பல்லடம் அருகே நன்கொடை தராததால் கடை கண்ணாடி உடைப்பு

கடையில் இருந்த ஊழியர் முதலாளி இல்லை என கூறியுள்ளார். நன்கொடை தரவேண்டுமென அவர்கள் கேட்டதாக கூறப்படுகிறது
கடை கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.
கடை கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.
Published on

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குருமூர்த்தி(வயது 42) . இவர் அதே பகுதியில் பேன்சி கடை வைத்துள்ளார். இந்தநிலையில் நேற்று குருமூர்த்தி கடையில் இல்லாதபோது, சிலர் நன்கொடை கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.

கடையில் இருந்த ஊழியர் முதலாளி இல்லை .பிறகு வாருங்கள் என கூறியுள்ளார். மீண்டும் வரமுடியாது. இப்போதே நன்கொடை தரவேண்டுமென அவர்கள் கேட்டதாக கூறப்படுகிறது இதற்கு ஊழியர் மறுக்கவே ஆத்திரமடைந்த அவர்கள், கடையின் முன்பு இருந்த அலமாரியின் கண்ணாடியை உடைத்துள்ளனர். இதையடுத்து குருமூர்த்தி கொடுத்த புகாரின்பேரில் பல்லடம் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com