search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருஷ்ணஜெயந்தி"

    • குழந்தை வடிவில், இரண்டு கால்களையும் சற்றே மடக்கி நின்ற கோலத்தில்கிருஷ்ணர் காட்சி தருகிறார்.
    • காவல் தெய்வமான பூதத்தான், மரத்தாலான ஒரு தண்டத்தின் வடிவில் காட்சி தருகிறார்.

    குழந்தை வரம் வேண்டி வழிபடும் பக்தர்கள் கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோவிலை போன்று குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நகரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் குழந்தை ரூபத்தில் அருள்பாலிக்கும் கிருஷ்ணர் சிறப்பு வாய்ந்தவராக திகழ்கிறார்.

    இக்கோவிலின் மூலஸ்தானத்தில் கிருஷ்ணர் குழந்தை வடிவில், இரண்டு கால்களையும் சற்றே மடக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கிருஷ்ண ஜெயந்தியன்று நள்ளிரவில் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கும். அப்போது சுவாமி விசேஷ அலங்காரத்தில் தத்ரூபமாக குழந்தை போலவே காட்சியளிப்பார்.

    மறுநாள் உறியடி உற்சவம் நடக்கும். உற்சவர் ராஜகோபாலர் ருக்மிணி மற்றும் சத்யபாமாவுடன் காட்சி தருகிறார்.

    மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த போது, அவரது குழந்தை பருவத்தில் கிருஷ்ணர் என்றும், பசுக்களை மேய்க்கும் இளைஞனாக இருந்த போது ராஜகோபாலர் என்றும் அழைக்கப்பெற்றார்.

    இதன் அடிப்படையில் இங்கு மூலவராக கிருஷ்ணரையும், உற்சவராக ராஜ கோபாலரையும் வடித்துள்ளனர். மூலஸ்தானம் எதிரில் உள்ள கொடிமரத்தைச் சுற்றிலும், அஷ்டதிக் பாலகர்களின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

    முன்மண்டபத்தில் கருடாழ்வார் இருக்கிறார். நம்மாழ்வார், பெரியாழ்வார், விஸ்வக்சேனர் ஒரே சன்னதியில் காட்சி தருகின்றனர்.

    பிரகாரத்திலுள்ள காவல் தெய்வமான பூதத்தான், மரத்தாலான ஒரு தண்டத்தின் வடிவில் காட்சி தருகிறார்.பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் இருக்கும் பகுதி ஆதித்தவர்ம மகாராஜா ஆட்சி காலத்தில் அவரது எல்கைக்கு உட்பட்டு இருந்தது.

    குருவாயூரப்பனின் பக்தரான இவர், தனது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் குருவாயூரப்பனுக்கு கோவில் எழுப்ப ஆசைப்பட்டார். அவ்வேளையில் கிருஷ்ணர், கையில் வெண்ணெயுடன் குழந்தை கண்ணனாக அவனது கனவில் காட்சி தந்தார். குறிப்பிட்ட இடத்தில், தனக்கு கோவில் எழுப்பும்படி கூறினார்.

    அதன்படி கோவில் கட்டிய மன்னன், தான் கனவில் கண்ட வடிவத்திலான கிருஷ்ணர் சிலையை பிரதிஷ்டை செய்தான். சுவாமிக்கு நவநீத கிருஷ்ணர் (நவநீதம் என்றால் வெண்ணெய்) என திருநாமம் சூட்டினான்.

    இக்கோவிலில் தினமும் காலை 5.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். தினமும் அர்த்தஜாம பூஜையின்போது, குழந்தை கிருஷ்ணரை வெள்ளி தொட்டிலில் கிடத்தி, தாலாட்டு பாடி பூஜிக்கின்றனர்.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு கிருஷ்ணருக்கு வெண்ணெய் காப்பு செய்வித்து, பால்பாயாசம், உன்னியப்பம், பால், பழம், அரிசிப்பொரி, வெண்ணெய், அவல், சர்க்கரை படைக்கின்றனர். சித்திரை பிரம்மோற் சவத்தின் நான்காம் நாளில் கிருஷ்ணர் கையில் வெண்ணெய் பானையுடன், வெண்ணெய்த்தாழி உற்சவம் காண்கிறார்.

