search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கச்சா எண்ணெய்"

    • இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்தது.
    • சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மேலும் வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தினமும் பெட்ரோல், டீசல் விலைகளை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

    கடந்த 2021-ம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை கட்டுக்கடங்காத அளவுக்கு இருந்ததால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 112 ரூபாய் வரை எட்டியது. அதுபோல டீசல் விலையும் 103 ரூபாய் என்ற அளவுக்கு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி மத்திய அரசு கச்சா எண்ணெய் இறக்குமதி மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்தது. இதன் காரணமாக பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.9-ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.7.50 காசும் குறைக்க முடிந்தது.

    கடந்த 620 நாட்களாக இந்த விலை குறைப்பு அமலில் உள்ளது. கடந்த 620 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை எந்தவிதத்திலும் மாற்றம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்தது.

    இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மேலும் வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது பற்றி இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில நாட்களாக ஆய்வு செய்து வந்தன.

    பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.10-ம், டீசல் விலையில் ரூ.7-ம் குறைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. நாளை (பிப்ரவரி 1) முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வரலாம் என்று கூறப்பட்டது. எனவே இது தொடர்பான அறிவிப்பு இன்று இரவு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவில் கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பெட்ரோல்-டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
    • டீசல் விலையை ரூ.6 குறைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் கடந்த சில தினங்களாக கச்சா எண்ணெய் விலை கணிசமான அளவுக்கு குறைந்து வருகிறது.

    இதன் காரணமாக இந்தியாவில் கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பெட்ரோல்-டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கச்சா எண்ணெய் விலை தொடர் வீழ்ச்சி காரணமாக பெட்ரோல்-டீசல் விலை உயர வாய்ப்பு இல்லை.

    பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் செய்யாத நிலையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து இருப்பதால் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு கணிசமான அளவுக்கு லாபம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு முழுவதும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் எதிர்பார்த்த அளவை விட அதிகளவு வருவாய் பெற்றன.

    இதன் காரணமாக பெட்ரோல்-டீசல் விலையை குறைக்கலாமா? என்று இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன. தற்போது சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 80 டாலருக்கும் கீழ் வந்துள்ளது. எனவே பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க முடியும் என்ற நிலை உருவாகி இருக்கிறது.

    இந்த மாத தொடக்கத்தில் இதுபற்றி ஆய்வு செய்த இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.10 வரை குறைக்கலாம் என கருதின. அது போல டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 வரை குறைக்கலாம் என திட்டமிட்டன.

    ஆனால் தற்போது கச்சா எண்ணெய் விலை மேலும் வீழ்ச்சி அடைந்து இருப்பதால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.11 வரை குறைப்பது பற்றி ஆய்வு செய்து வருகின்றன. மேலும் டீசல் விலையை ரூ.6 குறைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு அறிவிப்பை பிப்ரவரி 1-ந்தேதி வெளியிட இந்திய எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இது வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பெட்ரோல்-டீசல் விலையை குறைத்தால் மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று மத்திய அரசு கருதுவதாக தெரிகிறது. எனவே பெட்ரோல்-டீசல் விலை எந்த அளவுக்கு குறையும் என்பது அடுத்த வாரம் தெரியும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 600 நாட்களுக்கும் மேலாக இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்படவில்லை.
    • பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது.

    இந்திய எண்ணெய் நிறுவனங்களான இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய 3 நிறுவனங்களும் பெட்ரோல்-டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை பெற்றுள்ளன.

    கடந்த 2022-ம் ஆண்டு பெட்ரோல்-டீசல் பயன்படுத்துபவர்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு கச்சா எண்ணெய் மீதான சுங்க வரியை கணிசமாக குறைத்தது. பெட்ரோல் லிட்டருக்கு 13 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 16 ரூபாயும் என்ற அளவில் அந்த வரி குறைப்பு இருந்தது.

    இதன் காரணமாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இழப்பில் இருந்து தப்பின. இதன் காரணமாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்தவில்லை.

    கடந்த 600 நாட்களுக்கும் மேலாக இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்படவில்லை.

