search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தோரணம்"

    • காவடி ஊர்வலத்தில் பன்னீர், புஷ்பம், பால், வேல் மற்றும் சூரிய காவடி, பறக்கும் காவடி, மயில் காவடி, தொட்டில் காவடி உட்பட பல்வேறு காவடிகளை பல்வேறு கோவில்களிலிருந்து எடுத்து வருவார்கள்.
    • இந்த ஊர்வலத்தில் முக்கிய நிகழ்ச்சியாக 1 அடி முதல் 12 அடி வரை உள்ள வேல் காவடிகளை பக்தர்கள் அலகில் குத்தி செல்வது பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைக்கும்.

    கன்னியாகுமரி :

    திருவிதாங்கூர் மகாராஜா காலத்தில் நீர் ஆதாரம் பெற்று மக்கள் செழிப்புடன் வாழவும், விவசாயம் செழித்தோங்க பொதுப்பணித்துறை சார்பிலும், சட்ட ஒழுங்கை நிலைநாட்டி குற்றங்கள் குறைந்து மக்கள் அமைதியுடன் வாழ காவல்துறை சார்பிலும் வேளிமலை குமாரகோவில் முருகன் கோவிலுக்கு ஆண்டுதோறும் காவடி ஊர்வலம் செல்வது வழக்கம். இந்த ஆண்டு காவடி ஊர்வலம் நாளை (9-ந்தேதி) கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பக்தர்கள் கடந்த 5-ந்தேதி முதல் விரதம் இருக்க தொடங்கினர். காவடி ஊர்வலத்தில் பன்னீர், புஷ்பம், பால், வேல் மற்றும் சூரிய காவடி, பறக்கும் காவடி, மயில் காவடி, தொட்டில் காவடி உட்பட பல்வேறு காவடிகளை குமரி மாவட்டத்திலுள்ள பல்வேறு ஊர்களில் உள்ள கோவில்களிலிருந்து எடுத்து வருவார்கள்.

    பொதுப்பணி மற்றும் காவல் துறையினர், பொதுமக்கள் சார்பில் பலவித காவடிகளுடன் யானை பவனி உடன் ஊர்வலமாக செல்வார்கள். காவடி பவனியானது இரணியல், கண்ணாட்டுவிளை, பாரதி நகர், தென்கரை, பத்மனாபபுரம், வழிக்கலம்பாடு, கைதோடு, அரசமூடு, குமாரகோவில், மணலி, சரல்விளை,முட்டைக்காடு, கொல்லன்விளை உட்பட திரளான ஊர்களில் இருந்து இந்த காவடி ஊர்வலம் குமாரகோவிலுக்கு செல்லும்.

    இந்த ஊர்வலத்தில் முக்கிய நிகழ்ச்சியாக 1 அடி முதல் 12 அடி வரை உள்ள வேல் காவடிகளை பக்தர்கள் அலகில் குத்தி செல்வது பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைக்கும்.

    நாளை அதிகாலை 4 மணிக்கு வேளிமலை முருகன் கோவிலில் நடை திறக்கப்படும். தொடர்ந்து அபிஷேகம் சிறப்பு தீபாராதனை, உஷபூஜை மற்றும் காவடியுடன் பக்தர்கள் கொண்டு வரும் பஞ்சாமிர்தம், நெய், தேன் களபம், பன்னீர், இளநீர் இவையுடன் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடக்கும். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

    இந்நிலையில் புலியூர்குறிச்சி தோப்பு ஊர்மக்கள், விவசாயிகள், இணைந்து காவடி பக்தர்களை பரவசபடுத்தும் விதத்தில் சாலையின் இரு பக்கங்களிலும் ஏத்தன், செவ்வாழை, மட்டி, சிங்கன், இரசகதளி, பூங்கதளி, பேயன் உள்ளிட்ட பல்வேறு வகைகள் அடங்கிய வாழை குலைகளை தோரணங்களாக கட்டியுள்ளனர். இந்த வாழை குலை தோரணங்கள் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது.

    ×