search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி மாணவிகள்"

    • திருச்சி காவேரி கல்லூரி மாணவிகளுக்கு கவிதை, பேச்சு, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன
    • ஆங்கிலத்துறை சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில் பங்கேற்ற மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்

    திருச்சி:

    திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் ஆங்கிலத்துறையின் 'அரோரா மன்றம்' சார்பில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான 'தனித்திறன் தேடல்' போட்டிகள் கல்லூரி காவேரி அரங்கத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் வி.சுஜாதா வாழ்த்துரை வழங்கி போட்டிகளைத் தொடங்கி வைத்தார். கவிதை, பேச்சு, கட்டுரை, வினாடி-வினா போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

    இந்நிகழ்வுகளுக்கான நடுவர்களாக முன்னாள் மாணவியர் புலத்தலைவர் முனைவர் ஜி.கனகா, சமூகப்பணித்துறைத் தலைவர் முனைவர் ஜி.மெட்டில்டா புவனேஸ்வரி, சமூகப்பணித்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் எஸ்.வித்யா, வணிகவியல் உதவிப்பேராசிரியர் முனைவர் எஸ்.செளமியா, நுண்ணுயிரியல் உதவிப் பேராசிரியர் முனைவர் என்.ஜீனத்துனிஷா, சமூகப் பணித்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் டி.அமிர்தா மேரி ஆகியோர் போட்டிகளில் பங்கேற்ற மாணவிகளில் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்தனர்.

    அரோரா மன்றத்தின் ெபாறுப்பாளர்கள் முனைவர் பி.ஹெலன்ஜோனா மற்றும் வி.சுதந்திரா தேவி ஆகியோர் முதுகலை ஆங்கிலத்துறை தலைவர் முனைவர் பி.ஊர்மிளா மற்றும் இளங்கலை ஆங்கிலத்துறைத் தலைவர் முனைவர் எஸ்.ஜெயஸ்ரீ அகர்வால் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் ேபாட்டிகளை நடத்தினர்.

    பல்வேறு துறைகளைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர்.

    • 90 ஆயிரம் மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்
    • விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்

    சென்னை:

    தமிழகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 5ம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னையில் உள்ள பாரதி மகளிர் கலை-அறிவியல் கல்லூரியில் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற உள்ளதாகவும், விழாவில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. உதவித் தொகை பெறுவதற்கு 90 ஆயிரம் மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் எண்ணிக்கையை இறுதிசெய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்து, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு, தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை, மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • என் தோழிகளை பார்த்து ஒருமுறை தவறு செய்து விட்டேன். அதன்பிறகும் பார்ட்டிக்கு அழைத்தார்கள்.
    • ஆடியோ வெளியிட்ட மாணவி போன்று வேறு மாணவிகள் யாராவது பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதில் பங்கேற்க சில தோழிகளையும் அழைத்திருந்தார். அப்போது மாணவியின் பள்ளிக்கூட நண்பரான ஒரு வாலிபரும் அங்கு வந்தார். அவர் மாணவியுடன் தகராறு செய்ததோடு, கட்டையை எடுத்து அந்த மாணவியை சரமாரியாக தாக்கினார். பின்னர் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இதுதொடர்பாக மாணவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிற ஆண் நண்பர்களுடன் சம்பந்தப்பட்ட மாணவி பழகியதால் காதல் முறிவு ஏற்பட்டதும், இது தொடர்பான பிரச்சினையில் பார்ட்டி நடந்த வீட்டில் இந்த தாக்குதல் நடந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தியபோது அந்த வீடு முழுவதும் இளைஞர்கள், இளம்பெண்ணின் ஆடைகள், சிகரெட் துண்டுகள், ஆணுறைகள், மதுபாட்டில்கள் ஏராளமாக கிடந்தன. இதுதொடர்பாக பார்ட்டியில் பங்கேற்ற மாணவ-மாணவிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக இளம்பெண் ஒருவர் கண்ணீர்மல்க பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில் பேசும் இளம்பெண் கல்லூரி மாணவி ஆவார்.