    இதற்கிடையே இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோல்-டீசல் விற்பனை மூலம் கணிசமான அளவுக்கு லாபம் கிடைத்துள்ளது. 2023-2024-ம் ஆண்டு முதல் பகுதியில் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.75 ஆயிரம் கோடி லாபம் உபரியாக கிடைத்து இருக்கிறது.

    இதுபற்றி தகவல்களை அடுத்த வாரம் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளன. கடந்த நிதியாண்டிலும் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய உபரி வருவாய் கிடைத்து இருக்கிறது.

    இதையடுத்து தங்களது லாபத்தில் ஒரு பகுதியை வாடிக்கையாளர்களுக்கு சுமையை குறைக்கும் வகையில் வழங்குவதற்கு இந்திய எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அதன்படி பெட்ரோல்-டீசல் விலைகளை லிட்டருக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய 3 நிறுவனங்களும் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. இந்த மாத இறுதியில் இதற்கான முடிவுகள் எடுக்கப்படும். இதுபற்றி விவரங்கள் இந்த மாத இறுதியில் தெரிய வரும்.

    பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு அடுத்த மாதம் (பிப்ரவரி) முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை குறைப்பு காரணமாக பண வீக்கம் கட்டுப்படுத்தப்படும்.

    மேலும் பாராளுமன்ற தேர்தலுக்கு இந்த விலை குறைப்பு மிகப்பெரிய அளவில் கை கொடுக்கும் என்று மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு கருதுகிறது.

    • சென்னையை பொறுத்தவரை கடந்த 586 நாட்களாக பெட்ரோல் விலை லிட்டர் 102.63 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டர் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
    • அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

    புதுடெல்லி:

    சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்த போதிலும் பெட்ரோல்- விலை குறைக்கப்பட வில்லை. முக்கிய நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விட்டது. சில நகரங்களில் ரூ.1100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையை பொறுத்தவரை கடந்த 586 நாட்களாக பெட்ரோல் விலை லிட்டர் 102.63 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டர் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பரவலால் ஊரடங்கு,ரஷியா - உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டதால் பெட்ரோல்- டீசல் விலை குறையாமல் அதே விலை நீடிக்கிறது.

    இந்த சூழ்நிலையில் அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல் அல்லது மே மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதை கருத்தில் கொண்டு வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் பெட்ரோல்-டீசல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் தற்போது சரிவு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுடன் பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இன்னும் ஓரிரு நாளில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நீண்ட நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கு கீழ் வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    • இரு தரப்பினரும் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
    • பிலிப்பைன்ஸ் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு ராணுவ சீருடையை தயாரித்து வழங்கி வருகிறது.

    திருவனந்தபுரம்:

    இஸ்ரேல் மீது கடந்த 7 ஆம் தேதி திடீரென ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். அதோடு இஸ்ரேலுக்குள் தரைவழியாகவும் ஊடுருவி தாக்குதலை தொடுத்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேலும் எதிர் தாக்குதல் நடத்தியது. இரு தரப்பினரும் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

    இதில் இஸ்ரேல், காசா நகரின் மீது கடுமையான தாக்குதலை நடத்தி வருகின்றது. இரு தரப்பினரும் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்நிலையில் கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள கூத்துபறம்பு தொழிற்பேட்டையில் இயங்கி வருகிறது மரியன் அப்பாரல்ஸ் எனும் ஆடை தயாரிப்பு நிறுவனம். இங்கு 1,500 மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதனை தாமஸ் என்பவர் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் இஸ்ரேல், கத்தார், பிலிப்பைன்ஸ் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு ராணுவ சீருடையை தயாரித்து வழங்கி வருகிறது.

    இந்த நிலையில், இந்நிறுவனம் இஸ்ரேல் ராணுவத்திற்கு சீருடைகளை தயாரித்து வழங்க முடியாது என்று அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும் சுமார் 1 லட்சம் சீருடைக்கான ஆர்டரையும் ரத்து செய்து விட்டது.

