search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளக்குறிச்சி வன்முறை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீதிகேட்டு மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
    • மாணவியின் பெற்றோர் கோரிக்கை ஏற்கப்படாமல் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். அவரது மகள் ஸ்ரீமதி (வயது 17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்திமெட்ரிக் மேல்நிலை பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த இவர் மர்மமானமுறையில் இறந்தார். மாணவியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தது.

    ஐகோர்ட்டு உத்தரவுபடி மருத்துவகுழுவினர் மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இறுதிவரை மாணவியின் பெற்றோர் வரவில்லை. மாணவியின் உடல் பரிசோதனை நடந்தது பற்றியும், உடலை பெற்றுக்கொள்ளுமாறும் மாவட்ட வருவாய்துறை மூலம் பெரியநெசலூரில் உள்ள அவரது வீட்டில் வருவாய்துறையினர் நோட்டீஸ் ஒட்டினர். ஆனால் மாணவியின் உடலை பெற்றோர் வாங்க மறுத்து விட்டனர்.

    இன்று 3-வது நாளாக மாணவியின் உடலை வாங்க பெற்றோர் வரவில்லை. இதனிடையே நீதிகேட்டு மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவியின் பெற்றோர் கோரிக்கை ஏற்கப்படாமல் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதன் எதிரொலியாக மாணவி ஸ்ரீமதியின் உடலை வாங்குவதற்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது. அவர்கள் இன்று மதியம் 2 மணிக்கு மாணவியின் உடலை பெற்றுக்கொள்வதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து இன்று மாலையே மாணவியின் உடல் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தில் அடக்கம் செய்யப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 3 நாட்களாக முகாமிட்டு பல்வேறு கட்ட விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • இதுதவிர தடயவியல் குழுவினரும் பள்ளிக்கு நேரில் விசாரணையை நடத்தி உள்ளனர்.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி மரணம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது.

    இதுபற்றி விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி அவர்கள் கடந்த 3 நாட்களாக முகாமிட்டு பல்வேறு கட்ட விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதவிர தடயவியல் குழுவினரும் பள்ளிக்கு நேரில் விசாரணையை நடத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் இன்று காலை குழந்தைகள் நல ஆணையர் சரஸ்வதி தலைமையிலான குழுவினர் மாணவி இறந்த பள்ளிக்கு சென்றனர். அங்கு உள்ள காவலாளி மற்றும் டிரைவர்களிடம் முதல் கட்ட விசாரணை நடத்தினர்.

    அதன்பின்னர் மாணவி தங்கி இருந்த விடுதி அறை, மாடியில் இருந்து குதித்த இடம் ஆகியவற்றையும் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தச்சூர் ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர் யோசனையின் பேரில், ஊராட்சி தலைவர் உத்தரவுபடி, ஊராட்சி செயலாளர் தண்டோரா போடுவதற்கான ஏற்பாடு செய்தார்.
    • முயற்சிக்கு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் வரவேற்பு கிடைத்துள்ளது.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் கடந்த 17-ந்தேதி நடந்த கலவரத்தின்போது மர்ம கும்பல் பள்ளிக்குள் புகுந்து சூறையாடியது. அதோடு பள்ளியில் இருந்த பொருட்களை எடுத்து சென்று உள்ளனர்.

    இதுகுறித்து தச்சூர் கிராமத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தண்டோரா போடப்பட்டது. அதில், கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் கலவரம் நடந்த போது அங்கிருந்த பொருட்களை தூக்கி வந்து விட்டார்கள். அதை யாரேனும் எடுத்திருந்தால் ஊராட்சி பள்ளியில் வைத்து விடவும். இல்லையெனில் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்.

    இவ்வாறு அறிவிக்கப்பட்டு உள்ளது.

    தச்சூர் ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர் பழனிவேல் யோசனையின் பேரில், ஊராட்சி தலைவர் மல்லிகா அண்ணாதுரை உத்தரவுபடி, ஊராட்சி செயலாளர் சிவசூரியன் தண்டோரா போடுவதற்கான ஏற்பாடு செய்தார். இந்த முயற்சிக்கு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் வரவேற்பு கிடைத்துள்ளது. தச்சூரை தொடர்ந்து அருகில் உள்ள ஊராட்சிகளிலும் இதேபோல தண்டோரா போட முடிவுசெய்துள்ளனர்.

