search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டுமானம்"

    • கட்டிடத்தின் உயரத்தை அதிகரிக்க விதிமுறையில் திருத்தம் செய்யப்பட்டு இருப்பது வரவேற்க கூடியது.
    • தரையில் இருந்து சீலிங் வரை 10 அடியில் இருந்து 11.5 அடியாக உயர வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    மாநில வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையானது, தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளில் திருத்தம் செய்துள்ளது.

    உயரம் இல்லாத கட்டிடங்களின் அதிக பட்ச அனுமதிக்கப்பட்ட கட்டிட உயரத்தை 14 மீட்டர் வரை உயர்த்தி உள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் 8 வீடுகள் அல்லது 750 சதுர மீட்டருக்கு மிகாமல் உள்ள கட்டிடங்களுக்கு நிறைவு சான்றிதழ் பெறுவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது. தரைதளம் மற்றும் 3 தளத்துக்கு இதுவரையில் 12 மீட்டர் உயரம் அனுமதிக்கப்பட்டு இருந்தது. தற்போது 14 மீட்டர் வரை கட்டிடத்தின் உயரத்தை அதிகரித்து கொள்ள அனுமதிக்கப் பட்டுள்ளது. அதே போல தரை தளம் மற்றும் 2 அடுக்குமாடி வீடுகளுக்கு 9 மீட்டர் உயரத்தில் இருந்து 10 மீட்டர் உயரம் வரை கட்டிக் கொள்ளலாம். 3 அடுக்கு மாடிகளுக்கு கட்டிடத்தின் உயரத்தை 6 அடி வரை உயர்த்தி கொள்வதன் மூலம் பல்வேறு வசதிகளை செய்து கொள்ள முடியும் என்று கட்டுமானர்கள் தெரிவிக்கின்றனர். ஏர்கண்டிஷன், பால் சீலிங் போன்ற வசதிகள் செய்வதற்கு தரையில் இருந்து கட்டிடத்தின் உயரத்தை உயர்த்த இது போதுமானதாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.

    இது புதிதாக வீடு கட்டுபவர்களுக்கும், சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பு வாங்குபவர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது என்று கட்டுமான சங்கத்தை சேர்ந்த ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து தென்னக கட்டுமான சங்க தலைவர் மோகன் கூறியதாவது:-

    கட்டிடத்தின் உயரத்தை அதிகரிக்க விதிமுறையில் திருத்தம் செய்யப்பட்டு இருப்பது வரவேற்க கூடியது. இதன் மூலம் கார் பார்க்கிங் வசதி நேர்த்தியாக செய்து கொடுக்க முடியும். தரையில் இருந்து சீலிங் வரை 10 அடியில் இருந்து 11.5 அடியாக உயர வாய்ப்பு உள்ளது. இது சொந்த வீடு வாங்குவதற்கு உதவியாக இருக்கும் என்றார்.

    மேலும் கட்டிட நிறைவு சான்றிதழ் பெறுவதிலும் விலக்கு அளிக்கப்படுகிறது. தற்போது 3 வீடுகள் அல்லது 750 சதுர மீட்டரக்கு மிகாமல் உள்ள கட்டி டங்களுக்கு சம்பந்தப்பட்ட ஒழுங்க முறை ஆணை யத்தின் நிறைவு சான்றி தழ்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நிலத்தின் அளவு மாறாமல் இருந்தாலும் குடியிருப்புவீடுகள் 3-ல் இருந்து 8 வரை கட்ட அனுமதிக்கப்படுகிறது. மேலும் வீடு கட்டுபவர்கள் மின் இணைப்பு, குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளை நிறைவு சான்றிதழை சமர்பிக்காமல் எளிதாக பெறவும் இந்த திருத்தங்கள் உதவுகிறது.

    • மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் காண்டூர் கால்வாய் கட்டப்பட்டு உள்ளது.
    • கால்வாயில் முழு கொள்ளளவு தண்ணீர் கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது

    உடுமலை:

    உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் காண்டூர் கால்வாய் கட்டப்பட்டு உள்ளது. பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் காண்டூர் கால்வாய் அடர்ந்த வனப்பகுதி வழியாக பயணித்து திருமூர்த்தி அணையை வந்தடைகிறது.

    பி.ஏ.பி. திட்டம் இன்றளவும் நடைமுறையில் இருப்பதற்கு காண்டூர் கால்வாயின் பங்கு முக்கியமானதாகும். ஆனால் மழைக்காலங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறுகின்ற தண்ணீரில் அடித்து வரப்படுகின்ற மண் மற்றும் பாறைகள் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ள காண்டூர் கால்வாயின் கரையை சேதப்படுத்தி வந்தது.

    இதனால் கால்வாயில் முழு கொள்ளளவு தண்ணீர் கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக அணை நிரம்புவதிலும் சிக்கல் ஏற்பட்டு வந்தது.அதைத்தொடர்ந்து கால்வாயின் கரையை சீரமைக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதன் பேரில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த சில நாட்களாக சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.கட்டுமான பணியை கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    • ஸ்ட்ரக்சுரல் என்ஜினீயர்ஸ் அசோசியேஷன் தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் பதவியேற்பு விழா திருப்பூரில் நடந்தது.
    • விஸ்வகர்மா தேவசிற்பியாகவும், மயன் அசுர சிற்பியாகவும் இருந்தனர்.

    திருப்பூர் :

    ஸ்ட்ரக்சுரல் என்ஜினீயர்ஸ் அசோசியேஷன் தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் பதவியேற்பு விழா திருப்பூரில் நடந்தது. இதில் எழுத்தாளர் ஜெயமோகன் பேசியதாவது :- கட்டுமானத்தை பொறுத்தவரை விஸ்வகர்மா தேவசிற்பியாகவும், மயன் அசுர சிற்பியாகவும் இருந்தனர். விஸ்வகர்மா எழுப்பிய கட்டுமானம், காலத்தால் அழியாமல் இருக்கிறது. அயனின் கட்டுமானம் காலத்திற்குள் அழிந்துவிட்டது. அசுரர் என்றால் கொடியவர்கள் அல்ல, தேவர்களுக்கு எதிரானவர்கள் மட்டுமே.

    ஓவ்வொரு முறையும் புதிய தொழில்நுட்பத்துக்கு சென்று வென்று, அடுத்தகட்டத்துக்கு உயர வேண்டும். கட்டுமானம் சிறக்க, ஒவ்வொரு முயற்சியும் மாறுபட்டதாகவும், சிந்தனையின் வெளிப்பாடாகவும் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். 

    • ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவன சுரங்க பணி வளாகத்தில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
    • தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு சூழலை உருவாக்கி தருவது வேலை அளிப்பவர்களின் கடமை

    நெல்லை:

    நெல்லை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் துணை இயக்குனர் (பொறுப்பு) சுஜின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் நடைபெறும் கட்டுமானம் மற்றும் சுரங்க பணிகளில் விபத்துகளை தடுக்கும் நடவடிக்கையாக, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளரின் வழிகாட்டுதலின்படி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் அறிவுரையின்படி, கட்டுமானம், சுரங்க தொழிலாளர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக (கட்டிட மற்றும் இதர கட்டுமான பிரிவு) மூலம் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவன சுரங்க பணி வளாகத்தில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. விருதுநகர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் வேல்முருகன் தலைமை தாங்கி பயிற்சி அளித்தார். இதில் ராம்கோ நிறுவன சுரங்க தொழிலாளர்கள் 100 பேரும், நெல்லை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் (கட்டிடம் மற்றும் இதர கட்டுமான பிரிவு), ராம்கோ நிறுவன சுரங்க பிரிவு பாதுகாப்பு அதிகாரி மற்றும் இதர பாதுகாப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சியில் கட்டிடம் மற்றும் சுரங்க பணியிடங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், கட்டிடம் மற்றும் சுரங்க பணியிடங்களில் தொழிலாளர்களை பாதுகாக்கும் தனிநபர் பாதுகாப்பு சாதனங்களை உபயோகிக்கும் முறைகள் குறித்து தொழிலாளர்களுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு சூழலை உருவாக்கி தருவது வேலை அளிப்பவர்களின் கடமை என்று அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×