    • மருத்துவமனையில் 400-க்கும் கூடுதலான நோயாளிகள் உள்ளனர்.
    • புலம்பெயர்ந்த 12 ஆயிரம் மக்கள் உள்ளனர்.

    டெல் அவிவ்:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 7-ந்தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லைக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டதுடன், பலரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. பணய கைதிகளை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது.

    இந்த சூழலில், வடக்கு காசாவில் உள்ள அல்-குத்ஸ் மருத்துவமனையில் இருந்து நோயாளிகளை வெளியேற்ற வேண்டும் என பாலஸ்தீனத்தின் செஞ்சிலுவை சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த மருத்துவமனையில் 400-க்கும் கூடுதலான நோயாளிகள் உள்ளனர். புலம்பெயர்ந்த 12 ஆயிரம் மக்கள் உள்ளனர்.

    அல் ஆலி மருத்துவமனையில் நடந்த தாக்குதலை போன்று வேறு சம்பவம் நடந்து விடாமல் தடுக்கவும், அல்-குத்ஸ் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை பாதுகாக்க, அவர்களை வெளியேற்ற வேண்டும் என பாலஸ்தீனத்தின் செஞ்சிலுவை சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதில், சர்வதேச சமூகம் உடனடியாக செயல்பட வேண்டும் என அச்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

    இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி ஆடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அது 2 பயங்கரவாதிகள் இடையே நடைபெறும் உரையாடல் என கூறப்படுகிறது. அதில், மருத்துவமனை மீது ஏவப்பட்ட ராக்கெட் அவர்களுடைய குழுவினருடையது என அவர்கள் ஒப்பு கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதேபோன்று, இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் ஒருவர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறும்போது, முதல்கட்ட விசாரணையின்படி, மருத்துவமனைக்கு அருகே இஸ்ரேலை நோக்கி  ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. ஆனால் அது தவறுதலாக மருத்துவமனை மீது விழுந்தன என தெரிய வந்துள்ளது என்று கூறினார். இந்த தாக்குதலில், 300-க்கும் மேற்பட்ட நோயாளிகள் உயிரிழந்தனர் என அப்போது தெரிவிக்கப்பட்டது.

    • போர் 12-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது.
    • குழந்தைகளைக் கூட ஹமாஸ் அமைப்பினர் கொலை செய்துள்ளனர் என்றும் நெதன்யாகு குறிப்பிட்டார்.

    டெல் அவிவ்:

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் 12-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இஸ்ரேல் சென்றுள்ளார். அங்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து பேசிய ஜோ பைடன், இஸ்ரேலுடன் அமெரிக்கா துணை நிற்கும் என்று உறுதியளித்தார்.

    தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய நெதன்யாகு, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை விட ஹமாஸ் மிகவும் மோசமானது என்றார். கடந்த 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு 1,400 இஸ்ரேல் மக்களை கொன்றுள்ளது என்றும், குழந்தைகளைக் கூட ஹமாஸ் அமைப்பினர் கொலை செய்துள்ளனர் என்றும் நெதன்யாகு குறிப்பிட்டார்.

    மேலும் இந்த கடினமான சூழலில் இஸ்ரேலுக்கு வருகை தந்து தனது ஆதரவை தெரிவித்ததோடு, இஸ்ரேல் மக்களுக்கு என்றும் துணை நிற்போம் என உறுதியளித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு நன்றி தெரிவிப்பதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

    • போர் குறித்து செய்தி சேகரிக்க சென்ற 2 பத்திரிகையாளர்களை காணவில்லை.
    • சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும்.

    காசா:

    காசா பகுதியில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 11 பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் பலியானது தெரிய வந்துள்ளது. பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் அமைப்பு இத்தகவலை தெரிவித்தது.

    அந்த அமைப்பு மேலும் கூறியதாவது:-

    இஸ்ரேல் விமான தாக்குதல்களில், 50 உள்ளூர், சர்வதேச ஊடக அமைப்புகள் குறிவைக்கப்பட்டன. 11 பத்திரிகையாளர்கள் பலியானார்கள். 20 பேர் காயமடைந்தனர். போர் குறித்து செய்தி சேகரிக்க சென்ற 2 பத்திரிகையாளர்களை காணவில்லை.

    காசா பகுதியில் நிலவும் மின்தடை மற்றும் இணையதள பிரச்சினையால் பத்திரிகையாளர்கள் சரிவர செயல்பட முடியவில்லை. சமூக வலைத்தளங்களில் பத்திரிகையாளர்களுக்கு இஸ்ரேல் அச்சுறுத்தல் விடுக்கிறது. இப்பிரச்சினையில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும்.

    இவ்வாறு அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

    • பலர் கட்டிடங்களில் சிக்கியுள்ளனர். அவர்களை அங்குள்ள மக்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • தெற்கு காசாவில் குடிநீர், உணவு, மின்சாரம், மருந்து பொருட்கள் இல்லாமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.

    காசா:

    இஸ்ரேல் படையினரின் வான்வழித் தாக்குதலால் காசா மக்கள் திக்கு தெரியாமல் திண்டாடி வருகிறார்கள்.

    ரபாத் மற்றும் கான்யூனிசில் 3 வீடுகள் மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்தது. இஸ்ரேலிய விமான தாக்குதலில் ஒரே இரவில் இறந்தவர்கள் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்தது.

    இஸ்ரேலின் உத்தர வின்படி காசா நகரில் இருந்தும், வடக்கு பகுதிகளில் இருந்தும் வெளியேறி குடும்பங்கள் தான் கொல்லப்பட்டனர்.

    காசாவின் தெற்கில் உள்ள கான்யூனிஸ், ரபா, டெல் அல்பலாஹ் ஆகிய பகுதிகளில் கடுமையான குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. பலர் கட்டிடங்களில் சிக்கியுள்ளனர். அவர்களை அங்குள்ள மக்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தெற்கு காசாவில் குடிநீர், உணவு, மின்சாரம், மருந்து பொருட்கள் இல்லாமல் மக்கள் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவுவதற்காக எகிப்து உதவி பொருட்களுடன் தயார் நிலையில் உள்ளது.

    பாலஸ்தீனர்களுக்கான ஐ.நா. அகதிகள் நிவாரண அமைப்பினர் கூறும்போது, 'தெற்கு காசாவில் குடிநீர், உணவு பொருட்கள், மருந்து பொருட்கள், மின்சாரம் இல்லாததால் மருத்துவ மனையில் கூட்டம் நிரம்பி வழிகிறது. கண் முன்பே மனித பேரழிவு ஏற்படுகிறது' என்று கூறியுள்ளார்.

    உலக சுகாதார அமைப்பினர் கூறும்போது, 'மொத்தம் 23 லட்சம் மக்கள் கொண்ட காசாவில் தினசரி ஒருவருக்கு ஒரு லிட்டருக்கு குறைவான நீர் மட்டுமே கிடைக்கிறது. மின்சாரம் நிறுத்தபட்டதால் பிறந்த குழந்தைகள், அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் அபாயத்தில் உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

    • இஸ்ரேல் அரசு காசா மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
    • காசாவில் இந்தியர்கள் சிக்கி தவித்து வருகிறார்கள்.

    பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆட்சி நடத்தி வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந் தேதி இஸ்ரேல் மீது திடீரென சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்த இஸ்ரேல் அரசு காசா மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    இந்த போரால் இஸ்ரேல் மற்றும் காசாவில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி தவித்து வருகிறார்கள். அவர்களை அங்கிருந்து பத்திரமாக மீட்க மத்திய அரசு களத்தில் இறங்கி இருக்கிறது. இதற்காக 'ஆபரேஷன் அஜய்' என்ற பெயரில் அதிரடி மீட்பு நடவடிக்கையை மத்திய அரசு அறிவித்து உள்ளது. அதன்படி இஸ்ரேலில் இருந்து 286 இந்தியர்கள், 18 நேபாள குடிமக்களுடன் 5வது விமானம் டெல்லி வந்தடைந்தது. அவர்களை  மத்திய அமைச்சர் எல்.முருகன் வரவேற்றார்.

    பின்னர் அவர் கூறுகையில், "இந்தியர்கள் எங்கெல்லாம் சிக்கித் தவிக்கிறார்களோ, அவர்களை மீட்டெடுப்பதே எங்கள் முன்னுரிமை. நாங்கள் ஆபரேஷன் கங்கா மற்றும் ஆபரேஷன் காவேரியை வெற்றிகரமாக நடத்தி, இப்போது ஆபரேஷன் அஜய்யின் கீழ் நாங்கள் இஸ்ரேலில் இருந்து மக்களை அழைத்து வருகிறோம். இது ஐந்தாவது விமானம், நாங்கள் ஏற்கனவே செய்துள்ளோம். 1180 பேரை வீட்டிற்கு அழைத்து வந்தோம். வெளியேற்றத்தை தொடங்கும் முதல் நாடு நாங்கள் தான், மேலும் எங்கள் அண்டை நாடுகளை சேர்ந்தவர்களையும் அழைத்து வருகிறோம்."

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுதந்திரப் போர் முடிவடையவில்லை.
    • ஹமாஸ் மீது வெற்றி பெறுவதே முக்கிய நோக்கம்" என்று தெரிவித்தார்.

    ஜெருசலேம்:

    ஹமாசுக்கு எதிராக நடைபெற்று வரும் போர், மனிதகுலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் "ஒளியின் சக்திகளுக்கும்", விலங்குகளை உள்ளடக்கிய "இருளின் சக்திகளுக்கும்" இடையேயான யுத்தம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், "75 ஆண்டுகள் கடந்தும் கூட, சுதந்திரப் போர் முடிவடையவில்லை. ஹமாஸ் மீது வெற்றி பெறுவதே முக்கிய நோக்கம்" என்று தெரிவித்தார்.

    முன்னதாக இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு,, "ஹமாஸை தோற்கடிக்க உலகம் ஒன்றுபட வேண்டும். இந்தப் போர் எங்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்குமான போரும் கூட. இந்தப் போரில் நாங்கள் வெற்றி பெறுவோம். ஏனெனில் இது இந்த பிராந்தியத்தில் எங்களின் இருப்பைப் பற்றியது.

    ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா பயங்கரவாதத்தின் ஒரு பகுதிதான் ஹமாஸ். இவர்கள் மத்திய கிழக்கு பகுதிகளை படுகுழியில் தள்ளுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

    இப்போது, இஸ்ரேல் யாரை எதிர்கொள்கிறது என்பதை உலகெங்கிலும் உள்ள பலர் புரிந்துகொண்டிருப்பார்கள். ஹமாஸ் நாஜிக்களின் புதிய வெர்ஷன். நாஜிக்கள் மற்றும் ஐஎஸ்ஐஎஸ்சை தோற்கடிக்க உலகம் ஒன்றுபட்டது போல, ஹமாஸை தோற்கடிக்கவும் ஒன்றுபட வேண்டும். ஈரானும், ஹிஸ்புல்லாவும் எங்களை சோதனை செய்து பார்க்க வேண்டாம். அப்படி செய்தால் இந்த முறை நீங்கள் செலுத்தும் விலை மிக அதிகமாக இருக்கும்" என்று அவர் தெரிவித்திருந்தார்.

    • டெல்அவிவ் சென்றபோது இந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • விமானம் ஜோர்டானுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    புதுடெல்லி:

    போர் நடந்து வரும் இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்டு வர ஆபரேஷன் அஜய் என்ற பெயரில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. இதற்காக சிறப்பு விமானங்கள் அனுப்பி அவர்கள் மீட்டு வரப்படுகின்றனர்.

    இந்தியர்களை மீட்பதற்காக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து டெல்அவிவ் சென்றது. இந்த விமானம் நேற்று நாடு திரும்ப திட்டமிட்டிருந்தது.

    ஆனால் டெல்அவிவ் சென்றபோது இந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அந்த விமானம் ஜோர்டானுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு விமானத்தின் கோளாறு சரி செய்யப்பட்ட பின் இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×