என் மலர்tooltip icon

    உலகம்

    VIDEO: இனி ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கமாட்டோம் என மோடி ஒப்புக்கொண்டார் - டிரம்ப் அறிவிப்பு!
    X

    VIDEO: இனி ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கமாட்டோம் என மோடி ஒப்புக்கொண்டார் - டிரம்ப் அறிவிப்பு!

    • ரஷியாவிலிருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என்று அவர் எனக்கு உறுதியளித்தார்.
    • பிரதமர் மோடி டிரம்ப்-ஐ கண்டு அஞ்சுவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது செய்தியாளர் ஒருவர், இந்தியா ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துமா? என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த டிரம்ப், ஆமாம், நிச்சயமாக. அவர் (பிரதமர் மோடி) என்னுடைய நண்பர். எங்களுக்குள் ஒரு சிறந்த உறவு இருக்கிறது. இந்தியா ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதில் நான் மகிழ்ச்சியடையவில்லை.

    ரஷியாவிலிருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என்று அவர் எனக்கு உறுதியளித்தார். அது ஒரு பெரிய நிறுத்தம். இப்போது நாம் சீனாவையும் அதே காரியத்தைச் செய்ய வைக்க வேண்டும்..." என்று தெரிவித்தார்.

    முன்னதாக சர்வதேச தடைகள் இருந்தபோதிலும் ரஷிய எண்ணெய் வாங்கி உக்ரைன் போரை ஊக்குவிப்பதாக இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்திருந்த நிலையில் தற்போது டிரம்ப்-இன் கருத்து வந்துள்ளது.

    இதற்கிடையே இந்தியா ரஷியாவிடம் இருந்து எண்ணெயை வாங்காது என்று டிரம்ப் முடிவு செய்து அறிவிக்க அனுமதித்ததை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி டிரம்ப்-ஐ கண்டு அஞ்சுவதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

    Next Story
    ×