    இவ்விழாவின் ஏழாம் நாளில் இவர் இந்திர வாகனத்தில் எழுந்தருளும் வைபவம் விசேஷமாக நடக்கும். சித்ரா பவுர்ணமியன்று கிருஷ்ணர், இங்குள்ள பழையாற்றுக்கு சென்று ஆராட்டு வைபவம் காண்பார்.

    ஆடி கடைசி சனிக்கிழமையன்று இவருக்கு புஷ்ப அபிஷேகம் நடக்கிறது. அன்று மூலஸ்தானம் முழுவதும் மலர்களால் நிரப்பி, சுவாமியின் முகம் மட்டுமே தெரியும்படியாக அலங்கரிப்பர். இவ்வேளையில் சுவாமியை தரிசித்தால் மன நிம்மதி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    • ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு வழக்கமான வீட்டு வேலைகள் கூட சிக்கலானதாக தோன்றும்.
    • மருத்துவ சேவைகள் போன்ற விஷயங்களில் மிகுந்த அக்கறையும் முயற்சியும் எடுக்கப்படுகிறது.

    வடவள்ளி 

    கோவை தாளியூரில் அனன்யா ஷெல்டர்ஸ், அனன்யாவின் நானா நானி ஹோம்ஸ் மூலம் 50 வயதுக்கு மேற்பட்ட பணி ஓய்வு பெற்றவர்களுக்கான மன மகிழ்வையும், தன்னிறைவையும் தரும் வகையில் சிறந்த நவீன வசதிகளுடன் கூடிய அபிமானமான குடியிருப்பு திட்டங்களை வழங்கி வருகிறது.

    இது அன்றாட வாழ்க்கையின் மன அழுத்தங்களை போக்குகிறது, ஏனெனில் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு வழக்கமான வீட்டு வேலைகள் கூட சிக்கலானதாக தோன்றும். சிறு விஷயங்கள் கூட குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை மனதில் வைத்து, வீட்டு பராமரிப்பின் சுமையை குறைக்கக்கூடிய நம்பகமான குடியிருப்பு சேவைகள் வழங்கப்ப டுகின்றன.

    நகர்ப்புற மற்றும் கிராமப்புற தன்மைகள் இரண்டும் உள்ள இடங்களில் இந்த குடியிருப்பு திட்டங்கள் அமைந்துள்ளன. இங்கு வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற உணவு, உடற்பயிற்சி மற்றும் மருத்துவ சேவைகள் போன்ற விஷயங்களில் மிகுந்த அக்கறையும் முயற்சியும் எடுக்கப்படுகிறது. ஏடிஎம்கள், மருந்தகம், மருத்துவமனை/ஆய்வகங்கள் போன்ற அடிக்கடிச் செல்லும் வசதிகள் குடியி ருப்புக்குள் அமைக்கப்ப ட்டிருக்கின்றன, இதனால் குடியிருப்பாளர்கள் அவற்றைத் தேடி நீண்ட தூரம் செல்ல வேண்டியதில்லை. அனன்யாவின் நானா நானி ஹோம்ஸின் முக்கிய நோக்கம், செயல்பாடுகள் அற்று ஓய்வு இல்லமாக செயல்படுவதை விட, சுறுசுறுப்பான ஓய்வுக்கால வாழ்க்கையை வளர்ப்பதாகும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் விரும்பும் வகையில் பொழுதுபோக்கு நடவடிக்கைகள், நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன, இது அவர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் சிறந்த உள்ளத்தையும் வளர்ப்பது மட்டுமல்லாமல், சமூகத்தின் ஒட்டுமொத்த மகிழ்வையும் அதிகரிக்கும்.

