search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காமன்வெல்த் விளையாட்டு போட்டி"

    • காமன்வெல்த் மகளிர் டி20 போட்டியின் அரை இறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றன.
    • முதல் அரை இறுதியில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து மோதுகின்றன.

    காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் 20 ஓவர் போட்டி யில் 8 அணிகள் பங்கேற்றன. இதில் அரை இறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றன. நேற்றைய கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தை இங்கிலாந்து வீழ்த்தியது.

    இதையடுத்து அரை இறுதியில் யார்-யாருடன் மோதுவது என்பது உறுதியானது. முதல் அரை இறுதியில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து மோதுகின்றன. 2-வது அரை இறுதியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இரு ஆட்டங்களும் நாளை நடக்கிறது.

    • ஷிவதாபா, சுமித் குண்டு, ஆசிஷ் குமார் ஆகியோர் ஏற்கனவே கால் இறுதியில் தோற்று வெளியேறி இருந்தனர்.
    • ஜப்பான் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற லவ்லினா கால் இறுதியில் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார்.

    காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 3 பதக்கம் உறுதியானது.

    குத்து சண்டையில் இந்தியா சார்பில் 5 வீரர்கள், 5 வீராங்கனைகள் ஆக மொத்தம் 10 பேர் பங்கேற்று உள்ளனர். இதில் ஷிவதாபா, சுமித் குண்டு, ஆசிஷ் குமார் ஆகியோர் ஏற்கனவே கால் இறுதியில் தோற்று வெளியேறி இருந்தனர்.

    நேற்று நடந்த கால் இறுதியில் 3 இந்தியர்கள் வெற்றி பெற்றனர். இதனால் குத்து சண்டையில் 3 பதக்கம் உறுதியானது. பெண்களுக்கான 50 கிலோ பிரிவில் நிஹாத் ஜரீன் கால் இறுதியில் வேல்ஸ் நாட்டு வீராங்கனை ஹெலன் ஜோன்சை எதிர் கொண்டார்.

    இதில் ஜரீன் 5-0 என்ற கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அரை இறுதியில் அவர் இங்கிலாந்தை சேர்ந்த ஸ்டப்லேயை 6-ந்தேதி சந்திக்கிறார்.

    இதே போல 48 கிலோ பிரிவில் வீராங்கனை நித்து, 57 கிலோ பிரிவில் வீரர் ஹூசைன் ஆகியோரும் கால் இறுதியில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றனர்.

    ஜப்பான் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற லவ்லினா கால் இறுதியில் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். 70 கிலோ பிரிவில் பங்கேற்ற அவர் கால் இறுதியில் 2-3 என்ற கணக்கில் வேல்ஸ் நாட்டு வீராங்கனை ரோசியிடம் தோற்று அரை இறுதி வாய்ப்பை இழந்தார்.

    • இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் கனடா அணியை வீழ்த்தியது.
    • இதனால் இந்திய அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

    பர்மிங்காம்:

    72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற மகளிர் ஹாக்கி போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா - கனடா அணிகள் மோதின.

    இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டி என்பதால் போட்டி மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டது. விறுவிறுப்பான இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் கனடா அணியை வீழ்த்தியது. இதனால் இந்திய அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

    • இந்திய நேரப்படி மாலை 6:30 மணிக்கு இந்த போட்டி நடைபெற உள்ளது.
    • இந்தியாவும் கனடாவும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.

    பர்மிங்ஹாம்:

    72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் ஆண்களுக்கான ஹாக்கி பிரிவில் இந்திய அணி தனது முதல் போட்டியில் கானாவை சந்தித்தது. இந்த போட்டியில் இந்திய அணி 11-0 என்ற கணக்கில் கானாவை அபாரமாக வீழ்த்தி வெற்றி பெற்றது.

    இதனைதொடர்ந்து, இந்திய அணி தனது அடுத்த ஆட்டதில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் 4-4 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. இந்திய அணி ஒரு வெற்றி மற்றும் ஒரு டிரா என நான்கு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் இங்கிலாந்து ஏழு புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், இந்திய அணி இன்றைய போட்டியில் கனடாவை எதிர்கொள்ள உள்ளது.

