search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுரங்க பணி"

    • ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவன சுரங்க பணி வளாகத்தில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
    • தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு சூழலை உருவாக்கி தருவது வேலை அளிப்பவர்களின் கடமை

    நெல்லை:

    நெல்லை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் துணை இயக்குனர் (பொறுப்பு) சுஜின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் நடைபெறும் கட்டுமானம் மற்றும் சுரங்க பணிகளில் விபத்துகளை தடுக்கும் நடவடிக்கையாக, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளரின் வழிகாட்டுதலின்படி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் அறிவுரையின்படி, கட்டுமானம், சுரங்க தொழிலாளர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக (கட்டிட மற்றும் இதர கட்டுமான பிரிவு) மூலம் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவன சுரங்க பணி வளாகத்தில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. விருதுநகர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் வேல்முருகன் தலைமை தாங்கி பயிற்சி அளித்தார். இதில் ராம்கோ நிறுவன சுரங்க தொழிலாளர்கள் 100 பேரும், நெல்லை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் (கட்டிடம் மற்றும் இதர கட்டுமான பிரிவு), ராம்கோ நிறுவன சுரங்க பிரிவு பாதுகாப்பு அதிகாரி மற்றும் இதர பாதுகாப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சியில் கட்டிடம் மற்றும் சுரங்க பணியிடங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், கட்டிடம் மற்றும் சுரங்க பணியிடங்களில் தொழிலாளர்களை பாதுகாக்கும் தனிநபர் பாதுகாப்பு சாதனங்களை உபயோகிக்கும் முறைகள் குறித்து தொழிலாளர்களுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு சூழலை உருவாக்கி தருவது வேலை அளிப்பவர்களின் கடமை என்று அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×