    பிறந்தநாள் பார்ட்டி என்ற பெயரில் இரவு நேரங்களில் குளச்சல் பகுதியில் உள்ள தோழியின் உறவினர் ஒருவரின் பங்களா ஒன்றில் ஆண் நண்பர்கள், கல்லூரி தோழிகள் ஒன்றுகூடி மது விருந்தை தொடங்கி உள்ளனர். முதலில் ஒரு மாணவி தனது ஆண் நண்பருடன் ஜாலியாக இருப்பதை பார்த்த மற்ற மாணவிகளும் மது விருந்துக்கு வரும் வேறு ஆண் நண்பர்களுடன் ஜாலியாக இருக்க தொடங்கியுள்ளனர். கான்செப்ட் சரக்கு பார்ட்டி- ஜாயின்ட் என்ற பெயரில் இந்த மது விருந்து நடந்துள்ளது தற்போது வெளியாகியுள்ள ஆடியோ மூலம் தெரிய வந்துள்ளது. இதுபற்றி கதறி அழுதவாறு அந்த கல்லூரி மாணவி பேசிய ஆடியோவில் உள்ள விவரம் வருமாறு:-

    அன்று செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு என்னை 2 தோழிகள் தொடர்ந்து செல்போன் மூலம் அழைத்துகொண்டிருந்தார்கள். வா... வெளியே செல்லலாம், ஜாலியாக இருக்கலாம் என்று கூப்பிட்டார்கள். அவர்கள் கேர்ள் பிரண்டுகளுடன் மது அருந்துவது எனக்கு தெரியும். அதேபோல் மது குடிப்பதற்குதான் என்னை அழைக்கிறார்கள் என்று நினைத்துதான் நான் அவர்களுடன் சென்றேன். அங்கு பெண்கள் மட்டும்தான் இருப்பார்கள் என்று நினைத்தேன். பிறகுதான் ஒரு பையன் வரப்போகிறான் என்று தெரிந்தது. அதுவும் அங்கு சென்றபிறகுதான் ஜாயின்ட் இருக்கிறது என்பது தெரிந்தது. முன்பே ஜாயின்ட் இருப்பது தெரிந்திருந்தால் நான் அங்கு சென்றிருக்க மாட்டேன்.

    என் தோழிகளை பார்த்து ஒருமுறை தவறு செய்து விட்டேன். அதன்பிறகும் பார்ட்டிக்கு அழைத்தார்கள். திரும்பதிரும்ப அழைத்து கொண்டிருந்தார்கள். நான்தான் ஒருமுறை தவறு செய்துவிட்டேன். அதன்பிறகு எதற்கு என்று செல்லவில்லை. தற்போது என்னை சிக்க வைக்கப்பார்க்கிறார்கள். அந்த தோழிகளால் ஒரு முறை தவறு செய்து விட்டேன். இனி இவ்வாறு செய்ய மாட்டேன். தவறாக நினைக்காதீர்கள். என் வீட்டில் யாரிடமும் சொல்ல வேண்டாம், என்று அந்த மாணவி பேசியிருக்கும் ஆடியோ வெளியாகி உள்ளது.

    இந்த ஆடியோ வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே குளச்சல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசாரும் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பார்ட்டி நடந்த பங்களாவின் உரிமையாளர் யார்? இந்த பங்களாவுக்கு யார், யார் வந்து செல்கிறார்கள்? ஆடியோ வெளியிட்ட மாணவி போன்று வேறு மாணவிகள் யாராவது பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுபோன்ற கலாசார சீரழிவு சம்பவம் நகர்புற பகுதிகளில்தான் அதிகமாக நடப்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அது மெல்ல மெல்ல கிராம பகுதிக்குள்ளும் கால் பதித்து இருப்பது பலரது புருவங்களை ஆச்சரியத்தில் உயர்த்த வைத்திருக்கிறது. இதுபோன்ற சம்பவங்களுக்கு போலீசார் தகுந்த நடவடிக்கை எடுத்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    • மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதி திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
    • மாணவிகளின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    அரசு பள்ளிகளில் 6முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதி திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.உயர்கல்வியில் மாணவிகள் அதிக எண்ணிக்கையில் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் கீழ் பயன்பெறும் மாணவிகளின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டது.

