search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காண்டூர் கால்வாய் கட்டுமான பணி பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு
    X

    ஆய்வு செய்த காட்சி.

    காண்டூர் கால்வாய் கட்டுமான பணி பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு

    • மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் காண்டூர் கால்வாய் கட்டப்பட்டு உள்ளது.
    • கால்வாயில் முழு கொள்ளளவு தண்ணீர் கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது

    உடுமலை:

    உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் காண்டூர் கால்வாய் கட்டப்பட்டு உள்ளது. பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் காண்டூர் கால்வாய் அடர்ந்த வனப்பகுதி வழியாக பயணித்து திருமூர்த்தி அணையை வந்தடைகிறது.

    பி.ஏ.பி. திட்டம் இன்றளவும் நடைமுறையில் இருப்பதற்கு காண்டூர் கால்வாயின் பங்கு முக்கியமானதாகும். ஆனால் மழைக்காலங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறுகின்ற தண்ணீரில் அடித்து வரப்படுகின்ற மண் மற்றும் பாறைகள் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ள காண்டூர் கால்வாயின் கரையை சேதப்படுத்தி வந்தது.

    இதனால் கால்வாயில் முழு கொள்ளளவு தண்ணீர் கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக அணை நிரம்புவதிலும் சிக்கல் ஏற்பட்டு வந்தது.அதைத்தொடர்ந்து கால்வாயின் கரையை சீரமைக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதன் பேரில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த சில நாட்களாக சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.கட்டுமான பணியை கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    Next Story
    ×