search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவடி ஊர்வலம்"

    • திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் மாசி திருவிழா.
    • பாத யாத்திரையாக திருச்செந்தூருக்கு புறப்பட்டு செல்வது வழக்கம்.

    நாகர்கோவில்:

    தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் மாசி திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பாத யாத்திரையாக திருச்செந்தூருக்கு புறப்பட்டு செல்வது வழக்கம். அதன்படி நேற்று காலையில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூர் நோக்கி புறப்பட்டனர்.

    காவடி ஊர்வலம், புஷ்ப காவடி, பன்னீர் காவடி, எண்ணெய் காவடி, வேல் காவடி, பறக்கும் காவடி என விதவிதமான காவடிகளுடன் பக்தர்கள் பயபக்தியுடன் புறப்பட்டனர். இரணியல் சுற்று வட்டார பகுதி, மார்த்தாண்டம், ராஜாக்கமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து காவடி ஊர்வலம் புறப்பட்டன.

    அந்த வகையில் மணவாளக்குறிச்சி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து வேல்காவடி, பறக்கும் காவடி புறப்பட்டு மணவாளக்குறிச்சி சந்திப்பு, அம்மாண்டிவிளை, கணபதிபுரம், ராஜாக்கமங்கலம் வழியாக திருச்செந்தூர் கோவிலுக்கு புறப்பட்டு சென்றது.

    இதுபோல் வடக்கன் பாகம் தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து பறக்கும் வேல்காவடி மற்றும் புஷ்பக்காவடி மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள இந்து ஆலயங்கள் மற்றும் வீடுகளுக்கு சென்று பின்னர் திரும்பி கோவில் வந்தடைந்தது.

    தொடர்ந்து அன்னதானமும், மாலை 4 மணிக்கு காவடிகள் வடக்கன்பாகம் தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து புறப்பட்டு மணவாளக்குறிச்சி சந்திப்பு, அம்மாண்டிவிளை, வெள்ளமோடி, ராஜாக்கமங்கலம் வழியாக திருச்செந்தூர் நோக்கி புறப்பட்டது. மேலும் சேரமங்கலம் ஆழ்வார் சுவாமி கோவிலில் இருந்து பறக்கும் வேல்காவடி மற்றும் புஷ்பக்காவடிகள் சேரமங்கலம், படர்நிலம், பிள்ளையார்கோவில் மணவாளக்குறிச்சி வழியாக திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றது.

    குளச்சல் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் காவடிகள், வேல் காவடிகள், குளச்சல் அண்ணா சிலை பகுதிக்கு வந்து அங்கிருந்து திங்கள் சந்தை வழியாக திருச்செந்தூர் சென்றன.

    மேலும் குளச்சல் புளியமூட்டு விளைமுத்தாரம்மன் கோவிலில் இருந்து 6 பெரிய காவடிகளும், 6 சிறுவர் காவடிகளும், சிறு குழந்தைகள் முருகன் வேடம் அணிந்தபடியும் சென்றனர்.

    செக்காலத் தெரு முத்தாரம்மன் கோவிலில் இருந்து 6 அடி வேல் காவடி, காவடியும், கள்ளியடப்பு கோவிலில் இருந்து பறக்கும் காவடியும், நுழக்குடி சிவன் கோவில் இருந்து பறக்கும் காவடியும், மகாதேவர் கோவிலில் இருந்து பறக்கும் காவடியும் புறப்பட்டு சென்றன.

    • முருகருக்கு வெள்ளி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது
    • லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த ரத்தினகிரியில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் பிரசித்திபெற்ற பாலமுருகன் கோவில் உள்ளது.