    அதன்படி மாணவிகள் தங்கள் விவரங்களை பதிவு செய்தனர். இதில் 25 சதவீத மாணவிகளின் வங்கிக்கணக்குகள் மாணவிகள் பெயரில் அல்லாது பெற்றோர் பெயரிலும், ஜாய்ன்ட் அக்கவுண்டாகவும் இருப்பதாக தெரியவந்துள்ளது. இது குறித்து திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் கூறியதாவது:-

    கல்லுாரி தரப்பில் மாணவிகள் பெயர், பாடப்பிரிவு, கல்லூரி செயல்படும் மாவட்டம், சேர்ந்த ஆண்டு ஆகிய விவரங்கள் சரிபார்க்கப்பட்டன. பள்ளி தரப்பில் தமிழ்வழியில் பயின்றதற்கான தரவுகள் ஆய்வு செய்யப்பட்டன. தற்போது வங்கி சார்பில் வங்கிக்கணக்குகள், ஆதார் எண்ணுடன் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.இதில், மாணவிகள் பலர் தங்கள் பெற்றோரின் பெயரில் உள்ள கணக்குகளை இணைத்துள்ளனர். எங்கள் கல்லூரியில் 298 பேரின் விவரங்கள் பதிவேற்றப்பட்டதில், 53 பேரின் விண்ணப்பங்களில் சிக்கல் இருந்தது. திருப்பூர் மாவட்டத்தில் கனரா வங்கி சார்பில் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, அதே வங்கியில் மாணவிகள் பெயரில் கணக்கு துவங்கி, அப்டேட் செய்யும் பணி நடக்கிறது. ஒரு வாரத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    • கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேரும் மாணவிகள் மட்டுமின்றி ஏற்கனவே 2, 3, 4-ம் ஆண்டு படித்து வரும் மாணவிகளுக்கும் ரூ.1000 உதவித்தொகை வழங்க உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
    • கல்வி நிறுவனங்களில் எத்தனை பேர் ஏற்கனவே சேர்ந்து படித்து வருகிறார்கள் என்ற புள்ளி விவரமும் சேகரிக்கப்படுகிறது.

    சென்னை:

    அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியை தொடரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    அதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு அதிகளவு மாணவிகள் சேர்ந்து வருகிறார்கள்.

    அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு மட்டும் இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருப்பதால் கிராமப்புற பகுதிகளை சேர்ந்தவர்கள் அதிகளவு விண்ணப்பித்து உள்ளனர்.

    உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று வரை 2 லட்சத்து 8 ஆயிரம் மாணவிகள் விண்ணப்பித்து உள்ளதாக உயர்கல்வித்துறை அதிகாரி தெரிவித்தார்.

    கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேரும் மாணவிகள் மட்டுமின்றி ஏற்கனவே 2, 3, 4-ம் ஆண்டு படித்து வரும் மாணவிகளுக்கும் ரூ.1000 உதவித்தொகை வழங்க உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. கல்வி நிறுவனங்களில் எத்தனை பேர் ஏற்கனவே சேர்ந்து படித்து வருகிறார்கள் என்ற புள்ளி விவரமும் சேகரிக்கப்படுகிறது.

    இத்திட்டம் இந்த கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வருவதால் கல்லூரிகள் தொடங்கும் அடுத்த மாதத்தில் இருந்து உதவித்தொகை வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது.

    உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாக இருப்பதால் மேலும் பலர் விண்ணப்பிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • இளநிலை படிக்கும் மாணவியர்களிடம் இருந்து அவர்களது சுய விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள், அவர்கள் படித்த அரசு பள்ளி விவரங்களை தொகுத்து சமர்ப்பிக்க வேண்டும்.
    • ஒவ்வொரு மாணவிகளும் ஆதார் ஜெராக்ஸ், வங்கி கணக்கு புத்தகம், 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல் கொண்டு வர அறிவுறுத்த வேண்டும்.

