search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கச்சா எண்ணெய்"

    • இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் அதிகரித்து வருகிறது.
    • காசா பகுதிக்கான குடிநீர், உணவு பொருட்கள், மின்சாரம், எரிபொருள் விநியோகத்தை இஸ்ரேல் ராணுவம் நிறுத்திவிட்டது.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல்- ஹமாஸ் போர் கடந்த 7ம் தேதி தொடங்கியது. இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் அதிகரித்து வருகிறது. மேலும், இந்த போர் தாக்குதலால் மக்கள் தங்களின் வீடு, உடமைகளைவிட்டு வெளியேறி வருகின்றனர்.

    இதனிடையே போர் தொடங்கிய உடன் காசா பகுதிக்கான குடிநீர், உணவு பொருட்கள், மின்சாரம், எரிபொருள் விநியோகத்தை இஸ்ரேல் ராணுவம் நிறுத்திவிட்டது. இதன்காரணமாக காசா பகுதி மக்கள் குடிநீர், உணவு இன்றி பரிதவித்து வந்தனர்.

    இந்நிலையில் தெற்கு காசா பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் பிரதமர் இந்த முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக காசாவுக்கான நீர் விநியோகத்தை முற்றிலுமாக நிறுத்திய இஸ்ரேலின் முடிவுக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

    • புதுடெல்லி வந்த 49 தமிழர்கள் அவர்களது இல்லம் வரை, தமிழ்நாடு அரசின் சார்பில் அழைத்து வரப்பட்டனர்.
    • 8 தமிழர்கள் மதுரை விமான நிலையத்திற்கும் வந்தடைந்தனர்.

    சென்னை:

    இஸ்ரேலில் இருந்து இதுவரை 98 தமிழர்கள் ஆபரேஷன் அஜய் மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பிலும், 12 தமிழர்கள் தங்கள் சொந்த செலவிலும் தமிழ்நாடு வந்தடைந்துள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

    இஸ்ரேல் - பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையேயான போர் தற்போது தீவிரமடைந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கினங்க தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட உதவி எண்கள் மூலம் அங்கு சிக்கித் தவித்த 128 தமிழர்களின் தகவல்கள் அறியப்பட்டது. இவர்களில், இதுவரை இரண்டு கட்டங்களாக புதுடெல்லி வந்த ௪௯ தமிழர்கள் அவர்களது இல்லம் வரை, தமிழ்நாடு அரசின் சார்பில் அழைத்து வரப்பட்டனர்.

    இதன் தொடர்ச்சியாக நேற்று இஸ்ரேலில் இருந்து இரண்டு விமானங்களில் புதுடெல்லி வந்தடைந்த 49 தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசினால் விமான பயணச்சீட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டு, 32 தமிழர்கள் சென்னை விமான நிலையத்திற்கும், 9 தமிழர்கள் கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கும், 8 தமிழர்கள் மதுரை விமான நிலையத்திற்கும் வந்தடைந்தனர்.

    சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்த தமிழர்களை தமிழ்நாடு அரசின் சார்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், பாராளுமன்ற உறுப்பினர் மரு.கலாநிதி வீராசாமி, அயலகத் தமிழர் நலத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், மற்றும் துறை அலுவலர்கள் வரவேற்று, அவர்களது சொந்த ஊர்களுக்கு அரசு செலவில் அனுப்பி வைத்தனர். மேலும் மதுரை மற்றும் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் துறை அலுவலர்களால் வரவேற்கப்பட்டு, அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுவரை, இஸ்ரேலில் இருந்து 98 தமிழர்கள் ஆபரேஷன் அஜய் மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பிலும், 12 தமிழர்கள் தங்கள் சொந்த செலவிலும் தமிழ்நாடு வந்தடைந்துள்ளனர்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • டெல்லி விமானநிலையம் வந்தடைந்த இந்தியர்களை மத்திய மந்திரி கவுசல் கிஷோர் நேரில் சென்று வரவேற்றார்.
    • இஸ்ரேலில் சிக்கியுள்ள எஞ்சிய இந்தியர்களை மீட்கும் பணியை மத்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது

    புதுடெல்லி:

    இஸ்ரேல் - ஹமாஸ் ஆயுதக்குழு இடையேயான போர் இன்று 9ம் நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரால் இஸ்ரேலில் பல இந்தியர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்க மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வந்தது. இதனிடையே, இஸ்ரேலில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. அதன்படி, முதல்கட்டமாக இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் விமானம் மூலம் மீட்கப்பட்டனர். அவர்கள் நேற்று முன் தினம் காலை டெல்லி வந்தடைந்தனர்.