    நானா நானியில், கிருஷ்ண ஜெயந்தி மிகுந்த வண்ணமய–மாகவும், சிறப்புக்களுடனும் கொண்டாடப்பட்டது. ஹோம்ஸ் வளாகத்தில் உள்ள ராதே கிருஷ்ணா கோவிலில் பல்வேறு சமூகத்தினர் பல நிகழ்ச்சி சளுடன் கிருஷ்ண ஜெ யந்தியை கொண்டாடினர். உறியடி திருவிழா அனைத்து வேடிக்கை மற்றும் மகிழ்ச்சியுடன் நடத்தப்பட்டது. மேலும் கோவிலில் விஸ்வரூப தரிசனம், சங்கல்பம், கலச பூஜை, விக்னேஷ்வர பூஜை நடந்தது. கோவிலின் வளாகத்தில் உள்ள கோவிலில் கோ பூஜை, ஸ்ரீ விஷ்ணு தர்முத்தர புராணோக்தம், ஸ்ரீ கிருஷ்ண சஹஸ்ரநாம ஹோமம், நவகலச திருமஞ்சனம், அலங்காரம் & விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், மகா தீபாராதனை ஆகியவையும் நடந்தன. இறுதியாக வளாகம் முழுவதும் ஸ்ரீ கிருஷ்ணரின் திருத்தேர் வீதி உலா நடைபெற்றது. அனன்யாவின் நானா நானிஷெல்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் அனைத்து குடியிருப்பாளர்களும், எம்டி யுவராஜ் மற்றும் ஜேஎம்டி, திருமதி உமா மகேஸ்வரி யுவராஜ் ஆகியோர் நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

    • கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி நாடு முழுவதும் கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
    • சிறுவர்கள் அதில் இருந்த வெண்ணையை போட்டி போட்டு எடுத்து ரசித்து ருசித்தனர்.

    கவுண்டம்பாளையம்

    கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி நாடு முழுவதும் கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூரை அடுத்த பன்னிமடை கிராமத்தில் உள்ள கிருஷ்ணசாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    அதிகாலை கணபதி ஹோமத்து டன் விழா தொட ங்கியது. அபிஷேக பூஜை, சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதையடுத்து மாலை நடைபெற்ற உரியடி நிகழ்ச்சியில் குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என அனைவரும் பங்கேற்றனர். உரியடிப்பவர்கள் மீது மஞ்சள் தண்ணீர் ஊற்றி உரியை அடிக்கவிடாமல் பார்த்துக்கொண்டனர்.

    வெண்ணை நிரப்பட்ட உரி பானையை அடித்து உடைத்த சிறுவர்கள் அதில் இருந்த வெண்ணையை போட்டி போட்டு எடுத்து ரசித்து ருசித்தனர். மேலும் உரிய அடித்த சிறுவர் மற்றும் பெண்களுக்கு பரிசுகள் விழா குழுவினர் சார்பாக வழங்கினர்.

    தொடர்ந்து 40 அடி உயரம் கொண்ட வழுக்கு மரம் தயார் செய்யப்பட்டு வழுக்கு மரம் ஏறும் போட்டிகள் நடைபெற்றது. எண்ணை, கடுகு, அரப்பு, கற்றாளை உள்ளிட்டவைகளைக் கொண்டு வழுக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட மரத்தில் சிறுவர்கள், இளை ஞர்கள் போட்டி போட்டு ஏறினர். இறுதியில் ஒரு இளைஞர் 40 அடி உயர வழுக்கு மரத்தில் ஏறி உச்சியில் கட்டப்பட்டிருந்த பரிசுப் பொருட்களை எடுத்தார். இதை சுற்று வட்டாரங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வமுடன் ரசித்தனர்.தொடர்ந்து அலங்கரிக்க ப்பட்ட வாகனத்தில் கிருஷ்ணர் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. வான வேடிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிருஷ்ணர் கோவில் இறைவழிபாடு விழாகுழுவினர் செய்திருந்தனர்.

