search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரகாட்டம்"

    • கிராமிய கரகாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது
    • வெளிநாட்டு பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து கொண்டிருந்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் இந்திய நாட்டிய விழாவின் 2-ம் நாளான நேற்று கிராமிய கரகாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டு பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து கொண்டிருந்தனர்.

    மேடையில் ஆடிக்கொண்டு இருந்த கரகாட்ட, மயிலாட்ட கலைஞர்கள் பார்வையாளர்களை உற்சாகப்படுத்துவதற்காக மேடையில் இருந்து இறங்கி வந்து ஆடினர். அப்போது முன்வரிசையில் அமர்ந்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் ஆர்வத்துடன் கரகத்தை வாங்கி தலையில் வைத்து நாதஸ்வர மேளத்திற்கு ஏற்றபடி கரகாட்டம் ஆடினார். இது அங்கிருந்த சுற்றுலா பயணிகள் அனைவரையும் கவர்ந்தது.

    • சங்கரன்கோவில் கலைவாணர் கலைக்குழு சார்பாக விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி நடைபெற்றது.
    • விழிப்புணர்வு பிரசாரத்தின்போது கரகாட்டம், மரக்கால் ஆட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    சிவகிரி:

    மது அருந்துதல் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு அடிபணியோம் குடிப்பழக்கத்தை விட்டொழிப்போம் போன்ற கோட்பாடுகளை வலியுறுத்தி போதை பொருட்களை தவறான பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வு பிரசாரத்தை கடந்த 10 நாட்களுக்கு முன்பாக தென்காசியில் மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    விழிப்புணர்வு பிரசாரம்

    இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நாட்களாக நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இறுதி நாளான நேற்று சிவகிரி காந்திஜி கலையரங்கம் முன்பு தென்காசி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மற்றும் சங்கரன்கோவில் கலைவாணர் கலைக்குழு சார்பாக மது என்கிற அரக்கனை ஒழிப்போம் என்ற விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியை சிவகிரி பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடகோபு தொடக்கி வைத்தார். சிவகிரி வருவாய் ஆய்வாளர் சுந்தரி, கிராம நிர்வாக அலுவலர் வீரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கிராம உதவியாளர் அழகுராஜா, அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கலைநிகழ்ச்சிகள்

    தொடர்ந்து மதுவிலக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கரகாட்டம், குச்சி, மரக்கால் ஆட்டம், தப்பாட்டம் போன்ற நிகழ்ச்சியும், போதை போன்றவற்றை அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்ற தத்துவத்தை விழிப்புணர்வு பாடல்கள் மூலமாகவும் விளக்கம் அளித்து கலைநிகழ்ச்சிகள் சிவகிரி அருகே ராயகிரி பஸ் நிறுத்தம் அருகில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியை ராயகிரி கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம் துவக்கி வைத்தார். சுகாதார பணி மேற்பார்வையாளர் முத்துச்செல்வம், கிராம உதவியாளர் மலைக்கனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தஞ்சை பெரிய கோவில் வளாகத்திலிருந்து அரண்மனை வரையிலான கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.
    • நாட்டுபுற கலைஞர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகளான கரகாட்டம், ஒயிலாட்டம், துடும்பாட்டம் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் 75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழா, உலக சுற்றுலா தினவிழா, தூய்மை இயக்க விழிப்புணர்வு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

    அதன்படி உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு இன்று காலை தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தூய்மை பணி செய்தனர்.

    இதையடுத்து பெரிய கோவில் வளாகத்தில் இருந்து அரண்மனை வரையிலான கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.

    இதனை இந்தியா சுற்றுலா அமைச்சக த்தின் தென் மண்டல இயக்குனர் பாரூக்அகமது முன்னிலையில் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொ ன்ராஜ் ஆலிவர் கொடிய சைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு உலக சுற்றுலா தினம் சம்பந்தபட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சென்றனர்.

    இதனை தொடர்ந்து தஞ்சை அரண்மனை வளாகம் மராட்டா தர்பார் மண்டபத்தில் மாணவ-மாணவிகளுக்கு தஞ்சை தலையாட்டி பொம்மை செய்முறை விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

    இன்று மாலையில் சிவகங்கை குளம், ஸ்வாட்ஸ் சர்ச், கோட்டை சுவர் மற்றும் அகழி, தேர்முட்டி, தஞ்சை நால்வர் இல்லம், கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளி வழியாக அரண்மனை வரை பாரம்பரிய நடைபயணம் நடைபெற உள்ளது.

    அதனை தொடர்ந்து பெரிய கோவிலில் நடைபெற உள்ள கலாச்சார திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நாட்டுபுற கலைஞர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், கரகாட்டம், ஒயிலாட்டம், துடும்பாட்டம் நடைபெற உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் இந்தியா சுற்றுலா தகவல் தொடர்பு அலுவலர் ராஜ்குமார், இன்டாக் கவுரவ செயலாளர் முத்துக்குமார், நகர போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆண்டுதோறும் 10 நாள்கள் நடைபெறும் ஆஷாட நவராத்திரி விழா நாளை கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது.
    • வருகிற 8-ம் தேதி அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும், இரவு நாகசுரம், கரகாட்டம், ஒயிலாட்டம், வாணவேடிக்கையுடன் நான்கு ராஜ வீதிகளிலும் வீதியுலாவுடன் நிைறவடைகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் பெரியகோவிலிலுள்ள வராகி அம்மனுக்கு ஆண்டுதோறும் 10 நாள்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். இதில், அம்மனுக்கு நாள்தோறும் அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறும்.

    இதன்படி, நிகழாண்டு ஆஷாட நவராத்திரி விழா நாளை ( 28 ஆம் தேதி ) கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. தொடா்ந்து வராகி அம்மனுக்கு இனிப்பு அலங்காரமும், 29 ஆம் தேதி மஞ்சள் அலங்காரமும், 30 ஆம் தேதி குங்கும அலங்காரமும், ஜூலை 1 ஆம் தேதி சந்தன அலங்காரமும், 2 ஆம் தேதி தேங்காய்பூ அலங்காரமும், 3 ஆம் தேதி மாதுளை அலங்காரமும், 4 ஆம் தேதி நவதானிய அலங்காரமும், 5 ஆம் தேதி வெண்ணெய் அலங்காரமும், 6 ஆம் தேதி கனி அலங்காரமும், 7 ஆம் தேதி காய்கறி அலங்காரமும் நடைபெறவுள்ளன. நிறைவு நாளான 8 ஆம் தேதி அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும், இரவு நாகசுரம், கரகாட்டம், ஒயிலாட்டம், வாண வேடிக்கையுடன் நான்கு ராஜ வீதிகளிலும் வீதி உலாவும் நடைபெற உள்ளன.

    ×