search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் அதிகாரம்"

    • வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது 15க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • பள்ளியில் வன்முறையால் சேதமான பொருட்கள், சான்றிதழ்கள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

    ஆத்தூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமாக இறந்தார், இதை கண்டித்து நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறிய சம்பவங்கள் நாடு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன. மாணவி மர்ம சாவு தொடர்பாக பள்ளி தாளாளர், 2 ஆசிரியைகள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    பள்ளி வாகனங்களுக்கு தீவைத்து வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது 15க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வன்முறையால் பாதிக்கப்பட்ட பள்ளியில் சுமார் 3500 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். வன்முறை காரணமாக இந்த பள்ளி இயல்பு நிலைக்குத் திரும்ப, 2 மாதங்களுக்கு மேல் ஆகும் போல தெரிகிறது. அதுவரை, குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு படிக்கின்றவர்கள், படித்து முடித்தவர்களின் அசல், நகல் சான்றிதழ்கள் அனைத்தும் எரிந்து சேதமகியுள்ளன. அவற்றை கணக்கிட்டு புதிதாக வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே அங்கு படித்துவந்த மாணவ-மாணவிகள் தொடர்ந்து கல்வி பயில்வதற்காக சிறப்பு அதிகாரியை அரசு நியமித்து உள்ளது. அதன்படி ஆத்தூர் கல்வி மாவட்ட அதிகாரி ராஜூ கூடுதல் பொறுப்பாக சின்னசேலம் பள்ளி குழந்தைகள் கல்விக்கான ஒருங்கிணைப்பாளராக நியமிக்கபப்ட்டு உள்ளார். இதை தொடர்ந்து இன்று சின்னசேலம் பள்ளிக்கு சென்ற அவர் அங்கு கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பள்ளியில் வன்முறையால் சேதமான பொருட்கள், சான்றிதழ்கள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

    வருகிற 24-ந்தேதி தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நடக்கிறது. இதையொட்டி சின்னசேலம் கனியாமூர் தனியார் பள்ளியிலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு 1200 பேர் தேர்வு எழுத இருந்தனர். இதற்கிடையே கலவரத்தில் பள்ளி கட்டிடம் சேதமடைந்ததால் அங்கு நடக்க இருந்த தேர்வை வேறு பள்ளிக்கு மாற்ற ஏற்பாடு செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர் டி.என்.பி.எஸ்.சி. சேர்மனுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதன்படி கனியாமூர் பள்ளியில் குரூப்-4 தேர்வு எழுத இருந்த 1200 தேர்வர்களுக்கும் அங்குள்ள ஏ.கே.டி. பள்ளியில் மையம் அமைக்கப்பட்டு அங்குள்ள 60 அறைகளில் அவர்கள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    • திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி-நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் கோடீஸ்வரன்.
    • பல்வேறு சட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி-நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் கோடீஸ்வரன் (வயது 28) இவர் கடந்த 17-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக எதிர்மறையான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் அவர் மீது வளையாம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் விக்ரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் பெங்களூரில் தலைமறைவாக இருந்த கோடீஸ்வரனை கைது செய்தனர். அவர்மீது பல்வேறு சட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக வீண் வதந்தியை பரப்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • பள்ளியில் மாணவர்களின் சான்றிதழ்கள் எரிந்துள்ளன.
    • மாணவர்களின் கற்றல் பாதிக்காத வகையில் முதல்-அமைச்சருக்கு அறிக்கை வழங்க உள்ளோம்.

    சென்னை:

    சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி நேற்று பள்ளியை ஆய்வு செய்தோம். நீதிமன்ற வழக்கு காரணமாக பெற்றோரை நேரில் சந்திக்க முடியவில்லை. மறைந்த மாணவியின் தாய் எம்.காம் படித்துள்ளார். அவர் கேட்டுள்ளபடி அவருக்கு பணி வழங்குவது குறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.

    பள்ளியில் மாணவர்களின் சான்றிதழ்கள் எரிந்துள்ளன. அதனை கண்ணீர் மல்க பலர் எங்களிடம் கூறினர். மாணவர்களுக்கு உதவ அருகில் உள்ள தனியார் பள்ளிகள் தயாராக இருக்கின்றன.

    இன்று முதல்-அமைச்சரு டன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பள்ளியில் நடந்தது என்ன? அதற்கான தீர்வு, மாணவர்கள், பெற்றோர்கள் மனநிலை என்ன? என்பது குறித்து கூற உள்ளோம். இந்த கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டது. கோபத்தில் ஏற்படவில்லை என நீதி மன்றம் கூறி உள்ளது.

    மாற்று சான்றிதழ் மட்டு மின்றி பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட மாணவர்களின் பல சான்றிதழ்கள் எரிந்து உள்ளன. வருவாய் துறை மூலம் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்வோம். மாணவர்களுக்கு தற்காலிக மாற்று சான்றிதழ் எளிதில் வழங்க முடியும்.

    மாணவர்களின் கற்றல் பாதிக்காத வகையில் முதல்-அமைச்சருக்கு அறிக்கை வழங்க உள்ளோம். அந்த பள்ளியின் அருகே 5 அரசு பள்ளி, 17 தனியார் பள்ளிகள், 2 கல்லூரிகள் உள்ளன. பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு இந்த கல்வி நிறுவனங்களை பயன்படுத்த முடியுமா? என முதல்-அமைச்சரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுப்போம்.

    பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் சான்றிதழ் சரி பார்ப்பின் போதே போலி நபர்கள், வெளி மாநிலத்தவர்களை கண்டறிந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளுக்கும் கட்டாய தமிழ்த்தாள் நடைமுறையை கொண்டு வருவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை கண்டித்து இந்த போராட்டத்தை செயல் படுத்துவதாக தெரிவித்தது.
    • அனைத்து தனியார் பள்ளிகளும் செயல்பட வேண்டும்

    சென்னை:

    கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை ஒரு கும்பல் சூறையாடி தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து தனியார் பள்ளி சங்கங்கள் நேற்று ஒரு நாள் தனியார் பள்ளிகளை மூடுவதாக அறிவித்தது.

    தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை கண்டித்து இந்த போராட்டத்தை செயல் படுத்துவதாக தெரிவித்தது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனியார் பள்ளிகளை மூடக்கூடாது. அரசின் உத்தரவு இல்லாமல் இதுபோன்ற செயலில் ஈடுபட வேண்டாம். அனைத்து தனியார் பள்ளிகளும் செயல்பட வேண்டும். இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது.

    மேலும் மாணவர்கள் கல்வி பாதிக்கப்படாத வகையில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டதா என்பதை கல்வித்துறை அதிகாரிகள் மாவட்டம் வாரியாக கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

    மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் எந்தெந்த பள்ளிகள் செயல் படவில்லை என்பதை ஆய்வு செய்தனர்.

    அதன் அடிப்படையில் தமிழகத்தில் நேற்று 91 சதவீத தனியார் பள்ளிகள் செயல்பட்டன. குறைந்த அளவிலான பள்ளிகள் மட்டுமே மூடப்பட்டு இருந்தன. மூடப்பட்ட 987 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணி தொடங்கியது.

    மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனர் அலுவலகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அரசின் உத்தரவு, வழிகாட்டுதலை பின்பற்றி தான் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். மாவட்ட கலெக்ட்ரோ அல்லது முதன்மை கல்வி அதிகாரியோ தான் விடு முறை அளிக்க கூடியவர்கள்.

    தாங்களாகவே எதன் அடிப்படையில் விடுமுறை விட்டீர்கள்? அதற்கான காரணத்தை தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.

    பள்ளிகளை மூடிய நிர்வாகிகள் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். முறையான விளக்கம் இல்லாதபட்சத்தில் அதன் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

    • பள்ளிக்கு விடுமுறை அளிக்கும் தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
    • செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில் மோத்தம் 1,702 பள்ளிகள் இயங்கி வருகின்றன.

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி விடுதியில் மர்மமாக இறந்தார். இந்த விவகாரம் தொடர்பாக நேற்று காலை பள்ளி முன்பு ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இது கலவரமாக மாறியது.

    ஏராளமானோர் பள்ளிக்குள் புகுந்து பஸ்களுக்கு தீவைத்தனர். மேலும் பள்ளியில் இருந்த பொருட்கள் அனைத்தையும் நொறுக்கி சூறையாடினர்.

    இதனை கண்டித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் இன்று முதல் தொடர்ந்து தனியார் பள்ளிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தனியார் பள்ளிகள் விடுமுறைவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித் துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    இதனால் இன்று காலை தனியார் பள்ளிக்ள செயல்படுமா? அல்லது மூடப்படுமா? என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலவியது.

    இந்த நிலையில் அரசின் எச்சரிக்கையை தொடர்ந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கியது. மாணவ-மாணவிகள் எப்போதும் போல் பள்ளிக்கு சென்றனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி, ஆவடி, அம்பத்தூர், திருவள்ளூர், பொன்னேரி ஆகிய கல்வி மாவட்டத்தில் 354 மெட்ரிக் பள்ளிகளும், 140 சி.பி.எஸ்.இ. பள்ளிகளும் உள்ளது. இன்று அனைத்து மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன.

    பள்ளிக்கு விடுமுறை அளிக்கும் தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில் மோத்தம் 1,702 பள்ளிகள் இயங்கி வருகின்றன. அதில் அரசு உதவி பெரும் பள்ளிகள் 860, 842 தனியார் பள்ளிகள் என அனைத்தும் வழக்கம் போல் செயல்பட்டது.

    தனியார் பள்ளி இயங்கு வதை கண்காணித்து வருவதாக மாவட்ட முதலன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா தெரிவித்து உள்ளார்.

    இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கியது.

    • கல்வீச்சு சம்பவத்தில் டி.ஐ.ஜி. பாண்டியன் உள்பட போலீசார் பலர் காயமடைந்தனர்.
    • பள்ளிக்குள் புகுந்த கும்பல் அங்குள்ள பொருட்களை சூறையாடி தீ வைத்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் மாணவி ஸ்ரீமதி மர்ம சாவு குறித்து இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். சிறிதுநேரத்தில் அது கலவரமாக வெடித்தது. போலீஸ் வாகனம் மீது போராட்டகாரர்கள் கற்களை வீசினார்கள். இந்த கல்வீச்சு சம்பவத்தில் டி.ஐ.ஜி. பாண்டியன் உள்பட போலீசார் பலர் காயமடைந்தனர்.

    என்றாலும் போராட்டம் ஓயவில்லை. நேரம் செல்ல செல்ல வன்முறை அதிகரித்தது. பள்ளிக்குள் புகுந்த கும்பல் அங்குள்ள பொருட்களை சூறையாடி தீ வைத்தது. இதில் பள்ளி பஸ்கள், டிராக்டர்கள் எரிந்து நாசமானது.

    இதனைத்தொடர்ந்து டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு கலவரம் கட்டுபடுத்தப்பட்டது. இந்த வன்முறையில் ரூ.20 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. எனினும் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இன்று காலை மக்கள் அதிகார அமைப்பு செயலாளர் ராமலிங்கம் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது தனியார் சொத்தை சேதப்படுத்தியது, கலவரத்தை தூண்டியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ×