search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    காமன்வெல்த் விளையாட்டில்  இன்று இந்தியா பங்கேற்கும் போட்டிகள்
    X

    காமன்வெல்த் விளையாட்டில் இன்று இந்தியா பங்கேற்கும் போட்டிகள்

    • நீச்சல், சைக்கிளிங், பளு தூக்குதல், ஸ்குவாஷ், லான்பவுல்ஸ் போட்டிகளிலும் இந்தியா பங்கேற்கிறது.
    • இந்கிய ஆண்கள் ஹாக்கி அணி இங்கிலாந்துடன் மோதல் (இரவு 8.30 மணி).

    காமன்வெல்த் விளையாட்டில் இன்று இந்தியா பங்கேற்கும் போட்டிகள் வருமாறு :-

    பேட்மின்டன்

    கலப்பு அணிகள் பிரிவில் அரை இறுதியில் சிங்கப்பூருடன் மோதல் (இரவு 10 மணி ).

    குத்துச்சண்டை

    அமித்பங்கல் (51 கிலோ பிரிவு ) 2-வது சுற்றில் வானுத்து நாட்டு வீரர் நம்ரி பெரியுடன் மோதல். முகமது ஹூசாமுதீன் (57 கிலோ பிரிவு ) 2-வது சுற்றில் வங்காளதேச வீரரை சலீம் ஹூசைனை சந்திக்கிறார். (மாலை 4. 45 மணி முதல் 6 மணி வரை) சுமித் குண்டு ( 75 கிலோ பிரிவு) மோதும் போட்டி ( நள்ளிரவு 12.15 மணி).

    ஹாக்கி

    இந்கிய ஆண்கள் அணி இங்கிலாந்துடன் மோதல் (இரவு 8.30 மணி).

    ஜூடோ

    விஜயகுமார் யாதவ் ( 60 கிலோ ), ஜஸ்லீன் சிங் சைனி ( 66 கிலோ ), சுசிலா லிங்கபம் ( 48 கிலோ ), சுகிலா டாரியல் ( 57 கிலோ)

    டேபிள் டென்னிஸ்

    ஆண்கள் அணிகள் அரை இறுதி ( இரவு 11.30)

    இது தவிர நீச்சல், சைக்கிளிங், பளு தூக்குதல், ஸ்குவாஷ், லான்பவுல்ஸ் போட்டிகளிலும் இந்தியா பங்கேற்கிறது.

    Next Story
    ×