சின்னசேலம் பிளஸ்-2 மாணவி உடலை 3-வது நாளாக வாங்க மறுக்கும் பெற்றோர்

மாணவியின் வழக்கு குறித்து இன்று உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரஉள்ளது. வழக்கு முடிவை பார்த்து உடலை வாங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
சின்னசேலம் பிளஸ்-2 மாணவி உடலை 3-வது நாளாக வாங்க மறுக்கும் பெற்றோர்
Published on

கள்ளக்குறிச்சி:

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். அவரது மகள் ஸ்ரீமதி (வயது 17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்திமெட்ரிக் மேல்நிலை பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த இவர் மர்மமானமுறையில் இறந்தார். மாணவியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தது.

ஐகோர்ட்டு உத்தரவுபடி மருத்துவகுழுவினர் மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இறுதிவரை மாணவியின் பெற்றோர் வரவில்லை. மாணவியின் உடல் பரிசோதனை நடந்தது பற்றியும், உடலை பெற்றுக்கொள்ளுமாறும் மாவட்ட வருவாய்துறை மூலம் பெரியநெசலூரில் உள்ள அவரது வீட்டில் வருவாய்துறையினர் நோட்டீஸ் ஒட்டினர். ஆனால் மாணவியின் உடலை பெற்றோர் வாங்க மறுத்துவிட்டனர். அவர்கள் எங்கு உள்ளார்கள் என்ற விபரம் தெரியவில்லை.

இன்றும் 3-வது நாளாக மாணவியின் உடலை வாங்க பெற்றோர் வரவில்லை. மாணவியின் வழக்கு குறித்து இன்று உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரஉள்ளது. அந்த முடிவை பார்த்து உடலை வாங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து மாணவியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com