search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்ணாடி உடைப்பு"

    • அடையாளம் தெரியாத நபர் பஸ்சை வழிமறித்து அவருடைய இரு சக்கர வாகனத்தை பஸ் முன்னாடி நிறுத்தினார்.
    • இதனால் டிரைவர் சுரேஷ் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் செந்தாரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 44). இவர் தனியார் பஸ்சில் 10 வருடமாக டிரைவர் வேலை பார்த்து வருகிறார். நேற்று பகல் 2 மணி அளவில் கள்ளக்குறிச்சியில் இருந்து ஆத்தூர் நோக்கி சென்று கொண்டிருக்கும் போது இந்திலி ஆர் .கே. எஸ். கல்லூரி அருகே அடையாளம் தெரியாத நபர் பஸ்சை வழிமறித்து அவருடைய இரு சக்கர வாகனத்தை பஸ் முன்னாடி நிறுத்தினார்.

    பின்னர் டிரைவரை பார்த்து நீ பஸ் சாலையில் ஓட்டுறியா? இல்லை வானத்தில் ஓட்டுகிறாயா? என ஆபாசமாக திட்டி கல்லால் பஸ்சின் முன் பகுதி கண்ணாடியை உடைத்துசேதப்படுத்தினார். இதனால் டிரைவர் சுரேஷ் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் வழக்கை பதிவு செய்து பஸ் கண்ணாடியை உடைத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கடையில் இருந்த ஊழியர் முதலாளி இல்லை என கூறியுள்ளார்.
    • நன்கொடை தரவேண்டுமென அவர்கள் கேட்டதாக கூறப்படுகிறது

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குருமூர்த்தி(வயது 42) . இவர் அதே பகுதியில் பேன்சி கடை வைத்துள்ளார். இந்தநிலையில் நேற்று குருமூர்த்தி கடையில் இல்லாதபோது, சிலர் நன்கொடை கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    கடையில் இருந்த ஊழியர் முதலாளி இல்லை .பிறகு வாருங்கள் என கூறியுள்ளார். மீண்டும் வரமுடியாது. இப்போதே நன்கொடை தரவேண்டுமென அவர்கள் கேட்டதாக கூறப்படுகிறது இதற்கு ஊழியர் மறுக்கவே ஆத்திரமடைந்த அவர்கள், கடையின் முன்பு இருந்த அலமாரியின் கண்ணாடியை உடைத்துள்ளனர். இதையடுத்து குருமூர்த்தி கொடுத்த புகாரின்பேரில் பல்லடம் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • கடலூர் அருகே அரசு பஸ் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்தனர்.
    • அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு கடலூர் ஓட்டேரி பகுதியில் சென்று கொண்டிருந்தது.

    கடலூர்:

    பண்ருட்டியில் இருந்து பாலூர் வழியாக கடலூர் நோக்கி அரசு பஸ் ஒன்று இன்று காலை பயணிகளை ஏற்றிக் கொண்டு கடலூர் ஓட்டேரி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று மர்ம நபர்கள் பஸ் பின்பக்க கண்ணாடி மீது திடீரென்று கல் வீசினர். அப்போது பலத்த சத்தத்துடன் கண்ணாடி உடைந்ததோடு, உள்ளிருந்த பயணிகள் அலறி கத்தினர். பின்னர் அரசு பஸ் உடனடியாக நிறுத்தி மர்மநபர்கள் யார் என்று பார்த்தபோது கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டனர்.

    இதனை தொடர்ந்து அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க உடனடியாக அரசு பஸ்ஸை கடலூர் நோக்கி டிரைவர் கொண்டு சென்றார். இது குறித்து நெல்லிக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் சம்பவத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் கண்ணாடி உடைத்தது யார்? என்று பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னை பெரம்பூரில் ஒரு திரையரங்கில் ரகளை செய்த ஒருவரை மட்டும் விசாரணைக்காக போலீஸ் வாகனத்தில் ஏற்றி சென்றனர். மற்ற 4 பேரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
    • அவர்கள் 4 பேரும் கென்னடி சதுக்கம் அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 கார்கள் மற்றும் 1 ஆட்டோ மீது கற்களால் தாக்கி கண்ணாடிகளை உடைத்தனர்.

    கொளத்தூர்:

    சென்னை பெரம்பூரில் ஒரு திரையரங்கில் 5 பேர் கொண்ட கும்பல் மது போதையில் ரகளையில் ஈடுபடுவதாக நேற்று நள்ளிரவு திரு.வி.க நகர் போலீசுக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ரகளை செய்த ஒருவரை மட்டும் விசாரணைக்காக போலீஸ் வாகனத்தில் ஏற்றி சென்றனர். மற்ற 4 பேரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் அவர்கள் 4 பேரும் கென்னடி சதுக்கம் அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 கார்கள் மற்றும் 1 ஆட்டோ மீது கற்களால் தாக்கி கண்ணாடிகளை உடைத்தனர். இது பற்றி போலீசுக்கு புகார் வந்தது. அதை தொடர்ந்து போலீசார் சத்யா (20), விஜய் (19) இம்மானுவேல் (19) மற்றும் 2 சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×