    இதனைத்தொடர்ந்து ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து மேலும் 235 இந்தியர்கள் நேற்று மீட்கப்பட்டனர். இஸ்ரேலில் இருந்து 235 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு 2வது மீட்பு விமானம் நேற்று காலை டெல்லி வந்தடைந்தது.

    இந்நிலையில் இஸ்ரேலில் இருந்து 197 இந்திய பயணிகளுடன் மூன்றாவது விமானம் டெல்லி விமான நிலையத்தில் இன்று தரையிறங்கியது. டெல்லி விமானநிலையம் வந்தடைந்த இந்தியர்களை மத்திய மந்திரி கவுசல் கிஷோர் நேரில் சென்று வரவேற்றார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி கவுஷல் கிஷோர், "பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு நன்றி மற்றும் வாழ்த்துகள்... நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் அர்ப்பணிப்புடன், இஸ்ரேலில் இருந்து இந்திய குடிமக்கள் இங்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் நாட்டுக்கு திரும்பி வந்ததும் மகிழ்ச்சியாக உள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.

    இதனிடையே இஸ்ரேலில் சிக்கியுள்ள எஞ்சிய இந்தியர்களை மீட்கும் பணியை மத்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது

    • இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
    • ஐ.நா. சபை கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்து வருகிறது. அதேபோல் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

    இதனிடையே காசா மீது தரைவழி தாக்குதலை நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருவதாகவும், வடக்கு காசாவில் இருந்து பொதுமக்கள் 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த அறிவிப்புக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசா முனையில் உள்ள ராணுவ முகாமிற்கு சென்று இஸ்ரேல் ராணுவத்தினரை நேரில் சந்தித்து பேசினார். அங்குள்ள ராணுவ வீரர்களுடன் உரையாடிய நெதன்யாகு, 'அடுத்தகட்டத்திற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?' என்று கேட்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

    • மக்கள் வட காசாவில் இருந்து பல்வேறு வழிகளில் தென்காசாவிற்கு சென்று கொண்டிருந்தனர்.
    • எகிப்து நாட்டிற்குள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த வாரம் சனிக்கிழமை ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த சண்டையில், பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

    காசா மீது இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த சூழலில், பொதுமக்களை தாக்குதல் நடைபெறும் இடத்தில் இருந்து வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரித்துள்ளது. தொடர்ந்து, தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டு உள்ளது.

    எனவே மக்கள் வட காசாவில் இருந்து பல்வேறு வழிகளில் தென்காசாவிற்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் காசா எல்லைகள் மூடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்து நாட்டை விட்டு வெளியேற வேண்டுமானால் அருகில் உள்ள எகிப்து நாட்டிற்குள்தான் செல்ல வேண்டும்.

    இந்த நாட்டிற்குள் செல்ல ஒரே வழி தென்காசாவில் உள்ள ரஃபா கிராஸிங் எனும் பாதை ஆகும், அதனையும் இஸ்ரேல் மூடிவிட்டதாகவும், இனிமேல் எகிப்து நாட்டிற்குள் செல்ல வேண்டுமானால் இஸ்ரேல் அனுமதி பெற வேண்டும் என்றும் இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இதன் மூலம் எகிப்து நாட்டிற்குள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் எகிப்து நாட்டிற்குள் செல்ல வேண்டுமானால் எங்களை தொடர்பு கொண்டுதான் செல்ல வேண்டும் என்றும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.

    • போர் நீடிப்பதால் இவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
    • இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களில் சுமார் 7,000 பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

    திருவனந்தபுரம்:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த சனிக்கிழமை திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை காசா முனையில் ஹமாஸ் அமைப்பினரின் இருப்பிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக காசா முனை, மேற்குகரை உள்ளிட்ட பகுதிகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

    இந்த நிலையில் இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில், "இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களில் சுமார் 7,000 பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அங்கு போர் நீடிப்பதால் இவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனால் கேரளாவில் உள்ள அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். எனவே மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு, இஸ்ரேலில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்" என கேட்டுக்கொண்டுள்ளார்.

