search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    1,541 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கி சோதனை
    X

    மாசிலாமணி நடுநிலைப் பள்ளியில் மேயர் சுஜாதா குழந்தைகளுக்கு காலை உணவு ஊட்டி மகிழ்ந்தார்.

    1,541 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கி சோதனை

    • 241.100 கிலோ உணவு பரிமாறப்பட்டது.
    • மேயர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

    வேலூர்:

    தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டம் நாளை மதுரையில் தொடங்கி வைக்கப்படுகிறது. இதற்காக அனைத்து பகுதிகளிலும் முன்னேற்பாடு பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.

    வேலூர் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 48 அரசு தொடக்கப் பள்ளிகளில் 3,469 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த மாணவிகளுக்கு காலை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பள்ளி குழந்தைகளுக்கு உணவுகள் சமைப்பதற்காக காட்பாடி காந்தி நகர் சத்துவாச்சாரி கஸ்பா ஆகிய இடங்களில் ஸ்மார்ட் சமையலறைகள் கட்டப்பட்டு வருகின்றன.

    தற்காலிக இடங்களில் தற்போது உணவு சமைத்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு எப்படி உணவு கொண்டு செல்வது என்பது குறித்து வாகனங்கள் இயக்கி நேற்று பரிசோதிக்கப்பட்டது.

    இன்று காலை வேலூர் மாநகராட்சி 3-வது மண்டலத்தில் உள்ள 19 தொடக்கப் பள்ளிகளுக்கு காலை உணவு வழங்கி சோதனை செய்யப்பட்டது. கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சமையல் கூடத்தில் இருந்து வெண்பொங்கல் தயாரிக்கப்பட்டு 3-வது மண்டலத்தில் உள்ள 19 தொடக்கப் பள்ளிகளுக்கு வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. இந்த பள்ளிகளில் படிக்கும் 1541 பள்ளி குழந்தைகளுக்கு 241.100 கிலோ உணவு பரிமாறப்பட்டது.

    வேலூர் மாசிலாமணி நடுநிலைப் பள்ளியில் காலை உணவு வழங்கும் சோதனையை மேயர் சுஜாதா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கமிஷனர் அசோக்குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர். முதல்அமைச்சர் தொடங்கி வைத்த பிறகு மாநகராட்சியில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்தனர்.

    Next Story
    ×