search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலை உணவு"

    • காரைக்குடி நகராட்சி பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
    • முன்னாள் நகர இளைஞரணி அமைப்பாளர் காரை சுரேசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி

    காரைக்குடி நகராட்சி பகுதியில் உள்ள நல்லையன் ஆசாரி பள்ளியில் காலை உணவு திட்டம் தொடக்க விழா நடந்தது. நகர் மன்றதலைவர் முத்துதுரை தலைமை தாங்கி காரைக்குடி நகராட்சி ஆரம்பப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி முன்னிலை வகித்தார்.

    நகராட்சி ஆணையாளர் லட்சுமணன், பொறியாளர் கோவிந்தராஜ், நகர்மன்ற துணை தலைவர் குணசேகரன், கவுன்சிலர்கள் கார்த்திகேயன், கண்ணன், நாகராஜன், மைக்கேல், தெய்வானை, கலா, ஹேமலதா, மங்கையர்கரசி, சாந்தி, சித்திக், மனோகரன், மெய்யர், நாச்சம்மை, தனம், ராணி, ராதா, அஞ்சலிதேவி, ரத்தினம், நகர அவை தலைவர் சுப்பையா, முன்னாள் நகர இளைஞரணி அமைப்பாளர் காரை சுரேசு உள்பட பலர் கலந்து கொண்டனர். கவுன்சிலர் கனகவள்ளி நன்றி கூறினார்.

    • சிங்கம்புணரி அருகே தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் ெபரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
    • அதற்கு ஒரு மாணவி எழுந்து முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் முசுண்டப்பட்டி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் ெதாடக்கவிழா நடந்தது.

    இதில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு கிச்சடி, கேசரி பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து அமைச்சர் பெரியகருப்பன்,கலெக்டர் மதுசூதன்ரெட்டி, அரசு முதன்மை செயலர் அமுதா ஆகியோர் மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டதுடன் மாணவர்களுடன் உரையாடினர்.

    அரசு முதன்மை செயலர் அமுதா, உணவு எப்படி இருந்தது என்று கேட்டார். அதற்கு ஒரு மாணவி எழுந்து முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். மாணவி பிரதீஷா பேசுகையில், காலை உணவை சாப்பிட்டால் தான் நன்றாக படிக்க முடியும். நான் மருத்துவராகி உடம்பு

    சரி இல்லாதவர்களை சரிசெய்வேன் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் சிவராமன், மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் வானதி, எஸ்.புதூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஊராட்சி மன்ற தலைவர் அடைக்கலசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் நேற்று இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு.

    தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் வரலாற்று சிறப்புமிக்க திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. மதுரை கீழ அண்ணாதோப்பில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர், அந்த பள்ளியில் உள்ள குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார்.

    இந்த நிலையில், சென்னை உள்ளிட அனைத்து மாவட்டங்களிலும் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள  மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தினை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது.

    • 241.100 கிலோ உணவு பரிமாறப்பட்டது.
    • மேயர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

    வேலூர்:

    தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டம் நாளை மதுரையில் தொடங்கி வைக்கப்படுகிறது. இதற்காக அனைத்து பகுதிகளிலும் முன்னேற்பாடு பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.

    வேலூர் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 48 அரசு தொடக்கப் பள்ளிகளில் 3,469 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த மாணவிகளுக்கு காலை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பள்ளி குழந்தைகளுக்கு உணவுகள் சமைப்பதற்காக காட்பாடி காந்தி நகர் சத்துவாச்சாரி கஸ்பா ஆகிய இடங்களில் ஸ்மார்ட் சமையலறைகள் கட்டப்பட்டு வருகின்றன.

    தற்காலிக இடங்களில் தற்போது உணவு சமைத்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு எப்படி உணவு கொண்டு செல்வது என்பது குறித்து வாகனங்கள் இயக்கி நேற்று பரிசோதிக்கப்பட்டது.