    • காசா முனை, மேற்குகரை உள்ளிட்ட பகுதிகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
    • இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    புதுடெல்லி:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த சனிக்கிழமை திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை காசா முனையில் ஹமாஸ் அமைப்பினரின் இருப்பிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக காசா முனை, மேற்குகரை உள்ளிட்ட பகுதிகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

    இந்த நிலையில் இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் தாய் நாட்டுக்கு திரும்ப விரும்பினால் அவர்களை பத்திரமாக அழைத்து வருவதற்கான 'ஆபரேஷன் அஜய்' என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தனது 'எக்ஸ்' சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்பதற்காக 'ஆபரேஷன் அஜய்' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு விமானங்கள் மற்றும் இதர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வெளிநாட்டில் உள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக முழு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • பல பகுதிகள் மற்றும் சாலைகளின் பாதுகாப்பை இஸ்ரேல் ராணுவம் ஏற்றுக்கொண்டுள்ளது.
    • இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

    இஸ்ரேல் - ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையிலாக நடந்து வரும் போர் 5-வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் காசா மீதான வான்வழித் தாக்குதலுடன் தரைவழி தாக்குதலையும் அதிகரிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம் அதிகமான ராணுவ துருப்புகளை தெற்கு இஸ்ரேல் பகுதியில் நிலைநிறுத்தியுள்ளது. கனரக ராணுவத் தளவாடங்களுடன் ரிசர்வ் படைகளும் அழைக்கப்பட்டுள்ளன.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து பல கொலைகள் நிகழ்ந்த காசா எல்லைப்பகுதிகளின் கட்டுப்பாட்டை மீட்டுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அங்கு பல பகுதிகள் மற்றும் சாலைகளின் பாதுகாப்பை இஸ்ரேல் ராணுவம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதேபோல, அமெரிக்காவில் இருந்து அதிநவீன ஆயுதங்களுடன் வந்த முதல் விமானம் இஸ்ரேலின் நேவடிம் விமானநிலையத்தில் இறங்கியுள்ளதை அந்நாட்டு ராணுவம் உறுதி செய்தது. இந்த ஆயுதங்கள் ஒருகுறிப்பிடத்தகுந்த தாக்குதல் மற்றும் கூடுதல் பலத்தினை உருவாக்க பயன்படுத்தப்படும் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    இதனிடையே இஸ்ரேல் குண்டு வீச்சில் ஐ.நா. ஊழியர்கள் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, எதிர்க்கட்சித்தலைவர் பென்னி இடையேயான பேச்சுவார்த்தைக்குப்பின் இந்த அறிவிப்பு வெளியானது. அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதைத்தொடர்ந்து போர் மேலாண்மை அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் லெபனானில் இருந்து இஸ்ரேலிய வான்வெளிக்குள் ஊடுருவியதாக சந்தேகிக்கப்படும் தகவல்கள் கிடைத்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

    இதனைத்தொடர்ந்து வடக்கு நகரமான மாலோட்- தர்ஷிகாவில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டிலேயே இருக்குமாறும், கதவுகளைப் பூட்டிக்கொள்ளுமாறும், ஊடுருவல் சாத்தியம் குறித்து எச்சரிக்கும்படியும் இஸ்ரேலிய முகப்புக் கட்டளை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் தொடர்ந்து ஒலி எழுப்பி வருகின்றன, உயிரிழப்புகள் பற்றிய உறுதியான அறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை.

    • காசா முனை, மேற்குகரை உள்ளிட்ட பகுதிகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
    • கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 88 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த சனிக்கிழமை திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை காசா முனையில் ஹமாஸ் அமைப்பினரின் இருப்பிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக காசா முனை, மேற்குகரை உள்ளிட்ட பகுதிகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

    இந்த போரின் எதிரொலியாக சர்வதேச சந்தையில் தங்கம், கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை 5% உயர்ந்துள்ளது. இதன்படி சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 88 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

    • ஜூலை மாதம் விலை பீப்பாய் ஒன்றுக்கு 80.37 அமெரிக்க டாலராகவும், தற்போது 90 டாலராகவும் உயர்ந்துள்ளது.
    • கடந்த மே மாதம், சர்வதேச எண்ணெய் விலை மற்றும் சில்லரை விற்பனை விகிதங்கள் சமமாக வந்துள்ளன.

