search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒன்றிய குழு கூட்டம்"

    • திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றிய குழுக் கூட்டம் கூட்ட மன்றத்தில் புதிய ஒன்றிய குழு தலைவர் சே.கிருஷ்ணவேணி தலைமையில் நடைபெற்றது
    • கூட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து பேசப்பட்டது.

    திருச்சி :

    திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றிய குழுக் கூட்டம் கூட்ட மன்றத்தில் புதிய ஒன்றிய குழு தலைவர் சே.கிருஷ்ணவேணி தலைமையில் நடைபெற்றது

    துணைத் தலைவர் பாபு என்கின்ற சத்தியமூர்த்தி ஒன்றிய ஆணையர்கள் ஞானமணி, மருததுரை மற்றும் ஒன்றிய பொறியாளர்கள் அலுவலகப் பணியாளர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து பேசப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய சேர்மன் பேசியதாவது

    கடந்த காலத்தில் பொது மக்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டு கால தேக்கமடைந்த திட்டப்பணிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக செயல்படுத்தப்பட்டு சிறந்த ஊராட்சி ஒன்றியமாக அமைய இந்த ஒன்றிய குழு சிறப்பாக பணியாற்றும் எனக் கூறினார்.

    இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் ரேவதி சித்ரா தமிழ்ச்செல்வன் சரவணன் பாலசுப்பிரமணியன் செல்வராணி முருகன் தீபா வசந்தபாரதி மாரியாயி கோவிந்தராசு அமராவதி சுப்பிரமணி பிருந்தா முத்துலட்சுமி மல்லிகா மற்றும் ஊராட்சி ஒன்றிய அனைத்து பணியாளர்களும் பங்கேற்றனர்.

    • வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் தலைவர் தலைமையில் நடந்தது.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் நடந்தது. ஒன்றிய குழுத்தலைவர் பரமேஸ்வரி முருகன் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் உதயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய குழு துணைத்தலைவர் முத்து வரவேற்றார். இளநிலை உதவியாளர் சடையாண்டி தீர்மானங்களை வாசித்தார். ரெங்கப்பநாயக்கன்பட்டி ஊராட்சி சேடபட்டியில் ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கழிவு நீர் வாய்க்கால் கட்டுவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரவடிவேல், உதவி பொறியாளர்கள் டெல்லி ராஜா, ஜான் பிரிட்டோ, ஒன்றிய கவுன்சிலர்கள் விஜயகர், சக்திவேல், அறிவி, பிச்சை, ஜீவகன், செல்லம்மாள், பெனினா தேவி, சூசை ரெஜி, முருக பாரதிஉள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இளநிலை உதவியாளர் நாச்சியப்பன் நன்றி கூறினார்.

    • 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    • பெரும்பாலான கிராமங்களில், குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

    குடிமங்கலம் :

    குடிமங்கலம் ஒன்றியக்குழு சாதாரணக்கூட்டம், துணைத்தலைவர் புஷ்பராஜ் தலைமையில் நடந்தது. பி.டி.ஓ.,க்கள் சிவகுருநாதன், சாதிக்பாஷா முன்னிலை வகித்தனர்.ஒன்றிய அலுவலக செலவினங்கள், லிங்கமநாயக்கன்புதூர் முதல் சனுப்பட்டி வரையிலான ரோட்டை 78 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பித்தல் உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் திருமூர்த்திமலை கூட்டுக்குடிநீர் திட்டத்தில் சீரான வினியோகம் இல்லாததால், ஒன்றியத்துக்குட்பட்ட பெரும்பாலான கிராமங்களில், குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு நடத்தி வினியோகத்தை சீராக்க வேண்டும்.கிராமங்களில் ரோடு மேம்பாடு உள்ளிட்ட பணிகளுக்காக கவுன்சிலர்கள் வழங்கிய கருத்துரு மீது ஒன்றிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.ஒன்றிய பொது நிதியில், வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய கவுன்சிலர்கள் பேசினர்.

    • கெலமங்கலம் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.
    • ஒன்றிய குழு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றிய குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு ஒன்றிய குழு தலைவர் டி.கேசவமூர்த்தி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஸ்ரீனிவாசன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தலட்சுமி அனைவரையும் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் 12-வது வார்டு இடைத்தேர்தலில் வெற்றிப் பெற்ற மாரப்பா ஒன்றிய குழு உறுப்பினராக பதவிபிரமாணம் செய்து பொறுபேற்று கொண்டார் புதியதாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட கவுன்சிலர் மாரப்பாவுக்கு ஒன்றிய குழு தலைவர் கேசவமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தலட்சுமி, சென்னகிஷ்ணன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர் முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விவேகனந்தன் நன்றி கூறினார்.

    • வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை ஒன்றிய அலுவலகத்தில் உள்ள மன்ற கூட்டரங்கில் ஒன்றியக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத் தலைவர் ரமணன் முன்னிலை வகித்தார். ஒன்றிய ஆணையாளர் அமிர்தராஜ் வரவேற்றார்.

    ஒன்றியக் குழு கூட்டம்

    கூட்டத்தில் கடந்த 8 மற்றும் 9-ந் தேதிகளில் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அரசு சார்பில் நடந்த விழாவில் பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு புதிய அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், இதற்கு உறுதுணையாக இருந்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோருக்கும் நன்றி தெரிவித்து கொள்வது.

    38 தீர்மானங்கள்

    காடகமான் ஊராட்சியில் ஆதிச்சநல்லூரி செல்லும் சாலையில் தார் சாலை அமைப்பது, ஏந்தல் ஊராட்சியில் சிறுபாலம் கட்டுவது, அய்யம்பாளையம் ஊராட்சி பிள்ளையார் கோவில் குளத்திற்கு தடுப்பு சுவர் அமைப்பது, அடிஅண்ணாமலை ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் சிறுபாலம் மற்றும் பக்க கால்வாய் அமைப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து மன்ற அங்கீகாரம் வழங்குதல் உள்ளிட்ட 38 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பக்தவச்சலம், சாந்தி விஜயன், சுபாசெல்வமணி, தினகரன், முருகன், யுவராஜா உள்பட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய உதவி பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் மேலாளர் (நிர்வாகம்) கோபி நன்றி கூறினார்.

    • நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது
    • கூட்டத்தில் வரவு, செலவு கணக்குகள் உள்ளிட்ட 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நத்தம்:

    நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது. இதற்கு ஒன்றிய குழுத்தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார்.

    யூனியன் ஆணையாளர் முனியாண்டி, துணை தலைவர் முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவலக மேலாளர் சாந்திதேவி வரவேற்றார்.கூட்ட அறிக்கையை இளநிலை உதவியாளர் கருப்பண பிள்ளை வாசித்தார். கூட்டத்தில் வரவு, செலவு கணக்குகள் உள்ளிட்ட 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு தலைவரும் அதிகாரிகளும் பதில் தெரிவித்தனர். இதில் ஒன்றிய பொறியாளர்கள் குபேந்திரன், வெற்றி, ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்களும் கலந்து கொண்டனர். காசாளர் கனகராஜ் நன்றி கூறினார்.

    ×