    இந்த கோவி லில் நேற்று தை கிருத் திகையையொட்டி முருகனுக்கு சிறப்பு அபி ஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில், பாலமுருகனடிமை சுவாமிகள் கலந்து கொண்டு சிறப்பு பூஜை செய்தார். கிருத்திகை முன்னிட்டு வெள்ளிவேல் மற்றும் சேவல் கொடியுடன் வெள்ளி அங்கி அணிந்து சிறப்பு அலங்காரத் தில் வள்ளி, தெய் வானை சமேத முருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவில் திரளான பக்தர் கள் கலந்துகொண்டு அரோகரா பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பல்வேறு பகு திகளில் இருந்து பக் தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். அதைத்தொடர்ந்து அனைவருக்கும் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    அதேபோல் ரத்தின கிரி பாலமுருகன் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

    • காவடி ஊர்வலத்தில் பன்னீர், புஷ்பம், பால், வேல் மற்றும் சூரிய காவடி, பறக்கும் காவடி, மயில் காவடி, தொட்டில் காவடி உட்பட பல்வேறு காவடிகளை பல்வேறு கோவில்களிலிருந்து எடுத்து வருவார்கள்.
    • இந்த ஊர்வலத்தில் முக்கிய நிகழ்ச்சியாக 1 அடி முதல் 12 அடி வரை உள்ள வேல் காவடிகளை பக்தர்கள் அலகில் குத்தி செல்வது பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைக்கும்.

    கன்னியாகுமரி :

    திருவிதாங்கூர் மகாராஜா காலத்தில் நீர் ஆதாரம் பெற்று மக்கள் செழிப்புடன் வாழவும், விவசாயம் செழித்தோங்க பொதுப்பணித்துறை சார்பிலும், சட்ட ஒழுங்கை நிலைநாட்டி குற்றங்கள் குறைந்து மக்கள் அமைதியுடன் வாழ காவல்துறை சார்பிலும் வேளிமலை குமாரகோவில் முருகன் கோவிலுக்கு ஆண்டுதோறும் காவடி ஊர்வலம் செல்வது வழக்கம். இந்த ஆண்டு காவடி ஊர்வலம் நாளை (9-ந்தேதி) கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பக்தர்கள் கடந்த 5-ந்தேதி முதல் விரதம் இருக்க தொடங்கினர். காவடி ஊர்வலத்தில் பன்னீர், புஷ்பம், பால், வேல் மற்றும் சூரிய காவடி, பறக்கும் காவடி, மயில் காவடி, தொட்டில் காவடி உட்பட பல்வேறு காவடிகளை குமரி மாவட்டத்திலுள்ள பல்வேறு ஊர்களில் உள்ள கோவில்களிலிருந்து எடுத்து வருவார்கள்.

    பொதுப்பணி மற்றும் காவல் துறையினர், பொதுமக்கள் சார்பில் பலவித காவடிகளுடன் யானை பவனி உடன் ஊர்வலமாக செல்வார்கள். காவடி பவனியானது இரணியல், கண்ணாட்டுவிளை, பாரதி நகர், தென்கரை, பத்மனாபபுரம், வழிக்கலம்பாடு, கைதோடு, அரசமூடு, குமாரகோவில், மணலி, சரல்விளை,முட்டைக்காடு, கொல்லன்விளை உட்பட திரளான ஊர்களில் இருந்து இந்த காவடி ஊர்வலம் குமாரகோவிலுக்கு செல்லும்.

    இந்த ஊர்வலத்தில் முக்கிய நிகழ்ச்சியாக 1 அடி முதல் 12 அடி வரை உள்ள வேல் காவடிகளை பக்தர்கள் அலகில் குத்தி செல்வது பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைக்கும்.

    நாளை அதிகாலை 4 மணிக்கு வேளிமலை முருகன் கோவிலில் நடை திறக்கப்படும். தொடர்ந்து அபிஷேகம் சிறப்பு தீபாராதனை, உஷபூஜை மற்றும் காவடியுடன் பக்தர்கள் கொண்டு வரும் பஞ்சாமிர்தம், நெய், தேன் களபம், பன்னீர், இளநீர் இவையுடன் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடக்கும். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

    இந்நிலையில் புலியூர்குறிச்சி தோப்பு ஊர்மக்கள், விவசாயிகள், இணைந்து காவடி பக்தர்களை பரவசபடுத்தும் விதத்தில் சாலையின் இரு பக்கங்களிலும் ஏத்தன், செவ்வாழை, மட்டி, சிங்கன், இரசகதளி, பூங்கதளி, பேயன் உள்ளிட்ட பல்வேறு வகைகள் அடங்கிய வாழை குலைகளை தோரணங்களாக கட்டியுள்ளனர். இந்த வாழை குலை தோரணங்கள் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது.

    ×