search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரியில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்
    X

    விழிப்புணர்வு பிரச்சாரம் நிகழ்ச்சியை பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடகோபு தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

    சிவகிரியில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்

    • சங்கரன்கோவில் கலைவாணர் கலைக்குழு சார்பாக விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி நடைபெற்றது.
    • விழிப்புணர்வு பிரசாரத்தின்போது கரகாட்டம், மரக்கால் ஆட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    சிவகிரி:

    மது அருந்துதல் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு அடிபணியோம் குடிப்பழக்கத்தை விட்டொழிப்போம் போன்ற கோட்பாடுகளை வலியுறுத்தி போதை பொருட்களை தவறான பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வு பிரசாரத்தை கடந்த 10 நாட்களுக்கு முன்பாக தென்காசியில் மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    விழிப்புணர்வு பிரசாரம்

    இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நாட்களாக நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இறுதி நாளான நேற்று சிவகிரி காந்திஜி கலையரங்கம் முன்பு தென்காசி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மற்றும் சங்கரன்கோவில் கலைவாணர் கலைக்குழு சார்பாக மது என்கிற அரக்கனை ஒழிப்போம் என்ற விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியை சிவகிரி பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடகோபு தொடக்கி வைத்தார். சிவகிரி வருவாய் ஆய்வாளர் சுந்தரி, கிராம நிர்வாக அலுவலர் வீரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கிராம உதவியாளர் அழகுராஜா, அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கலைநிகழ்ச்சிகள்

    தொடர்ந்து மதுவிலக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கரகாட்டம், குச்சி, மரக்கால் ஆட்டம், தப்பாட்டம் போன்ற நிகழ்ச்சியும், போதை போன்றவற்றை அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்ற தத்துவத்தை விழிப்புணர்வு பாடல்கள் மூலமாகவும் விளக்கம் அளித்து கலைநிகழ்ச்சிகள் சிவகிரி அருகே ராயகிரி பஸ் நிறுத்தம் அருகில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியை ராயகிரி கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம் துவக்கி வைத்தார். சுகாதார பணி மேற்பார்வையாளர் முத்துச்செல்வம், கிராம உதவியாளர் மலைக்கனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×