    இன்று காலை வேலூர் மாநகராட்சி 3-வது மண்டலத்தில் உள்ள 19 தொடக்கப் பள்ளிகளுக்கு காலை உணவு வழங்கி சோதனை செய்யப்பட்டது. கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சமையல் கூடத்தில் இருந்து வெண்பொங்கல் தயாரிக்கப்பட்டு 3-வது மண்டலத்தில் உள்ள 19 தொடக்கப் பள்ளிகளுக்கு வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. இந்த பள்ளிகளில் படிக்கும் 1541 பள்ளி குழந்தைகளுக்கு 241.100 கிலோ உணவு பரிமாறப்பட்டது.

    வேலூர் மாசிலாமணி நடுநிலைப் பள்ளியில் காலை உணவு வழங்கும் சோதனையை மேயர் சுஜாதா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கமிஷனர் அசோக்குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர். முதல்அமைச்சர் தொடங்கி வைத்த பிறகு மாநகராட்சியில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்தனர்.

    • நாளை சோதனை முறையாக வழங்கப்படுகிறது
    • மாநகராட்சி அதிகாரிகள் அறிவிப்பு

    வேலூர்:

    தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படு என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இந்த திட்டம் வருகிற 16-ந் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது. இதற்காக அனைத்து பகுதிகளிலும் முன்னேற்பாடு பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.

    வேலூர் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 48 அரசு தொடக்கப் பள்ளிகளில் 3,469 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான சமையலறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. நாளை மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் சோதனைக்கு கொண்டுவரப்படுகிறது.

    முதல்-அமைச்சர் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு தினந்தோறும் இந்த பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • காலை உணவு திட்டத்தால் 63 அரசு பள்ளி மாணவர்கள் பயன் பெறுவர்
    • காலை உணவு வழங்க அதிகாரிகள் தீவிர ஏற்பாடு

    ஊட்டி:

    தி.மு.க. தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு நிறைவையொட்டி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், அரசுப் பள்ளி மாணவர் களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளி யிடப்பட்டது.

    இதில் முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், இந்தத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வருகிற 15-ம் தேதி முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட வுள்ளது.

    இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 63 பள்ளிகளில் பயிலும் 3415 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் அம்ரித்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை குழந்தை களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்கும் நோக்கத் திலும், ஊட்டச்சத்து நிலை உயர்த்தவும், ரத்தசோகை குறைபாட்டை நீக்கவும், பள்ளிகளில் குழந்தைகளின் வருகையை அதிகரிக்கவும், பணிக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைக்கும் நோக்கிலும், 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்க ப்படும்.அதனடிப்படையில், முதற்கட்டமாக நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 63 பள்ளிகளில் பயிலும் 3415 மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. காலை உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் இயல்பான நிறம், மணம் உடையதாகவும், வேறு வெளிப்பொருட்கள் கலக்காமலும், சுத்தமானதாகவும் இருக்க வேண்டும். உணவு சமைக்க பயன்படுத்தப்படும் சமையல் பொருட்கள் தரமானதாகவும் , சுத்தமா னதாகவும் இருக்க வேண்டும். காய்கறிகள் தரத்தை உறுதி செய்வதுடன் அவற்றை சமைப்பதற்கு முன் தண்ணீரில் நன்கு கழுவி பயன் படுத்த வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் சுகாதார மாகவும், தரமானதாகவும் அட்ட வணைப்படி உணவு தயாரித்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.தினசரி உணவு இருப்புகளின் பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும் என சுய உதவிக்குழுஉறுப்பினர் களுக்கு அறிவுறு த்தப்பட்டுள்ளது.உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் அவ்வப்போது பள்ளிகளை ஆய்வு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு உணவு வழங்கும் முன்பு பள்ளி மேலாண்மை குழு ஒவ்வொரு நாளும் உணவின் தரத்தை உறுதி செய்யும் வகையில் உணவை பரிசோதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×