மாமல்லபுரம் நாட்டிய விழாவில் கரகாட்டம் ஆடிய வெளிநாட்டு பெண்

கிராமிய கரகாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றதுவெளிநாட்டு பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து கொண்டிருந்தனர்.
மாமல்லபுரம் நாட்டிய விழாவில் கரகாட்டம் ஆடிய வெளிநாட்டு பெண்
Published on

மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் இந்திய நாட்டிய விழாவின் 2-ம் நாளான நேற்று கிராமிய கரகாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டு பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து கொண்டிருந்தனர்.

மேடையில் ஆடிக்கொண்டு இருந்த கரகாட்ட, மயிலாட்ட கலைஞர்கள் பார்வையாளர்களை உற்சாகப்படுத்துவதற்காக மேடையில் இருந்து இறங்கி வந்து ஆடினர். அப்போது முன்வரிசையில் அமர்ந்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் ஆர்வத்துடன் கரகத்தை வாங்கி தலையில் வைத்து நாதஸ்வர மேளத்திற்கு ஏற்றபடி கரகாட்டம் ஆடினார். இது அங்கிருந்த சுற்றுலா பயணிகள் அனைவரையும் கவர்ந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com