    சென்னை:

    அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து கலை அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த சிறப்பு முகாம் தொடங்கி உள்ளது.

    இதுகுறித்து உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தொழில்நுட்ப கல்வி, கலை மற்றும் அறிவியல் கல்வி, இளநிலை பயிலும் மாணவிகளுக்காக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் என்ற திட்டத்தை செயல்படுத்த ஏதுவாக https://penkalvi.tn.gov.in/ என்ற முகவரியில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த இணைய தளத்தில் பயன்பெறும் மாணவிகளின் விவரங்களை இன்று முதல் 30-ந்தேதிக்குள் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்து உடனடியாக அந்த இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

    அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியை தொடரும் மாணவிகள் இத்திட்டத்தில் பயன் பெறுவார்கள்.

    இதற்காக இளநிலை படிக்கும் மாணவியர்களிடம் இருந்து அவர்களது சுய விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள், அவர்கள் படித்த அரசு பள்ளி விவரங்களை தொகுத்து சமர்ப்பிக்க வேண்டும்.

    இதற்காக ஒவ்வொரு மாணவிகளும் ஆதார் ஜெராக்ஸ், வங்கி கணக்கு புத்தகம், 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல் கொண்டு வர அறிவுறுத்த வேண்டும்.

    இவற்றை ஒவ்வொரு கல்லூரி துறை சார்ந்த தலைவர்கள் இணைய தளத்தில் உள்ளீடு செய்து அனுப்ப வேண்டும்.

    ஓ.டி.பி. அனுப்பப்படும் என்பதால் மாணவிகள் செல்போனை தவறாது கொண்டு வர வேண்டும். மாணவிகளும் தாங்களாகவே இதை பதிவேற்றம் செய்யலாம்.

    அனைத்து விவரங்களும் வருகிற 30-ந்தேதிக்குள் பதிவிட வேண்டும். ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்குள் கல்லூரி வாரியாக பதிவிடப்பட்ட மாணவிகளின் எண்ணிக்கை குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதனை கல்லூரி கல்வி இயக்கக இயக்குனர், தொழில் நுட்ப கல்வி இயக்கக ஆணையர், நிகர் நிலை பல்கலைக்கழகங்களின் அனைத்து பதிவாளர்களுக்கும் அனுப்பி உள்ளார்.

    • 2 கல்லூரி மாணவிகள்- இளம்பெண் திடீர் மாயமானார்கள்.
    • சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் மாயமாவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் ஒரே நாளில் 3 பெண்கள் மாயமானது தொடர்பாக புகார்கள் வந்துள்ளன. அதன் விவரம் வருமாறு.

    சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் தேவாங்கர் தெருவைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் மாலதி (வயது 20). இவர் சிவகாசியில் உள்ள அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

    இதனால் பதற்றமடைந்த பெற்றோர் கல்லூரிக்கு சென்று பார்த்தனர். ஆனால் அங்கு அவர் வரவில்லை என தெரியவந்தது. இதையடுத்து மாலதியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் பலன் இல்லை. இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சிவகாசி விஜயலட்சுமி காலனியைச் சேர்ந்தவர் சீமா. இவரது மகள் மாரீஸ்வரி (20). இவர் ஆலங்குளம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற மாரீஸ்வரி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இதுகுறித்த புகாரின்பே ரில் ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெ க்டர் சுந்தரபா ண்டியன் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகிறார்.

    தாயில்பட்டி அருகே உள்ள பேர்நாயக்கன்பட்டி முத்தாலம்மன் நகரை சேர்ந்தவர் மாரியப்பன்‌ இவரது மகள் முருக லட்சுமி (19). இவர் கோமாளிபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற முருக லட்சுமி மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×