்சி பெட் விஜயகுமார்,தென் மாவட்ட கவுண்டர் சங்க மாநில தலைவர் முத்துப்பாண்டி , கர்நாடக மாநிலம் நரசிம்ம கவுடா சீரா தாலுகா ஜெகநாதன், திருப்பூர் மாநகராட்சி 59-வது வார்டு கவுன்சிலர் கோமதி வி. எஸ். ராதாகிருஷ்ணன், தி.மு.க. இல. கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஜோதி எம்.எல்.ஏ. மலர் தூவி மரியாதை செலுத்தினார்
    • பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

    செய்யாறு:

    செய்யாறு டவுன் ஆரணி கூட்டு ரோட்டில் திருவண்ணாமலை மாவட்டம் யாதவ கூட்டமைப்பு செய்யாறு தொகுதி சார்பில் முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் 265 வது குருபூஜை விழா நடைபெற்றது.

    சிறப்பு விருந்தினராக ஜோதி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அழகு முத்து கோன் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், நகர செயலாளர் வழக்கறிஞர் விஸ்வநாதன், வெம்பாக்கம் ஒன்றி குழு தலைவர் ராஜி, ஒன்றிய செயலாளர் திராவிட முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு எம்எல்ஏ ஜோதிஇனிப்புகள் வழங்கியும், அன்னதானமும் வழங்கினார்.

    • சுதந்திர போராட்ட தியாகி அழகு முத்துக்கோனின் 265-வது குருபூஜை விழா நடைபெற்றது
    • கட்சி நிர்வாகிகள் அழகு முத்துக்கோன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் சுதந்திர போராட்ட தியாகி அழகு முத்துக்கோனின் 265-வது குருபூஜை விழா திருப்பூர் பிச்சம்பாளையத்தில் நடைபெற்றது.

    இதில் மண்டல பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான சி.சண்முகவேலு, கழக அமைப்பு செயலாளரும், முன்னாள்எம்.எல்.ஏ. வுமான ரோகினி மா.ப.கிருஷ்ணகுமார், திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளாரும், முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அழகு முத்துக்கோன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள். விழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நெருப்பெரிச்சல் பகுதி பொறுப்பாளர் சுகம் வீர.கந்தசாமி மற்றும் கோகுல மணி செய்து இருந்தார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் கிங், மாவட்ட அவைத்தலைவர் பாலுசாமி, துணை செயலாளர் சூர்யா செந்தில், பொருளாளர் சேகர், மாவட்ட மகளிரணி செயலாளர் கலாவதி, மாவட்ட இளைஞர் அணி பொறுப்பாளர் வெங்கடேஷ், மாவட்ட அம்மா தொழிற்சங்க பேரவை தலைவர் பாலகிருஷ்ணன், காந்திநகர் பகுதி துணைச் செயலாளர் வேலுகோபி, வார்டு கழக செயலாளர்கள் நாகேந்திரகுமார், ஜெயகாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×