    • மானாமதுரை சுந்தரவிநாயகர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.
    • குழந்தைகளுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம். மானாமதுரை சுந்தரபுரம் தெருவில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலில் கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாப்பட்டது. இதில் தவழும் கிருஷ்ணர் அலங்கரித்து வெண்ணெய் வைத்து வழிபாடு, பூஜை நடந்தது.

    அதைதொடர்ந்து சுந்தரவிநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சந்தனகாப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் அந்த பகுதியில் உள்ள சுமார் 150 குழந்தைகள் ராதை- கிருஷ்ணர் வேடங்களில் வந்து வழிபாடு செய்தனர்.

    ராதை-கிருஷ்ணர் வேடங்களில் கோவிலுக்கு வந்த குழந்தைகளுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பரிசு வழங்கப்பட்டது. இரவு கோவில் முன்பு கோலாட்டம் நடந்தது.

    இதேபோல் மானாமதுரை அருகே உள்ள பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி கோவில், ெரயில்வே காலனி, கொன்னக்குளம், புலிக்குளம், வன்னிக்குடி, தெ.புதுக்கோட்டை, வேம்பத்தூர், வேதியேரேந்தல், செய்களத்தூர், சிப்காட், மாங்குளம் ஆகிய கிராம பகுதிகளிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.

    • களிமண்ணில் தயாரான கிருஷ்ணர் சிலைகள் பலவித வர்ணம் தீட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
    • ரூ.50 முதல் ரூ.2000 வரையிலான விலையில் கண்கவர் கிருஷ்ணர் சிலைகள் ஏராளமாக விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.

    சென்னை:

    கிருஷ்ணஜெயந்தி விழாவையொட்டி சென்னையில் ஏராளமான கிருஷ்ணர் சிலைகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டு உள்ளது.

    கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை மறுநாள் (19- ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு இடங்களில் தயாரான பலவிதமான கிருஷ்ணர் சிலைகள் சென்னையில் விற்பனைக்கு குவிந்து வருகிறது.

    புரசைவாக்கம், பெரம்பூர், கொசப்பேட்டை, தி.நகர், திருவல்லிக்கேணி, வடபழனி, வண்ணாரப்பேட்டை, ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் சாலையோர பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    விதவிதமான வகையில் களிமண்ணால் செய்யப்பட்ட கிருஷ்ணர்- ராதை சிலைகள் குழந்தை வடிவிலான கிருஷ்ணர், வெண்ணெய் திருடி சாப்பிடும் கிருஷ்ணர், புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ணர் சிலைகள், உள்ளிட்ட பல்வேறு வர்ணம் தீட்டப்பட்ட கிருஷ்ணர் சிலைகள் கண்களை கவருகின்றன.

    ரூ.50 முதல் ரூ.2000 வரையிலான விலையில் கண்கவர் கிருஷ்ணர் சிலைகள் ஏராளமாக விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.

    1/2 அடி முதல் 2 அடி வரை களிமண்ணில் தயாரான கிருஷ்ணர் சிலைகள் பலவித வர்ணம் தீட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    இதுகுறித்து சிலை விற்பனையாளர் ஒருவர் கூறியதாவது:-

    கிருஷ்ணர் ஜெயந்தி விழாவுக்காக தமிழகம் முழுவதும் இருந்து தயாரான கண்கவர் வண்ண கிருஷ்ணர் சிலைகள் சென்னையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன.

    இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் தற்போது விற்பனை சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது.

    இந்த ஆண்டு கிருஷ்ணர் சிலைகள் விற்பனையை அதிகப்படுத்தி உள்ளோம். அதிக அளவில் கிருஷ்ணர் சிலைகள் விற்பனையாகி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×