search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    987 தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்- மெட்ரிக்குலேஷன் இயக்குனர் நடவடிக்கை
    X

    987 தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்- மெட்ரிக்குலேஷன் இயக்குனர் நடவடிக்கை

    • தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை கண்டித்து இந்த போராட்டத்தை செயல் படுத்துவதாக தெரிவித்தது.
    • அனைத்து தனியார் பள்ளிகளும் செயல்பட வேண்டும்

    சென்னை:

    கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை ஒரு கும்பல் சூறையாடி தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து தனியார் பள்ளி சங்கங்கள் நேற்று ஒரு நாள் தனியார் பள்ளிகளை மூடுவதாக அறிவித்தது.

    தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை கண்டித்து இந்த போராட்டத்தை செயல் படுத்துவதாக தெரிவித்தது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனியார் பள்ளிகளை மூடக்கூடாது. அரசின் உத்தரவு இல்லாமல் இதுபோன்ற செயலில் ஈடுபட வேண்டாம். அனைத்து தனியார் பள்ளிகளும் செயல்பட வேண்டும். இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது.

    மேலும் மாணவர்கள் கல்வி பாதிக்கப்படாத வகையில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டதா என்பதை கல்வித்துறை அதிகாரிகள் மாவட்டம் வாரியாக கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

    மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் எந்தெந்த பள்ளிகள் செயல் படவில்லை என்பதை ஆய்வு செய்தனர்.

    அதன் அடிப்படையில் தமிழகத்தில் நேற்று 91 சதவீத தனியார் பள்ளிகள் செயல்பட்டன. குறைந்த அளவிலான பள்ளிகள் மட்டுமே மூடப்பட்டு இருந்தன. மூடப்பட்ட 987 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணி தொடங்கியது.

    மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனர் அலுவலகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அரசின் உத்தரவு, வழிகாட்டுதலை பின்பற்றி தான் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். மாவட்ட கலெக்ட்ரோ அல்லது முதன்மை கல்வி அதிகாரியோ தான் விடு முறை அளிக்க கூடியவர்கள்.

    தாங்களாகவே எதன் அடிப்படையில் விடுமுறை விட்டீர்கள்? அதற்கான காரணத்தை தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.

    பள்ளிகளை மூடிய நிர்வாகிகள் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். முறையான விளக்கம் இல்லாதபட்சத்தில் அதன் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

    Next Story
    ×