    • மாணவியின் வழக்கு குறித்து இன்று உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரஉள்ளது.
    • வழக்கு முடிவை பார்த்து உடலை வாங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். அவரது மகள் ஸ்ரீமதி (வயது 17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்திமெட்ரிக் மேல்நிலை பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த இவர் மர்மமானமுறையில் இறந்தார். மாணவியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தது.

    ஐகோர்ட்டு உத்தரவுபடி மருத்துவகுழுவினர் மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இறுதிவரை மாணவியின் பெற்றோர் வரவில்லை. மாணவியின் உடல் பரிசோதனை நடந்தது பற்றியும், உடலை பெற்றுக்கொள்ளுமாறும் மாவட்ட வருவாய்துறை மூலம் பெரியநெசலூரில் உள்ள அவரது வீட்டில் வருவாய்துறையினர் நோட்டீஸ் ஒட்டினர். ஆனால் மாணவியின் உடலை பெற்றோர் வாங்க மறுத்துவிட்டனர். அவர்கள் எங்கு உள்ளார்கள் என்ற விபரம் தெரியவில்லை.

    இன்றும் 3-வது நாளாக மாணவியின் உடலை வாங்க பெற்றோர் வரவில்லை. மாணவியின் வழக்கு குறித்து இன்று உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரஉள்ளது. அந்த முடிவை பார்த்து உடலை வாங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

    இதனைத்தொடர்ந்து மாணவியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

    • மாவட்ட காவல்துறைக்கு 10 முறைக்கு மேல் உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்துள்ளது.
    • கள்ளக்குறிச்சி விவகாரம் தற்போது மாவட்ட காவல்துறைக்கும் உளவுத்துறைக்கும் இடையே பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியில் கடந்த 17ஆம் தேதி பெரும் கலவரம் மூண்டது. இந்த நிலையில், கலவரம் நடக்க வாய்ப்பு இருப்பதாக மாவட்ட காவல்துறைக்கு 10 முறைக்கு மேல் உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

    ஜூலை 17ஆம் தேதி கள்ளக்குறிச்சி கலவரம் நடைபெறுவதற்கு முன்பாகவே மாவட்ட நிர்வாகத்தை மாநில உளவுத்துறை எச்சரித்துள்ளது. மாணவ அமைப்புகள் மற்றும் பிற அமைப்புகள் சேர்ந்து பள்ளியை சேதப்படுத்த வாய்ப்பு உள்ளது என ஜூலை 15ஆம் தேதியே உளவுத்துறை எச்சரித்துள்ளது.

    இந்த கலவரத்திற்கு 2 நாட்களுக்கு முன்பே, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உளவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர். ஆனால் மாவட்ட காவல்துறை இந்த எச்சரிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இதனை வழக்கமான ஒன்றாக எடுத்துக்கொண்டு அலட்சியமாக இருந்ததாக தெரிய வந்துள்ளது.

    இந்த விவகாரம் தற்போது மாவட்ட காவல்துறைக்கும் உளவுத்துறைக்கும் இடையே பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

    உளவுத்துறை எச்சரிக்கையை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மெத்தனமாக செயல்பட்டதாலும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் இந்த கலவரம் ஏற்பட்டதாக மாவட்ட காவல்துறைக்கு எதிராக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், இந்த விவகாரத்தில் உளவுத்துறை கொடுத்த அறிக்கையை, சிறப்பு காவல் ஆய்வாளர் மாவட்ட எஸ்.பி.யிடம் உரிய முறையில் கவனத்திற்கு கொண்டு சென்றாரா என்பன குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.

    • மாணவி மரண வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    • வரும் 27-ந் தேதி கள்ளக்குறிச்சியில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்த உள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளி பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி மரணத்துக்கு நீதிக்கேட்டு கடந்த 17-ந்தேதி நடந்த போராட்டம் கலவரத்தில் முடிந்தது. இதில் பங்கேற்க கலவரக்காரர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக திரட்டப்பட்டு வந்ததாக, போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

    கலவரம் தொடர்பான விசாரணை முடுக்கிவிடப்பட்டு, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் கைது நடவடிக்கையில் போலீசார் இறங்கி இருக்கிறார்கள். மேலும் மாணவி மரண வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கள்ளக்குறிச்சியில் இன்று நேரில் விசாரணை நடத்த உள்ளது. ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி மற்றும் உறுப்பினர்கள் நேரில் சென்று விசாரணை நடத்துகின்றனர்.

    வரும் 27-ந் தேதி கள்ளக்குறிச்சியில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது 15க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • பள்ளியில் வன்முறையால் சேதமான பொருட்கள், சான்றிதழ்கள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

    ஆத்தூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமாக இறந்தார், இதை கண்டித்து நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறிய சம்பவங்கள் நாடு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன. மாணவி மர்ம சாவு தொடர்பாக பள்ளி தாளாளர், 2 ஆசிரியைகள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    பள்ளி வாகனங்களுக்கு தீவைத்து வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது 15க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வன்முறையால் பாதிக்கப்பட்ட பள்ளியில் சுமார் 3500 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். வன்முறை காரணமாக இந்த பள்ளி இயல்பு நிலைக்குத் திரும்ப, 2 மாதங்களுக்கு மேல் ஆகும் போல தெரிகிறது. அதுவரை, குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு படிக்கின்றவர்கள், படித்து முடித்தவர்களின் அசல், நகல் சான்றிதழ்கள் அனைத்தும் எரிந்து சேதமகியுள்ளன. அவற்றை கணக்கிட்டு புதிதாக வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே அங்கு படித்துவந்த மாணவ-மாணவிகள் தொடர்ந்து கல்வி பயில்வதற்காக சிறப்பு அதிகாரியை அரசு நியமித்து உள்ளது. அதன்படி ஆத்தூர் கல்வி மாவட்ட அதிகாரி ராஜூ கூடுதல் பொறுப்பாக சின்னசேலம் பள்ளி குழந்தைகள் கல்விக்கான ஒருங்கிணைப்பாளராக நியமிக்கபப்ட்டு உள்ளார். இதை தொடர்ந்து இன்று சின்னசேலம் பள்ளிக்கு சென்ற அவர் அங்கு கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பள்ளியில் வன்முறையால் சேதமான பொருட்கள், சான்றிதழ்கள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

    வருகிற 24-ந்தேதி தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நடக்கிறது. இதையொட்டி சின்னசேலம் கனியாமூர் தனியார் பள்ளியிலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு 1200 பேர் தேர்வு எழுத இருந்தனர். இதற்கிடையே கலவரத்தில் பள்ளி கட்டிடம் சேதமடைந்ததால் அங்கு நடக்க இருந்த தேர்வை வேறு பள்ளிக்கு மாற்ற ஏற்பாடு செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர் டி.என்.பி.எஸ்.சி. சேர்மனுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதன்படி கனியாமூர் பள்ளியில் குரூப்-4 தேர்வு எழுத இருந்த 1200 தேர்வர்களுக்கும் அங்குள்ள ஏ.கே.டி. பள்ளியில் மையம் அமைக்கப்பட்டு அங்குள்ள 60 அறைகளில் அவர்கள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    • பொதுசட்ட ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில் இருவரையும் காவல் துறையினா் கைது செய்தனா்.
    • பெண் உரிமை என்ற தலைப்பில் ஸ்ரீமதி இறப்புக்கு நீதி கேட்டு போராடுவோம் என அமைதியை குலைக்கும் வகையில் சில கருத்துகளை பதிவிட்டிருந்தார்.

    திருச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கணியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணம் தொடர்பான போராட்டம் வன்முறையில் முடிந்தது. போராட்டக்காரர்கள் பள்ளியை சூறையாடி, வாகனங்களுக்கு தீ வைத்தனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கலெக்டர், எஸ்.பி. மாற்றப்பட்டுள்ளனனர்.

    இதற்கிடையே இவ்வளவு பெரிய ஒரு போராட்டத்தை சில நாட்கள் திட்டமிட்டு அரங்கேற்றி இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக சமூக வலைதளங்கள் மூலம் ஒத்த கருத்துடையோரை ஒருங்கிணைத்துள்ளதும் தெரிந்தது. மாணவி இறப்பு சம்பந்தமாக பல பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி இந்த வன்முறையை அவர்கள் அரங்கேற்றி உள்ளனர்.

