search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காமன்வெல்த் விளையாட்டு"

    • 55 கிலோ எடைப்பிரிபு பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் சங்கெத் சர்கார் வெள்ளிப்பதக்கம் வென்றார்
    • கடந்த சீசனில் இந்திய பளுதூக்கும் வீரர்கள் 6 தங்கம் உட்பட 9 பதக்கங்களை வென்றனர்.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. 55 கிலோ எடைப்பிரிவினருக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் சங்கெத் சர்கார் வெள்ளிப்பதக்கம் வென்றார். இவர் இறுதிச் சுற்றில் மொத்தம் 248 கிலோ (113கி +135கி ) எடை தூக்கி 2ம் இடம்பிடித்தார்.

    மலேசியாவின் முகமது அனிக் 249 கிலோ எடை தூக்கி தங்கப் பதக்கமும், இலங்கையின் திலங்கா இசுரு குமார 225 கிலோ எடை தூக்கி வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

    கடந்த சீசனில் இந்திய பளுதூக்கும் வீரர்கள் 6 தங்கம் உட்பட 9 பதக்கங்களை வென்றனர். இந்த ஆண்டும் ஆதிக்கம் செலுத்துவார்கள என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இறுதி சுற்றுக்கு ஸ்ரீஹரி நடராஜ் தகுதி பெற்றதன் மூலம் இந்தியா பதக்கம் வெல்ல வாய்ப்பு.
    • டோக்கியோ ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பங்கேற்று 27வது இடம் பிடித்தார்.

    பர்மிங்காம்:

    72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகின்றன

    ஆண்களுக்கான100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் நீச்சல் போட்டி அரை இறுதிச் சுற்றில் இந்திய இளம் வீரர் ஸ்ரீகரி நடராஜ் 54:55 வினாடிகளில் கடந்து 4 இடம் பிடித்தார். இதன் மூலம் அவர் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். மேலும் அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

    அரையிறுதி சுற்றில் தென் ஆப்பிரிக்கா வீரர் பீட்டர் கோட்ஸே, 53.67 வினாடிகளில் பயண தூரத்தை கடந்து, முதலிடம் பிடித்தார்.

    கடந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் ஏ ஹீட் பிரிவு நீச்சல் பிரிவில் பங்கேற்ற முதல் இந்திய வீரரான நடராஜ், 100மீ பேக் ஸ்ட்ரோக் போட்டியில் 54:31 வினாடிகளில் இலக்கை கடந்து 27வது இடம் பிடித்திருந்தார்.

    முன்னதாக, காமன்வெல்த் ஆண்களுக்கான 400மீ ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில், இந்திய வீரர் குஷாக்ரா ராவத் 3:57.45 வினாடிகளில் இலக்கை 14வது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் அவர் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பு பறிபோனது.

    • குரூப் 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, பார்படாஸ், பாகிஸ்தான், இந்தியா இடம் பெற்றுள்ளது.
    • இந்திய மகளிர் அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் ஜூலை 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் மகளிருக்கான டி20 கிரிக்கெட் போட்டிகள் முதல்முறையாக சேர்க்கப்பட்டுள்ளது.

    8 அணிகள் பங்கேற்கும் மகளிர் கிரிக்கெட் போட்டியில் குரூப் 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, பார்படாஸ், பாகிஸ்தான், இந்தியா ஆகிய அணிகளும் குரூப் 'பி' பிரிவில் இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்த நிலையில், காமன்வெல்த் போட்டிக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாகவும் ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்திய மகளிர் அணியில் ஷஃபாலி வர்மா, எஸ் மேக்னா, தனியா சப்னா பாட்டியா (விகீ), யாஸ்திகா பாட்டியா (விகீ), தீப்தி ஷர்மா, ராஜேஸ்வரி கயக்வாட், பூஜா வஸ்த்ரகர், மேக்னா சிங், ரேணுகா தாக்கூர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதா யாதவ், ஹர்லீன் தியோல், சினே ராணா. காத்திருப்பு: சிம்ரன் தில் பகதூர், ரிச்சா கோஷ், பூனம் யாதவ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

    • காயத்தில் இருந்து முழுமையாக மீளாத முன்னாள் கேப்டன் ராணி ராம்பால் பெயர் அணி தேர்வில் மீண்டும் பரிசீலிக்கப்படவில்லை.
    • கோல்கீப்பர் பிச்சுதேவி கரிபாம், நடுகள வீராங்கனை சோனிகா ஆகியோர் மட்டும் நீக்கப்பட்டுள்ளனர்.

    புதுடெல்லி:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் ஜூலை 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பெண்களுக்கான ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ளது.

    இங்கிலாந்து, கனடா, வேல்ஸ், கானா ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் ஜூலை 29-ந் தேதி கானாவை சந்திக்கிறது. காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான 18 பேர் கொண்ட இந்திய பெண்கள் ஹாக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பிடித்துள்ள பெரும்பாலானவர்கள் அப்படியே தொடருகிறார்கள்.

    கோல்கீப்பர் பிச்சுதேவி கரிபாம், நடுகள வீராங்கனை சோனிகா ஆகியோர் மட்டும் நீக்கப்பட்டுள்ளனர். கோல்கீப்பர் சவிதா கேப்டனாகவும், பின்கள வீராங்கனை தீப் கிரேஸ் எக்கா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். காயத்தில் இருந்து முழுமையாக மீளாத முன்னாள் கேப்டன் ராணி ராம்பால் பெயர் அணி தேர்வில் மீண்டும் பரிசீலிக்கப்படவில்லை.

    இந்திய அணி வருமாறு:-

    சவிதா (கேப்டன்), ரஜனி எதிமர்பு (கோல்கீப்பர்கள்), தீப் கிரேஸ் எக்கா, குர்ஜித் கவுர், நிக்கி பிரதான், உதிதா (பின்களம்), நிஷா, சுஷிலா சானு, மோனிகா, நேஹா, ஜோதி, நவ்ஜோத் கவுர், சலிமா டெடி (நடுகளம்), வந்தனா கட்டாரியா, லாம்ரெம்சியாமி, நவ்னீத் கவுர், ஷர்மிளா தேவி, சங்கீதா குமாரி (முன்களம்).

    ×