    இந்திய நேரப்படி மாலை 6:30 மணிக்கு இந்த போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறும் நிலையில் அரையிறுதிக்கு முன்னேறும். இந்தியாவும் கனடாவும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், இந்தியா அதிகபட்சமாக 26 முறை வெற்றி பெற்றுள்ளது.

    கனடா நான்கு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகள் டிராவில் முடிந்தது. இந்த போட்டிக்கு பிறகு இந்திய அணி வேல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. ஆண்களின் பிரிவின் இரு அரையிறுதிப் போட்டிகள் ஆகஸ்ட் 6-ஆம் தேதியும், இறுதிப் போட்டி வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது.

    • இந்திய அணி 13 பதக்கம் பெற்று தொடர்ந்து 6-வது இடத்தில் உள்ளது.
    • நேற்றைய 5-வது நாளில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம் உள்பட 4 பதக்கம் கிடைத்தது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது.

    4-வது நாள் போட்டி முடிவில் இந்தியா 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் ஆக மொத்தம் 9 பதக்கம் பெற்று இருந்தது.

    நேற்றைய 5-வது நாளில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம் உள்பட 4 பதக்கம் கிடைத்தது.

    லான்பவுல்ஸ் பந்தயத்தில் ரூபா ராணி , லவ்லி சவுபே, நயன்மோனி , பிங்கி சிங் ஆகியோரை கொண்ட இந்திய பெண்கள் அணி தங்கம் வென்றது. டேபிள் டென்னிஸ் ஆண்கள் அணிகள் பிரிவில் சரத்கமல், ஜி.சத்யன் , ஹர்மித் தேசாய், சனில்ஷெட்டி ஆகியோர் அடங்கிய அணி தங்கப்பதக்கம் பெற்றது.

    பளுதூக்கும் போட்டியில் இந்திய வீரர் விகாஸ் தாக்கூர் ( 96 கிலோ ) வெள்ளி பதக்கம் வென்றார்.

    பேட்மின்டன் போட்டியில் பி.வி‌.சிந்து, காயத்ரி கோபிசந்த், அஸ்வினி பொன்னப்பா , திரிஷா ஜோலி , ஆகர்ஷி காஷ்யப், ஸ்ரீகாந்த் கிடாம்பி , சாத்விக் சாய்ராஜ் ரன்கிர் ரெட்டி , சுமித் ரெட்டி, லக்‌ஷயா சென் , சிராக் ஷெட்டி ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளிப்பதக்கம் பெற்றது.

    நேற்று இரவு நடந்த இறுதிப்போட்டியில் 1-3 என்ற கணக்கில் மலேசியாவிடம் தோற்றது.

    முதலில் நடந்த இரட்டையர் ஆட்டத்தில் ரன்கிர் ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி 18-21, 15-21 என்ற கணக்கில் தோற்றனர். 2-வது ஆட்டத்தில் பி.வி.சிந்து 22-20, 21-17 என்ற கணக்கில் யாங்கை வீழ்த்தினார்.

    இதனால் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டது. அதை தொடர்ந்து ஸ்ரீகாந்த் கிடாம்பி 19-21, 21-6, 16-21 என்ற கணக்கில் தோற்றார். இதே போல திரிஷா ஜோலி-காயத்ரி ஜோடியும் 18-21, 17-21 என்ற கணக்கில் தோற்றனர்.

    வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய பேட்மின்டன் கலப்பு அணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    ஜனாதிபதி தனது டுவிட்டர் பக்கத்தில் "காமன் வெல்த்தில் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய கலப்பு அணிக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். திறமை, ஒருங்கிணைந்த செயல்பாடு, போராடும் குணம் வியக்கத்தக்க வகையில் இருந்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.

    பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் "இந்தியாவில் அதிகம் போற்றப்படும் விளையாட்டுகளில் பேட்மின்டனும் ஒன்றாகும். காமன்வெல்த்தில் வெள்ளிப்பதக்கம் வென்றதன் மூலம் மேலும் பிரபலம் அடையும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்திய அணி இதுவரை 5 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் ஆக மொத்தம் 13 பதக்கம் பெற்று தொடர்ந்து 6-வது இடத்தில் உள்ளது. 

    • இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டியில் இந்திய அணி சிங்கப்பூரை சந்திக்கிறது.
    • பெண்கள் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி இன்று மாலை இங்கிலாந்துடன் மோதுகிறது.

    காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பேட்மின்டன், டேபிள் டென்னிசில் இந்தியா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இதன் மூலம் வெள்ளிப் பதக்கம் உறுதியானது.

    பேட்மின்டன் கலப்பு அணிகள் பிரிவு அரை இறுதியில் இந்திய அணி சிங்கப்பூரை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

    சாத்விக் சாய்ராஜ் ரெட்டி சிராக் ஷெட்டி ஜோடி 21-11, 21-12, என்ற கணக்கிலும், பி.வி.சிந்து 21-11, 21-12 என்ற கணக்கிலும், லக்சியா சென் 21-18, 21-15 என்ற கணக்கிலும் சிங்கப்பூர் வீரர், வீராங்கனைகளை தோற்கடித்தார். இந்திய அணி இன்று இரவு 10 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் மலேசியாவை எதிர்கொள்கிறது.

    டேபிள் டென்னிஸ் ஆண்கள் அணிகள் பிரிவில் இந்தியா அரை இறுதியில் நைஜீரியாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 3-0 என்ற கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி சிங்கப்பூரை சந்திக்கிறது.

    இந்திய ஹாக்கி அணி தொடக்க ஆட்டத்தில் கனடாவை 11-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இருந்தது. 2-வது போட்டியில் இங்கிலாந்தை நேற்று எதிர் கொண்டது. இந்த ஆட்டம் 4-4 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. இந்திய அணி 3-வது போட்டியில் கனடாவை நாளை சந்திக்கிறது.

    பெண்கள் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி இன்று மாலை இங்கிலாந்துடன் மோதுகிறது. முதல் 2 ஆட்டத்திலும் இந்தியா வெற்றிபெற்று இருந்தது. இதனால் ஹாட்ரிக் வெற்றி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
    • கலப்பு பேட்மிண்டன் அரை இறுதியில் சிங்கப்பூரை வீழ்த்திய இந்திய அணி இறுதிப்போட்டியில் மலேசியாவை எதிர்கொள்கிறது.

    பர்மிங்ஹாம்:

    72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 3 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 8 பதக்கங்களை வென்று 6-வது இடத்தில் நீடிக்கிறது.

    இந்நிலையில் 4-வது நாள் நடந்த கலப்பு பேட்மிண்டன் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி சிங்கப்பூரை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இறுதிப்போட்டியில் இந்திய அணி மலேசியாவை எதிர் கொள்கிறது. இந்திய அணி இறுதிப்போட்டிகு முன்னேறியதால் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகி உள்ளது.

    • நீச்சல், சைக்கிளிங், பளு தூக்குதல், ஸ்குவாஷ், லான்பவுல்ஸ் போட்டிகளிலும் இந்தியா பங்கேற்கிறது.
    • இந்கிய ஆண்கள் ஹாக்கி அணி இங்கிலாந்துடன் மோதல் (இரவு 8.30 மணி).

    காமன்வெல்த் விளையாட்டில் இன்று இந்தியா பங்கேற்கும் போட்டிகள் வருமாறு :-

    பேட்மின்டன்

    கலப்பு அணிகள் பிரிவில் அரை இறுதியில் சிங்கப்பூருடன் மோதல் (இரவு 10 மணி ).

    குத்துச்சண்டை

    அமித்பங்கல் (51 கிலோ பிரிவு ) 2-வது சுற்றில் வானுத்து நாட்டு வீரர் நம்ரி பெரியுடன் மோதல். முகமது ஹூசாமுதீன் (57 கிலோ பிரிவு ) 2-வது சுற்றில் வங்காளதேச வீரரை சலீம் ஹூசைனை சந்திக்கிறார். (மாலை 4. 45 மணி முதல் 6 மணி வரை) சுமித் குண்டு ( 75 கிலோ பிரிவு) மோதும் போட்டி ( நள்ளிரவு 12.15 மணி).

    ஹாக்கி

    இந்கிய ஆண்கள் அணி இங்கிலாந்துடன் மோதல் (இரவு 8.30 மணி).

    ஜூடோ

    விஜயகுமார் யாதவ் ( 60 கிலோ ), ஜஸ்லீன் சிங் சைனி ( 66 கிலோ ), சுசிலா லிங்கபம் ( 48 கிலோ ), சுகிலா டாரியல் ( 57 கிலோ)

    டேபிள் டென்னிஸ்

    ஆண்கள் அணிகள் அரை இறுதி ( இரவு 11.30)

    இது தவிர நீச்சல், சைக்கிளிங், பளு தூக்குதல், ஸ்குவாஷ், லான்பவுல்ஸ் போட்டிகளிலும் இந்தியா பங்கேற்கிறது.

    • கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார்.
    • இந்திய பெண்கள் அணி அடுத்த போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

    பர்மிங்காம்:

    72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நேற்று இரவு கோலாகலமாக தொடங்கியது. பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வலுவான ஆஸ்திரேலியா அணியுடன் மோதியது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய மகளிர் அணி முதலில் விளையாடியது. தொடக்க வீராங்கணைகளாக மந்தனாவும், ஷபாலி வர்மாவும் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். மந்தனா 24 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பான விளையாடிய ஷபாலி வர்மா 48 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். யாஷிகா பாட்யா 8 ரன்னில் வெளியேறினார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடியது.

    ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி தவித்தது. இதனால், இந்திய அணியே வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பின்வரிசையில் களமிறங்கிய ஆஸ்லீக் கார்ட்னர் அதிரடியாக விளையாடினார். அவருக்கு கிரேஷ் ஹாரீஸ் பக்கபலமாக விளையாடி 37 ரன்கள் குவித்தார்.

    இறுதியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 19 ஓவர்களில் இலக்கை கடந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்திய பெண்கள் அணி அடுத்த போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த போட்டி நாளை மாலை 03.30 மணிக்கு தொடங்கும்.

    • அனாஹத் சிங் 11-5 11-2 11-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
    • போட்டி தொடரும் போது எனக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டது என அனாஹத் சிங் கூறினார்.

    பர்மிங்காம்:

    72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. தொடக்க விழா முடிவடைந்த நிலையில் முதல் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கின.

    இதில் நேற்று நடைபெற்ற ஸ்குவாஷ் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில். 64 வது சுற்றில் இந்தியாவின் இளம் வீராங்கனையான அனாஹத் சிங் (14 வயது), செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸின் வீராங்கனை ஜாடா ரோஸ் ஆகியோர் மோதினர்.

    இதில் சிறப்பாக விளையாடிய அனாஹத் சிங் 11-5 11-2 11-0 என்ற செட் கணக்கில்வெற்றி பெற்றார். இதனால் அவர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இது மிகவும் உற்சாகமானது. போட்டி தொடரும் போது எனக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டது தனது வெற்றி தொடக்கத்திற்குப் பிறகு அனாஹத் சிங் கூறினார்.

    • இந்தியா சார்பில் 15 விளையாட்டுகளில் 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் களம் காணுகிறார்கள்.
    • 72 நாடுகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நாளை முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நீச்சல், தடகளம், பேட்மிண்டன், கூடைப்பந்து, கைப்பந்து, குத்துச்சண்டை, ஆக்கி, மல்யுத்தம், ஸ்குவாஷ் உள்பட 20 விளையாட்டுகளில் மொத்தம் 280 பந்தயங்கள் அரங்கேறுகிறது.

    இந்த போட்டியில் 72 நாடுகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா சார்பில் 15 விளையாட்டுகளில் 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் களம் காணுகிறார்கள். இதில் இன்று நடைபெறும் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வலுவான ஆஸ்திரேலியாவை (மாலை 3.30 மணி) எதிர்கொள்கிறது.

    இந்த நிலையில் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கும், காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

    • பெண்கள் ஹாக்கி போட்டியில் 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் கானாவை சந்திக்கிறது.
    • டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன் போட்டிகளில் இந்திய அணிகள் களம் காணுகிறது.

    ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முதலாவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. பர்மிங்காம் 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நேற்று இரவு கோலாகலமாக தொடங்கியது.

    இதில் இன்று நடைபெறும் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வலுவான ஆஸ்திரேலியாவை (மாலை 3.30 மணி) எதிர்கொள்கிறது.

    அதே போல், பெண்கள் ஹாக்கி போட்டியில் 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் கானாவை (மாலை 6.30 மணி) சந்திக்கிறது. டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன் போட்டிகளில் இந்திய அணிகள் களம் காணுகிறது. நீச்சல், ஸ்குவாஷ், குத்துச்சண்டை போட்டிகளில் இந்திய வீரர்கள் கால் பதிக்கிறார்கள்.

    ×