    அவ்வாறு தகவல் பரப்புபவர்களின் சமூக வலைதள கணக்குகள் கண்காணிக்கப்பட்டு பொய்யான தகவல் பரப்புபவர்களின் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. முதல்கட்டமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு கரூர் மாவட்டத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இதனிடையே கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி இறப்பு சம்பந்தமாக சமூக வலைதளங்களில் சட்ட விரோதமாகவும், அரசுக்கு எதிராக செயல்பட தூண்டும் நடவடிக்கையில் ஈடுபடும் வகையில் குறுஞ்செய்தி அனுப்பியவர்கள் குறித்தும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் வாட்ஸ்அப் குழு ஒன்று தொடங்கி அதன் மூலமாக இளைஞர்களை ஒன்று திரட்டி ஆலங்குடி பஸ் நிலையம் மற்றும் அரச மரம் ஆகிய இடங்களில் இன்று கண்ணீர் அஞ்சலி, பள்ளி மாணவி இறந்ததற்கு நீதி கேட்டு போராட்டம் என போஸ்டர் அடித்து அதனை சமூக வலைதளங்களில் பரப்பி வருவது பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆலங்குடி மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் சுமார் 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளார். அவர்கள் இடம் பெற்றிருந்த வாட்ஸ்அப் குழு அட்மின்களான 8 பேரும் கைதாகி உள்ளனர். ஆனால் அவர்களை சிறையில் அடைக்கவில்லை. ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    திருப்பூா் மாவட்டம், காங்கயம் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் வசித்து வருபவா் எம்.அருண்குமாா் (22). இவா் தனது வாட்ஸ்அப் குழுவில் கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு தொடா்பாக சட்ட விரோதமாக அரசுக்கு எதிராக செயல்படத் தூண்டும் வகையில் பதிவிட்டுள்ளாா். அதேபோல, உடுமலை காவல் எல் லைக்கு உள்பட்ட எஸ்.எஸ்.காலனியில் வசித்து வரும் டி.வெங்கடேஷ் (20) என்பவரும் மாணவி இறப்பு தொடா்பாக அரசுக்கு எதிராக செயல்படத் தூண்டும் வகையில் வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டிருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து, பொதுசட்ட ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில் இருவரையும் காவல் துறையினா் கைது செய்தனா். இந்த சம்பவம் தொடா்பாக மேலும் சில நபா்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், போராட்டத்தைத் தூண்டும் வகையிலும் சமூக வலைதளங்களில் பதிவிடும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் இறந்த கல்லூரி மாணவி ஸ்ரீமதி பெயரில் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாட்ஸ்அப் குழு அமைக்கப்பட்டு போராட்டம் நடத்தப்போவதாக மாவட்ட எஸ்.பி. பாஸ்கரனுக்கு ரசகிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் வேடசந்தூர் லட்சுமணன்பட்டியை சேர்ந்த உதயகுமார் (20), திண்டுக்கல்லை சேர்ந்த 18 வயது மாணவர் ஆகியோர் வாட்ஸ்அப் குழுவை தொடங்கி 350 பேரை உறுப்பினர்களாக சேர்த்தனர். இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் நகர்தெற்கு போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் வேடசந்தூர் அருகில் உள்ள நவாமரத்துப்பட்டியை சேர்ந்த செல்வமணிகண்டன் (25) என்ற மில்தொழிலாளி வாட்ஸ்அப் குழு அமைத்து தொடங்கி அப்பகுதியை சேர்ந்த வாலிபர்களை இணைத்துள்ளார்.

    அதில் பெண் உரிமை என்ற தலைப்பில் ஸ்ரீமதி இறப்புக்கு நீதி கேட்டு போராடுவோம் என அமைதியை குலைக்கும் வகையில் சில கருத்துகளை பதிவிட்டிருந்தார். இதனையடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் பழனி அடிவாரம் சன்னதி வீதியை சேர்ந்த டீக்கடை உரிமையாளர் கோகுல் (23) என்பவர் அட்மினாக இருந்து சில நண்பர்களை குழுவில் சேர்த்தார். அவரை பழனி டவுன் போலீசார் கைது செய்தனர். கல்லூரிகளில் ஸ்ரீமதி இறப்புக்கு நியாயம் கேட்டு போராட்டம் நடத்தலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கல்லூரி வளாகம் மற்றும் முக்கிய பகுதிகளில் போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக பொய்யான தகவல்களை பரப்பும் வகையில் வீடியோ காட்சிகளை வெளியிட்ட யூடியூப் சேனல்களை முடக்கவும், கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்ட வீடியோ பதிவுகளை நீக்கவும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மீறும் சேனல்கள் முடக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    • திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி-நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் கோடீஸ்வரன்.
    • பல்வேறு சட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி-நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் கோடீஸ்வரன் (வயது 28) இவர் கடந்த 17-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக எதிர்மறையான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் அவர் மீது வளையாம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் விக்ரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் பெங்களூரில் தலைமறைவாக இருந்த கோடீஸ்வரனை கைது செய்தனர். அவர்மீது பல்வேறு சட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக வீண் வதந்தியை பரப்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • கள்ளக்குறிச்சி காவல்துறை எஸ்.பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
    • தனியார் பள்ளி மாணவி உயிரிழப்பை அடுத்து நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

