search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னசேலம் பள்ளியில் இருந்து தூக்கி சென்ற பொருட்களை ஒப்படைக்க வேண்டும்- தண்டோரா மூலம் அறிவிப்பு
    X

    தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்ட காட்சி.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சின்னசேலம் பள்ளியில் இருந்து தூக்கி சென்ற பொருட்களை ஒப்படைக்க வேண்டும்- தண்டோரா மூலம் அறிவிப்பு

    • தச்சூர் ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர் யோசனையின் பேரில், ஊராட்சி தலைவர் உத்தரவுபடி, ஊராட்சி செயலாளர் தண்டோரா போடுவதற்கான ஏற்பாடு செய்தார்.
    • முயற்சிக்கு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் வரவேற்பு கிடைத்துள்ளது.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் கடந்த 17-ந்தேதி நடந்த கலவரத்தின்போது மர்ம கும்பல் பள்ளிக்குள் புகுந்து சூறையாடியது. அதோடு பள்ளியில் இருந்த பொருட்களை எடுத்து சென்று உள்ளனர்.

    இதுகுறித்து தச்சூர் கிராமத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தண்டோரா போடப்பட்டது. அதில், கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் கலவரம் நடந்த போது அங்கிருந்த பொருட்களை தூக்கி வந்து விட்டார்கள். அதை யாரேனும் எடுத்திருந்தால் ஊராட்சி பள்ளியில் வைத்து விடவும். இல்லையெனில் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்.

    இவ்வாறு அறிவிக்கப்பட்டு உள்ளது.

    தச்சூர் ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர் பழனிவேல் யோசனையின் பேரில், ஊராட்சி தலைவர் மல்லிகா அண்ணாதுரை உத்தரவுபடி, ஊராட்சி செயலாளர் சிவசூரியன் தண்டோரா போடுவதற்கான ஏற்பாடு செய்தார். இந்த முயற்சிக்கு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் வரவேற்பு கிடைத்துள்ளது. தச்சூரை தொடர்ந்து அருகில் உள்ள ஊராட்சிகளிலும் இதேபோல தண்டோரா போட முடிவுசெய்துள்ளனர்.

    Next Story
    ×