    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 90 டாலர், அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.7,470 ஐ நெருங்குகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும் என தெரிகிறது.

    இந்தியா அதன் ஒட்டுமொத்த எண்ணெய் தேவையில் 85 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. தினமும் ரஷியாவில் இருந்து 3 லட்சம் பேரல்கள், சவூதி அரேபிய நாடுகளில் இருந்து 10 லட்சம் பேரல்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

    டிசம்பர் இறுதி வரை உலக சந்தையில் ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் பேரல்கள் விநியோகத்தை குறைக்க சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது. இதனால் கடந்த வாரத்தில் கச்சா எண்ணெய் விலை 6.5 சதவீதம் உயர்ந்துள்ளது.

    இதை தொடர்ந்து இந்த ஆண்டு முதல் முறையாக ஒரு பேரல் உயர்ந்து பேரலுக்கு 89.67 டாலராக அதிகரிக்கப்பட்டது. இந்தியாவை பொறுத்தவரை பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 17 மாதங்களாக மாற்றமின்றி ஒரே விலையில் நீடிக்கிறது. சில்லரை விற்பனையாளர்கள், சர்வதேச எரிபொருள் விலையின் 15 நாள் சுழற்சி அடிப்படையில் தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்க வேண்டும். ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 6-ந்தேதி முதல் விலை மாற்றி அமைக்கப்படவில்லை.

    தற்போதுள்ள சூழலால் எண்ணெய் நிறுவனங்கள், 15 நாட்கள் சராசரி சந்தை நிலவரத்தை பொறுத்து தினமும் விலையை மாற்றி அமைக்க வேண்டியது என்பது தவிர்க்க இயலாததாக ஆகி உள்ளது. சந்தை அடிப்படையிலான விலை நிர்ணயம் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறையும் என்ற நம்பிக்கை மீண்டும் ஏற்பட்டது.

    ஆனால் ஜூலை மாதம் விலை பீப்பாய் ஒன்றுக்கு 80.37 அமெரிக்க டாலராகவும், தற்போது 90 டாலராகவும் உயர்ந்துள்ளது. கடந்த மே மாதம், சர்வதேச எண்ணெய் விலை மற்றும் சில்லரை விற்பனை விகிதங்கள் சமமாக வந்துள்ளன. ஆனால் இப்போது விலைகள் உயர்வதால், பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரிக்கும் நிலை உள்ளது.

    இந்தியாவை பொறுத்தவரை 80 சதவீத வாகனங்கள் பெட்ரோல், டீசலில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது.

    அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.

    இதுபற்றி பெட்ரோல், டீசல் வினியோகஸ்தர்கள் கூறுகையில், கடந்த ஆண்டு மே மாதம் மத்திய அரசு பொதுமக்களுக்கு விலை ஏற்ற, இறக்கங்களால், பாதிப்பு ஏற்படாமல் இருக்க கலால் வரியை குறைத்தது. கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வை சந்தித்த போதும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவில்லை.

    இதனால் அந்த நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தன. அதை ஈடுகட்ட உலக அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவை கண்டபோது விலையை குறைக்காமல் இருந்தன. தற்போது மீண்டும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் இம்முறையும் விலையை குறைக்க வாய்ப்பு இல்லை என்றனர்.

    சென்னையில் இன்று 474-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • 30 சதவீதத்துக்கும் அதிகமாக கச்சா எண்ணையின் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது.
    • கடந்த சில நிதி ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட வருமானத்தையும் செலவினங்களையும் ஈடுசெய்ய உதவும்.

    மும்பை:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆனாலும் இந்திய எண்ணை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமலேயே உள்ளன. இந்நிலையில் எண்ணை நிறுவனங்களுக்கு இந்த நிதி ஆண்டில் வரிக்கு முந்தைய லாபம் மட்டுமே 3 மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக கிரிசில் என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சர்வதேச சந்தையில் கடந்த நிதி ஆண்டோடு (2022-23) ஒப்பிடுகையில், இந்த நிதி ஆண்டில் 30 சதவீதத்துக்கும் அதிகமாக கச்சா எண்ணையின் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது.

    ஆனால் இந்திய எண்ணை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையில் கடந்த ஆண்டு மே மாதத்துக்கு பிறகு எந்த மாற்றமும் செய்யாமல் அதே விலையில் தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றன.