    இந்த போராட்டத்தில் பல்வேறு தரப்பினர் இணைந்த நிலையில், அது கலவரமாக மாறியது. பள்ளி சூறையாடப்பட்டதுடன், பஸ்கள், வாகனங்களையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். 

    இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச்செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ள உத்தரவில், கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியராக ஷ்ரவன்குமார் ஜடாவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, கள்ளகுறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வக்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் பகலவன் கள்ளக்குறிச்சி எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    • கடலூர் தேவனாம்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் ரோந்துபணியில் ஈடுபட்டனர்.
    • தேவனாம்பட்டினம் கடற்கரையில் 5 பேர் நின்றுகொண்டு சின்னசேலம் கலவரம் பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.

    கடலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்துவந்த மாணவி ஸ்ரீமதி மரண விவகாரம் தமிழகம் முழுவதும் எதிரொலித்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    யார் யார் வாட்ஸ்அப் மூலம் கலவரத்தை தூண்டும் நோக்கில் செயல்படுகிறார்கள் என்பதை போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    அதன்படி கடலூர் தேவனாம்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் ரோந்துபணியில் ஈடுபட்டனர். அப்போது தேவனாம்பட்டினம் கடற்கரையில் 5 பேர் நின்றுகொண்டு சின்னசேலம் கலவரம் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். கடலூரிலும் இதேபோன்று செய்து மாணவியின் மரணத்துக்கு தீர்வுகாணவேண்டும் என அவர்கள் பேசியதாக போலீசார் காதுக்கு எட்டியது.

    உடனே போலீசார் அவர்களை பிடிக்க முயன்றபோது 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களில் ஒருவர் பிடிபட்டார். அவரது பெயர் விஜய். இவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இவரது செல்போனை சோதித்தபோது வாட்ஸ்-அப் குழுக்கள் இருந்தது.

    இதனை பரிசோதிக்கும் போது கள்ளக்குறிச்சி கலவரத்தை தூண்ட முயன்றது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் கல்லூரி மாணவர் விஜய்யை கைது செய்தனர். இந்த வாட்ஸ்-அப் குழுவில் இருப்பவர்கள் யார்? அவர்கள் எங்கெல்லாம் உள்ளனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் கள்ளக்குறிச்சி கலவரத்தில் கடலூர் அருகே உள்ள வெள்ளக்கரையை சேர்ந்த கார்த்திக், தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டது தெரியவந்தது. இவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இதனைத்தொடர்ந்து கடலூர் போலீஸ் டி.எஸ்.பி. கரிக்கால்பாரிசங்கர் தலைமையில் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு செல்ல மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

    • பள்ளி மாணவி இறப்பு தொடர்பாக கடந்த 17-ந் தேதி வன்முறை வெடித்தது.
    • சிதறிகிடக்கும் பொருட்கள், வன்முறையால் எரிக்கப்பட்ட பஸ்கள், ஆவணங்கள் குறித்து தடயவியல் துறையினர் ஆய்வு நடத்தினர்.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இவரது இறப்பு தொடர்பாக கடந்த 17-ந் தேதி வன்முறை வெடித்தது.

    இந்த கலவரத்தில் மாணவி ஸ்ரீமதி படித்த பள்ளிக்கூடம் சூறையாடப்பட்டது. அங்குள்ள பஸ்களுக்கும் தீ வைக்கப்பட்டதால் பலத்த சேதம் அடைந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதனிடையே தடயவியல் துறையினர் துணை இயக்குனர் சண்முகம் தலைமையில் வன்முறை நடந்த பள்ளிக்கு இன்று மதியம் சென்றனர். அங்கு சிதறிகிடக்கும் பொருட்கள், வன்முறையால் எரிக்கப்பட்ட பஸ்கள், ஆவணங்கள் குறித்தும் ஆய்வு நடத்தினர்.

    இந்த ஆய்வின்போது வெளியாட்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. தொடர்ந்து அதிரடி ஆய்வு நடந்து வருகிறது.

    ×