search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    அரை இறுதிக்கு 3 பேர் தகுதி: குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 3 பதக்கம் உறுதி
    X

    அரை இறுதிக்கு 3 பேர் தகுதி: குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 3 பதக்கம் உறுதி

    • ஷிவதாபா, சுமித் குண்டு, ஆசிஷ் குமார் ஆகியோர் ஏற்கனவே கால் இறுதியில் தோற்று வெளியேறி இருந்தனர்.
    • ஜப்பான் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற லவ்லினா கால் இறுதியில் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார்.

    காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 3 பதக்கம் உறுதியானது.

    குத்து சண்டையில் இந்தியா சார்பில் 5 வீரர்கள், 5 வீராங்கனைகள் ஆக மொத்தம் 10 பேர் பங்கேற்று உள்ளனர். இதில் ஷிவதாபா, சுமித் குண்டு, ஆசிஷ் குமார் ஆகியோர் ஏற்கனவே கால் இறுதியில் தோற்று வெளியேறி இருந்தனர்.

    நேற்று நடந்த கால் இறுதியில் 3 இந்தியர்கள் வெற்றி பெற்றனர். இதனால் குத்து சண்டையில் 3 பதக்கம் உறுதியானது. பெண்களுக்கான 50 கிலோ பிரிவில் நிஹாத் ஜரீன் கால் இறுதியில் வேல்ஸ் நாட்டு வீராங்கனை ஹெலன் ஜோன்சை எதிர் கொண்டார்.

    இதில் ஜரீன் 5-0 என்ற கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அரை இறுதியில் அவர் இங்கிலாந்தை சேர்ந்த ஸ்டப்லேயை 6-ந்தேதி சந்திக்கிறார்.

    இதே போல 48 கிலோ பிரிவில் வீராங்கனை நித்து, 57 கிலோ பிரிவில் வீரர் ஹூசைன் ஆகியோரும் கால் இறுதியில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றனர்.

    ஜப்பான் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற லவ்லினா கால் இறுதியில் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். 70 கிலோ பிரிவில் பங்கேற்ற அவர் கால் இறுதியில் 2-3 என்ற கணக்கில் வேல்ஸ் நாட்டு வீராங்கனை ரோசியிடம் தோற்று அரை இறுதி வாய்ப்பை இழந்தார்.

    Next Story
    ×