    இதனால் இந்நிதி ஆண்டில் எண்ணெய் நிறுவனங்களின் வரிக்கு முந்தைய லாபம் ரூ.1 லட்சம் கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2022-23ம் நிதி ஆண்டில் இது ரூ.33 ஆயிரம் கோடியாக இருந்தது. எனவே இந்த நிதி ஆண்டில் வரிக்கு முந்தைய லாபம் மட்டுமே 3 மடங்காக அதிகரித்துள்ளது.

    கடந்த 2017 முதல் 2022-ம் ஆண்டு வரை எண்ணெய் நிறுவனங்களின் வரிக்கு முந்தைய லாபம் சராசரியாக ரூ.60 ஆயிரம் கோடியாக இருந்தது.

    இந்த அதிக லாபம் எண்ணெய் நிறுவனங்களுக்கு கடந்த சில நிதி ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட வருமானத்தையும் செலவினங்களையும் ஈடுசெய்ய உதவும்.

    எண்ணெய் நிறுவனங்கள் 2 வழிகளில் லாபம் ஈட்டுகின்றன. அவை எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் சில்லரை விற்பனை ஆகும். கச்சா எண்ணையின் விலை, அதை சுத்திகரிக்க ஆகும் செலவு ஆகியவற்றுடன் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களின் மொத்த விலையை கழித்தால் வரும் லாபம் எண்ணை நிறுவனங்களுடையது. மேலும் கச்சா எண்ணையை சுத்திகரித்த பின்பு கிடைக்கும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை விற்பனை செய்வதன் மூலமும் எண்ணெய் நிறுவனங்கள் லாபம் பெறுகின்றன.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பார்களா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    • தமிழகத்தில் இதுவரை 26 பெட்ரோல் நிலையங்களில் இ - 20’ எனப்படும் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் விற்கப்படுகிறது.
    • வீடுகளுக்கு குறைந்த எடையில் அதிக பாதுகாப்பு நிறைந்த ‘காம்போ சிட் சிலிண்டர்கள் விற்கப்படுகின்றது.

    சென்னை:

    இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழகம் - புதுச்சேரி மாநிலங்களுக்கான மண்டல தலைவர் வி.சி.அசோகன் சென்னையில், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு, தமிழகம் மிக முக்கிய சந்தையாக உள்ளது. எங்கள் நிறுவனத்தால், கடந்த ஆண்டில் 10 சதவீதம் எத்தனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெட்ரோலுடன், சேர்க்கப்பட்டுள்ளது. 2025 -க்குள், 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை தயாரிக்க அரசு ஆணைக்கு ஏற்ப செயல்பட்டு வருகிறோம்.

    தமிழகத்தில் இதுவரை 26 பெட்ரோல் நிலையங்களில் இ - 20' எனப்படும் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் விற்கப்படுகிறது. வரும் மார்ச்சுக்குள் கூடுதலாக, 8 பெட்ரோல் நிலையங்களில் விற்கப்படும்.

    தமிழகத்தில் விரைவில் பல்வேறு திட்டங்களில் 54,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். அதில், 35,580 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாகையில் 1,300 ஏக்கரில் ஆண்டுக்கு 90 லட்சம் டன் கச்சா எண்ணெய் சுத்தி கரிக்கும் திறனில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.

    அங்கு பி.எஸ். 4 திறனில் பெட்ரோல், டீசல், 'பாலி புரோப்லீன்' உற்பத்தி செய்யப்படும்.

    விழுப்புரம், ஆசனூரில், 466 கோடி ரூபாயில் பெட்ரோல், டீசல் முனை யம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூர் வல்லூரில், 724 கோடி ரூபாயில் ஒரு முனையம் அமைக்கப்பட்டு வருகிறது. எண்ணூர் துறைமுகத் தில் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் முனையம், 921 கோடி ரூபாயில் அமைக்கப்படுகிறது.

    வீடுகளுக்கு குறைந்த எடையில் அதிக பாதுகாப்பு நிறைந்த 'காம்போ சிட் சிலிண்டர்கள் விற்கப்படுகின்றது.

    இவ்வாறு அவர்கூறினார்.

    பேட்டியின் போது இந்தியன் ஆயிலின் தென் மண்டல, மண்டல சேவைகள் செயல் இயக்குனர் தனபாண்டியன், தலைமை பொது மேலாளர் வெற்றி செல்வகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×